Sunday, July 19, 2009

ஆனந்த தாண்டவம்




அமரர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை கோலிவுட் கோதண்டபாணிகளின் புண்ணியத்தில் சிதையாமல், முடமாகாமல் படமாகி இருக்கிறது. உயிரோடு இருந்திருந்தால் வாத்தியார் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பார். அவருடைய பழைய கதைகளை கோலிவுட் தோய்த்து காயப்போட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்


முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை:


1. ஹீரோ வேஸ்ட். புது பையன். ரகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க தவறிவிட்டார். தனுஷை முயன்றிருக்கலாம்.


2. ஹீரோ அப்பா கிட்டி வேஸ்ட். கதையில் முக்கிய கேரக்டர் இது. பூர்ணமோ அல்லது நாசரோ பின்னி பெடல் எடுத்திருப்பார்கள். கிட்டி இயந்திரம் போல நடித்திருக்கிறார்.


3. தமன்னா .. ஹி..ஹீ . ஓகே. மதுமிதாவின் வெகுளித்தனமும், குழப்பமும், பின்னாளைய சோகமும் அவ்வளவு ரியலிஸ்டிக்காக வராவிட்டாலும் நிஜ கேரக்டருக்கு கொஞ்சம் அருகில் வரக்கூடிய நடிப்பு அவருடையதே. இந்த ஸ்டேட்மெண்டுக்கும் எனக்கு கல்லூரிக்கு அப்புறம் பர்சன்லாக தமன்னாவை பர்சனலாக பிடித்திருப்பதற்கும் சம்பந்தமில்லை.மீரா ஜாஸ்மின் இன்னமும் பெட்டராக செய்திருப்பார்.


4. தமன்னாவின் அமெரிக்க கணவனாக வரும் கேரக்டர் ஓகே. மில்லியன் தனம்/குரூரம்/மானிபுலேஷன் மூளை கொஞ்சம் மிஸ்ஸிங். யாங்கி பாஷை பேசுகிறேன் என்று செளகார்பேட் பாஷை பேசி இருக்கிறர்.கதையில் அந்தக் கெரக்டர் உச்சந்தலை சொட்டையை மறைத்திருப்பதாக வரும். படத்தில் இதற்காகவே சைட் டிஷ் தட்டு அளவுக்கு பின் மண்டையில் செயற்கையாக சிரைத்திருக்கிறார்கள் . அமெரிக்கா வந்த இந்திய மண்டையில் சொட்டை இப்படி இருக்காது. ;-)


5. ரத்னா கேடக்டர் அம்சம். அவள் ரகுவை கொஞ்சம் கொஞ்சமாக கரைப்பதை அழகாக எடுத்து இருக்கிறார்கள். அவள் வீடும், தமிழ்ச்சங்க விழாவும், நாட்டியமும் படு யதார்த்தம்.


6. ஜெயந்தி கேரக்டருக்கு சன் டிவியில் சைட் போஸில் காம்பியர் செய்யும் அம்மு. ஈஸ்வரி ராவ் / ராஜஸ்ரீ அசத்தி இருப்பார்.


7. இஞ்சினியர் கோபிநாத் அசல். அவரை ஏன் படத்தில் ”பறைய” விட்டார்கள் என்று தெரியவில்லை. கதையில் அவர் மலையாளி இல்லை. நடிப்பு பாந்தம்


மற்றபடி திரைக்கதை அமைப்பு தேவலை. லொகேஷன் சூப்பர். ரகுவுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் ஏற்படும் உடல் ரீதியான அட்ராக்‌ஷன் அவர்கள் காதல் ஏற்படும் ஆரம்ப கட்டங்களில் கதையில் ஊடுபாவாக பின்னி இருக்கும். திரையில் அதற்கான காட்சி அமைப்புகளை பாலுமகேந்திரா அழகாக பின்னி இருக்கலாம். - அது ஒரு கனாக்காலத்தில் செய்ததைப் போல். மேலும் கதையின் இரண்டு பாகங்களை ஒரே படத்துக்குள் சுருக்கியதால் கொஞ்சம் விரிவாக எடுக்க/ சொல்ல முடியாமல் போனது அதிகம். ட்ரீட்மெண்ட் பிசகி விட்டது.


இந்தக் கதையையே படித்திராத, சுஜாதவை தெரியவே தெரியாத எங்கள் குடும்ப நண்பர் படத்தினை பார்த்து விட்டு சொன்னார் - என்னயா படம் இது. அந்தப் பொண்ணு லூசு மாதிரி நடந்துக்குது” என்று


சிரித்துக் கொண்டேன்.







8 comments:

  1. இந்தப் படத்தைப் பார்க்காமலேயே சுஜாதா செத்தது நல்லது என நினைத்துக்கொண்டேன். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்! சரி, பூர்ணமும் இறந்துவிட்டார். :-)

    ReplyDelete
  2. Anonymous7:55 PM

    சுந்தர்,

    இது நிஜமான விமர்சனமா, இல்லை காமெடியா? :)

    நான் கதையைப் பலமுறை படித்தவன், ஆனால் படத்தைச் சேர்ந்தாற்போல் 10 நிமிடம்கூடப் பார்க்கமுடியவில்லை, படுபயங்கர அமெச்சூர் சித்திரமாக இருந்தது, உங்கள் குடும்ப நண்பரின் விமர்சனம்தான் என்னுடையதும், ஆனால் ஹீரோயினுக்குமட்டுமில்லை, மொத்தப் படத்துக்கும் :))))

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  3. இதற்கு மேல் சுஜாதாவின் (one of the சிறந்த)கதையை கேவலமாக எடுக்க முடியாது என்பது என் கருத்து, தமன்னா என் பெர்சனல் ஃபேவரட்டாகவும் இருப்பினும் :)

    Sujatha might be turning in his grave.

    நீங்கள் கூறியிருக்கும் choice of character களுடன் ஒத்துப் போகிறேன்.

    எ.அ.பாலா

    ReplyDelete
  4. சுந்தர்!
    இது உங்களின் உண்மையான(நையாண்டியல்லாத!) விமர்சனமென்றால் எனக்கும் ஓரளவு உடன்பாடே.
    ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் நான் படத்தை அந்த ராட்கிருஷ் இந்தியாவிற்கு வரும் காட்சிக்கு ஒரு பதினைந்து நிமிடங்கள் முன்புதான் பார்க்கத் துவங்கினேன்.
    அப்புறம் அந்த வழுக்கை மேட்டர்... இன்னும் கொஞ்சம் மெச்சூராக யோசித்திருக்கலாம்!
    மொத்தத்தில், புதினத்தை மற்றுமொரு முறை வாசிக்கத்தூண்டிய படைப்புன்னே சொல்லலாம்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  5. Traveled all the way from Bangalore to Chennai to watch this fav - " thala" story in silver screen.HIGHLY DISAPPOINTED.Stepped outta the theater even before interval.Spoiled Broth.

    ReplyDelete
  6. வேறு வழியின்றி டி.வி-யில் பார்க்க நேர்ந்தது. படுகொலை. நேற்று தான் கனவுத்தொழிற்சாலை வாசித்து முடித்தேன்.. கோடம்பாக்கத்தில் எவனும் இதை படிக்காமல் விட்டால் நல்லது என்று உத்தேசிக்கிறேன்.

    ReplyDelete
  7. குமட்டுல குத்துற கமெண்டுகளை பாத்தா இவங்கள்ளாம் ஏற்கனவே பர்சனலா இந்தக் கதைய பயாஸ்கோப்பு எடுத்தவங்க போல ... ஹி..ஹீ..

    ReplyDelete
  8. கதையா படிச்சப்போ இருந்ததைவிட, படம் நல்லா
    இருந்திச்சுன்னு சொல்றாப்பல இதுவரை ஏதாவது ஒரு நாவல்
    படமாகியிருக்கிறதா? யாராவது சொல்லுங்க.
    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
    கண்டும் விண்டும் செய்பவர் படித்திலர்.
    அதையும் தவிர, இந்த நாவலை வாலிப வயதில்
    படித்தவர்கள் எல்லோரும் இப்பொழுது ரிடயர் ஆகியிருப்பார்கள் -- என்னை மாதிரி.
    நான் (புதுப்) படம் பார்ப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...