Saturday, January 01, 2005

வாழ்த்தவோ..???

புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல என்று ஸ்பெஷலாக ஒன்றும் தோன்றாவிடினும், இந்த செய்தி கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இயற்கையின் சீற்றத்துக்கு எல்லை வகுக்க முடியாவிட்டாலும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிவாரணப்பணிகள் ஆறுதல் அளிக்கின்றன. ராம்கியின் மடல்கள் உற்சாகமூட்டுகின்றன. குப்பைகளுக்கு போகும் உணவுப்பொட்டலங்களையும், பழைய துணிமணிகளையும் படங்களில் பார்த்தால், ஒரு பக்கம் வருத்தம் வந்தாலும், இன்னொரு பக்கம் மக்களுக்கு இவை எல்லாம் ஏற்கனவே இவை கிடைத்து இருக்கின்றன என்பதை நினைத்து கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

"கடலோரத்தில் இருந்தால்தான் அவன் மீனவனா" என்ற தலைப்பில் ஜூவியில் வந்த கட்டுரை எதிர்காலத்தில் தமிழகத்தில், மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பிலாமல் மீன்பிடி தொழிலை எப்படி நடத்தலாம் என்று பேசுகிறது. அவர்கள் உயிருக்கும், படகுக்கும் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் உருவாகின்றன.



சுனாமியின் வெறியாட்டத்தில், ஏகப்பட்ட குடும்பங்கள் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன. மேலே காணும் ஃபோட்டொ, எதோ ஒரு முகாமில் எடுக்கப்பட்டது என நம்புகிறேன். வீட்டில் ஏகப்பட்ட வெஞ்சனங்களோடு ஒரு கையில் தண்ணிரும், இன்னொரு கையில் தட்டுமாக சோறுட்டப்படும் குழந்தைகள் எல்லாம், முகாமில் இப்படி தன்னந்தனியே உட்கார்ந்து சாப்பிடுக் கொண்டிருக்கிறார்கள். வலது பக்கத்தில் உள்ள சிறிசுக்கு ஃபோட்டொ எடுக்கப்படுவது கூட தெரியவில்லை. அதுபாட்டுக்கு குழந்தையின் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நடுவில் உள்ள குழந்தைக்கு தன்னைச் சுற்றிலும் ஏதோ நடப்பது புரிகிறது. நிமிர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.ஆனால் விளங்கவில்லை. மூன்றாமவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தலை குனிந்து அமைதியாக தன் சாப்பாட்டை சாப்பிடுகிறாள் - இன்னமும் எத்த்னை நாளைக்கு இப்படி சாப்பாடு கிடைக்குமென்று.

சாதாரண மனநிலையென்றால் இந்த புகைப்படம் என்னை கவிதை எழுத் தூண்டி இருக்கும். நேற்றிலிருந்து படித்த சில சீஸன் கவிதைகளும், அது தொடர்பான விவாதங்களும் என்னை யோசிக்க வைக்கின்றது..

பிறிதொரு நாளில் உங்களுக்கு கவிஞர் "வேலு கஃபே" வை அறிமுகம் செய்து வைக்கிறேன். தேவைப்படும்போது அவர் கவிதைகள் இங்கே அரங்கேறும்.

புத்தாண்டாவது நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல.

பிரார்த்தனையும் கூட ...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...