Skip to main content

Posts

Showing posts from April, 2005

சன் டீவி

ஆஹா...ஜென்ம சாபல்யம்.

வெகு நாட்கள் கழித்து சன் டீவி மறுபடி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ, கொஞ்சம் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது. காலை வேலைகளில் பார்க்க முடியாமல், சாயங்காலம் வந்தால் செல்வி, மனைவி, கணவனுக்காக என்று ஒரே சீரியல் மயம். விரும்பிப் பார்க்கும் செய்திகளும் சவ சவ என்று இருக்கிறது. செய்தி வாசிக்கும் அம்மணிகளின் அலங்காரம் தவிர்த்து.
மற்றபடி நண்பர்கள் சொன்னது போல பிளட்பிரஷர் ஏறும் அளவிற்கு எந்த செய்திகளின் விவரிப்பும் தற்போது இல்லை.

விளம்பரங்களில் ஏகப்பட்ட செல்ஃபோன்களையும், கார்கள்/suv களையும் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு நகைக்கடை விளம்பரத்தில் வந்த பெண்களை " ஹி..ஹி..இப்பல்லாம் மாடல்களே இவ்ளோ அழகா இருக்காங்களா" என்று வியந்தபோது, "ம்..நல்லா கண்ணாடிய தொடைச்சிட்டு பாருங்க. எல்லாருமே நடிகைகள்" என்று நங் என்று விழுந்தது. ஏகப்பட்ட பாட்டுகள் இரவு 10 மணிக்கு மேல் திரைமசாலாவில் ஒளிபரப்பாகிறது. கண் விழித்துப் பார்க்க முடியாததால், DVR ல் எல்லாவற்றையும் டைம் செட் பண்ணி ரெகார்ட் செய்து வைத்து விட்டு மறுநாள் சாயங்காலம் சீரியல் ஓடிக்கொண்டிருக்கும்போது, பார்க்கிறோம். …

(க)சளைப்பா..??

இன்று காலை எனக்கு ஒரு மின்மடல் வந்தது.

தாய்மையுற்றிருக்கும் என் நண்பனின் மனைவி பேறுகால சோம்பலைப் போக்கவும், தினப்படி வாழ்க்கையில் கொஞ்சம் ஸ்பைஸ் சேர்த்துதுக்கொள்ளவும், சுஜாதாவின் கதைப் பட்டியல் - உங்கள் சிபாரிசுப் பட்டியல் - எனக்கு அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். கண்டிஷன் - எல்லாக் கதைகளில்ம் கணேஷ்/வஸந்த கட்டாயம் இருக்க வேண்டும்.இணையத்தில் தேடியபோது ஸாருக்கு ஒரு விக்கி பீடியா இருப்பது தெரிய வந்தது. அங்கு பிடித்து நம்ம தேசிகனின் சுஜாதா பக்கம் போனபோது சப்ஜாடாக அத்தனை கதைகளின் பட்டியல் கிடைத்தது. அத்தனையிலும் தேடி அனுப்பிய லிஸ்ட் கீழே. பதிலில் " இந்த அத்தனை கதைகளிலும் கணேஷ்/வசந்த வருகிறார்களா என்பது நினைவில் இல்லை. ஆனால், வராவிட்டாலும் பாதகமில்லை - மற்ற கதைகளும் சுவாரசியமானவைதான் என்ற குறிப்போடு அனுப்பி வைத்தேன்.

நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
ப்ரியா
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
கொலையுதிர் காலம்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
கரையெல்லாம் செண்பகப்பூ
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
வசந்தகாலக் குற்றங…

Sideways

ஸ்ரீரங்கத்து தாத்தா ரெகமண்ட் பண்ணிய படம் என்பதனால் பார்த்தேன். அவர் முதல் சொன்ன ஃபோன்பூத் சுமார் ரகம் என்றாலும் ரசிக்க வைத்த முயற்சி என்ற வகையில் அவர் சிபாரிசுகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.

படம் சோகையாக ஆரம்பிக்கிறது. பழைய வாடை அடிக்கும் வாத்திய ஓசைகளுக்கு நடுவே ஒரு நடுவயது குறுந்தாடி அவசர அவசரமாக எழுந்து, அத்தனை அவசரத்திலும் ஆய் போய்க்கொண்டே புத்தகம் படித்துவிட்டு, குப்பையாக கிடக்கும் வீட்டின் படுக்கையறையில் உள்ள உடைகளை அப்படியே சுருட்டி எடுத்து பைக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு, சான் டியாகோவிலிருந்து கிளம்புகிறது. சடுதியில் லாஸ்ஏஞ்சலிஸ் வந்து, ஒரு பார்ட்டியில் கடைசி ஆளாக குதித்து விட்டு, அங்கு தனது நண்பனை லபக்கிக் கொண்டு மறுபடியும் காரில் கிளம்புகிறது. ரெண்டு பேரும் கலிஃபோர்னியா வைன் கவுண்டி வழியே டூர் போகிறார்களாம். குறுந்தாடி ஒரு வித்தியாச எழுத்தாளன். மற்றவன் ஃபீல்ட் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் நடிகன்.நடிகனுக்கு வார இறுதியில் (போன வருட டைவர்ஸுக்கு பிறகு) மறுபடியும் கல்யாணம். ரெண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள்....ஆச்சா..களம் ரெடி. ரெண்டு பெரும் வாழ்க்கையிலும்/தொழில் ரீதியாகவும் அ…

எல்லாம் நேரம் ....

கமல் படங்களை பொறுத்தமட்டில் வெகுஜனங்களுக்கு இருக்கும் அபிப்ராயம் நமக்குத் தெரிந்ததுதான். மசாலா படங்களைப் பார்த்து கை தட்டி, குதூகலித்து குழந்தையாகி குதிக்கும் ரசிகமனசுகள், கமல் தரும் படங்களுக்கு அத்தனை விருப்பப்பட்டு மாலை சூடுவதில்லை. அது தெரிந்தே கமல், தனக்கென்று ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டு, நகைச்சுவை என்றாலும், சீரியஸ் படம் என்றாலும் வித்தியாசமான முயற்சிகளை அவ்வப்போது தந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் ரசிக்கப்படுவது, அவர் தருவதைவிட அதே காலகட்டத்தில் மற்றவர் தருவதை வைத்துதான் என்று நிரூபணமாகி இருக்கிறது.மும்பை எக்ஸ்பிரஸ் விமரிசனங்களை நமது விவரமான நண்பர்கள் சிலர் கூட காட்டமாக தந்திருந்தாலும், கமல் மீது நம்பிக்கை வைத்து போய் பார்த்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கமல் ஏற்படுத்தி வைத்திருக்கிற எதிர்பார்ப்புகளிலும், அளவுகொள்களிலும் இம்மி குறைந்தால் கூட நிர்தாட்சண்யமாய் ஒதுக்கும் மக்கள், வேறு எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் தொடர்ந்து மசாலாக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நாயகர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பதன் மர்மம் புரி…

Ozymandias

I met a traveler from an antique land Who said: Two vast and trunkless legs of stone Stand in the desert. Near them, on the sand, Half sunk, a shattered visage lies, whose frown, And wrinkled lip, and sneer of cold command, Tell that its sculptor well those passions read, Which yet survive, stamped on these lifeless things, The hand that mocked them, and the heart that fed, And on the pedestal these words appear "My name is Ozymandias, King of Kings: Look upon my works, ye Mighty, and despair!" Nothing beside remains. Round the decay Of that colossal wreck, boundless and bare The lone and level sands stretch far away. - Percy Bysshe Shelley1792-1822 மாறுதலுக்கு இன்று ஒரு ஆங்கில கவிதை. படம் நடிகை கஜாலா. எதிர்பார்ப்புகளுக்கு நான் குறையே வைப்பதில்லை :-)

சூரியனைப் பார்த்து குலைக்க ....

விகடன் ஜெயகாந்தன் பேட்டியும், அதி கறுப்பிலும்/சிவப்பிலும் எனது அவதானிப்புகளும்

‘‘தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...’’

‘‘திருவாளர் ராமதாஸ் போன்றவர்களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..! எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்! நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆமாமாம்..ரவி சுப்ரமணியமும், அப்புவும், கதிரவனும் இருந்தால் ,,,

‘‘திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’

‘‘முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள…

எப்பவுமே குமுதம்தான்

தமிழ் வாசகர்களுக்கு எத்தனையோ பத்திரிக்கைகளின் பரிச்சயம் இருந்தாலும், ஆதிகாலம் தொட்டு குமுதம் மற்றும் ஆனந்தவிகடனுக்கு தனி மதிப்புதான். கொஞ்சம் பொறுப்பான நண்பனாக விகடன் நடந்துகொள்ள, ஜாலியான நண்பனாக குமுதம் நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் எஸ்.ஏ.பி இருந்தவரைக்கும் குமுதத்தின் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அடிப்படையில் அவர் குணம் வேறுமாதிரி இருந்தாலும், தன்னை ஒத்தவனுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பினருக்குமான இதழாகவே குமுதத்தை நடத்தி வந்தார். ஆயினும் விகடனோடு அதை ஒப்பிடுபவர்கள் யாரும் விகடனுக்கே ஜே போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றையை சன் டீவியோடு குமுதத்தை ஒப்பிடலாம் போல சினிமா சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக, வாசகனை ஜாலியாக பத்திரிக்கை வைத்திருந்ததால், வடநாட்டிலிருந்து டை கட்டிய எம்.பி.ஏ இளைஞர்கள் வந்து எப்படி இந்த பத்திரிக்கை ஆறு லட்சம் விற்கிரது என்று ஆராய்ச்சி நடத்தி செல்வார்களாம். தமிழ்நாட்டில் படத் தயாரிப்பாளரை, நடிக நடிகையை, எழுத்தாளரை, பாட்டுக்காரரை, அரசியல் தலைமையை, கட்சியை, முதல்வர் பதவியை காப்பாற்றும், தீர்மானிக்கும் சினிமா பத்திரிக்கயையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

எஸ்.ஏ.பியின் மற…