"சிக்கல் நிறைந்த எழுத்தே படிக்கும்போது வாசகனை உள்ளிழுக்கிறது - அவனை மண்டை காய வைப்பதன் மூலம். மற்ற எழுத்தெல்லாம் தட்டையாக இருக்கின்றன" என்பது போன்ற வார்த்தைகளே கேட்காத வயதில் படித்ததெல்லாம் இன்றைக்கும் நினைவில் இருப்பவை. குட்டிக்குரங்கு கபிஷ், முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி ( அ.கொ.தீ கழகம்) , மந்திரவாதி மாண்ட்ரேக், சூப்பர்மேன்- வேதாளர், மேலும் குமுதத்தில் வந்த மியாவ் மீனா போன்ற கதைகள் காணாமற்போன குழந்தைப்பருவத்தினை நினைவுபடுத்தும் விஷயங்கள். ஜட்டி போட்டு பேண்ட் போட்டா நார்மல் மேன். பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர்மேன் என்று சன் டீவி சேகர் கூட கமெண்ட் அடித்திருப்பது நியாபகம் வருகிறது.
என் பையன் ஸ்பைடர்மேனைத்தான் விழுந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட டிவிடி தேஞ்சே போச்சு. நடக்கும்போது, தாவும்போது, கைகளை பாபா முத்திரை காட்டிக்கொண்டு வலைநூலை வெளியிடுவது என்று ஒரே ஆட்டம்தான். ஸ்பைடர் மேன் தட்டு, ஸ்பைடர்மேன் காஸ்ட்யூம், ஸ்பைடர்மேன் கார், ஸ்பைடர் மேன் பஞ்சு பொம்மை என்று அவன் அறை முழுக்க இறைந்து கிடக்கிறது.
ஸ்பைடர்மேனின் இந்தியவடிவம் தயார் இப்போது. இங்கே பீட்டர் பார்க்கர். அங்கே பவித்ர பிரபாகர். இங்கே சிலந்தி கடித்து சக்தி கிடைக்கிறது. அங்கே ஏதோ சாமியார் ( போச்சுடா...) சக்தி கொடுக்கிறார். இங்கே வில்லன் க்ரீன் காப்ளின் தவறாக வேலை செய்யும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவு என்றால், அங்கே வில்லன் புராண கால ராட்சதனின் மறு அவதாரம். இங்கே அறிவியல். அங்கே புராணம். அதுதான் கொஞ்சம் உதைக்கிறது.
இங்கு கதாநாயகன் பீட்டர் பார்க்கர் நன்றாக படிக்கக்கூடிய, புத்தகப்புழு பையன் என்பதால் கூடப் படிக்கும் நண்பர்கள் ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் அமெரிக்காவில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் நிலை அப்படி. ஆனால் இந்தியாவில் - கஷ்டப்பட்டு படிப்பது தேசத்தின் கலாசாரம் என்பதால், நன்றாகப்படிப்பவர்களுக்கு மதிப்பு. எனவே, கதாநாயகன் கிராமப்புறத்திலிருந்து வருபவன் என்பதால் அவனை எல்லோரும் ஒதுக்குவதாக காட்டப்போகிறாராம். அப்படிப்பட்டவனுக்கு சாமியார் சக்தி கொடுத்ததும் ஸ்பைடர் மேன் ஆகிறாராம்.
காலையில் ஆபீசுக்கு வரும்போது இங்கே கேட்டுக் கொண்டிருந்தேன். பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திய பிறகும், பேட்டி முடியவில்லை. எனவே முழுதும் கேட்க முடியவில்லை. அதற்குள் "காரை நிறுத்திவிட்டு உள்ளே இவன் உட்கார்ந்து என்ன செய்கிறான்..? " என்று சக இந்தியர் ஒருவர் பார்த்துவிட்டுப் போனார்.
குலுங்கும் காரை அவர் எங்கேயாவது இதற்குமுன் பார்த்திருக்கக்கூடும். பகலிலா..?? காலை ஒன்பதரை மணிக்கா..??
நான் பாத்ததில்லைப்பா..!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
காலை பத்து மணிக்கு (ஒரு மோட்டல் முன்பு) குலுங்கும் காரை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் கிட்டே போய் எட்டிப்பார்க்க தைரியம் இல்லை. அப்புறம் நம்ம பார்த்ததை எவனாவது பார்த்து மான நஷ்ட வழக்கு போட்டா.. ?
ReplyDeleteபவித்ர பிரபாகருக்கு ஸ்பைடர்மேன் சூட்டோடு ஒரு பஞ்சகச்சத்தையும் கட்டிவிட்டிருந்த படமொன்றை ரிடிஃப்பில் பார்த்தேன். காமெடியாகத்தான் இருந்தது. இருந்தாலும், அதுவும் சரிதான்.
ReplyDeletehttp://www.npr.org/templates/story/story.php?storyId=4271120
இதுதானா நீங்கள் கேட்டது?
மன்னிக்க, NPR இணைப்பைக் கவனிக்கவில்லை.
ReplyDeleteமியாவ் மீனா எனது எண்ணோட்டத்தை தூண்டிவிட்ட ஒரு கதை. அதில் பூனை மியாவ் செய்யும் சாகசங்களும் போலி சாமியார் பூநேஷின் அட்டகாசங்களும் மறக்க முடியுமா? நடராஜுவின் கண்டுபிடிப்புகள் எப்படி? ஞாபகம் வருகிறதா? வாழ்க குமுதம்.
ReplyDelete