Monday, April 25, 2005

எல்லாம் நேரம் ....

கமல் படங்களை பொறுத்தமட்டில் வெகுஜனங்களுக்கு இருக்கும் அபிப்ராயம் நமக்குத் தெரிந்ததுதான். மசாலா படங்களைப் பார்த்து கை தட்டி, குதூகலித்து குழந்தையாகி குதிக்கும் ரசிகமனசுகள், கமல் தரும் படங்களுக்கு அத்தனை விருப்பப்பட்டு மாலை சூடுவதில்லை. அது தெரிந்தே கமல், தனக்கென்று ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டு, நகைச்சுவை என்றாலும், சீரியஸ் படம் என்றாலும் வித்தியாசமான முயற்சிகளை அவ்வப்போது தந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் ரசிக்கப்படுவது, அவர் தருவதைவிட அதே காலகட்டத்தில் மற்றவர் தருவதை வைத்துதான் என்று நிரூபணமாகி இருக்கிறது.மும்பை எக்ஸ்பிரஸ் விமரிசனங்களை நமது விவரமான நண்பர்கள் சிலர் கூட காட்டமாக தந்திருந்தாலும், கமல் மீது நம்பிக்கை வைத்து போய் பார்த்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கமல் ஏற்படுத்தி வைத்திருக்கிற எதிர்பார்ப்புகளிலும், அளவுகொள்களிலும் இம்மி குறைந்தால் கூட நிர்தாட்சண்யமாய் ஒதுக்கும் மக்கள், வேறு எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் தொடர்ந்து மசாலாக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நாயகர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பதன் மர்மம் புரியவில்லை. எல்லாம் சுழிதான்...

படத்தில் ஒளிப்பதிவு மோசம் என்கிற ஒரு குறையத்தவிர ( அதுவும் டிஜிடல் தொழிநுட்பத்தின் ஆரம்பகட்ட முயற்சி என்கிற வகையில் மன்னிக்கப்படக் கூடியதே...) வேறு குறை ஒன்றும் இல்லை. தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்களும் நிஜமாகவே ரசித்துப் பார்த்தார்கள். கமலின் வசனமும், பசுபதி/வையாபுரி/ரமேஷ் போன்றவர்களை அவர் பயன்படுத்தி இருக்கும் விதமும் யார் கன்ணிலும் சரியாகப் படவில்லை போல. படத்தில் நிறைய இடங்களில் காமெடிக் காட்சிகள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கின்றன. வெறும் துணுக்குத் தோரணங்களிலும், ஒருவர் மற்றொருவரை அடிப்பதை வைத்தும் காமெடிக் காட்சிகளை பார்த்து பழக்கப்பட்ட ரசிக மகாஜங்களுக்கு இது சிரமமாகி விட்டது . டிராஃபிக் கான்ஸ்டபிளை மடக்கி விட்டு, அவரிடம் ரீல் ரீலாக சுற்றி விட்டு, பசுபதியிடம் அழைத்து வரும்போது, அவர்கள் மூவருக்குள் நடக்கும் உரையாடல், அந்த சமயத்தில் சட் சட்டென்று மாறும் பசுபதியிம் முகபாபவங்கள் ...என்று படம் முழுக்க இனிமையான ரகளை.

ம்..என்ன சொல்ல... "அண்ணணோட" முந்தின படம் ஊத்திக்கிட்ட சோகத்துல, சந்திரமுகி( இன்னம் நான் பாக்கலை - அடுத்த வாரம் தான்) யை ஹிட்டாக்கின
ரசிகர்கள், மும்பை எக்ஸ்பிரஸுக்கு பிகிலு ஊதிட்டாங்க.

விகடன்ல/குமுதத்தில் பாராட்டினா போதுமா..?? பேசாம ஒரு மாசம் கழிச்சி ரிலீஸ் பண்ணி இருக்கலாம். ...ஹூம்..

12 comments:

 1. /////கமல் ஏற்படுத்தி வைத்திருக்கிற எதிர்பார்ப்புகளிலும், அளவுகொள்களிலும் இம்மி குறைந்தால் கூட நிர்தாட்சண்யமாய் ஒதுக்கும் மக்கள், வேறு எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் தொடர்ந்து மசாலாக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நாயகர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பதன் மர்மம் புரியவில்லை. எல்லாம் சுழிதான்/////

  நீங்கள் என்ன சொல்ல வருகிரூர்கள் என்று தெளிவாக தெரிகிறது :) ஒரு நடிகன் எப்பொழுதும் ரசிகன் என்ன விரும்புகிறான் என்று தெரிந்து படம் எடுக்க வேண்டும். நடிகனுக்கு பிடித்த மாதிரி எடுத்தால் நடிகன் மட்டும்மே பார்க்க வேண்டியிருக்கும், ரசிகன் ஒதுக்கி விடுவான். அது தான் பதில்!

  ReplyDelete
 2. ஹி...ஹி..புரிஞ்சா சரிதான்.

  ரசிகனுக்கு என்ன புடிக்கும்கிரது யாருக்குமே சரியா தெரியாதுங்க. தெரிஞ்சா எல்லாப் படமும் அப்படியே எடுத்துடலாமே..?? எந்த படமும் எடுக்கப்படும்போது " இது 10 நாள் ஓட்னா போதும்னு " யாரும் எடுக்க மாட்டாங்க.

  அது சரி...எல்லாரும் ரசிகனுக்கு புடிச்ச மாதிரி படம் எடுத்துகிட்டு இருந்தா, அது படம் இல்லீக்க. பப்படம்...:-)

  ReplyDelete
 3. //கமலின் வசனமும், பசுபதி/வையாபுரி/ரமேஷ் போன்றவர்களை அவர் பயன்படுத்தி இருக்கும் விதமும் யார் கன்ணிலும் சரியாகப் படவில்லை போல. படத்தில் நிறைய இடங்களில் காமெடிக் காட்சிகள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கின்றன. வெறும் துணுக்குத் தோரணங்களிலும், ஒருவர் மற்றொருவரை அடிப்பதை வைத்தும் காமெடிக் காட்சிகளை பார்த்து பழக்கப்பட்ட ரசிக மகாஜங்களுக்கு இது சிரமமாகி விட்டது//

  மு.எ வில் நான் கவனித்தவரை, வசனம் கூர்மைப்படுத்தப்பட்டீருக்கிறது. கிரேஸி மோகன் இல்லையாததால் வார்த்தை விளையாட்டு நகைச்ச்சுவை குறைவாக இருக்கிறது (அது நல்லது என்று நினைப்பவன் நான்). அதே போல விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை மிக நெருங்கி (அவர்களது துயரத்தை அல்ல) அவர்களது மொழி, சிந்தனை, பார்வை இவற்றை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இப்படி இதற்கு முன் வந்த கமல் படமாக குணாவைச் சொல்வேன். எப்படிப்பட்ட கதை/ நாயகன் ஆனாலும் அவனின் இடுப்புத்தழுவலுக்காக தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு கதாநாயகி இல்லை.

  எனக்குப் பிடிச்சிருந்தது.

  ReplyDelete
 4. Mookan... you forgot the music and song..
  especially the song "Poo Poothathu"...

  unbeatable..

  ReplyDelete
 5. கிறுக்கன். மன்னிக்க. பாடல் அருமைதான். ஆனால் லேசாக "உடையாத வெண்ணிலா" (ப்ரியம்) பாடலை ஞாபகப்படுத்தியது.
  மற்றபடி ராசா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்தப் படத்திற்கு ஏதும் பண்ணவில்லை என்பத் எ.தா.அ.

  ReplyDelete
 6. Dear Sundar,

  "oru masam kalichu relese panniyirukkalaam".

  Mumbai expressaiya?

  ReplyDelete
 7. பின்ன சந்திரமுகியையா..??

  என்ன ராஜ் இது கேள்வி..?? :-)

  ReplyDelete
 8. ஒரு மாசம் தள்ளி வெளியிடலாம்ன்னா "அந்நியன்" வந்துடுவாரு. யாரோ ஒரு அந்நியனோடு மோதுவதைவிட நண்பனோடு மோதலாம்ன்னு இறக்கிருப்பாரு. மோதலில் ஒன்றும் குறைந்துவிடவில்லை. மக்கள் சந்திரமுகிக்கு அடுத்தபடியாக மு.எவை தான் ரசிக்கிறார்களாம்.

  எனக்கு ச.முவை விட மு.எ பிடித்திருக்கிறது. காரணம், நகைச்சுவை காட்சிகள் எடுக்கப்பட்ட விதம்.

  ReplyDelete
 9. "பாபா ஊத்திக்கிட்ட சோகத்தில் சந்திரமுகியை ஹிட் ஆக்கிய ரசிகர்கள்". இதை ஆட்சேபிக்கிறேன். ரசிகர்களுக்கும் அப்பாற்பட்டவர்களால் ரசிக்கப்படும்போதுதான் ஒரு படம் வெற்றி பெற முடியும். டாக்டர் கமல் கூட ரசிகர்களால் மட்டும் படத்தை ஓட வைக்க முடியாது என்று பாபா படம் வெளிவந்தபோது நக்கலாக சொன்னார்.

  பாபா தோல்வி என்று கூறுபவர்கள் வணிகரீதியாகவா? அல்லது வெகுஜன எதிர்பார்ப்பு ரீதியாகவா என்பதை தெளிவு படுத்த வேண்டும். முதலீட்டு அளவில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கவில்லையே தவிர ,படம் விருமாண்டியைக் காட்டிலும் அதிக தினங்கள் ஓடியது உண்மை. விருமாண்டியை வெற்றி என்றும் பாபாவை ஊத்திக்கிச்சு என்றும் குறிப்பிடுவது உண்மையை மறுக்கும் செயல்தான் ( இதன் மூலம் பாபா சிறந்த படம் என்று வாதாட வரவில்லை).

  ஒருமாதம் கழித்து மும்பை எக்ஸ்பிரஸ் வந்திருந்தால் இதைக்காட்டிலும் குறைவான வரவேற்பையே பெற்றிருக்கும். ஏப்ரல் 14 வணிக ரீதியாக படங்களுக்கு உகந்த நேரம். மும்பை எக்ஸ்பிரஸ்ஸின் வியாபாரம் நன்றாகத்தான் இருக்கிறது.இதே ஏப்ரல் 14 ல் வெளியிடப்பட்ட சிங்கார வேலன் போல சிரமப்படவில்லை.

  எவ்வளவு நாள்தான் காமெடி படமென்றால் காதலிக்க நேரமில்லை" பற்றியே பேசுவீர்கள். இனி மேல் மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி மக்கள் பேசுவார்கள்" என கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். படம் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறதா? என்பதற்கான விடை உனக்கே தெரியும்.

  மற்றபடி ஜாலியாக ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் என்றுதான் நான் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். படத்தைப் பார்த்தும் விட்டேன்.

  ராஜ்குமார்

  ReplyDelete
 10. //பாபா தோல்வி என்று கூறுபவர்கள் வணிகரீதியாகவா? அல்லது வெகுஜன எதிர்பார்ப்பு ரீதியாகவா என்பதை தெளிவு படுத்த வேண்டும். முதலீட்டு அளவில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கவில்லையே தவிர ,படம் விருமாண்டியைக் காட்டிலும் அதிக தினங்கள் ஓடியது உண்மை//

  போட்ட பனத்துக்கு எதிர்பார்த்தது வரலைன்னா படம் தோல்வி. அப்படிப்பாத்தா பாபா தோல்விதான். எதிர்பார்ப்பு அளவிலும் அது தோல்விப்படம்தான். அதனால ரசிகர்கள் இந்தப் படத்துக்கு ஆவலா இருந்தாங்கங்கிரது உண்மை.

  இதுக்கு மேல பேசி மறுபடியும் "அறை" வாங்க விரும்பல :-)

  ReplyDelete
 11. இப்படி தான் தெனாலி தமிழ் உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த நகைச்சுவைப் படம் என்றும் , நகைச்சுவை காட்சிகள் எடுக்கப் பட்ட விதத்தை சிலாகித்தும்
  ப(சி?)லர் சொல்லி வந்தார்கள். அ.ச அல்லதி ச.லீ அளவு இல்லை என்பது ....


  நேரம் , திறமை என்று எல்லாம் புலம்புவது இன்றா , நேற்றா!!!!! எத்தனை காலம் தான் ....

  ReplyDelete
 12. கெளம்பீட்டாய்ங்கய்யா..கெளம்பீட்டாய்ங்க..:-) :-)

  ReplyDelete

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...