Saturday, January 08, 2005

பேர் கொல்லும் பிள்ளைஎல்லோராலும் பாராட்டப்பற்ற , புகழ்பெற்ற , பாடல்பெற்ற " மன்மதன் " படம் பார்த்தேன். தீபாவளிக்கு வந்த படங்களிலேயே நன்றாக ஓடிய படம் இதுவென்று சொன்னார்கள். மற்ற படங்கள் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யோசிக்கவே கதிகலங்குகிறது. தமிழ்நாட்டில் இன்ன படம் ஓடும்; இன்னது ஓடாது என்று தெளிவாகவே சொல்ல முடியாத குழப்ப நிலை.

* படம் முழுக்க சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அனுபவத்தின் சாயலோ, அறிவின் அடையாளமோ துளிக்கூட இல்லை. குமுதத்தில் ஒரு பக்க கதையை படித்துவிட்டு, எழுத்த்தாளர் ஆகப் போகிறேன் என்று எழுதக் கிளம்பிய மாதிரி இருக்கிறது.

* படத்தில் கெட்ட பெண்கள் எல்லாம் கரெக்ட்டாக இங்க்லீஷ் பேசுகிறார்கள். ஆனால் ஹீரோ மட்டும் தப்பு தப்பாக பேசுகிறார். (உதா: நீங்களும் யூத்தா இருக்கிங்க. நானும் யூத்தா இருக்கேன் / ஆன் தி வே ல வரும்போது வாங்கிட்டு வந்துர்றேன். ஒருவேளை அவர் கொலை செய்வதற்கு அதுகூட காரணமா இருக்கலாம். சிம்பு சார், ஒண்ணு நல்ல இங்க்லீஷ் பேசுங்க. இல்லாட்டி தமிழ்லயே பேசுங்க. எதுக்கு பொண்ணுகளோட சேத்து, இங்க்லீஷையும் படம் முழுக்க கொல்றீங்க..??

* ஜோவுக்கும், சிம்புவுக்கும் காதல் டெவலப் ஆகும் விதம் புதுமையோ புதுமை. எந்தப் பெண்ணுக்கு, ரேப் பண்ற மாதிரி கனவு வருது. அப்படியே வந்தாலும் "அந்த" மாதிரி கனவில் மூஞ்சி இவ்ளோ தெளிவாவா தெரியும். கடசியில் அவரையே லவ்ஸ் பண்ணுகிறாராம். கர்மம்டா சாமி

* வாலி படத்தின் பாதிப்பு நிறைய்ய. கூடப் பழகுற பெண்ணை பைத்தியம், கிராக்குன்னு எப்ப பாத்தாலும் சொல்றது அல்லது அவமானப்படுத்துவது below average விடலைகளின் நிறைவேறாக் கனவு. சிம்பு மூலம் அந்த வக்ரத்துக்கு வடிகால் கிடைத்ததில் தியேட்டரில் ஏகப்பட்ட விசில் சத்தம் கேட்டிருக்கும்.

* தேவை இல்லாத அஜித்குமார் ஜால்ரா. ஒருவேளை தன்னுடைய ஆக்ஷன் கனவுக்கு விஜய் எதிரி என்று அஜித்துக்கு ஜால்ரா அடிக்கிறாரோ..??

* தேவை இல்லாத பப்பி ஷேம் வசனங்கள் / காட்சிகள். படம் ஓடியதற்கு இவை கூட மிகப் பெரிய காரணங்களாக இருக்கலாம் ( நான் டிவிடி எடுத்ததற்கு கூட. ஆனால்..ம்ஹூம்...அதிலும் ஏமாற்றம்தான்)

* கவுண்டமணி குமுதம் பேட்டியில் . சிம்பு தன் காட்சிகள் பலதை வெட்டி விட்டதாக கூப்பாடு போட்டிருந்தார். இப்போதே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படி வளவளவென்று இருக்கின்றன. வெட்டாது விட்டிருந்தால் அய்யகோ...

* அதுல் குல்கர்னியை இப்படி அவமானப்படுத்தி இருக்க வேண்டாம். அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த போலீஸ் துறையையும்.

* சிம்புவின் நடிப்பு முன்னேறி இருக்கிறது- அவ்வப்போது ஓவர் ஆக்டிங் கூட. பேசாமல் இப்படி டைரக்ஷன் செய்யும் வேலையை விட்டுவிட்டு, விரல்வித்தையை மறந்து விட்டு நல்ல டைரக்டர் யாரிடமாவது தன்னை முழுதாக ஒப்படைத்தால் தேறலாம். இந்தப் படம் நன்றாக ஓடி விட்டதால், நான் மேலே சொன்னது நடக்கப்போவதில்லை. தமிழக ரசிகர்களுக்கு கேடுகாலம்.

* இந்தப் படத்துக்காக சிம்புவுக்கு மண்டைகனம் ஏறி இருந்தா, அவர் ரொம்ப பாவம். சீக்கிரமே செம அடி விழும்.

* இந்தப் படம் ப்ரிவியூ ஷோ பார்த்தபோது, டி.ராஜேந்தர் கண்ணில் கரகரவென்று கண்ணீர் வர அழுதாராம். " நான் நல்லபடியா படம் எடுத்தாலும், நடிச்சு, அச்சி-மச்சி வசனம் பேசி எல்லாரையும் கொன்னேன். நீ நல்லா நடிச்சாலும், இப்படி எல்லாத்திலயும் மூக்கை நுழைச்சிகிட்டு வேற விதமா கொல்றியேடா "ன்னு நினைச்சோ..??

இருக்கலாம்...

4 comments:

 1. //படத்தில் கெட்ட பெண்கள் எல்லாம் கரெக்ட்டாக இங்க்லீஷ் பேசுகிறார்கள். ஆனால் ஹீரோ மட்டும் தப்பு தப்பாக பேசுகிறார்//

  படத்தில் அவர் தன் brilliancy ஐ யூசு பண்ணி, கணக்கு வழக்குப் பார்க்காமலே ஆடிட்டராக எக்கச்சக்கமா துட்டு வாங்குவாராம். ஆடிட்டர் ஆவறதும், இங்கிலீஸ¤ பேசறதும் இத்தனை ஈசி என்று எனக்கு முன்னமேயே யாரும் சொல்லாமப் போய்ட்டாங்களே?

  ReplyDelete
 2. Naanum ezhuthiyirppaen...but enna panradhu...TR paiyanum oru vagaiyila mayavarathaandhaan! (ada...oorai sonnaen thalai!) Adhaan chumma vittuttaen :)

  ReplyDelete
 3. சிம்பு ஸார் ரா?... பவுடர் பயலுங்க லிஸ்ட்ல சிம்பு கிடையாதா அண்ணாத்தே!

  ReplyDelete
 4. ஸார் னா மரியாதைன்னு அர்த்தமா..?? அட கெரகமே..??

  தனக்கு எல்லாம் ர்கெர்யுமுன்னு நெனைச்சிக்கிற பொடிப்பயலையும் அப்படி நக்கலா கூப்பிடலாமே..:-)

  பவுடர் பயலுங்க நமக்கென்ன சென்ம விரோதியா..?? பவுடர் கவர்ச்சியை நம்பி கண்டதிலயும் காலை விட்டு ஸ்டண்ட் விட்டாதான் எனக்கு பத்திகிட்டு வரும்.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...