Skip to main content

Posts

Showing posts from 2009

வீட்டுமிருகம்

இடுபெயரின் கடைப்பகுதி சாதி சொல்லி சதி செய்யா தூரதேசம் வளமை பொதுவானதால்
வேற்றுமைகள் மறந்தே போன
அயலகம் பிறப்பில் உயர்வு தாழ்வை
திருமணங்களில் மட்டும் காத்து மற்றபோழ்தில் ஒதுக்கியே கிறங்கிப்போன கிளரொளி இளமை.
பணியிட ஸ்நேகம் அழைக்க விருந்தாட வேண்டி சென்றோம்
சூழ்நிலை குதூகலம் கூட்ட பாடல்கள் இளக்கிய மாலை
இனிமை இனிமை எனவும் சூலுற்ற நண்பன் மனையாள்
ஓடியாடி சமைக்க விழைய
ஊர்க்கதை கூடத்திலிறைந்தது
உண்ணத் துவங்கையில் சற்றே பார்வை எட்டி
சமையலுள் புத்தனை அண்ட மனசுக்குள் சொல்லொணா
உணர்வொன்று பற்றியெழ.....
வாய் கசந்து உமிழ்நீர் சுரந்து
வயிறு குமட்டி
என் அக வித்தியாசங்களை எனக்குள் வெளிச்சமாக்க வளர்ப்பு நாய் கடித்தாற்போல
பதறிப்பொன மனதுக்குள் கள்ளம் உறைவ துலங்கியதே முகரவும் ருசிக்கவுமான என் மிருகத்தன எச்சங்களாலே
நாசுக்கும் நாகரீகமும் கல்வியும் கடவுளும்
மாசில்லா மனிதம் வேண்டுமென பேசிப்பேசி உரைப்பினும்
உள்ளுக்குள் கசடென்பது
இன்னமும் மிச்சமாச்சே
என வெம்மி விசும்பி சோர்ந்து போக இன்னமும் வேகமாய் வெல்லவேண்டுமந்த விலங்கையென இந்நாளில் வன்மம் கொண்டேன் முன்னிலும் வேகத்தே.

விகடன் - கவிதை

நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்! ( தமிழ்நதி)குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
'காட்டுப் பூபோல மலர வேண்டும் கவிதை'
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது.
காற்றில் தனித்தசையும் காட்டுப் பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது
வெளிச்சம்! புளிய மரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும்
சாலையின் வழியே
மிதந்து செல்கிறார்கள்
கார் காலத்தில்
மானசியும் ஜான்சனும்.
இளவேனிலில்
மானசியும் மௌலியும்.
ஆகஸ்ட்டின் கொதி வெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப் பெண்ணின் காதலின் மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை!

ஊழல் சாந்து குழைத்த கட்டட
இடிபாடுகளினின்று
தப்பிப் பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு.
நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத் தொலைக்காட்சியை வாங்க!'உன்னை மறந்தால் இறப்பேன்'
என்ற…

எமக்குத் தொழில்....

கொள்கையேதுமில்லை பிறந்தபோழ்து என்னிடத்தே வயிற்றுப்பாட்டுக்கும் கதகதப்புக்கும் அண்டிக் கொள்வதன்றி. வளர வளர சுற்றமும் நட்பும் கண்டதும் கல்வியும் இளமையும் செலுத்திய திசை குறுகுறு பயணங்கள் ... கம்யூனிஸ்ட் என்றார்கள் மதவாதி என்றார்கள் இடது சாரியோ வலது சாரியோவென இரகசியம் பேசினார்கள். பொருள்முதல்வாதி என்றுகூட பொருமினார்கள் வறியர்கள் இனவெறியன் என்றார்கள் ஒரு சாரார். ஆணவமும் அகந்தையுமே ஆன்மீக போர்வையில் கொலுவிருக்கிறது என்றோரும் உண்டு. குழந்தையாகவே இருக்கிறேன் இன்னமும் நான் மாற்றங்கள் ஏதும் இல்லை வருடங்கள் கழிந்ததைத் தவிர எழுத்தை மதிக்கின்ற இடத்திலா இருக்கிறேன் கொள்கைக்கு தாலி கட்டிக் கொள்ள..??

கண்ணதாசன் எழுத்து....

தன்னுடைய ஆளுமையை தனக்குப் பின்னும் கூட பிறர் வழியே இணையமெங்கும் விசிறியடிக்கும் சுஜாதாத்தாவின் அணுக்கமான விசிறியின் கிறுக்கலிருந்து வேட்டைக்காரன் பாட்டு லிங்கைப் பிடித்தேன். போனதேன்னவோ “ ”ஏன் உச்சி மண்டைய்ல சுர்ருங்குது..” என்கிற பாட்டைக் கேட்கத்தான்.

என்னவோ என் நேரம் எல்லா பாட்டையும் டவுன்லோடினேன். அதிலிருந்து காரில் இதே பாட்டுத்தான் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. ”கரிகாலன் குழல் போல” என்று ஆரம்பித்து காதில் கரையும் அந்தப் பாடல் பிடித்திருப்பதற்கு காரணம்...

பாட்டில் உள்ள அருந்தமிழா..?
கொஞ்சலும் சிருங்காரமும் நிரம்பிய பெண்குரலா..?
இசையா..?
தாளக்கட்டா..?
படத்தின் நாயகி அனுஷ்காவின் சன் டீவி பேட்டியை நான் பார்த்ததாலா..?
பாடலில் நிரம்பி வழியும் ஏகப்பட்ட ரொமான்ஸா..?

ஏதோ ஒன்று ... சரியாகப் படமாக்கப்பட்டால், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். கல்லூரி மேடைகளிலும் கன்னிகளும், தமிழ்ச்சங்க விழாக்களில் ஆன்டிகளும் இன்னம் ஒரு வருடத்துக்கு தங்கு தங்கென்று குதிக்கப் போகிறார்கள். என்னைப்…

சங்கிலி

சந்திக்கின்ற சந்தர்ப்பங்களை தொலைபேசி நினைவூட்டுகிறாய். உடல்நலம் விசாரித்தால் விசாரிக்காது போனவனை அலுத்துக் கொள்கிறாய் சாதாரணப் பேச்சைக்கூட மர்மமான பார்வையால் அழகாக்குகிறாய். உன் தோழிகளிடம் பேசினால் உனக்கு அவர்களைப் பிடிப்பதில்லை. என்னிடம் பேசுகையில் காரணமில்லாமல் சிடுசிடுக்கும் உன்னவனின் பதட்டம் புரிய புன்னகைக்கிறேன். சந்திக்கும்போதெல்லாம் உன் அணைப்பில் இறுகும் என் பிள்ளையைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாயும் கூச்சமாயும் இருக்கிறது. அன்பு செலுத்துவதைக்கூட ரகசியப்படுத்திவிட்டன பிணைத்துக்கொண்ட உறவுச்சங்கிலிகள்... .....முன்பே பார்த்திருக்கலாம்


ஜெயமோகன் வருகை- Report

சாக்ரமெண்டோ இன்டெல் (Intel) வளாகத்தில் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய உள்ளரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் e-vite புண்ணியத்தில் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டவர்களோ வெறும் நாற்பது பேர். மயிலாப்பூர் ரெஸ்டாரெண்டில் இருந்து தேநீரும் சூடான வடைகளும், கொஞ்சம் வாசகர்களும் காத்திருந்தனர்.
நான் சென்னையில் இருந்து இறக்குமதியாகி இருந்த கதர் ஜில்பா மற்றும் சாயம்போன ஒரு உள்ளூர் நீல ஜீன்ஸ் சகிதம் ஒரு இந்திய ஹோட்டல் வாயிலில் காத்திருந்தேன். ஜெயமோகன் முன்னிரவே சாக்ரமண்டோ வந்து எங்கோ திருமலைராஜனின் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். முதல் நாளிரவே வீட்டுக்கு அழைக்கலாம் என்று எண்ணமிருந்தாலும், இந்தியாவிலிருந்து வந்திருந்த அன்னை மற்றும் தந்தையை கருத்தில் கொண்டு மறுநாள் சந்திக்கலாம் என்று முடிவு செய்து கொண்டு காத்திருந்தேன். இருமுறை அல்லது மூன்றுமுறை தொலைபேசி அழைப்புக்குப் பின் கார் வந்து நின்றது. இறங்கியவுடனேயே கதவைத் திறந்து “ நான் ஜெயமோகன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உண்வு உண்ணச் சென்றோம். கொஞ்சமே கொஞ்சம் சோறு சாப்பிட்டார்- கோழி கொறிப்பது போல. ஆனால் கோழியை ஒதுக்கவில்லை. சாளேஸ்வ…

எழுத்தாளர் ஜெயமோகன் வருகை

சாக்ரமண்டோ தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்கள் இங்கே

சாக்ரமண்டோ தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுந்தர் சுதத தமிழில் பேசினாலே sub title போடுப்பா என்று சொல்வார்கள். :-) ஜெயமோகன் ரேஞ்சுக்கு தாங்குவார்களா என்று தோன்றினாலும் எதிர்பார்ப்பு நிறைந்த படபடப்பு இருக்கிறது.

மற்றவை கூட்டம் முடிந்த பின்பு..

அச்சமுண்டு அச்சமுண்டு

நான் பொதுவாக த்ரில்லர் படங்களை விரும்புவதில்லை. காரணம் பயந்து கொண்டே, ஒரு திடுக்கிடலுடன் படம் பார்க்க என் சுபாவம் ஒத்துழைக்காது. ”நூறாவது நாள்” படம் பார்க்கும்போது பய்ந்துகொண்டு பககத்தில் இருந்த சித்தப்பா பையன் மடியில் கண்களை இறுக மூடிக்கொண்டு தலையைப் பதித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
இத்த்னையும் மீறி நேற்று Bay Area IMC6 ல் அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்தேன். பரிச்சயப்பட்ட மனிதர் எடுக்கும் முதல் முழுநீளப்படம் எப்படி வந்திருக்கிரது என்ற ஆர்வம் முக்கிய காரணம். நண்பர் அருண் வைத்தியநாதன் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தில் மிக பாபுலரான தமிழ் வலைப்பதிவர். http://arunviews.blogspot.com/ என்ற வலைப்பதிவு நடத்தி வந்தார்.

ப்டத்தைப் பார்த்தபின், தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் வன்முறை குறைந்த, வக்ரம்/பயங்கரம் குறைந்த, யதார்த்தம் மிகுந்த இன்னொரு கெளதம் மேனன் கிடைத்துவிட்டார் என்று சொல்லும் வகையில் படம் இருந்தது. எல்லா வயதினரும் பார்க்கத் தகுந்த முறையில், புதுமையான பின்புலத்தில், யாரும் தொடாத ஒரு சப்ஜெக்டை கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்வதால் கதையோடு இந்த அளவு ஒன்ற முடிந்ததா என்று தெரியவில்லை. ச…

ஆனந்த தாண்டவம்

அமரர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை கோலிவுட் கோதண்டபாணிகளின் புண்ணியத்தில் சிதையாமல், முடமாகாமல் படமாகி இருக்கிறது. உயிரோடு இருந்திருந்தால் வாத்தியார் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பார். அவருடைய பழைய கதைகளை கோலிவுட் தோய்த்து காயப்போட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்

முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை:

1. ஹீரோ வேஸ்ட். புது பையன். ரகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க தவறிவிட்டார். தனுஷை முயன்றிருக்கலாம்.

2. ஹீரோ அப்பா கிட்டி வேஸ்ட். கதையில் முக்கிய கேரக்டர் இது. பூர்ணமோ அல்லது நாசரோ பின்னி பெடல் எடுத்திருப்பார்கள். கிட்டி இயந்திரம் போல நடித்திருக்கிறார்.

3. தமன்னா .. ஹி..ஹீ . ஓகே. மதுமிதாவின் வெகுளித்தனமும், குழப்பமும், பின்னாளைய சோகமும் அவ்வளவு ரியலிஸ்டிக்காக வராவிட்டாலும் நிஜ கேரக்டருக்கு கொஞ்சம் அருகில் வரக்கூடிய நடிப்பு அவருடையதே. இந்த ஸ்டேட்மெண்டுக்கும் எனக்கு கல்லூரிக்கு அப்புறம் பர்சன்லாக தமன்னாவை பர்சனலாக பிடித்திருப்பதற்கும் சம்பந்தமில்லை.மீரா ஜாஸ்மின் இன்னமும் பெட்டராக செய்திருப்பார்.

4. தமன்னாவின் அமெரிக்க கணவனாக வரும் கேரக்டர் ஓகே. மில்லியன் தனம்/குரூரம்/மானிபுலேஷன் மூளை கொஞ்சம…

தேர்தல் 2009 முடிவுகள்

முடிவுகள் மகிழ்ச்சியா, வருத்தமா என்று சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. என்னுடைய சில அவதானங்கள்* காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெற்ற வெற்றிக்கு பா.ஜ.க பலமான் கூட்டணியை அமைக்காதது காரணம். பல மாநிலங்களில் நல்ல வாய்ப்புகள் நழுவின.
* முடிவு பற்றிய பயம் பல காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தனித்து தேர்தலை சந்திக்க தூண்டியது. அவை யாவும் மறுபடி வரும். பழைய மதிப்பு கிடைக்குமா..??

* இந்திய மக்களின் மனோபாவம் தன் நாட்டு தேசிய நலன் மட்டுமே சார்ந்து, தன் பொருளாதார நலன் மட்டும் சார்ந்த கிட்டத்தட்ட அமெரிக்க மக்களின் மனோபாவத்தை ஒட்டி அமைந்து விட்டது.

* எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.

* ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும் எல்லாக் கட்சியும் பணபலத்தை தேர்தலில் உபயோகப்படுத்தும். கோடிகளில் இம்முறை பணமிறங்கியதற்கு காரணம் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். :-) இங்கு யாரும் உத்தமர்கள் அல்ல.

* பா.ம.க அய்யாவின் கொட்டம் கொஞ்சம் அடங்கும். அடுத்தமுறை அணி மாறு…

தமிழ் மன்ற விழா - 2009

சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மன்றத்தின் பத்தாவது ஆண்டுவிழாக் கொண்ட்டாட்டமும் சேர்ந்து கொண்டதால் விழா ஜெகஜ்ஜோதியாக களை(லை) கட்டியது.

புகைப்பட்ங்கள் உங்கள் பார்வைக்கு :

ஆல்பம் ஒன்று

ஆல்பம் இரண்டு


அதிர்ஷ்ட்டவசமாக குறைகள் ஒன்றும் இல்லாமல் விழா இனிதே நடந்தது,