Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
திட்டறவங்க கனடா வெங்கட்டை திட்டுங்கப்பா...
ReplyDeletehttp://domesticatedonion.net/tamil/?p=27#more-27
ஹி..ஹி..நையாண்டின்னு வகைப்படுத்தியது நான்ந்தேன் :-)
ReplyDeleteகலக்கல்! :)
ReplyDeleteபேசாம ஒவ்வொரு வார இறுதியில் ஒரு பாட்டுப் போட்டிருங்க.
-மதி
அட இவ்ளோ நல்லாப் பாடூவீரா? காலேஜ் கல்சுரல்ஸ்ல எல்லாம் கலக்கினிங்களா?
ReplyDeleteமதி, பெரகாசு. நன்னி.
ReplyDeleteஏதோ அந்த நாள் ஞாபகத்திலே பாடிவிட்டேன். காலெஜ் கல்சுரல்ஸ் எல்லாம் கட்டாயம் கச்சேரி உண்டு.ம்..
அதெல்லாம் ஒரு காலம்.
நன்றாகவிருக்கிறது. அடுத்தமுறை அஸின் 'பாடிய' பாடலாய்ப் பாடுக :-).
ReplyDeleteகலக்கல் :)))))
ReplyDeleteஅசின் பாடிய பாடலை நான் பாடுவதா..?? நல்ல நக்கல்தான் டீஜே.
ReplyDeleteஉஷா, தேங்கஸ்.
சுந்தர்,
ReplyDeleteநிஜமாவே தூள்! இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.
அந்தப் படமெ இந்தப் பாட்டுக்காக வாங்குனதுதான்.
'நம்ம' குடும்பத்துலெ எல்லாருக்கும் பாட்டு நல்லாவே வருதுல்லே?
இப்படிக்கு,
அக்கா
மிக நன்று!
ReplyDeleteநாலாவது கலக்கல் நானும் சொல்லிடறேன்.
ReplyDeleteஅப்படியே மேஜயைத் தட்டி தாளம் போட்டிருந்தால், இன்னும் தத்ரூபமாக இருந்திருக்கும்.
ReplyDeleteமூக்கரே,
ReplyDeleteபாட்டு சூப்பர்.
நேயர் விருப்பம்:
படம்: ஆட்டோ ராஜா
பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
பாடியோர்: இளையராஜா, ஜானகி
இசை: இளையராஜா
ஜானகி வாய்ஸ் வேணும்னா நான் குடுக்கவா? :-P
ஆபீஸ்-ல கேக்க முடியாது. சாயந்தரம் வூட்டுக்குப் போய் கேட்டுப்புட்டு எளுதுறேன்.
ReplyDeleteநான் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ வெங்கட்டின் "துருக்கிக் களிம்பால்" தான் "தூண்டப்பட்டீர்களோ" என்று ஓடிவந்தேன்.
ReplyDeleteகுரல் நல்லாயிருக்கே.
அடிக்கடி இப்படிப் போட்டால் ஒரு மாற்றாக இருக்மே?
துளசி அக்கா, பொட்டீக்கடை, டீச்சர், மகேஸ், கோபி , வசந்தன். நன்றி.
ReplyDeleteவசந்தன், அது கூட ரொம்ப பிடிச்ச பதிவு/தலைப்புதான். ஆனா அதை இப்படி demo/trial பார்க்கும் உத்தேசமெல்லாம் இல்லை. ;-)
ரொம்ப நல்ல இருக்குங்க சுந்தர்...
ReplyDeleteசுந்தர்,
ReplyDeleteமிக அருமை. ஒரு பெரிய பாடகராக ஆகியிருக்க வேண்டியவர் நீங்கள்.
Nice song!
ReplyDeleteNice singing!!
பரணி, முத்து, எஸ்.கே நன்றி.
ReplyDeleteமுத்து, நான் மிக மிக நன்றாக பாடுபவர்கலை, பாடலையே வாழ்க்கையாக கொண்டவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். எனவே இதை நீங்கள் என் மீது கொண்ட அன்பினால சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன். என் கல்லூரியிலேயே ஆர்.எஸ்.மணி என்கிற என் சீனியர், பாவலன், சந்திரசேகர், சீனிவாச ராகவன்
போன்ற திறமை மிக்க இளைஞர்களை பார்த்திருக்கிறேன். வெறும் குரல் வளம் மட்டுமல்லாது முறையான சங்கீத பயிற்சியும் பெற்றவர்கள் அவர்கள்.
நான் பாட்டு க்ளாஸ் போக வேண்டும் என்று கேட்டபோது, என் அப்பா ஹிந்தி க்ளாஸ் அனுப்பினார். என்ன செய்ய...?? ( ஆனால் ஹிந்தி பின்னாளில் மிக உபயோகமாக இருந்தது வேறு விஷயம்)
வெங்கட்டைத் திட்டியாச்சுங்க சுந்தர் :-)
ReplyDelete//நான் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ வெங்கட்டின் "துருக்கிக் களிம்பால்" தான் "தூண்டப்பட்டீர்களோ" என்று ஓடிவந்தேன்.///
ReplyDeleteவசந்தன்,
இருந்தாலும் இவ்வளவு குறும்பு உங்களுக்கு ஆகாது :-)).
//icarus prakash said...
ReplyDeleteஅட இவ்ளோ நல்லாப் பாடூவீரா? காலேஜ் கல்சுரல்ஸ்ல எல்லாம் கலக்கினிங்களா?
---
பிகர்களை மடக்கினதையும் சேர்த்துக்குங்கோ....
ராதா, மெய் நன்றி.
ReplyDelete//பிகர்களை மடக்கினதையும் சேர்த்துக்குங்கோ....
//
மெய்யப்பன், மேற்சொன்ன காரணத்துக்காக, பசங்க கை தட்டாம ஒரு கட்டுப்பாடோட இருந்ததை சொல்லலியா..?? ;-) ;-) hee ..hee..just kidding.
எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாடல்; பலமுறை கேட்டிருந்தாலும், மீண்டும் ஈர்த்துப் பிடித்துக் கொள்ளும் பாட்டு; வெங்கட்டின் பதிவில் ஒருமுறை கேட்டு, இங்கு உங்கள் குரலில் இன்னொரு முறை கேட்டு ...... மனதிற்கு மிக மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களுக்கு இவ்வளவு தெளிவான குரலா? வாழ்த்துக்கள். அவ்வப்போது இது போல அடுகுப் பதிவுகளையும் (அடுகு = audio; அள் = செவி; அள்+து = அட்டு; அட்டுதல் = செவியுறுதல்; தெலுங்குக் காரர்களுக்கு இந்தச் சொல் நன்றாகத் தெரியும்.) போடுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
அய்யா மிக்க நன்றி.
ReplyDeleteஇது சும்மா விளையாட்டுப் போக்காக கைத் தொலைபேசி மூலம் பாடியது. வருகின்ற ஊக்குவிப்புகளை பார்த்தால் நிஜமாகவே சிரமம் எடுத்து செய்தால் எப்படி இருக்கும்..? என்று நினைக்கத் தூண்டுகிறது. நண்பர்கள் நிறைய பேர் பாடல்களைப் பற்றி வலைப்பதிகிறார்கள்.எனக்குப் பிடித்திருக்கும் பாடல்களை அவ்வப்போது முயற்சி செய்யலாம் என்றொரு எண்ணம். பயிற்சி செய்தது போலவும் ஆயிற்று. அவ்வப்போது வலையில் தலை காட்டியது போலவும் ஆயிற்று.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் வேங்கடத்தானுக்கே. :-)
வெப்பில் பிலிம்
ReplyDeleteஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
your voice reminds me of Ilayaraja's !
ReplyDeletegood !
நன்றி ஜெயந்தி மேடம்.
ReplyDeleteஇளையராஜா வருத்தப்படப் போறாரு.!!
அடுத்து எஸ்.பி.பாலுவை வருத்தப்பட வைக்கலாம்னு திட்டம்...ஹி..ஹி..
சில மணித் துளிகள் ஒலித்த
ReplyDeleteஉன் குரல்
பதுங்கிக் கிடந்த
பழைய நினைவுகளை
ஓங்காரமிடச் செய்து விட்டன.
பதக்கங்களாய் பாதுகாத்த
பழைய நினைவுகளும்
மீண்டும் நிகழும் வாய்ப்பில்லா
நிஜங்களில்
முள்ளாய் குத்த
வழிகிறது ரத்தம்.
ரத்த கசிவிலும்
பரவும் சிறு பரவசம்.
மனிதனாய் வாழ்ந்ததற்கான
சில அத்தாட்சிகளில்
இதுவும் ஒன்றாய் இருக்கும் என்று.
வாழ்த்துக்களைக் காட்டிலும் நன்றி சொல்வதே சாலச் சிறந்தது.
அன்புடன்
ராஜ்குமார்
அடடே கவிஞரே..வாங்க..!! இந்த பக்கம்லாம் வர்றீங்க..?? உங்க நன்றிக்கு பாராட்டு ;-).
ReplyDeleteவேற என்னன்னவோ எல்லாம் எழுதி இருக்கீங்க. இந்த மரமண்டைக்கு வெளங்கலீங்க..ருத்ரையா படம் பாத்தா மாதிரி "பஜ்"ஜுனு இருக்கு.
அய்யோடா...என்ன வாய்சு..என்ன வாய்சு...நிஜமா முதல்ல இசை இல்லாம ராஜா பாடினதைத்தான் போட்டு இருக்கீங்களோன்னு நினச்சேன்.
ReplyDeleteதொ....ட.....ரு....ங்.....க ....ள்
் புத்துயிர் ஊட்டும் பாடலும் குரலும். வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுந்தர் - Better late than never. Sorry.
ReplyDeleteமொதல்ல ஆபீஸ்ல கேக்க முடியாம இருந்தது, அப்புறம் கேட்ட எடத்துல பதில் எழுதமுடியாம இருந்தது. அப்புறம் ஆபீஸ்ல பாதிபேர ஊட்டுக்குத் தொரத்தப் போறாங்கன்னு வவுத்துல புளிய கரைச்சுகிட்டு இருந்தாச்சு. இன்னிக்குத்தான் இன்னொருதபா கேட்டுப்புட்டு எளுதமுடியுது. நாய் பொளப்பு.
நல்லத்தேம் பாடிகிறீங்க. காட்டுவழி போற புள்ள பாடுவீங்களா? அத்தப் பாடி இங்க போடுங்களேன்.
நான் பக்கத்துல இருந்தா நல்லா தாளம்போட்டிருப்பேன். அடுத்த தடவ நீங்க பாட்றப்ப எனக்கு மொதல்ல வாய்ஸ் ரெக்கார்டிங் அனுப்புங்க, நான் மல்டி ட்ராக்ல தாளம்போட்டு சேத்து திருப்பியனுப்புறேன். ஒருகாலத்துல கூடையில் கருவாடு தொடங்கி சிக்கலான ஏஞ்சோடி மஞ்சக்குருவி வரைக்கும் ஒங்களமாரி ப்ரெண்ட் பாட்றப்ப தாளம்போடுவேன். எங்க கூட்டத்துக்கும் இரசிகர்கள் இருந்தாங்க.
எங்க அப்பாட்ட மிருதங்கம் கத்துக்கிறேன்னு சொன்னேன். அவரும் இந்தி கிளாஸ்க்குத்தான் அனுப்பினார் :)
நன்றி வெங்கட். எல்லாருக்கும் அதே நாய் "பிழைப்பு" தான்.
ReplyDeleteதாளம் போட்டு, பாட்டுப் பாடி ...கூத்தடிச்சு, இங்கயும் எல்லா வேலையும் நடந்துருக்கு.
நான் பாட்டுப் பாடி, நீங்க தாளமடிச்சு, அதை மறுபடி , அனுப்பி, கோத்து வாங்கி...வேண்டாம். வேலையத்த வேலை. நீங்க உங்க இசை விமரிசனத்தை தொடருங்க. நான் உங்ககிடேர்ந்தும், நம்ம வத்ராப் சுந்தர்கிட்டேர்ந்தும் பாட்டு கேட்டுட்டு , எனக்கு பிடிச்ச பாடலை அப்பப்ப பாடறேன். அது போதும்...
கமெண்டுக்கு நன்னி அண்ணா(த்தே...)
வாய்ஸ் இளச ஞாபகப்படுத்துது. நல்லாயிருக்கு உங்க குரல்.
ReplyDelete// இது சும்மா விளையாட்டுப் போக்காக கைத் தொலைபேசி மூலம் பாடியது. வருகின்ற ஊக்குவிப்புகளை பார்த்தால் நிஜமாகவே சிரமம் எடுத்து செய்தால் எப்படி இருக்கும்..? //
ReplyDeleteஐயையோ... இதுக்கு தான் இப்படியெல்லாம் வளச்சு நெளிச்சு பாராட்டாதீங்கன்னு ஒவ்வொருத்தருகிட்டயும் அடிச்சுகிட்டேன். பாருங்க, இப்போ 'அனுபவிக்கப் போறது' யாரு?!
அப்படிப்போடு அஞ்சா நெஞ்ச அக்கா,
ReplyDeleteஎன்ன சொன்னாலும் இளசு இளசுதான். அதை விடுங்க. வந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பாருங்க. மாயவரத்தான் பாயை பிராண்ட ஆரமிச்சிட்டாரு. சும்மா சும்மா, என்கரேஜ் பண்ணாதீங்க. ஆமா.;-)