Tuesday, January 25, 2005

மஞ்சூரியன் கேண்டிடேட்

டென்ஸல் வாஷிங்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஆகிருதிக்கும், அசத்தல் பர்சனாலிட்டிக்கும் அவர் நடிப்பு ரொமவே சா·ப்ட். - அங்குசத்துக்கு கட்டுப்படுகிற யானை மாதிரி. ராதிகாவுக்கு கட்டுப்படுகிற நல்லவனுக்கு நல்லவன் ரஜினி மாதிரி. மஞ்சூரியன் கேண்டிடேட் அவருக்காக பார்த்த படம் தான். ஆனால் நிஜமாகவே "படம்" காட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரிஜினல் 1962 ல் ஃப்ராங்க் சினாட்ரா நடிக்க வந்திருக்கிறது. போரின் கோர விளைவுகள் இன்னமும் தொடரும் இந்தக் காலகட்டத்தில், அதையே நவகால நடிகர்களை வைத்து மறுபடியும் செய்திருக்கிறார்கள். அப்போது கொரியன் என்றால், இப்போது இராக். நாளை இரான், ...சிரியா.....?? !! சாகாவரம் பெற்ற கதை என்றால் இதுதானோ..??

இந்தியாவில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ, அதைப் போல அமெரிக்காவில் போருக்கும் அரசியலுக்கும். இங்கு ஒருவர் War Hero என்பது அருமையான பொலிடிசல் அட்வாண்டேஜ். போன தேர்தலுக்கு கூட கெர்ரிக்கும், புஷ்ஷ¤க்கும் இந்த விஷயத்தில் சண்டை வந்தது நினைவிருக்கலாம். புஷ்ஷர் டெக்ஸார் ஏர் நேஷனல் கார்டோடு அல்வா கொடுத்துவிட, கெர்ரி வியட்நாம் போரில் பங்கெடுத்துவிட்டு, பின் திரும்பி வந்து போர் எதிப்பு குழுவுக்கு தலைமை தாங்கி, மெடலை ஒயிட் ஹவுஸ் முன்னே தூக்கி எறிந்து பரபரப்பு கிளப்பினார். இங்கு அரசாங்கங்களை தீர்மானிப்பதும், அரசுக் கொள்கையை வடிவமைப்பதும் ஆயுத வியாபாரிகள்தான் என்று ஒரு பேச்சு உண்டு. ஏற்கனவே வந்த படங்களான Nixon, JFK போன்ற படங்களில் இந்த உறவு இலைமறை காயாக சொல்லப்பட்டது. ஜான் எ·ப் கென்னடி சுடப்பட்டதன் பின்னணியில் அவருடைய வியட்நாம் போர் வாபஸ் முடிவு மற்றும் க்யூபம் மிஸ்ஸைல் விவகாரம் முக்கிய காரனமாக இருந்தது என்று ஆலிவர் ஸ்டோன் தன் படத்தில் சொல்லி இருந்தார். இவ்வளவென்ன..சமீபத்திய மைக்கேல் மூர் 9/11 படத்திலேயே 9/11 பேரழிவால் கார்லைல் க்ரூப் அடைந்த பலன்களை, அவர்களுக்கு அரசாங்கத்துடன் இருக்கிற உறவை எடுத்து விளாசி இருந்தார்.



மஞ்சூரியன் கேண்டிடேட் இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதவியாபாரிகளின் தந்திரத்துக்கு பலியாவது பதவி வேறி கொண்ட ஒரு செனட்டர். தான் அனுபவிக்காத, அதிபர் பதவியை தன் மகனாவது அடைய வேண்டும் என்பதற்காக, விஞ்ஞானத்தின் துணையோடு நடத்தை மாற்று விபரீத சிகிச்சை செய்து, முதல் இராக்கிய போரில் அவன் பங்கை உயர்த்துவதற்காக, அவன் குழுவையும் இந்த சிகிச்சைக்குட்படுத்தி, கடைசியில் இந்த விபரீத ஆட்டம் அவரையே பலி கொள்ள பொது மேடையில் இறந்து போகிறார். அமெரிக்க அரசியலும் இவ்வளவு ரத்த வெறி கொண்டலைகிறதா என்று பார்க்க திகிலாக இருக்கிறது.அது சரி எந்த ஊர் அரசியல் ஆக இருந்தாலென்ன...??!!

மெரில் ஸ்ட்ரீப் அசத்தி இருக்கிறார். அவர் படபடப்பையும் ஆளுமையையும் பார்க்கும்போது தமிழ்நாட்டு எலிசபெத் டெய்லர் லக்ஸ்மி சிவச்சந்திரன்(தானே..?! ) ஞாபகம் வருகிறார். படத்துக்கு உயிர்நாடியே அவர்தான். ஜான் ஷாவாக வரும் அவர் புதல்வனின் கோர இளிப்பு சில்லிட வைக்கிறது. டென்ஸல் ராணுவ மேஜர். போருக்குப் பின்னான மனநிலையை, வியாதியை, குழப்பங்களை , தடுமாற்றங்களை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் பாத்திரத்தை மீறாத நடிப்பு. அவருடைய துர்சொப்பனங்களையும், அவர் கண்ணெதிரே காணுவதாக படம்பிடிக்கும் கோரக்காட்சிகளை பார்க்கும் போதும், அமெரிக்க அரசியலமைப்பு தவறாக உபயோகப்படுத்திக் கொள்ளும் ராணூவம் மீது, அதன் வீரர்கள் மீது பச்சாதாபம் வருகிறது.இரண்டாம் உலகப்போர் முடிந்து வந்த தன் தாய்மாமன் மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகிப் போனதை சொன்ன என் அமெரிக்க நண்பர் ஞாபகம் வருகிறார்.

ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக, டெக்னாலஜி துணையுடன் ஆளுவோரின் மண்டைக்குள் சிப் இப்ளாண்ட் செய்வதெல்லாம் அமெரிக்க டெக்ணோ ஜல்லி ஜிகிடி. இதையே நம்ம ஊரில் கோடிகளை வைத்தும் , கேடிகளை வைத்தும், லேடிகளை வைத்தும் சாதித்து இருப்பார்கள்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...