முந்தைய பகுதிகள்
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
இந்தப் பகுதியில் வெளிநாட்டு சீனர்கள் (OVERSEAS CHINESE) மற்றும் அவர்கள் குணாதிசயங்கள் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன்
சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்தமான பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள் (OVERSEAS CHINESE)' என்பது. இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், தைவானியர்களையும் சேர்த்து, சுமார் ஆறு கோடிப் பேர் இருப்பர் (என்று இருந்தாலும், தைவான் சீனாவால் கைப்பற்றப் படப்போகிற நாடுதான் என்பது எங்களைப் போல் சீன மக்களோடு நெருங்கிப் பழகுபவர்களின் பரவலான அபிப்பிராயம்).
இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பிலியன் என்று நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் . மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-
ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆம், ஆச்சரியம்தான். அதனால்தான் நாம் விதியென்றும், கிரகப் பலன்கள் எனவும், கர்மத்தாக்கம் என்றும் நம் கையாலாகாத்தனத்திற்கு சென்னையிலும், பம்பாயிலும், டில்லியிலும், கோலாலம்பூரிலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது. முப்பத்தைந்து லட்சம் சீனர்களைக் கொண்ட சிங்கப்பூரும், அறுபது லட்சம் சீனர்களைக் கொண்ட ஹாங்காங்கும், இரண்டே கால் கோடி சீனர்களைக் கொண்ட தைவானும் உலகமே பிரமிக்கும் வகையில் உயர்ந்தோங்கி நிற்கின்றன. இதெல்லாம் போக, இப்போது எல்லோரையும் தூக்கி விழுங்கும் வகையில் சீனா தன் 130 கோடி ஜனத்தொகையுடன் வெற்றிப் புன்னகை ததும்ப 21 ஆம் நூற்றாண்டேறே தனதென்று மார்தட்டி நிற்கின்றது.
கேட்கின்றது. உங்களில் பலர் 'இந்தியாவும் முன் போல் அல்ல. நாங்களும் வெகு வெகமாக முன்னேறி வந்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் இந்தியாவுக்கு பொயிருக்கின்றீர்களா?' என்று கேட்பது எனக்கும் கேட்கின்றது. போயிருக்கின்றேன் சார் !!! இந்தியாவிற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு முறை போய் வருவேன். அதேபோல் சீனாவிற்கும் ஆறு முறை போய் வந்திருக்கிறேன். என் அபிப்பிராயத்தில், தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது.
இதைப் படிக்கும் வாசகர்கள் எவ்வளவு கோபப்படுவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? சைபீரியாவில் நின்று கணக்குப் போட்டாலும், சந்திர மண்டலத்தில் நின்று கணக்குப் போட்டாலும் ஒன்றும், ஒன்றும் என்றுமே இரண்டுதான். மூ ன்றாகாது. அதேபோலத்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வேறுபாடு.
சரி இந்த வாதத்தை பிறகு வைத்துக் கொள்வோம். இப்ப மேட்டருக்கு வருகிறேன்.
இந்தியர்களைப் போல் சீனர்களும் மலாயாவிற்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள்தான். ஆனால் நம்மைப் போல் வெள்ளையர்களால் இவர்கள் கொத்தடிமைகளாக இங்கு கொண்டு வரப் படவில்லை. சீனாவில் அப்போது இருந்த தங்களின் கடினமான வாழ்க்கையின் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் பாய்மர கப்பல்களில் ஏறி வந்தவர்கள்தான் இன்று மலேசியாவில் உள்ள சீனர்கள். தங்களை ஏற்றிச் செல்லும் பாய்மரக் கப்பல் கரை சேருமா சேராதா என்று அறியாத பட்ச்சத்தில் தாய், தகப்பன், மனைவி, மக்கள் யாவரையும் சீன தேசத்தில் விட்டு விட்டு 3,000 மைல் கடலை கடக்க எண்ணி கப்பலேரும் கூட்டத்தினர் எத்தகையவராக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இருந்தவர்களிலேயே துணிச்சல் மிக்கவர்களாக.
இதனால் இந்தியர்களுக்கு நேர்மாறாக இந்த நாட்டில் குடியேறிய சீன வம்சாவளியினரின் 'தரம்' மிகவும் நேர்த்தியான ஒன்றாக அமைந்தது. மேலும் பொதுவாக சீன வம்சத்தினரை புரிந்து கொள்ள வேண்டுமேயானால், சீன நாட்டின் வரலாற்றையும், அந் நாட்டின் அன்றைய அமைப்பையும் சிறிது அறிந்து கொள்ள வேண்டும். சீனாவின் சரித்திரம் மனிதனாலும், இயற்கையாலும் ஏற்படுத்த பட்ட பல பேரிடர்களைக் கொண்டது.
4,500 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப் பட்ட சீனர்களின் 'மஞ்சள் நதி' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மாறி மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனர்களின் வாழ்வு என்றுமே கடினமான ஒன்றாக இருந்திருக்கின்றது. இத்தகைய வாழ்க்கை முறையின் கீழ் மனதிலும் உடம்பிலும் வலு அற்றோர், உடம்பாலும், மனதாலும், ஊக்கத்தாலும் சிறந்தவர்களிடம் தோற்று ஒதுங்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது. இப்படியே survival of the fittest என்ற ஒரு weeding out process 4,500 வருடங்களுக்கு முன்பிருந்து, சமீபகாலம் வரை நடந்து வந்திருக்கின்றது. இதனால் சீன வம்சமே உடம்பாலும், மனத்தாலும், உக்கத்தாலும் ஒரு 'சூப்பர் வம்சமாக' உருவெடுத்திருக்கிறது. இந்தியர்களுக்கும் மலாய்க் காரர்களுக்கும் 'இன்பீரியொரிட்டி காம்ப்லெக்ஸ்\ எப்படி ஒரு ஆழமான பிரச்சனையோ, அதே போல் சீனர்களுக்கு 'சுப்பீரியோரிட்டி காம்ப்லெக்ஸ்\' ஒரு பிரச்சனை.
அத்தோடு இந்தியர்களைப் போன்றோ, மலாய் காரர்களைப் போன்றோ சீனர்கள் நெருங்கிய உறவினர்களோடு திருமணம் புரிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு TAN என்ற முதற்பெயர் கொணட ஒரு சீனர் TAN என்ற முதற்பெயர் கொண்ட மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டார். இது காலம் காலமாக அவர்கள் பேணிக் காத்து வரும் ஒரு பழக்கம். இதனால் நம்மைப் போல் தமக்கையின் மகளை மணம் செய்து (in-breeding), அதனால் அடுத்த வாரிசுகளுக்கு ஏற்ப்படும் மருத்துவ பிரச்சனை எல்லாம் சீனர்களுக்கு கிடையவே கிடையாது.
வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி அரசரையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை எங்கனம் கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது. இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக அவர்கள் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் பிற நாடுகளில் தொழில் புரியும்போது உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகயிலும் பரிசுகள் கொடுப்பதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.
இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சீனர்களுக்கு செழிப்பான பூமியையும், சோம்பேறி மலாய்காரர்களையும் கொண்ட அந்தக் காலத்து மலாயாவில் குறுகிய காலத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கைப்பற்றியதில் ஆச்சரியம் எதுவுமே இல்லை. 1970 ஆம் ஆண்டு அமல்படுத்தப் பட்ட NEW ECONOMIC POLICY மட்டும் இல்லையென்றால், சீனர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் 90 விழுக்காட்டை தங்கள் வசம் வைத்திருப்பார்கள் என்பது திண்ணம்.
அடுத்த தொடரில் சீனர்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் பொதுவான கண்ணோட்டம் ஆகியவையை விவரிக்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
ஐயா பெரியவரே! நூறு வருடங்களாக மலேசியாவில் வாழ்ந்து பெரும் உலக அனுபவம் பெற்றவரே! இந்த மந்த புத்தியின் கேள்விகளுக்கு சற்று விடை கொடுத்து விட்டு உங்கள் பேருரையைத் தொடருங்கள்.
ReplyDeleteஇந்தியர்கள் (தமிழர்கள்) மலேயாவிற்கு இராஜேந்திர சோழன் காலத்திலேயே சென்று விட்டார்கள் - 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழிக்கிணங்க. நீங்கள் சொல்வது போல் 'கொத்தடிமை'களாக மட்டும் செல்லவில்லை. இந்தியர்கள் கொத்தடிமைகளாக மட்டும் சென்றார்கள் என்பதற்கும் சீனர்கள் 3000 மைல் தாண்டி வாழ்க்கைப் போராட்டத்தில் ஜெயிப்பதற்காக மட்டுமே வந்தார்கள் என்பதற்கு ஏதாவது பிரமாணம் வைத்திருக்கிறீர்களா? இல்லை இது உங்கள் 'பெரும் அனுபவத்தில்' வந்த 'அரைவேக்காட்டு'க் கருத்தா?
அரசியல் சூழ்நிலைகளால் சீனர்கள் நல்ல உடல் வலிவும் மன வலிவும் பெற்றார்களா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நம் நாட்டினரும் அது போன்ற அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து வந்தவர்கள் தான். உம் கருத்துப் படி அவர்கள் அதனால் தாழ்ந்து போய் விடவில்லை.
உமக்கு சீனர்களைப் பற்றி புகழ்ந்து கூற வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் - அதற்காக நம் மக்களைக் குறை கூற வேண்டாம். அதுவும் 'survival of the fittest', 'weeding out process' என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை (தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.
சுந்தர்: இந்தத் தொடரைப் படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தொடர். தமிழ் வலைப்பதிவுகளில் எப்பொழுதாவதுதான் இதைப்போன்று insight உள்ள விஷயங்கள் எழுதப்படுகின்றன. இதனால் பலருக்கும் கோபம் வருகிறது என்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான்.
ReplyDeleteசிலர் இந்தியா மீது வைத்திருக்கும் பக்தி தெரிகிறது. அது நல்லவிதமாகப் பயன்பட்டால் நல்லதுதான்.
அடிப்படையில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. சத்யாவின் வலைப்பதிவிலிருந்து இரண்டு சுட்டிகள்:
http://prayatna.typepad.com/satya/2003/12/economic_develo.html
http://prayatna.typepad.com/satya/2005/08/what_india_can_.html
நான் தாய்லாந்து சென்றிருந்தபோது அங்குள்ள பொருளாதாரத்தில் பாதி சீனர்கள் கையில் என்றதும் நிஜமாகவே ஆச்சரியமடைந்தேன். தென் கிழக்கு ஆசியாவில் சீனர்கள் என்ன செய்துள்ளனர் என்பது பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள ஆசை ஏற்பட்டது. இந்தத் தொடர் மிகவும் உபயோகமாக உள்ளது.
தொடரின் பிற பாகங்களைப் படித்து விட்டு ஒட்டுமொத்தமாக கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன்.
இரண்டு கோரிக்கைகள்:
1. haloscan பின்னூட்டத்தை வெட்டிவிட்டால் வசதியாக இருக்கும். இங்கும் அங்கும் பலர் விட்டுச்செல்லும் பின்னூட்டங்களைப் படிக்க வசதியாக இல்லை.
2. ஒவ்வொரு பாகத்திலும் முந்தைய பாகங்களுக்கான சுட்டியை முழுமையாகக் கொடுத்தால் (வேலை அதிகம்தான்!) புதிய வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.
நன்றி.
haloscan comments :
ReplyDelete/*அதனால்தான் நாம் விதியென்றும், கிரகப் பலன்கள் எனவும், கர்மத்தாக்கம் என்றும் நம் கையாலாகாத்தனத்திற்கு சென்னையிலும், பம்பாயிலும், டில்லியிலும், கோலாலம்பூரிலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது*/
சொந்த நாட்டில் வசிக்க வக்கில்லாமல் வெளிநாட்டில் நக்கிக்கொண்டிருக்கும் தங்களை போன்றவர்கள், அயல்நாட்டு பெருமை சொல்லி ஏன் சொந்த நாட்டை நக்கலடிக்கிறீர்கள். உங்களுக்கு புடிக்கலைன்னா பொத்திக்கிட்டு நக்கிக்கிட்டு இருக்கும் நாட்டை பற்றி பெருமையாக எழுதுங்கள். தாய் நாட்டை கேவலப்படுத்தாதீர்கள். இந்தியாவில் கஷ்டபடுபவனும் தன் தாய் நாடு என்று மார் தட்டி கொள்வான். நம்மலால் என்ன முடியுமோ அதை செய்து விட்டு பேச வேண்டும். உமக்கு வாழ வக்கில்லை என்றவுடன், இந்தியா ஒன்றும் தாழ்ந்து விட வில்லை.
Ravi | Email | Homepage | 10.11.05 - 3:09 pm | #
--------------------------------------------------------------------------------
ரவி,
நிதானம் தவறி வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். நூறு வருடங்களாக ம்மலேசியாவில் இருக்கும் ஒருவர் கண்முன்னே இந்திய சமூகமும், சீன சமூகமும் ஒரே வித கட்டுப்பாடுகளை எதிர்கொண்டபடி, எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்று எழுதுகிறார். ஆவர் எழுதுவதில் இந்தியர்கள் மீதான கரிசனமும், பரிதாபமும் வெளிப்படுகிறதே ஒழிய, வேறு என்ன தெரிகிறது..??
பொறுமயுடன் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
மூக்கன் | Email | Homepage | 10.11.05 - 4:22 pm | #
--------------------------------------------------------------------------------
நம்மிடம் என்ன இல்லை என்று தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வதும் நாட்டுப் பற்று தான். இதை கன்ஸ்டரக்டிவ் கிரிடிசிஸமாகத் தான் பார்க்கிறேன்.
Dubukku | Email | Homepage | 10.13.05 - 2:55 am | #
--------------------------------------------------------------------------------
முதலில் MS Paint ஐ ஒழுங்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு இண்டர்நெட்டிற்கு வந்து இந்தியாவைக் குறை சொல்லலாம். அதற்கு நீர் லாயக்கற்றவர் என்பது வேறு.
anon | Email | Homepage | 10.13.05 - 8:14 am | #
--------------------------------------------------------------------------------
உங்கள் மேதாவி தனத்திற்க்கு எனது பதில் இங்கே.
http://sivapuraanam.blogspot.com...og- post_12.html
Siva | Email | Homepage | 10.13.05 - 9:30 am | #
--------------------------------------------------------------------------------
"Neengil urrammum indri
Neermai thiranum indri
Vanganai solvaaradi kiliyey
Vaai sollil veerar adi
Kootathil koodi nindru
Kovi pithatral andri
Naatathil kollaradi Killyey
Naalil mara paaradi".
Natarajan | Email | Homepage | 10.13.05 - 9:32 am | #
--------------------------------------------------------------------------------
My email natadreams@gmail.com
Natarajan | Email | Homepage | 10.13.05 - 9:33 am | #
--------------------------------------------------------------------------------
உங்கள் பதிவுக்கு பரபரப்பு ஊட்ட இந்தப் பதிவு கருவியாக முடிந்ததில் மகிழ்ச்சி சிவா.உங்கள் கருத்துகளை திரு.ராஜசேகரனுக்கு முன்னிப்பு செய்திருக்கிறேன்.
உங்கள் கோணம் உணர்வுபூர்வமான வகையில் இருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். பாதிநேரம் மனசுக்கும், மூளைக்கும் சம்பந்தம் இல்லை
நன்றி.
மூக்கன் | Email | Homepage | 10.13.05 - 9:40 am | #
--------------------------------------------------------------------------------
ஐயா பெரியவரே! நூறு வருடங்களாக மலேசியாவில் வாழ்ந்து பெரும் உலக அனுபவம் பெற்றவரே! இந்த மந்த புத்தியின் கேள்விகளுக்கு சற்று விடை கொடுத்து விட்டு உங்கள் பேருரையைத் தொடருங்கள்.
இந்தியர்கள் (தமிழர்கள்) மலேயாவிற்கு இராஜேந்திர சோழன் காலத்திலேயே சென்று விட்டார்கள் - 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழிக்கிணங்க. நீங்கள் சொல்வது போல் 'கொத்தடிமை'களாக மட்டும் செல்லவில்லை. இந்தியர்கள் கொத்தடிமைகளாக மட்டும் சென்றார்கள் என்பதற்கும் சீனர்கள் 3000 மைல் தாண்டி வாழ்க்கைப் போராட்டத்தில் ஜெயிப்பதற்காக மட்டுமே வந்தார்கள் என்பதற்கு ஏதாவது பிரமாணம் வைத்திருக்கிறீர்களா? இல்லை இது உங்கள் 'பெரும் அனுபவத்தில்' வந்த 'அரைவேக்காட்டு'க் கருத்தா?
அரசியல் சூழ்நிலைகளால் சீனர்கள் நல்ல உடல் வலிவும் மன வலிவும் பெற்றார்களா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நம் நாட்டினரும் அது போன்ற அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து வந்தவர்கள் தான். உம் கருத்துப் படி அவர்கள் அதனால் தாழ்ந்து போய் விடவில்லை.
உமக்கு சீனர்களைப் பற்றி புகழ்ந்து கூற வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் - அதற்காக நம் மக்களைக் குறை கூற வேண்டாம். அதுவும் 'survival of the fittest', 'weeding out process' என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை (தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.
மூக்கன் அவர்களே! மனசுக்கும் மூளைக்கும் பாதி நேரம் சம்பந்தம் இல்லாமல் போகலாம். ஆனால் மூளையே இல்லாமல் கண்டபடி எழுதுபவர்களை என்ன செய்வது?
Anonymous | Email | Homepage | 10.13.05 - 9:59 am | #
--------------------------------------------------------------------------------
ஒருவர் தன் வாழ்கையில் எதிர்கொண்ட அநுபவங்களை பொருத்துத்தான் அவரின் சிந்தனைகள் வடிவம்பெரும்.
இதுவரை நான் எழுதிய யாவும் என் மனதில் தோன்றி எண்ணங்கள். மற்றவர்கள் விமர்சிப்பத்ற்காக என் சிந்தனைகள் மாறப் போவதும் இல்லை. அவற்றை நான் மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை.
இருந்தாலும் இத்தனை தமிழர்களை ஆவேசப் பட வைத்து விட்டதால், நான் எழுதிய குறைகளுக்கான விழக்கங்களை ஒரு ஆர்டிக்களாக, தற்ப்போது எழுதிக் கொண்டு இருக்கும் தொடர் முடிந்தவுடன் எழுதுகிறேன். அப்போது வைத்துக் கொள்வோம் இந்த தர்க்கத்தை.
கிழட்டு அநுபவங்கள் முடிய இன்னும் மூன்று பதிவுகள் உள்ளன.
"அதெல்லாம் முடியாது, உடனே தலம் இருங்கு", என்கிறீர்களா ? சாரி. நீங்கள் பொருத்திருக்கத்தான் வேண்டும்.
rajasekaran | Email | Homepage | 10.13.05 - 7:20 pm | #
--------------------------------------------------------------------------------
ராஜசேகரன்,
உங்கள் சிந்தனை மாற வேண்டும் என்று நான் அந்த பதிவை போடவில்லை. தனி மனிதனை நிந்தனை செய்வதும் எனக்கு பிடிக்காத ஒன்று தான். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு கண்ணோட்டத்திலும் ஒரு நாட்டை பார்க்கலாம் என்றும் உங்களுக்கு தெரிவிக்கவே (உணர்த்த அல்ல) நான் அந்த பதிவை போட்டேன். நாங்கள் உங்களை தலம் இறங்கு என்றேல்லாம் கேட்க போவதில்லை. அவசியமும் இல்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை (அதனால் பைசா பிரயோசனம் இல்லை) . நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
நன்றி - சிவா ( g_siva_raja@yahoo.co.in)
Siva | Email | Homepage | 10.14.05 - 4:40 am | #
--------------------------------------------------------------------------------
அய்யா! தங்கள் கருத்தை Constructive Criticism-ஆக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் இந்தியாவிற்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியலிட சொல்லவில்லை, உங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது உண்டெனில் மகிழ்வேன்!!!
ஆள்தோட்டபூ | Email | Homepage | 10.14.05 - 7:25 am | #
--------------------------------------------------------------------------------
நான் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் பகுதியை இன்றுதான் படித்தேன். பலர் இங்கு உணர்ச்சிவசப் படுவதும் கோபப்படுவதும் குழந்தைத்தனமாக இருக்கிறது. உண்மை கசக்கலாம், அதற்காக நாம் முட்டாள்களின் சொர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா? உண்மையை நேர்கண்ணோடு நோக்கும் வலிமையிருந்தால்தான் , அதன் பிடியிலிருந்து முன்னேற வழி தேடும் முயற்சிகளும் பிறக்கும். தூதுவரைச் சுடலாமா?
Voice on Wings | Email | Homepage | 10.15.05 - 2:44 am | #
--------------------------------------------------------------------------------
Name:
Email:
URL:
Comment: ?
Commenting by HaloScan.com
கருத்திட்ட தோழமைகளுக்கு நன்றி.
ReplyDeleteபத்ரி, நீங்கள் சொன்ன மாற்றங்களை செய்திருக்கிறேன்.
மலேசியா பற்றி இல்லாவிட்டாலும் சீனா-இந்தியா ஒப்பீடு பற்றி இந்தப் பதிவில் இருப்பதால், கீழ்க்கண்ட பதிவைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:
ReplyDeletehttp://ramz.blogspot.com/2005/10/india-and-china.html
முக்கியமாக
http://www.dbresearch.com/PROD/DBR_INTERNET_EN-PROD/PROD0000000000192108.pdf
இந்தக் கோப்பில் இந்தியா-சீனா வளர்ச்சியில் எத்தனை வேறுபாடுகள், இந்தியா எந்த அளவுக்குப் பின்தங்கியுள்ளது என்று தெரிய வரும். ஆனால் இந்தியாவின் மிக முக்கிய பலமாக நான் நினைப்பது பன்மைத்தன்மையும் குடியாட்சி முறையும்தான் அது நமக்குக் கொடுக்கும் சுதந்தரமும்.
இந்தச் சலுகைகளை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் அதிகமாக உழைத்தால்தான் சீனா அளவுக்கு வரமுடியும். வெட்டிப்பேச்சுக்களால் அல்ல. நம்மிடம் என்ன குறை என்று தெரிந்தால் மட்டுமே நம்மைச் சரி செய்துகொள்ள முடியும்.