Monday, January 03, 2005

மெளனம் பேசியதே....

என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவீங்கன்னு பார்க்கிறேன். ஒண்ணுத்தியும் காணும்.

அடப் போங்க ஸார்..என்னத்தை எழுதறது. வர்ற நியூஸ்லாம் படிச்சிகிட்டுத்தான் இருக்கேன். ஒரே கில்ட்டியா இருக்குது.

அட என்னய்யா..நீர்..!! சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்கீர்..அவனவன் பண்ண வேண்டியதை பண்ணிபுட்டு, ஜே..ஜே ன்னு பொது வாழ்க்கைக்கு திரும்பிட்டான்.
நீர் என்னடான்னா...??

ஆமாய்யா..ஆமாம். அது அதிர்ச்சியிலிருந்து மீளுவது அவங்க அவங்க மனசு மெச்சூரிட்டியை பொறுத்ததுன்னு ஒருத்தர் சொல்லிட்டார். எனக்கு மெச்சூரிட்டி இல்லையின்னு வெச்சுக்கோயேன்.

மெச்சூரிட்டி குறைச்சல்னாலும், உமக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்றாங்கய்யா..?? இன்னம் சொல்லப்போனா, இந்திரா காந்தி செத்துப்போன சமயத்தில் ரகளை பண்ணி அராஜகம் பண்ண அட்டுழீயக் கூட்டத்தில் ஒரு ஆளா ஆக்கிட்டாய்ங்க..

சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. இதுக்காக, சுனாமிய சாக்கா வச்சி, எந்த விதமான அடிப்படை நாகரீகம் கூட இல்லாம, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி சுனாமி மொழிகள்னு ஒரு தனி கேட்டகிரியில் கவிதை எழுதறதை எப்படி தாங்கறதாம்..??

உனக்கென்னய்யா போச்சு...நீர் என்ன கவிதை எழுதலையா..நீர் எழுதினதெல்லாம் பெரிய சங்கக்கவிதை வகையறாவா....நீரும் ஒரு புதுக்கவிதை புழுதான் அப்பு...

அது சரி..ஆனா, எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கில்லே. ஏதோ எகலப்பை கிடைச்சதுங்கிறதுக்காக, சுனாமியை வச்சி எழுதணும்கிறதுங்காக, டெய்லி ஏதாவது எழுதியே ஆகணுமா..??

அப்ப என்ன பண்ண சொல்ற...!! பண உதவி பண்ணியாச்சு. நேர்ல களத்தில் இறங்கி வேலை செஞ்சாச்சு. இன்னுமும் அயுதுகிட்டெ இருக்கணுமா..ஏனெய்யா இப்படி நடிக்கணும்னு எதிர்பாக்கறீங்க.

அடப் பாவி..இதை இப்படி வேற சொல்லலாமா..?? நீங்க ஒண்ணும் பண்ண வேணாய்யா...கொஞ்சம் பேசாம இருங்க. ஒரு வாரத்துக்கு எல்க்கியம் வளக்காட்டி குடி முழுகிப் போயிடாது. எல்லாத்தையும் பண்ணியாச்சு ..பண்ணியாச்சுங்கிறீங்களே. ஒரு நார்மல், சிம்பதட்டிக் ஹ்யூமன் பீயிங், மைனாக்களை கவர் பண்றது எப்படி..?? காதல்..காதல், காதல், வசந்துக்கு கல்யாணம் போன்ற விஷயங்களை அலையின் ஈரம் கூட காயாத, இன்னமும் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எழுதினா, பண்ண உதவி எல்லாம் வெறும் தெவச மந்திரம் மாதிரி ஆயித் தொலையாதா..?? ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி செத்துப்போனாலே, கட்சி விழாக்களை ஒரு வாரத்துக்கு கேன்சல் பண்றாங்களே....தமிழ்நாட்டுல மட்டும் 2000 குழந்தைகள் செத்துப் போயிருக்குதே...எழுத உக்காரும்போது மனசு கொஞ்சம் வலிக்காது..??

அதான் சொல்ட்டாரே..துயரத்திலிருந்து மீள்றது தனிப்பட்ட மனுசாளைப் பொறுத்ததுன்னு...!! பொழப்பப் பாருய்யா..

அது சரிதான்...எனக்கும் அந்த மெச்சூரிட்டி கெடைச்சா நல்லாத்தான் இருக்கும்.

அது மட்டுமில்ல, நல்ல டாக்டரைப் போய்ப் பாரு. இல்லாட்டா காட்டமா ரெண்டு பெக் சரக்கு உட்டுகினு ஏதாவது ஜோதிகா படம் பார்...அப்புறம் சொல்லு..கவிதை எப்படி வருதுண்ணு....வர்ட்டா...

70 comments:

  1. :-))

    முகாமில் இருப்பவர்கள்கூட 'டிவி வசதி பண்ணிக்கொடுத்தா நல்லாருக்கும்'னு சொல்லுவாங்க, அதையும் பண்ணிக்கொடுத்தா அதே டிவியில் நீங்க சொல்லும் அதே குதியாட்டங்களையும் பாப்பாங்க. இதுதான் உண்மை. எத்தனை இழவுவீட்டில சீட்டாட்டக்கச்சேரிகளும், தண்ணி பார்ட்டிகளும் பார்த்திரூக்கிறேன். மறுநாளே 'கறிவிருந்து' கண்டிருக்கிறேன். ஏன், பாதிக்கப்பட்ட மக்களேகூட 'புளிசாதம் எலுமிச்சை சாதம் வேண்டாம், வேற எதாச்சும் குடுங்க'ன்னு ஏன் சொல்றாங்க? உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால் அவர்களைப் புரிந்துகொள்ளலாம். வாழ்க்கை எதற்காகவும் நின்றுவிடுவதில்லை சுந்தர்.

    என்னையும் வக்கிரபுத்தி என்று சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டியதுதான். அதற்காகவும் நானும் நின்றுவிடுவதில்லை. சொல்ல விரும்பியதை சொல்கிறேன்.

    ReplyDelete
  2. பத்து வருடங்களுக்கு என் பாட்டி இறந்து செத்துப் போனபோது, சராசரிக்கும் அதிகமாய் ரீயாக்ட் செய்தேன். இது என் நண்பர்களுக்கு எல்லாம் சற்று வியப்பாக இருந்தது. அவங்களுக்கு எல்லாம் பாட்டி என்பவள், வருஷாந்திர லீவ்லே பார்க்கிற ஒரு கிழவி மட்டுமே. ஆனால் என் விஷயத்தில், நான் வளர்ந்து ஆளானது எல்லாமே அவளிடத்தில் தான். அங்கதான் வித்தியாசம். துக்கம் வருத்தம் சந்தோஷம் போன்றவை மிகவும் அந்தரங்கமான தனி மனித உணர்ச்சிகள். இதிலே குறுக்கிடுவது அநாகரீகம் என்பது என் தாழ்மையான கருத்து. "ஆயிரக் கணக்குலே உசுருங்களை வாரிக் குடுத்துபுட்டு, எலகியம் என்னா எலகியம்?" என்கிற உங்கள் கேள்வி மிகவும் நேர்மையானது. அது, ' சரி , இப்படி ஆயிடுச்சு... அடுத்து என்னா..." என்று கேட்கும் மீனாக்ஸின் கேள்வியில் இருக்கும் நேர்மைக்கு சற்றும் குறைந்ததல்ல. சுனாமி, பினாமி என்று பாசாங்காக எழுதப் படும் 'கவிச்சி' களை , இது மேலான விஷயம் தானே?

    ReplyDelete
  3. From
    மீனாக்ஸ்,
    எளக்கிய வீதி,
    Immaturity நகர்,
    வக்கிர புத்தி பேட்டை.
    (near தெவச மந்திர பஸ் ஸ்டாப்)

    To
    திரு. 'மூக்கு' சுந்தர்.
    http://mynose.blogspot.com

    Dear Sir,

    Sub: Your application for the post of my moral conscience keeper.

    I appreciate your interest in taking up the post of my moral conscience keeper. However I wish to state categorically that I am my own moral conscience keeper and the position is NOT vacant. Hence I regret to inform that your application is not being accepted.

    Thanking You,
    Your's faithfully,
    மீனாக்ஸ்

    ReplyDelete
  4. :-) :-) :-)

    அட..ங்கொப்புரானே..இப்டிகூட பின்னூட்டம் கொடுக்கலாமா..டாங்ஸூ வாத்யாரே..

    வேலை கெடைக்கலையின்னு வருத்தமாத்தான் இருக்கீ..என்ன செய்ய...அடுத்த தடவை கெலிச்சா போச்சு..

    ஆனால், உங்கள் அருள்வாக்குப்படி இணையச்சூழலை தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டிருப்பதாகத் தான் உத்தேசம்...

    நீங்களும் உங்கள் காதல் கவியரங்கங்களையும், மைனாக்களை கவர் செய்யும் வகுப்புகளையும் தொடர்ந்து செய்து, எல்க்கியம் ( எளக்கியம் இல்லே...) வளருங்கள்..
    ( இழவு விழுந்தால் கூட நிறுத்தலாகாது..ஏன்னா எல்க்கியம் எல்க்கியத்துக்காக. மனுசப்பயலுக்காக இல்ல.அவங் கெடக்கறான்..சவத்து மூதி..)

    ReplyDelete
  5. "இலக்கியம் இதற்காகத்தான்" என்ற உங்களது தனிப்பட்ட வரையறைகளை அடுத்தவர் மேல் திணிப்பது எவ்வளவு மெச்சூரிட்டி உள்ள செயல்?

    ReplyDelete
  6. அதற்கும் முன்னால் "எதெல்லாம் இலக்கியம்" என்ற வரையறைகளை சரியாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. மீனாக்ஸ்,

    நீங்கள் உங்கள் கருத்தூகளை மற்றவர்மேல் திணிக்க ஆரம்பித்ததும், உங்கள் கருத்துருவாக்கத்தை உண்மையென்று இங்கே - http://groups.yahoo.com/group/Maraththadi/message/23017
    சொன்னீர்கள். அதற்கு என் பதில் இது.

    பதில் கொடுக்காவிட்டால், நீங்கள் சொல்வது உண்மையென்று ஏற்றுக்கொண்டதாக ஆகி விடும். எனவே அளித்தேன்.

    எனவே திணிப்பைத் தொடங்கியது நீங்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள்..

    BTW, நான் எந்த எலக்கியத்தையும் படைத்துக் கிழித்து விடவில்லை என்று எனக்குத் நன்றாகத் தெரியும். உங்களைப்போல், நான் எழுத்தை தவமாக செய்யவில்லை.

    ReplyDelete
  8. கருத்துகளை யாரும் யார் மேலும் திணித்து விட முடியாது. முன் வைக்க மட்டுமே முடியும். ஏற்றுக் கொள்வது ஏற்றுக் கொள்ளாதது கேட்பவரின் முடிவைப் பொறுத்தது. நான் என் கருத்துகளை முன்வைக்க மட்டுமே செய்தேன். எனது கருத்துக்கும் வரையறைக்கும் உட்பட்டு "நான்" தொடர்ந்து எழுதப் போகிறேன்" என்று அறிவித்தேன்.

    அதற்கு உங்களின் பதில்களை நான் எப்போதும் வரவேற்கிறேன்.

    ஆனால், "இலக்கியம் என்பது மனிதர்களுக்காக" என்பது உங்கள் கருத்தும் அதைத் தொடர்ந்த உங்கள் வரையறையும் ஆகும். அந்த வரையறைப்படி நீங்கள் எழுதுவது வரவேற்கத்தக்கது. ஆனால் எழுதுகிற எல்லோரும் மேலே காணும் "உங்கள்" வரையறைக்கு உட்பட்டு எழுத வேண்டும், அப்படியில்லையென்றால் அவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள், வக்கிரம் பிடித்தவர்கள், தெவச மந்திரம் சொல்பவர்கள், மனிதர்களைப் பற்றிய கவலையில்லாமல் வெத்து எலக்கியம் வளர்க்கிறவர்கள் என்று முடிவு செய்வதும் அதை எழுதுவதும், "உங்கள் வரையறைகளை என் மேல் திணிப்பது" என்று நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  9. நான் எழுத்தைத் தவமாகச் செய்வது உண்மையென்றாலும், 'எழுதுவதெல்லாம் இலக்கியம்' என்று எண்ணிவிடுமளவுக்கு முழுமூடன் அல்ல. நீங்கள் என்னுடைய சில பதிவுகளைக் குறிப்பிட்டு 'இப்படி இலக்கியம் வளர்க்கத்தான் வேண்டுமா? என்று கேட்டதன் அடிப்படையில் அவையெல்லாம் இலக்கியம் என்று நான் கருதவில்லை, நீங்களும் கருத வேண்டாம் என்னும் பொருளிலே, எதெல்லாம் இலக்கியம் என்ற வரையறைகளை சரியாக ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். இலக்கியத்தை நான் வளர்ப்பது என்பதெல்லாம் மிக அதிகபட்சமான வார்த்தைகள். அந்தத் தகுதிகள் எனக்கு இல்லை. அத்தகைய ஆசைகள் கூட இல்லை.

    ReplyDelete
  10. இன்னும் மேலதிகமாகச் சொல்வதானால், 'இலகியத்தை ஒரு தனிநபர் வளர்ப்பது' என்பதெல்லாம் மிகப் பெரிய ஃப்ராடு வேலை. எந்த மனிதனாயிருந்தாலும், தாய் தான் அவனை வளர்ப்பாளே தவிர, அவன் தாயை வளர்க்க முடியாது.

    ReplyDelete
  11. இது நல்ல கதையாக இருக்கிறதே. :-)

    நீங்கள் "மற்றவரெல்லாம் தமிழ்ச்சூழலை மாசு படுத்துகிறார்கள் " என்ற முடிவு எடுத்து அதை மரத்தடியில், பொது மன்றத்தில் எழுதுவது மட்டும் "முன் வைத்தல்". நான் என் வலைப்பூவிலே " இலக்கியம் மனிதர்களுக்காக" என்று என் கருத்தை சொலவது மட்டும் திணிப்பா..?? நல்ல ஜோக்தான் போங்கள். உங்கள் வரையறைக்கு எழுதாதவர்கள் "தமிழ் இணையச்சூழலை மாசு படுத்துகிறார்கள்" என்று பிரகடனப்படுத்தியது கூட நான் திணித்துதான் நடந்தது என சொல்லிவிடாதீர்கள்.

    //அப்படியில்லையென்றால் அவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள், வக்கிரம் பிடித்தவர்கள், தெவச மந்திரம் சொல்பவர்கள், மனிதர்களைப் பற்றிய கவலையில்லாமல் வெத்து எலக்கியம் வளர்க்கிறவர்கள் // இது நான் சொல்லாததை சொல்லியதாகவும், சொல்லியதை திரித்தும் சொல்லும் வேலை. இந்த வேலை உங்களுக்கு வேண்டாம் மீனாக்ஸ் :-(

    ReplyDelete
  12. "சூழல் நிலவுகிறது" என்று தான் நான் சொல்லியிருக்கிறேனே தவிர "சூழல் மாசு பட்டு விட்டது" என்ற பிரயோகத்தை நான் எங்கும் பயன்படுத்தவில்லை. நிலவுகின்ற சூழலில், என்னுடைய எழுத்திற்கான விளக்கம் மட்டுமே அது. யாரையும் குறிப்பிட்டு எந்தத் தேவையற்ற வார்த்தைகளும் எனது மடலில் இல்லை. சிலர், சில விஷயங்களை இப்படி எடுத்துக் கொள்கின்ற சூழல் நிலவுகிறது என்று சொல்லியிருக்கிறேன். (அதில் எடுத்துக் காட்டியிருக்கும் உதாரணங்கள் கூட உங்களுடையவை அல்ல.) அப்படிப்பட்ட சிலரை நேரடியாகக் கூட நான் எதுவும் சொல்லவில்லை. அத்தகைய சூழல் நிலவுவது எனக்கு பாதிப்பை அளித்தது என்று எனக்கு ஏற்பட்ட விளைவினை மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டேன்.

    "மாசு பட்டு விட்டது" என்று நான் சொன்னதாக எப்படி எழுதுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  13. "பொதுவாக எழுதினேன். உங்களை சுட்டவில்லை" என்று நீங்கள் இப்போது கூறி இருப்பதை நம்ப விரும்புகிறேன். ஆனால் நீங்கள் அந்த மடலை மரத்தடியில் எழுதிய தருணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். சந்தக் கவிதை என்ற பெயரில் சந்தைக்கவிதை எழுதுபவரிடம் பேசிப் பேசி அலுத்து நான் வெறுத்திருந்த சமயத்தில் அதை எழுதினீர்கள். எனவே நான் உங்கள் மடல் என்னைக் குறிவைத்து எழுதியது என புரிந்து கொண்டேன்.

    "பொதுவாக சொல்லும்போது ஒரு வசதி - யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை எனச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மறைமுகமாக சிலரை தாக்கிவிடலாம். யாரும் முன்வந்து பதில்சொல்லமாட்டார்கள். சொன்னால், அவர்களாகவே பழியை ஏற்றுக் கொண்டு பதில் அளிக்கிறார்கள் என்று அர்த்தம்" என்று இணையவுலகில் ஒரு தியரி இருக்கிறது. என்னைப் பொறுத்த்வரை எதையும் நேரடியாக சொல்லித்தான் பழக்கம். சூசகம் என்ற பெயரில் வஞ்சகமாகவும், தந்திரமாகவும் எழுதுவதை வெறுக்கிறேன்.

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. எதிர்வரும் காலங்களில், பொதுமடல்கள் இடும்போதும், பொதுவாக குறைகளை சொல்லும்போதும், இடம்-பொருள் - ஏவல் பார்த்து சொல்லுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  14. நான் பொதுவாகச் சொன்னேனா அல்லது யாரையும் சுட்டித்தான் சொன்னேனா என்பது இருக்கட்டும். சூழலை மாசு படுத்தி விட்டார்கள் என்று நான் சொல்லவே இல்லை என்று நான் கூறியதற்கு நீங்கள் பொதுவாகக் கூட பதிலேதும் சொல்லவில்லையே.

    ReplyDelete
  15. And to answer your other question:

    "எனது வரையறைகள் இவை. அதற்கு உட்பட்டு 'நான்' இதைச் செய்யப் போகிறேன்" என்று சொல்வதை கருத்தை முன்வைப்பதாக நான் நம்புகிறேன்.

    மாறாக, "எனது வரையறைகள் இவை, ஆனால் இந்த ஆட்கள் ஏன் இதை ஏற்றுக் கொள்ளாமல் இதை மீறுகிற வகையில் எழுதுகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் மனித நேயம் இருக்கிறதா இல்லையா? ஏன் தெவச மந்திரம் சொல்வது போல் நடந்து கொள்கிறார்கள்?" என்று அடுத்தவர்கள் எழுத்தை ஆராய்ச்சி செய்வது வரையறைகளை அடுத்தவர் மேல் திணிப்பதாக நான் நம்புகிறேன்.

    Essentially, "explaining one's own actions" as against "interpreting and judging others' actions"

    இரண்டுக்கும் இடையில் சாதாரண மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.

    ReplyDelete
  16. Anyway, whatever. I think enough has been said here to let readers judge whose writings show maturity and otherwise.

    Thanks. It was nice knowing you.

    ReplyDelete
  17. "சூழலை மாசு படுத்துகிறார்கள் என்று நான் சொல்லவே இல்லை" என்று நீங்கள் சொல்லியதற்குத்தான் நான் "நம்ப விரும்புகிறேன்" என்று பதில் சொன்னேன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் பொத்தாம் பொதுவாக அப்படி வந்து உங்கள் postulates இன்னதென்று அடுக்கியது என்னைக் குறிவைத்து சொல்லப்பட்டது என்று எண்ணியே உங்களுக்கு பதில் சொன்னேன். மற்றவர்களுடைய நடத்தைகளை விமரிசித்து, நீங்கள் சூசகமாக உங்களை பீடத்தில் வைத்துக் கொண்டு மடலெழுதியது போல, நானும் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்கள் தவறு. எனக்கு சூசகமாக எழுதத் தெரியாது அல்லது உங்களைப் போல பக்குவம் போதாது. என் வலைப்பூவுக்கு வந்து படித்து கருத்து சொன்னது நீங்கள். நான் உங்களை தேடிவந்தோ, அல்லது மன்றிலோ என் கருத்தைப் பரப்ப, திணிக்க முயலவில்லை. அய்யா..இது "என் மூக்கு". என்னைக் குற்றம் சாடும் தொனி இருந்தால், என் கருத்துகளை விளக்கவேண்டியது என் அடிப்படை உரிமை.புரியும் என நினைக்கிறேன்.
    மற்றபடிக்கு, வாசகர்கள் முடிவு பண்ணிக்கொள்வார்கள் என்றெல்லாம் சொல்லி பெரிய ஒளிவட்டத்தின் பின்னே செல்ல முயலாதீரகள். இம் மாதிரி முட்டுச்சந்து க்லாட்டாவையெல்லாம் விட வாசகர்களுக்கு உருப்படியான வேலை நிறைய இருக்கிறது.

    If you say that, you got to know me through this petty discussion, I would say that you are GREAT. Dont ask me whether I beleive it and I mean ir. :-).

    ReplyDelete
  18. "சூழலை மாசு படுத்துகிறார்கள் என்று நான் சொல்லவே இல்லை" என்று நீங்கள் சொல்லியதற்குத்தான் நான் "நம்ப விரும்புகிறேன்" என்று பதில் சொன்னேன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் பொத்தாம் பொதுவாக அப்படி வந்து உங்கள் postulates இன்னதென்று அடுக்கியது என்னைக் குறிவைத்து சொல்லப்பட்டது என்று எண்ணியே உங்களுக்கு பதில் சொன்னேன். மற்றவர்களுடைய நடத்தைகளை விமரிசித்து, நீங்கள் சூசகமாக உங்களை பீடத்தில் வைத்துக் கொண்டு மடலெழுதியது போல, நானும் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்கள் தவறு. எனக்கு சூசகமாக எழுதத் தெரியாது அல்லது உங்களைப் போல பக்குவம் போதாது. என் வலைப்பூவுக்கு வந்து படித்து கருத்து சொன்னது நீங்கள். நான் உங்களை தேடிவந்தோ, அல்லது மன்றிலோ என் கருத்தைப் பரப்ப, திணிக்க முயலவில்லை. அய்யா..இது "என் மூக்கு". என்னைக் குற்றம் சாடும் தொனி இருந்தால், என் கருத்துகளை விளக்கவேண்டியது என் அடிப்படை உரிமை.புரியும் என நினைக்கிறேன்.
    மற்றபடிக்கு, வாசகர்கள் முடிவு பண்ணிக்கொள்வார்கள் என்றெல்லாம் சொல்லி பெரிய ஒளிவட்டத்தின் பின்னே செல்ல முயலாதீரகள். இம் மாதிரி முட்டுச்சந்து க்லாட்டாவையெல்லாம் விட வாசகர்களுக்கு உருப்படியான வேலை நிறைய இருக்கிறது.

    If you say that, you got to know me through this petty discussion, I would say that you are GREAT. Dont ask me whether I beleive it and I mean ir. :-).

    ReplyDelete
  19. http://thanivalai.blogspot.com/2005/01/blog-post.html

    இந்த இணைப்பில், அதி-கறுப்பு எழுத்துகளில் குறிக்கப்படுள்ள இடங்கள் உங்கள் நிலையை விளக்கி மட்டுமே எழுதப்பட்டன என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால், நான் அதை நம்பத் தயாராய் இல்லை. மற்றவர்களை துச்சமாக நினத்து சொல்லப்படும் வார்ததைகள் இவை. அவற்றுக்கு இப்படித்தான் பதில் கிடைக்கும்.

    ReplyDelete
  20. முட்டு சந்து சண்டைகளில் ஆர்வமில்லாமல் தான் பல வலைப்பதிவுகளில் பல பின்னூட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று நானும் நம்பத் தயாராயில்லை.

    ReplyDelete
  21. சண்டைகளை வேடிக்கை பார்ப்பதற்கும், சண்டைகளில் இறங்குவதற்கும் வேறுபாடு உண்டு.நம்முடைய வாக்குவாதத்தில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது என்று "நாமாக" கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது

    ReplyDelete
  22. அதி கருப்பு எழுத்துகள் பற்றிய கருத்துகள்:

    //சுனாமி குறித்து எழுதுவதில் கூட, தனது சோகத்தை 'வெற்றுவார்த்தைகளால்' வெளிப்படுத்திக் கொண்டு இருக்காமல், 'நான் இவ்வளவு பணம் அனுப்பியுள்ளேன்' அல்லது 'நான் இந்த வகைகளில் உதவி செய்து கொண்டிருக்கிறேன்' என்று எழுதுவது மட்டுமே மதிக்கப்படுகிறது.//

    எதை யார் யார் எப்படி மதிக்கிறார்கள் என்ற கருத்து இது. அதை சரியென்றோ தவறென்றோ நான் குறிப்பிடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மதிக்கப்படாததாகத் தோற்றமளிக்கக்கூடிய செயலை நான் செய்யும் போது அது தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்பதற்காக எழுதியது இது. இதில் என்னைப் பற்றிய கவலை தான் இருக்கிறதே தவிர பிறரைப் பற்றியது அல்ல.

    //அதே சமயம் இது குறித்து எழுதாதவர்கள் அல்லது வேறுவிஷயங்கள் எழுதுபவர்கள் எல்லோரும் உதவியே செய்யாதவர்கள் போலவும், மனிதத்தன்மையற்ற, ஈவிரக்கமற்றமிருகங்கள் என்பது போலவும் சில சித்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.//

    ஒரு ஓவியர் ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை வரைகிறார் என்ற தகவலைச் சொல்வது மூலம் அவர் அந்த சித்திரத்தை வரைகிறார் என்பது மட்டுமே என்னால் குறிப்பிடப்படுகிறதே தவிர, அவர் செய்வது சரியா தவறா என்ற எனது தீர்ப்பு இங்கும் இல்லை.

    //சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால்//

    இந்த இடம் மட்டுமே சிலரை காயப்படுத்தக் கூடியது என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால், in my defense, there is a big IF.

    //'எனக்கு மனிதத்தன்மை உண்டு' என்று இப்படி விளக்கமளித்து தெரிவிக்க வேண்டிய நிலை தமிழ் இணையச்சூழலில் ஏற்பட்டிருப்பது, சுனாமி அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் என் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது.//

    This piece is entirely about the effect such things created inside me. I don't see anything else. again note that i am saying such a சூழல் exists, not that the சூழல் has been corrupted by others.

    ReplyDelete
  23. வாக்குவாதத்தில் பலருக்கு ஆர்வமிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு இல்லை. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு ஜீவன் இருக்கும் போது கூட நான் எனது தரப்பு வாதங்களை எடுத்து வைப்பது எனக்கும் "கடமை" ஆகிறது. I respect even a single opposing view, and desire to explain/clarify myself.

    ReplyDelete
  24. let me take up somethiggn else from your post:

    //தமிழ்நாட்டுல மட்டும் 2000 குழந்தைகள் செத்துப் போயிருக்குதே...எழுத உக்காரும்போது மனசு கொஞ்சம் வலிக்காது..??//

    ஆமா சார், வலிச்சது.

    ஆனா, வலிக்கிற மனசோட இது இது தான் செய்ய முடியும், இது இது செய்ய முடியாது என்று அடுத்த மனிதன் சார்பில் தீர்மானிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?

    அல்லது, வலிக்கிற மனசோட இது இது தான் செய்யணும், இது செய்யக் கூடாது என்று அடுத்த மனிதனுக்கு அனுமதி கொடுக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?

    அடுத்த மனிதனின் சாத்தியக்கூறுகளை உங்களுடைய சாத்தியக் கூறுகளினால் அளவிடுவது தவறு. மனசுங்கிறது ஒரு multiprocessor.

    ReplyDelete
  25. நானெங்க சார் தீர்மானிச்சேன். மத்தவங்களை குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள்னு தீர்ப்பு கொடுத்த நீதிபதியோட வரையறைகள் எந்த லட்சணத்துல இருக்குன்னு கோடி காட்டினேன். அவ்வளவுதான். உலகத்துல உங்களுக்கு மட்டும்தான் சொரணை இருக்கா..?? மத்தவங்கள எப்படி நடத்தறீங்களோ, அப்படித்தான் நீங்களும் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கிடையாது...

    ReplyDelete
  26. என் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிற சம்பளத்தைக் (பணத்தைக்)கொடுக்கக் கூடிய அலுவலக வேலைக்கு நான் திரும்பியது தவறு இல்லையென்றால், எனக்கு அதை விட முக்கியமான ஆத்மதிருப்தியை அளிக்கிற என் எழுத்துக்கு நான் திரும்பியது மட்டும் எப்படித் தவறாக முடியும் என்பதே என்னுடைய கேள்வி.

    'இலக்கியம் வளர்க்கிறான் பாரு' என்று எவ்வளவு லேசாக கேலி செய்து விட முடிகிறது உங்களால்?

    நாளைக்கு எனக்குத் திருமணமாகி, என் மனைவி ஒரு வேளை அகாலமாக மரணமடைந்தால் கூட நாலே நாளில் நான் எழுத்துக்குத் திரும்புவேன். ஏனென்றால் என் எழுத்து தான் எனக்கு அமைதியும் ஆறுதலும் தரும் என்பது என் நம்பிக்கை. என் எழுத்து தான் என்னை உயிருடன் வைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை. என் எழுத்து தான் என் குழந்தைகளை வளர்க்க எனக்கு சக்தி தரும் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
  27. சாமி..உங்களுக்கு எழுத்து மேல இருக்கற காதலுக்கும், மதிப்புக்கும்ம் பெரிய கும்பிடு.

    என்னால நீங்க சொல்லற மாதிரி எல்லாம் நினைச்சுக் கூட பாக்க முடியலை. எனக்கு எழுத்தை விட வாழ்க்கையும், மனுசங்களும், குடும்பமும் தான் முக்கியம். அதுக்கு அப்பறம்தான் எல்லாம்.

    ReplyDelete
  28. You sound very idealistic young man...you are in discussion with a wrong person...

    ReplyDelete
  29. குறுகிய கண்ணோட்டம் அல்லது குறுகிய moral standards என்பவை யாரும் விரும்பி ஏற்றுக் கொள்வது இல்லை. அவர்களுக்குத் தெரிந்த அளவுக்கு அவையே அவர்களின் moral standard. அதில் அவர்களைக் குறை சொல்ல பெரிதாக இல்லை.

    ஆனால்,

    //இன்னுமும் அயுதுகிட்டெ இருக்கணுமா..ஏனெய்யா இப்படி நடிக்கணும்னு எதிர்பாக்கறீங்க.//

    நடிப்பு என்பது ஒருவர் வலிந்து தன் நிலைமாறி செய்வது.

    எனவே குறுகிய கண்ணோட்டம் என்பதை விட, நடிப்பு என்பது மிக வலி தரும் accusation. மேலும் இங்கே பொருத்தமற்ற accusation.

    ReplyDelete
  30. "இன்னமும் அயுதுகிட்டே இருக்கணுமா. ஏன்யா நடிக்கணும்ணு எதிர்பார்க்கிறீங்க" என்பது நான் உங்களுக்கு சொன்னது இல்லை. உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் என்னை போன்ற அற்பஜந்துக்களை பார்த்து கேட்கிறதான கேள்வி.

    உங்களுக்கு புரியும்படி சம்பாஷணையை சரிவர எழுதவில்லை என்பது இப்போது புரிகிறது. பொறுமையாக உட்கார்ந்து படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  31. //எனக்கு எழுத்தை விட வாழ்க்கையும், மனுசங்களும், குடும்பமும் தான் முக்கியம். அதுக்கு அப்பறம்தான் எல்லாம்.//

    அப்படி இருக்கும் போது , உங்கள் விமர்சனங்கள் ஒரு அளவோடு இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவன் எழுத்தைப் பார்த்து "இலக்கியத்தை நீ வளர்க்காட்டி ஒண்ணும் குடி முழுகிப் போவாது" என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    யார் குடி? அடுத்தவர்கள் இலக்கியம் வளர்ப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதனால் உங்கள் குடி ஒன்றும் முழுகிப் போய்விடாது. அல்லது என்னுடைய குடியைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்.

    ReplyDelete
  32. I don't think my idealistic tendencies are an issue of discussion here. It is not as if I am the only young man saying these things. They have been repeated countless times in human history.

    ReplyDelete
  33. //உங்களுக்கு புரியும்படி சம்பாஷணையை சரிவர எழுதவில்லை என்பது இப்போது புரிகிறது. பொறுமையாக உட்கார்ந்து படித்துப் பாருங்கள்.//

    எழுதுபவர்கள் முதலிலேயே சரியாக எழுதினால் படிக்கிறவர்கள் ஏன் பொறுமையாக மறுபடி மறுபடி படிக்க வேண்டும்?

    ReplyDelete
  34. ம்..ஹூம்..இது வேலைக்காவது போலிருக்கு...

    என் விமர்சனங்களின் அளவுகோல்கள் என்னால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மற்றவர்கள் என் கர்த்துக்கு தரும் மதிப்பை வைத்துத்தான் அவை தீர்மானிக்கப்படுகின்றன. என்னை நீங்கள் குற்றம் சாட்டினால், உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை எடுத்து உங்களுக்கு காட்டுவேன். என்னை மரியாதையுடன் நடத்தினால் நானும் பதில் மரியாதை செய்வேன்.

    மற்றபடி என் குடி; உன் குடி என்றெல்ல்லாம் பேசுவது உங்கள் சாரமற்ற வாததின் நீட்சி. சுட்டுவிரலை நீட்டுவதற்கு முன் யோசியுங்கள். எதிரில் இருப்பவன் ஊமையில்லை.

    ReplyDelete
  35. //உங்களுக்கு புரியும்படி சம்பாஷணையை சரிவர எழுதவில்லை என்பது இப்போது புரிகிறது. பொறுமையாக உட்கார்ந்து படித்துப் பாருங்கள்.//

    ஸ்மைலி போட்டிருந்திருக்க வேண்டும். விட்டுப்போய் விட்டது. மறுபடியும் உங்கள் பீடப் பார்வைக்கு ஏதுவான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தி விட்டது. எனக்குத் தமிழ் சொல்லித்தர ஆசிரியர்களுக்கு பஞ்சம் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.

    ReplyDelete
  36. //எனக்கு எழுத்தை விட வாழ்க்கையும், மனுசங்களும், குடும்பமும் தான் முக்கியம். அதுக்கு அப்பறம்தான் எல்லாம்.//

    உங்களுடையதையும் நான் பீடப் பார்வை என்று என்னால் சொல்ல முடியும். சொல்கிறேன். எனக்கு எழுத்து முக்கியம் என்பதால் எனக்கு குடும்பமோ மனிதர்களோ குறைவானதாக ஆகி விடாது. நீங்களும் பீடத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அருளுரை கூற வேண்டாம்.

    ReplyDelete
  37. //ஒரு வாரத்துக்கு எல்க்கியம் வளக்காட்டி குடி முழுகிப் போயிடாது.//

    //மற்றபடி என் குடி; உன் குடி என்றெல்ல்லாம் பேசுவது உங்கள் சாரமற்ற வாததின் நீட்சி. //

    எனக்குத் தெரிந்து சம்பந்தப்படுத்தக் கூடியது இரண்டு குடிகள் தான். அதையே தான் சொல்லியிருக்கிறேன். இது எந்த வகையில் சாரமற்ற வாதத்தின் நீட்சி என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  38. எது என் வேலை என்பதை நான் தீர்மானித்துக் கொள்கிறேன். நீங்கள் உத்தரவிட வேண்டாம்.

    ReplyDelete
  39. நேரடியாக, குறிப்பிட்டிருக்கும் கருத்தை வைத்துப் பேச முடியவில்லை எனில் பேசுவதில் அர்த்தமில்லை. நாளை காலை பணிக்குச் செல்ல வேண்டும்.

    உங்கள் மரத்தடி மடலில் புண்படுத்தும் வாசகங்கள் உல்லது என நீங்களே ஒத்துக் கொண்ட பிறகு, மேற்கொண்டு பேசுவது தேவை அற்றதென எண்ணுகிறேன்.

    ReplyDelete
  40. காலத்தை சரியாக manage செய்யத் தெரியவில்லை என்றால் தான் ஒன்றை விட இன்னொன்று முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒரு நாளில் இருபது மணிநேரங்கள் விழ்த்திருக்கிறேன். குடும்பத்திற்கும், சக மனிதர்களுக்கும், எழுத்துக்கும் என்னால் போதுமான நேரம் ஒதுக்க முடியும்.

    ReplyDelete
  41. அடுத்து Time management பாடமா..??

    எனக்கு உங்களைப் பற்றிய தற்பெருமைகளை கேட்டுக் கேட்டு போரடிக்கிறது. நார்ஸிஸம் ..??

    நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையென்றால், நான் தூங்கப்போகிறேன். என்னால் இருபது மணிநேரம் விழித்திருக்க முடியாது. நான் ரொம்ப சாதாரன ஆள் ஸ்வாமி :-)

    ReplyDelete
  42. சுயமரியாதைக்கும் நார்ஸிஸத்துக்கும் உங்கள் தமிழாசிரியர்களை வித்தியாசம் கேட்டுப் பாருங்கள். நானே சொல்வேன். அப்புறம் அதற்கும் ஏதாவது சொல்லுவீர்கள்.

    ReplyDelete
  43. அதைத்தான் நானும் சொல்கிறேன். உங்களால் செய்ய முடிவதை மட்டுமே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

    ReplyDelete
  44. //நான் ஒரு நாளில் இருபது மணிநேரங்கள் விழ்த்திருக்கிறேன். குடும்பத்திற்கும், சக மனிதர்களுக்கும், எழுத்துக்கும் என்னால் போதுமான நேரம் ஒதுக்க முடியும்.//

    இப்படி தன்னைப் பற்றி டாம்-டாம் அடித்துக் கொள்கிறவர் பெரிய சுயமரியாதைக்காரரா..??? இதை நான் வேறு என்காவது கேட்க வேணுமா என்ன..?? :-)

    ReplyDelete
  45. எனக்கும் உங்களைப் பற்றிய குறைந்த சுய மதிப்பீடுகளைக் கேட்டு போரடிக்கிறது.

    ReplyDelete
  46. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.

    அர்த்தம் தெரியுமா..??

    BTW, நீங்கள் இனி உருப்படியாக ஏதும் பேசப்போவதில்லை.
    இனி என் பதில் மெளனம்தான்..

    சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாகி விட்டது.

    ReplyDelete
  47. "உன்னால் இதைச் செய்ய முடியாது போலிருக்கிறதே" என்று சந்தேகம் எழும்பும் போது, அதைத் தீர்க்க வேண்டியது என் கடமை. நான் என்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்லவும், கேட்டுக் கொள்ளவும் தயங்கமாட்டேன். If you see it as narcissism, I will accept your judgement. No problem. I don't wish to be the santa for all people in the world.

    ReplyDelete
  48. எனக்கு திருக்குறள் தெரியும். நான் Ayn Rand-ம் படித்திருக்கிறேன். (என்று சொன்னால் மறுபடி சுயதம்பட்டம் என்று சொல்வீர்கள்.)

    ReplyDelete
  49. என்னமோ இது வரைக்கும் அந்தப் பக்கம் ரொம்பத் தான் உருப்படியாப் பேசின மாதிரி.

    (ஸ்மைலி கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)

    டயலாக் சொல்லிட்டா மட்டும் எல்லாம் சரியாயிடாது.

    ReplyDelete
  50. பேசாமல் ஒரு போர்டு எழுதி மாட்டிக்கொள்ளுங்கள் - என்னென்ன படித்திருக்கிறீர்கள் என்று. இது மாதிரி குமட்டல் ஏற்படுத்தக்கூடிய தற்பெருமைக்காரரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு இது மிக அதிகம். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

    உங்களைப் போய் மதித்து இவ்வளவு தூரம் என் நேரத்தை வீணடித்தேனே என்று வேதனையாய் இருக்கிறது.

    Do you actually deserve this..??

    ReplyDelete
  51. //சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால்//

    ***இந்த இடம் மட்டுமே சிலரை காயப்படுத்தக் கூடியது என்று ஒப்புக் கொள்கிறேன் ***

    இதுதான் உங்கள் ஒப்புதல் வாக்குமூலம். இதற்கு மேல் நான் பேசுவது அர்த்தமற்றது.

    ReplyDelete
  52. ஒப்புக் கொண்டதற்கு சம்பந்தமேயில்லாமல் நீங்கள் வாரியிறைத்திருக்கும் அபாண்டங்களுக்குத் தான் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    அப்புறம் இன்னொரு விஷயம். 'அடக்கம்' என்பதை 'அடுத்தவர்களின் அநீதிக்கு அடங்கிப் போவது' என்ற பொருளில் திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை என்பது என் நம்பிக்கை. அத்தகைய அடக்கம் எனக்குக் கிடையாது.

    ReplyDelete
  53. அநீதி...அபாண்டம்.????!!!!!>???? $#@^%&*

    Get a life bud..

    I will go and get some sleep to get out of this filthy arguement.

    ReplyDelete
  54. //சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால்//

    ***இந்த இடம் மட்டுமே சிலரை காயப்படுத்தக் கூடியது என்று ஒப்புக் கொள்கிறேன் ***

    இதுதான் உங்கள் ஒப்புதல் வாக்குமூலம். இதற்கு மேல் நான் பேசுவது அர்த்தமற்றது.

    ReplyDelete
  55. ஒப்புக் கொண்டதற்கு சம்பந்தமேயில்லாமல் நீங்கள் வாரியிறைத்திருக்கும் அபாண்டங்களுக்குத் தான் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  56. I have a great life already. Thanks.

    ReplyDelete
  57. //சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால்//

    ***இந்த இடம் மட்டுமே சிலரை காயப்படுத்தக் கூடியது என்று ஒப்புக் கொள்கிறேன் ***

    ==========================

    இதுதான் உங்கள் ஒப்புதல் வாக்குமூலம். இதற்கு மேல் நான் பேசுவது அர்த்தமற்றது.

    வாரி இறைத்திருக்கும் அபாண்டங்கள் என்று என் பதிவை சொன்னீர்கள் என்றால், அதற்கு விதை உங்கள் மடல் என்று சொல்கிறேன். வினை விதைத்தால் வினைதான் விளையும்.

    ReplyDelete
  58. நான் விதைத்ததில், "இவர்களெல்லாம் குறுகிய மனம் கொண்டவர்கள்" என்று எவர் பெயரையும் பட்டியலிடவில்லை. குறிப்பாகக் கூட உனர்த்தவில்லை. குறுகிய மனம் கொண்ட சிலரால் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடிய சூழல் இருக்கிறது, அப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால், அது என் தவறாக இருக்காது என்று சொல்லி அதற்கான காரணங்களை மேலா எழுதியிருந்தேன்.

    ஒருவரை குறுகிய மனம் கொண்டவர் என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை குற்றம் சாட்டுவதாக நினைக்கவில்லை. It is a given. அதற்கு நானும் எதுவும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நபரே கூட எதுவும் செய்து விட முடியாது. இது வரை அவர் அறிந்த வாழ்க்கையின் வெளிப்பாடாக அவரது மனப்பான்மை இருக்கும். அதைப் புரிந்து கொண்ட நிலையில் வெளிவரும் கருத்து தான் அவரது குறுகிய மனப்பான்மை பற்றிய என் வாசகம்.

    உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் ஒரு புதுமுக நடிகர், தனது குறுகிய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று விமர்சனம் இருந்தால், அதில் அவரைப் பற்றிய குற்றச்சாட்டு இல்லை, 'அவரால அவ்வளவு தான் முடியும் போலிருக்கு' என்ற ஒரு நிலையே அது.

    ஆனால், நீங்கள் பதிலுக்கு விளைத்திருக்கும் பதிவில், "நடிக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா?" என்று நானும் என் போன்றோரும் உங்களைக் கேட்பது போன்ற தொனி இருக்கிறது. அது என்னைப் பற்றிய நேரடியான, சீரியஸான, அபாண்டமான குற்றச்சாட்டு. மேலும், "2000 குழந்தைகள் இறந்துட்டாங்களே, மனசு வலிக்கலையா?" என்று நீங்கள் கேட்கும் போது, அதிலே, 'அப்படி மனசு வலிக்கும் போது என்ன மயித்துக்கு காதலைப் பத்தி எழுதுறே நீ? அல்லது எப்படி காதலைப் பத்தி எழுத முடியுது?' என்ற உங்கள் குற்றச்சாட்டும் தொக்கி நிற்கிறது. இதுவும் ஒரு நேரடியான, சீரியஸான, அபாண்டமான குற்றச்சாட்டு.

    இதற்கு பதில் சொல்லும் விதமாக, மனசு வலிக்கும் சூழலிலும் எப்படி காதலைப் பற்றியோ அல்லது வேறு வி்ஷயங்கள் பற்றியோ என்னால் எழுத முடிகிறது என்பதை விளக்கினால், அதற்கு 'தற்பெருமைக்காரன் நீ' என்ற பதில் குற்றச்சாட்டைத் தான் அளித்தீர்கள். என் பதில்களை மறுக்கக் கூட இல்லை.

    தவிர அடிக்கடி, "இந்த மாதிரி waste of time நான் செய்யப் போவதில்லை" என்று கூறிக் கொண்டே மீண்டும் மீண்டும் என் ஒற்றை 'ஒப்புதல் வாக்குமூலம்' என்று நீங்கள் கருதும் அதே வி்ஷயத்தை பதிந்து கொண்டிருக்கிறீர்கள். அதே பதிலில், நீங்கள் அதிகருப்பு வாக்கியங்களாக குறித்திருந்த வேறு நான்கு வாக்கியங்களில் எந்த வித உள்நோக்கமோ அல்லது காயப்படுத்தும் நோக்கமோ இல்லை என்றும் நான் சொல்லியிருப்பதை வசதியாக மறந்துவிட்டீர்கள்.

    எனது மரியாதையைப் பெற்ற ஒரு சக வலைப்பதிவர், என்னைப் பற்றி தவறான கருத்தோ புரிதலோ கொண்டிருக்கும் போது, அதை மறுப்பதையும் எனது நிலையை தெளிவு படுத்துவதையும் நான் waste of time-ஆகக் கருதவில்லை.

    ReplyDelete
  59. இதற்கு உண்டான பதிலைத்தான் நான் முந்தாநாள் வாக்குவாத முடிவில் சொன்னேன். " என்னைக் குறித்து சொல்லவில்லை என்று நீங்கள் சொன்னதை நம்ப விரும்புகிறேன்" என்று. ஆனால் நேற்று பேச்சை ஆரம்பித்த நீங்கள் அதை மறுக்கும் விதமாக " யாரை சுட்டினேன் என்பது இருக்கட்டும்.." என்று விவாதத்தை மறுபடியும் வளர்த்தீர்கள். இதில் மறுபடியும் பேசிப் பேசி ஆகப்போவது எதுவும் இல்லை. எனக்கும் உங்கள் மேல் நல்லெண்ணம் இருப்பதால்தான், இப்படு இட்கார்ந்து கொண்டு பொறுமையாக பதிலிறுத்துக் கொண்டிருக்கிறேன். எனவே இத்துடன் இதை முடித்துக் கொள்வது நலம்.

    Have a Great Day every day..!!

    ReplyDelete
  60. "ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாய்" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு, ஏதோ என் மேல் மட்டும் குற்றம் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இப்படி நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விவாதத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்வது என்று முடிவு செய்து விட்டீர்கள். இது எந்த வகையிலும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்வதாக இல்லை.

    ReplyDelete
  61. //இதில் மறுபடியும் பேசிப் பேசி ஆகப்போவது எதுவும் இல்லை.//

    என் மீது சுமத்தப்பட்ட அநீதியான குற்றச்சாட்டும் களங்கமும் நீங்குவது எனக்குத் தேவையான ஒன்று என்று நான் கருதுகிறேன். அது ஆக வேண்டிய காரியம் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  62. உங்களைப் பற்றி நான் சொல்லவில்லை என்று நீங்கள் நம்பிவிட்டதால் மட்டும் இந்த வி்ஷயம் முடிந்து விட்டதாக நான் கருத மாட்டேன். பதிலுக்கு நீங்கள் ஆராயாமல் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் அபாண்டமான கருத்துகளின் கதி என்ன? (என்னைப் பற்றி சொல்லவில்லை என்று மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மறுத்தாலும் நான் நம்பத் தாயார் இல்லை. மேல்Kind வலைப்பதிவில் நான் எழுதிய பதிவுகளின் பெயர்களைச் சொல்லித்தான் என்னைப் பற்றிய அபாண்டங்களை அள்ளி வீசியிருக்கிறீர்கள்.)

    அவற்றுக்கு நான் எந்த விளக்கம் சொன்னாலும் அவற்றைப் பரிசீலனை செய்யாமல், "நீ தற்பெருமைக்காரன், நான் உன்னைப் போலக் கிடையாது, நீ idealistic, நான் அப்படியில்லை" என்பது போன்ற பதில்களை மட்டுமே அளித்திருக்கிறீர்கள்.

    இந்த வகையான பதில்களின் மூலம், என்னைப் பற்றி நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துகளை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். குறிப்பாக, '2000 குழந்தைகள் இறந்த நிலையில் காதலைப் பற்றி எழுதி இலக்கியம் வளர்த்துக் கொண்டு திரிகிறான் பார், இவனையெல்லாம் எந்த கூட்டத்தில சேர்க்கிறது?' என்ற தொனியில் என்னைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு ஆதாரமோ, விளக்கமோ அறிய விரும்புகிறேன். இவற்றின் மூலம் என்னைப் பற்றி நீங்கள் பிறர் மனதில் விதைக்கும் பிம்பம் என்ன? உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் அளித்துள்ள விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து 'ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டாய், இத்துடன் ஓடிப் போய் விடு' என்பது போன்ற அறிவிப்புகள், 'வாந்தியெடுக்க வைக்கும் தற்பெருமைவாதி' என்பது போன்ற பட்டப் பெயர்கள், 'இதெல்லாம் உனக்கு ரொம்ப ஜாஸ்தி, ஜாக்கிரதையாக நடந்து கொள்' போன்ற மிரட்டல்கள் இவற்றைத் தவிர்த்து உங்கள் நியாயமான பதில்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  63. //எனக்கும் உங்கள் மேல் நல்லெண்ணம் இருப்பதால்தான், இப்படு உட்கார்ந்து கொண்டு பொறுமையாக பதிலிறுத்துக் கொண்டிருக்கிறேன்.//

    பொறுமையாக? நீங்கள்? Ha, Ha, That is a good one!!

    ReplyDelete
  64. //நீங்க ஒண்ணும் பண்ண வேணாய்யா...கொஞ்சம் பேசாம இருங்க. ஒரு வாரத்துக்கு எல்க்கியம் வளக்காட்டி குடி முழுகிப் போயிடாது. எல்லாத்தையும் பண்ணியாச்சு ..பண்ணியாச்சுங்கிறீங்களே. ஒரு நார்மல், சிம்பதட்டிக் ஹ்யூமன் பீயிங், மைனாக்களை கவர் பண்றது எப்படி..?? காதல்..காதல், காதல், வசந்துக்கு கல்யாணம் போன்ற விஷயங்களை அலையின் ஈரம் கூட காயாத, இன்னமும் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எழுதினா, பண்ண உதவி எல்லாம் வெறும் தெவச மந்திரம் மாதிரி ஆயித் தொலையாதா..?? ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி செத்துப்போனாலே, கட்சி விழாக்களை ஒரு வாரத்துக்கு கேன்சல் பண்றாங்களே....தமிழ்நாட்டுல மட்டும் 2000 குழந்தைகள் செத்துப் போயிருக்குதே...எழுத உக்காரும்போது மனசு கொஞ்சம் வலிக்காது..?? //

    இதை சொல்கிறீர்களா..??

    இதனால் உங்கள் மீது என்ன களங்கம்..உங்களுக்கு நான் இழைத்தது என்ன அநீதி எனப் புரியவில்லை. நீங்கள் உங்கள் விமரிசனங்களினை நான் உட்பட்ட ஒரு குழுவின்மேல் வைத்ததுபோல், நானும் மேற்சொன்னவையை சொன்னேன். இதற்கு எதற்கு ஓவர் ரீயாக்ட செய்கிறீர்கள். இது களங்கம் ஏற்படுத்தியதென நினைத்தால், நான் ஒன்றும் செய்ய ஏலாது.
    நான் செய்யத்தக்கதென ஒன்றும் இல்லை. Your action initiated my reaction. That's all.

    ReplyDelete
  65. Of course my action initiated your reaction. I am not questioning that. I am questioning the reasonableness and justified limits of your reaction, nay accusation.

    எனக்கு ஏற்பட்டது என்ன களங்கம், எனக்கு நீங்கள் இழைத்த அநீதி என்ன என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள், மேலே சொல்லியிருக்கிறேன். என் வாயால் அதை மறுபடி சொல்ல எனக்கு விருப்பமில்லை.

    களங்கம் சுமத்திவிட்டு அப்புறமாக, "அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது" என்பது தான் உங்கள் பதில் என்றால் நன்றி.

    ReplyDelete
  66. இதனால் உங்களுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் நினைத்துவிடவில்லை. நீங்களும் நினைக்கவேண்டாம்.

    நன்றி.

    ReplyDelete
  67. அப்பாடி மழை ஓஞ்சு போச்சு போலிருக்கு. உங்கள் இருவருடைய நிலைப்பாடும் புரிகிறது. அநாவசியமாக வார்த்தைகளை ஏன் வளர்த்துக் கொண்டீர்கள் என்று தான் தெரியவில்லை.

    ReplyDelete
  68. ரொம்ப நாள் கழிச்சி இதைப் படிக்கறேன்... ப்பாடி... எவ்ளோ நீளமான டிபேட்டு... ஒரு ஆச்சர்யம்...நடுவுல ஒர்த்தர் கூட மொகமூடி போட்டுகிட்டு வந்து, நாயே பேயேன்னு திட்டலை..அப்பல்லாம் எல்லாம் நல்லாத்தான் இருந்திருக்கு.. :-)

    ReplyDelete
  69. இங்க என்னய்யா நடந்தது.
    எவ்வளவு வருத்தம் இருந்தாலும்
    எத்தன பிரியமானவங்களை இழந்தாலும் அடுத்த வேளை சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே இருக்கிறது.


    சரி பிரகாசரே
    உங்க கவிதை கசடதபற-க்கு
    அ ஆ கவிதை போட்டேன் பாத்தீங்களா,பதில் எதுனா போட்டீங்களா
    மறுபடி அந்த இடத்துக்கு போகத் தெரியல

    ReplyDelete
  70. //அப்பல்லாம் எல்லாம் நல்லாத்தான் இருந்திருக்கு.. :-) //

    :-) :-)

    ஆமாம். blogger மூலமா, அநாகரீகமான இடையீடுகள் இன்றி chat பண்ணிய அனுபவம். :-)

    அது சரி, இந்த Hi there Blogger கமெண்ட் பழசயெல்லாம் கெளப்பி விடுதே..?? ரொம்ப தெரிஞ்ச ஸ்பாம்மர் போல :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...