பதவியேற்பு விழாவைப் பார்த்துவிட்டு, இப்போதுதான் பணியிடம் வந்தேன்.
ஜார்ஜ் புஷ்ஷின் செகண்ட் இன்னிங்ஸ்...
இந்த விஷயம் காலையில்தான் சி.என்.என்னை மேயும்போது தெரிந்தது. கீழே வந்து உடனடியாக டீவியை போட்டு, பார்க்க ஆரம்பித்தேன். லாரா புஷ் உள்ளே வந்து கொண்டிருந்தார் அப்போது. பின்பு டிக் செனி. பிறகு தனது அமைச்சரவை சகாக்கள் சூழ புஷ். அவரது பதினேழு நிமிட உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. Freedom என்கிற வார்த்தையை இருபத்துமூணு முறையும், Liberty என்கிற வார்த்தையை பதினைந்து முறையும் உபயோகப்படுத்திய yet another "pretty" speech ( as quoted by NPR.org) .
கூடியிருந்த கூட்டத்தின் சோகையான கை தட்டலுக்கும், இறுகிப்போன முகங்களுக்கும் வாஷிங்டன் குளிர்மட்டும்தான் காரணம் என்று நம்ப விரும்புகிறேன்.
ஆனால் இரண்டாம் ஆட்டம் ஆடும் அதிபர்கள் அவ்வளவு "ஆட்டம்" போட முடியாது என்கிறார்கள். ஏனெனில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் இங்கே அதிபராக முடியாது என்பதால், எல்லா முடிவுகளையும் செனட் உறுப்பினர்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் கூடிய சீக்கிரமே அடுத்த அதிபரை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று பேச்சு நிலவுகிறது.
பார்ப்போம்.
Thursday, January 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
No comments:
Post a Comment