Tuesday, November 20, 2007

கவிதை முயற்சிகள்



தீபாவளி - பழையமுது

தினம் ஒரு கவிதை குழுமம :
சுத்ந்திரம் - என் மூக்கு
அகச்சிவப்பு - என் மூக்கு
காதல் - என் மூக்கு
இழப்பு - என் மூக்கு
அமெரிக்கா - என் மூக்கு

தாகம் - திண்ணை
மத்யமர் - திண்ணை
அழகி - திண்ணை
இறப்பு - திண்ணை
பிறவி - திண்ணை
வெளி - திண்ணை
மாற்றம் - திண்ணை
நெறி - திண்ணை
மகாபலி - திண்ணை
நீயே - திண்ணை
உனக்கு - திண்ணை
நேற்று - திண்ணை

கடந்தவை - செந்தமிழ்
ரசவாதம் - என் மூக்கு
நேரம் - என் மூக்கு
மாயம் - என் மூக்கு
மீளார் - என் மூக்கு
அமெரிக்கா -என் மூக்கு
ஆதங்கம்- என் மூக்கு
தனியே - என் மூக்கு
முகங்கள் - என் மூக்கு
கலாம் - என் மூக்கு
இல்லையேல் - என் மூக்கு
வழியனுப்பல் - என் மூக்கு
பிள்ளைக்கு - என் மூக்கு
கவிதை - என் மூக்கு
அம்ம்...ம்மா - என் மூக்கு
இடைவெளி - என் மூக்கு
பாலம் - என் மூக்கு
அலாரம் - என் மூக்கு
காதல் - என் மூக்கு
புருஷன் - என் மூக்கு
இனி என் முறை- என் மூக்கு
பாவக்கறை - என் மூக்கு
கரந்தவர்கள் - என் மூக்கு
விட்டகுறை - என் மூக்கு
இதயம் - என் மூக்கு
ஏக்கம் - என் மூக்கு
நட்பு? - என் மூக்கு
சங்கிலி - என் மூக்கு
தொழில் - என் மூக்கு
வீட்டுமிருகம் - என் மூக்கு
திருப்தி - என் மூக்கு
சொல்ல மறந்த - என் மூக்கு
கேவல்கள் - என் மூக்கு
எந்திரன்  மீண்டும் ஜீனோ
சரிநிகர் - கனிகிரி
முகவர் - கருவின் கவிதை
பரிகாரம் - பரிகாரம்
காயம் - காயம்
லலிதா- தேஜஸ்வினி
ஃபெட்னா - சமத்துவம் காண
அஞ்சலி - இடமாற்றம்
அம்மா - கையளித்தல்
விடைபெறல்- வானப்ரஸ்தம்
அப்பா - கடவுள் பிறந்தார்




 

Sunday, September 30, 2007

மணம் பரப்பும் மல்லிகை மகள்

படிக்கும்போது பெருமிதமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.


நண்பர் ம.கா.சிவஞானத்தைப் பற்றி என் வலைப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். என் கல்லூரி சீனியர். விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்திலும் சீனியர். சென்னைக்கு காலடி எடுத்து வைத்து நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 51, அழகர் பெருமாள கோயில் தெரு, வடபழனியில் தன் அறையில் இடம் கொடுத்த சென்னைவாசத்திலும் சீனியர். இப்போது தன் கனவுப்பூவை மலரவிட்டு "மல்லிகை மகள்" ஆக்கி இருக்கிற இமாலய தன்னம்பிக்கையிலும் சீனியர்.



சல்யூட் தலைவா......!!





இனியர் ம.கா.சி இத்தனை வருடங்களாக விகடன் குழும பத்திரிக்கையான
"அவள் விகடன்" பொறுப்பாசிரியராக இருந்தவர். சொற்பங்களில் இருந்த பத்திரிக்கையை தன் முயற்சிகளின், புதுப்புது எண்ணங்கள் மூலம் லட்சங்களில் உயர்த்தி பத்திரிக்கையுலக ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது "மல்லிகை மகள்" என்ற பெண்கள் பத்திரிக்கையை நண்பர்களின் துணையுடன் துவங்கி இருக்கிறார்.



முதல் இரண்டு இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக ஸ்நேகமான ஒரு உணர்வைத் தந்த முயற்சி. மிக பாசிட்டிவான எழுத்துக்கள். வித்தியாசமான தலைப்புகள் என்றாலும் " அவள் விகடன்" போல இருக்கிறதே என்ற உணர்வும் வந்தது. உருவத்தில் மூத்தவளைப் போல இளையவளும் இருப்பது பெற்ற தாயின் கையிலா இருக்கிறது..?? ஆனால் வேறு விதமாக வளர்க்கலாம்.


நண்பருக்கு அது தெரியும்.


மல்லிகை மகள் உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறாள். அனுப்பி வையுங்கள். அச்சு உலகில் "நச்" என்று முத்திரை பதியுங்கள்



இப்போது மல்லிகை மகளுக்காக ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறார். ஆனால் முழுமையான இணையத்தளத்தில் மல்லிகை மகள் மணம் வீசி நடை பழகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. உங்கள் எண்ணங்களை அவருக்கு எழுதுங்கள்.

Tuesday, September 25, 2007

அட...!!!


சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.

101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்

‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.

இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.

ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.

இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்.
நன்றி : விகடன்

நட்பு..?

நேரம் ஓடுகிறது
கோப்பைகள் காலியாகின்றன
மதுவின் போதை ஏற ஏற
மாதுவின் முகதரிசனம்
கலவரம் கூட்டி
உடல் மிரட்டி
விழி உருட்டுகிறது
பாசிக்குளப் படிக்கட்டில்
கால்வைக்கும் கவனமும்
கைக்குழந்தையின் கண்களில்
தூசு நீக்கும் லாவகமும்
கத்திமுனையில் நிருத்யம் பயிலும்
கலாவேசமுமாக
மனசு கிடந்து அலமலக்கிறது
பேசுகிறோம். பேசுகிறோம். பேசுகிறோம்....
சிரிக்கிறாய் சிரிக்கிறேன்
பரிமாறுகிறேன் புசிக்கிறாய்.
கால் நீட்டி சொடக்கெடுக்கிறாய்.
கை உயர்த்தி முறிக்கிறாய்
கண்கொட்டா ஆச்சரியம்
உறக்கத்தினால் ஒட்டுகிறது
கொண்ட நட்புக்கு
பங்கம் வராமல்
நடுநிசி வரை
பேசிப் பிரிகிறோம்.
காற்றுப் போல திரிய
யெளவனம் தடையென்று
முதுமையை வரமாய் பெற்ற
ஒளவை பாவம்...
உடல் தாண்டும் வேட்கை கொண்ட
ஸ்நேகமும் உண்டென்றரிய
வாய்க்கவில்லை அவளுக்கு

Saturday, September 22, 2007

மாடர்ன் மரத்தடிகள்

இணையவெளி ஏற்படுத்தியிருக்கும் சாத்தியங்களின் சமீப சாட்சி. எனக்கே இது பலவகையில் உபயோகமாக இருக்கிறது. நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களின் தொடுப்புகளால் ஆன மாபெரும் மனித சங்கிலி.

இணையத்தை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கிற புண்ணியாத்மாக்களுக்கு ஜே.

பார்க்க : க்ளிக்க : ஒரு அருமையான யூ-குழாய் பகிர்வு :-) :-)

Thursday, August 02, 2007

ஆனந்த அருண் வைத்யநாதன்



ஒரு காலத்தில் வலைப்பதிவுலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அருண் வைத்யநாதனின் பேட்டி ஆனந்தவிகடனில்...


************************************


‘‘குறும்படங்கள் மூன்று நிமிட உலகம். ஒரு கதை, அதில் பின்னப்படும் உணர்வுகள், இறுதியாக ஒரு செய்தி இவற்றை மூன்றே நிமிடங்களில் தருகிற குறும்படத்தின் சவால் திரைப்படங்களில்கூட இல்லை. இப்போது, அமெரிக்காவில் குறும்படங்கள் பார்க்கிற கலாசாரம் பெருகி வருகிறது. மக்களிடம் வரவேற்பை பெறும் குறும்-படங்கள், பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டு வெற்றி பெறுகின்றன. இந்தப் போக்கு இந்தியா-விலும் சீக்கிரம் வரவேண்டும். அப்படி வரும்பட்சத்தில் இன்னும் ஆரோக்கிய-மான, தீர்மானமாக வெற்றி பெறக்கூடிய சினிமாக்-கள் வர ஆரம்பிக்-கும்!’’& நம்பிக்கையாகப் பேசு-கிறார் அருண் வைத்திய-நாதன். அமெரிக்க குறும்பட உலகில் வெற்றித் தடம் பதித்திருக்கும் தமிழர்.



‘கிs ஹ்ஷீu ஷ்வீsலீ’, ‘ஙிக்ஷீ(ணீ)வீறீறீவீணீஸீt’, ‘ஷிtவீஸீளீவீஸீரீ நீவீரீணீக்ஷீ’ என அருண் முதன்முதலாக எடுத்த மூன்று குறும்படங்களில், முதல் இரண்டு படங்களும் நியூயார்க், லண்டனில் நடந்த குறும்படங்களுக்கான திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளன. தவிர, அருண் எடுத்த ‘ஜீஷீஷ்மீக்ஷீ நீut’, ‘திஷீக்ஷீரீவீஸ்மீஸீ’, ‘ழிஷீஷீsமீ’ ஆகிய குறும்படங்-களும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளி-பரப்பாகி, வரவேற்பைப் பெற்றன. இவர் எடுத்த ‘ஷிமீணீஸீநீமீ’ என்கிற திகில் குறும்படம் 2006&ம் ஆண்டில் மட்டும் பத்து திரைப்பட விழாக்களில் விருது-களைக் குவித்திருக்கிறது.


‘‘குறும்படங்கள் என்றாலே ரொம்ப-வும் சீரியஸாக ஏதோ ஒரு சமூகப் பிரச்னையைப் பற்றி மட்டும் சொல்வது என்கிற நினைப்பு தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குறும்-படங்கள் சினிமாவின் குழந்தை. காமெடி, த்ரில்லிங், ரொமான்ஸ், திகில் என குறும்படங்களையே பலவிதங்களில் எடுக்க முடியும்’’ என்கிற அருண், இப்போது தமிழில் தன் முதல் திரைப்படத்தை இயக்க வருகிறார்.


‘‘அமெரிக்காவி-லேயே நடக்கிற மாதிரியான கதை. பொதுவா, அமெரிக்காவில் இருக்கிற தமிழர்கள்னா பெரிய பணக்-காரங்களா, கலாசாரத்தை மதிக்கத் தெரியாத-வங்களா, சுகவாசியா இருப்பாங்-கன்னுதான் நம்ம மக்கள் நினைச்சுட்டு இருக்காங்க. அமெரிக்காவில் வந்து எதிர்பாராத சிக்கல்ல மாட்டுற ஒரு தமிழ்க் குடும்பம் பத்தி ஒரு கதை தோணுச்சு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி எஸ்.பி.பி.சர-ணுக்கு மெயில்ல அனுப்பினேன். அதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் அறிமுகமே கிடையாது.


அவருக்கு என் கதை பிடிச்சிருக்கவே, ‘நாம நிச்சயம் இந்தப் படம் பண்றோம்’னு சொல்லியிருக்கார். படத்துல மிக முக்கியமான வெளிநாட்டு கேரக்டர் ஒண்ணு உண்டு. அதுக்காக ஸ்பைடர் மேன் வில்லன் வில்லியம் டெஃபோ-கிட்ட பேசியிருக்-கேன். ‘என் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்குது. டைம் இருந்தா நிச்சயம் பண்-றேன்’னு சொல்லியிருக்கார். சீக்கிரமே படம் பத்தி அறிவிப்பு வரும்.


படத்தோட தலைப்பு... ‘‘அச்ச-முண்டு அச்சமுண்டு!’’


**************************


படம் சூப்பர் ஹிட் ஆகட்டும். தூள் கெளப்பு மாமே...!! ஏன்னா, உன் எழுத்துத் திறமையை விட உன் குறும்படங்களால் கவரப்பட்டவர்கள் அதிகம்...


Sunday, June 24, 2007

ர"ஜீனி"


தனியே Barக்கு "தண்ணி" அடிக்க போக எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்கிற காரணத்தையொட்டி நண்பர்களோடு போய் உட்கார்ந்து கொண்ண்டு, சலசலத்துவிட்டு அப்படியே வயிற்றுக்கு கொஞ்சம் வார்த்துவிட்டு வருவதைவிட, தனியே போய் உட்கார்ந்து கொண்டு ஒரு தனிமூலையில் நல்ல சரக்கும் சைட் டிஷ்ஷுமாக ஏதாவது யோசித்துக் கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு உட்காருவது பேரானந்தம்.

அப்படி உட்காருகையில் சில சமயம் எதிர் இருக்கையில் அமர்கிற ஆட்களும் தனியாக மாட்டி விடுவார்கள். நம்மூரில்தான் அறியாதவர்களுக்கு முகமன் சொல்வது அமெரிக்காவைபோல் அவ்வளவு சகஜம் இல்லையே.!!! சரக்கு அடிக்க ஆரம்பிக்கும்போது இறுக்க்மாக இருப்பவர்கள், இரண்டாவது ரவுண்டில் "தான்" என்கிறா கட்டுகள் கொஞ்சம் தளர்ந்து மிதமான போதையில் இருக்கும்போது எதிரில் இருப்பவரை பார்த்து முறுவலிக்கத் தோன்றும். அவர்களுக்கு கை குலுக்கச் சொல்லும். தனியே செய்யும் ஆத்மவிசாரத்துக்கு அவர்களையும் துணைக்கு கூப்பிட யத்தனிக்கும்.

இன்றைக்கு "சிவாஜி" பார்த்து விட்டு வெளியே வரும்போது அப்படித்தான் கொஞ்சம் ஸ்நேகமான போதையாக இருந்தது. படம் முடிந்த பின் வீட்டுக்கு பரபரத்துக் கொண்டு போகாமல் ஆங்காங்கே தேங்கி தேங்கி நின்று பேசிக் கொண்டிருந்த சனங்களைப் பார்க்க, நாட்டு வெல்லப் பாக்கெட்டுக்கு வெளியே போவதைப் பற்றிய தயக்கத்துடன் இருக்கும் எறும்புகள் ஞாபகத்துக்கு வந்தன. எல்லோர் முகத்திலும் சிரிப்பு ப்ளஸ் பிரமிப்பு. அதில் பாதி பேர் படத்தை அடுத்தமுறையும்ம் பார்ப்பவர்கள். படிப்பு, வயது, பொறுப்பு போன்ற எல்லா விஷயங்களயும் மழுக்கி எல்லாரையும் கார்ட்டூன் பார்க்கிற குழந்தைகளின் மனநிலைக்கு அமிழ்த்துகிற ரஜினி என்கிற சக்தி எனக்கு மலைப்பாக இருக்கிறது.

முதல் யோசனைக்கு மனதில் தேங்கியவை :

1. முதல் பாதி சுமார். இரண்டாம் பாதி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...பர்.

2. ரஜினி தன் தோளில் படத்தை தாங்கி இருக்கின்றார். ஷங்கருக்கு ரஜினி படம் என்ற நினைப்பு இருந்த அளவுக்கு கூட அவருக்கு இல்லை. ஒரு புதுமுகம் போல ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து காட்சிகளுக்கு பட்டை தீட்டி இருக்கிறார்- நடிப்பில், ஸ்டைலில், பாடி லாங்க்வேஜில், அதிரடியில்....!! வில்லத்தனம் கொஞ்சம் கலந்து இருக்கிற பாத்திரமாக இருந்தால் ஸாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஷங்கர் அதற்கு தீனி போட்டிருக்கிறார். கமல், சிவாஜி, எம்ஜியார் ...ஏன்.... நேற்று முளைத்த விஜய் படங்களில் இருந்து கூட எடுத்த பாடல்ல்களுக்கு எந்த ஈகோவும் இல்லாமல் டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய இந்தப் பண்பு யாருக்குமே ஒரு பாடம்.

3. ரஜினி என்ற நடிகரைப் பற்றி நினைக்காமல் கதை எழுதி இருந்தால் ( கவனிக்கவும் : திரைக்கதை அல்ல) ஷங்கர் படத்தில் பல விஷயங்களுக்கு சரியான காரணங்கள் சொல்லி இருக்கலாம். உதாரணமாக, மக்களுக்கு ஏன் இலவசக் கல்வி தரவேண்டும் என்று ரஜினி நினைக்கிற்றார் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. ரஜினி நல்லது செய்ய காரணங்கள் வேண்டுமா என்று ஷங்கர் நினைத்திருக்கலாம். அங்கே கதை நாயகனைப் பற்றி யோசிக்காமல் ரஜினியை பற்றி யோசித்து விட்டார்

4. விவேக் நல்ல தேர்வு. ஆனால் கொஞ்சம் ஜாஸ்தி. வரும் காட்சிகளினை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

5. ஷ்ரியா..ம்...என்ன சொல்ல..கண் கூசுகிறது. இதை எழுதும்போதே கிளுகிளுக்கிறது. நல்லா நடிச்சு "தமிழுக்கு" சேவை செய்யட்டும் ;-) ;-)

6. கே.வி ஆனந்தும்/ ஆண்டனியும், ரஹ்மானும், தோட்டா தரணியும் தொழில் நுட்பத்தின் சிகரங்களை தொட்டிருக்கிறார்கள். வாயில் ஈ நிழைவது கூடத் தெரியாமல் வாய் பிளக்க வைக்கிற அதி உயர் தொழில் நுட்ப சித்து. படமா, அனிமேஷனா, உண்மையா, பொய்யா என்று ஒரே மலைப்பு. அதில் ரஜினியின் மேக்கப் வுமன் பானுவுக்கும் பெரும்பங்கு. ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது.

7. தமிழ் தெரியாத வடநாட்டு நண்பனுடன் படத்துக்கு போயிருந்தேன். அவன் மிகவும் ரசித்துப் பார்த்தான். நன்றாக புரிந்ததாக சொன்னான். சில இடங்களில் பார்ப்பது தமிழ் படம் என்ற ஞாபகமே அவனுக்கு வரவில்லையாம். ரஜினி அவனையும் ஏகத்துக்கும் கவர்ந்து விட்டார்.

8. ஷங்கர் படம் போல இல்லை என்று சொன்னார்கள். முழுக்க உண்மை இல்லை. இரண்டாம் பாதியில் உள்ள flow க்கு ஷங்கரும் முக்கியமான காரணம்.. ஜென்டில்மேன், அந்நியன், இந்தியன் கலந்தது என்றார்கள். அதிலும் அந்தளவு உண்மையில்லை. தெரிகின்ற கொஞ்ச நஞ்ச பொதுவான அம்சங்களையும் ரஜினி தன் அதிரடியில் கரைத்து விடுகிறார்

ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பயும், hype ஐயும் ச்ச்ச்..சும்மா...இல்லை என்று நிருபித்திருக்கும் சூப்பர் மசாலா...இதற்கும் மேல் ரஜினியை வைத்து வேறு யாராலும் ஒரு ஹிட் கொடுக்க முடிந்தால் ...ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் பெரிய கீரி என்றூ.

ம்..ஹூம்..தசாவதாரத்தை நினைத்தால் கொஞ்சம் பெருமூச்சுதான் வருகிறது.
உயிரைக் கொடுத்து அந்தாள் எடுத்தாம் சிவாஜிக்கு கிடைக்கிற "ரீச்" கிடைக்குமா..?? கமலுக்கே இப்போதெல்லாம் அந்தக் கவலைகள் அலுத்திருக்கக் கூடும்

Monday, May 14, 2007

தமிழ்புத்தாண்டு விழா 2007


இன்னமும் முதுகு முள்முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. கால் பாதத்தை தனியே கழட்டி வீசிவிடலாமா என்று அப்படி ஒரு வலி. கொஞ்ச நாட்களாக தூக்கம் சரியாக இல்லாததால் இமைகள் மேல் எருமை மாடு ஏறி உட்கார்ந்திருப்பதை போல அப்படி ஒரு அழுத்தம்.

நேற்றுத்தான் விழா முடிந்தது. எங்கள் தமிழ்மன்றத்தின் புத்தாண்டு விழா. வருடம் நடக்கும் மூன்று விழாக்களில் தலையாய விழா. வேலை பெண்டு கழண்டு விட்டது. அத்தனையும் மீறி விழா நல்லபடியாக நடந்து முடிந்ததில் சந்தோஷம்.

ஏகப்பட்ட பொறுப்புகளை நானெ தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டதில்தான் மேற்சொன்ன நல்லவையும், அல்லவையும். வழக்கம்போல எல்லா நிகழ்ச்சிகளின் முடிவிலும் கிடைக்கும் ஷொட்டு ப்ளஸ் குட்டு. முக்கியமான சந்தோஷம் என்ன என்றால், நிகழ்ச்சியை ஒட்டி வெளியிடப்படும் கையேட்டில் என்னால் சேர்க்க முடிந்த தமிழ் இணையப் பக்கங்களின் முகவரிகள். கணிணியில் தமிழ் எழுத கற்றுத் தரும் கில்லியின் பக்கம். வந்திருந்த நானூறு பேரில் பத்து பேர் பார்த்தால் கூட இணையத்தில் சண்டை போட இன்னமும் ஒரு காட்டா குஸ்தி தமிழன் கிடைக்கப் போகிறான் என்ற மனநிறைவு.

சூர்யாவின் பங்குக்கு அவனும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டான்.
வீரா சூப்பர் ஸ்டார் பாட்டுக்கு கை சூப்பற குழந்தைகள் ஆடிய கூட்டாட்டத்தில் அவனும் ஒரு மடிசார் குழந்தையுடன் ஆடி தமிழனின் கலாச்சாரத்தை புதுக்கினான். பின்னர் சாக்ரமண்டோ புலிகேசியில் எலியாக வந்தான். புகைப்படங்கள் இங்கே....

விழாவின் ஒருங்கிணைப்பாளன் என்ற முறையில் நான் எழுதிப் ப(க)டித்த உரை இங்கே...

விழா கையேடு இங்கே...

Friday, April 20, 2007

நிறை அன்பு I.A.S



விகடனில் சமீபகாலங்களில் வந்திருக்ககூடிய மிகக அற்புதமான தொடர் இது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதனையாளர்கள், திறமையாளர்கள் என்று வரிசை கட்டி ஆடுகிறார்கள்


மனதை மிகவும் கவர்கிற எழுத்துக்கள்.


*****************


‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.

சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.


சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.


கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.


‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.


தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.


சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.


காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!

வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.


ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.
இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.


ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!


என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!
தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!


மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.


என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!


*******

இறை நம்பிக்கை


அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!

ஜெயித்தது எப்படி?


சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!

இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..


தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!


கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?


கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!


ஒரே கனவு


அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?

Tuesday, April 17, 2007

The Bridges of Madison County(1995)


ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.

அயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கிடைக்க, வீட்டு முன்புறம் அருகே உலாத்திக் கொண்டிருக்கும் அவளிடம்
பாலத்துக்கு வழி கேட்க வந்த நேஷனல் ஜியாக்ரஃபி போட்டோகிராஃபர் ஒருவன் ஆச்சரியமூட்டுகிறான். காற்றுக்கு சொந்தக்காரனைபோல சொந்த பந்தம் இல்லாமல் விட்டு விடுதலையாகி, உலகம் முழுக்க அலைந்து கொண்டு இருக்கும் அவன், குடும்பப் பொறுப்பு/ பாரத்தின் பொருட்டு அவள் வாழ முடியாத வாழ்க்கையை, வாழ்வதால் அந்த சுதந்திரத்தின் மீதான ஏக்கம் அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு நாட்களுக்குள்ளேயே அவன் மீதான ஏக்கமாக, பின் விரகமாக மலர்கிறது. அவனிடம் மனசு விட்டுப் பேசலாம் என்று தோன்றி விட வெட்கப்பட்டுக்கொண்டே தன் மனசைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் தன்னையும்....

அந்த மூன்று நாட்களும் அவர்களிருவரும் பதின்ம வயது குழந்தைகளைப் போல சுற்றித் திரிகிறார்கள். பியர்/சிகரெட்/பிராந்தி வெள்ளமாக பொழிய, அயோவா சாலைகளில், பூங்காங்களில், பாலத்தின்விளிம்புகளில், குளியலறை தொட்டியில், வீட்டின் சாப்பாடு அறை நடனத்தில் காதல் பொறி பறக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் ரகசியக் கனவுகள் எல்லாம் அவளுக்கு நான்கு நாட்களில் நனவாகிறது. பிரியும் நாளுக்கு முன், அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. மற்ற பெண் நண்பிகளைப் பற்றி எல்லாம் தன்னிடம் கதைத்த அவன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்லப்போகிறான்??? தன்னை, தன் உணர்வுகளை எப்படி புரிந்து கொண்டானோ என்கிற குமைச்சலில் அவனிடம் தங்கள் உறவை கொச்சைப்படுத்திக் கூறுவதுபோல சுடுசொற்கள் சிலவை வீசிப் பார்க்கிறாள். அதை அமைதியாக எதிர்கொள்ளும் அவன், தன் மனதை, அதில் அவளுக்கான இடத்தைப் புரிய வைக்கிறான். தன்னுடன் வந்து விடுமாறு அவளை அழைக்கிறான். குழந்தைகள் வாழ்க்கைக்காவும், கணவன் உடைந்து போகக்கூடாது என்பதற்காகவும், காமிராக்காரனுக்கான தன் உணர்வுகள் அவனுடன் ஓடிப்போவதால் கேவலப்படுத்தப்படும் அபாயமும் கூடவே இருப்பதால், அவள் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுக்கிறாள். மற்ற குடும்பக் கடமைகள் ஊடே சாகும் மட்டும் அந்த நான்கு நாட்களை நினைத்துக் கொண்டே உயிர் விடுகிறாள்.

தன் உயிலில், தான் இறந்தவுடன் தன்னை எரித்து பின் சாம்பலை , (என் வாழ்க்கையைத் தான் உங்களுக்கு கொடுத்து விட்டேன். அதையாவது அவனுக்கு கொடுக்க வேண்டும்) அவனைச் சந்திக்க வைத்த பாலத்தில் இருந்து தூவ வேண்டும் என்கிற வேண்டுகொளை வைக்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் அவள் உயிலுடன் இருக்கிற டயரிக் குறிப்புகளை படிக்கிற அவள் பிள்ளைகள் (அண்ணனும் தங்கையும்) தன் அம்மாவின் கடந்த காலம் தெரிந்து பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதிலும் பிள்ளையால் தன் அம்மாவின் "ஒழுக்கம் கெட்ட" நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர், வாழ்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும், வாழவே முடியாத இன்னொரு பிரதியும் உள்ளே இருப்பதன் நிதரிசனம் புரிந்து கொண்டு, அம்மா அந்த பிரதியை நாலு நாளாவது வாழ விட்டாள் என்கிற பெருமூச்சோடு தங்கள் உடைந்த வாழ்க்கையை சரி செய்ய தங்கள் கூடுகளுக்கு திரும்புகிறார்கள்.

கொஞ்சம் பிசகி இருந்தாலும், காமிராக்காரனின் காம லீலைகள் என்று தடம் புரண்டு விடக் கூடிய கதையை, அதன் சிக்கலை, மனசுப்படி யாருமே வாழ முடியாத குடும்பத்தின் அமைப்புச் சிக்கலை, கண்ணீரும் காவியமுமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது அஸ்தித்வ என்கிற தபுவின் இந்திப்படமும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் என்கிற கொங்கனா சென் படமும் நினைவுக்கு வந்தன.

என் கண்ணுக்கு முன்பே இது நடந்திருக்கிறது. மூன்று இருபது வயது பெண்களையும், இரண்டு பத்து வயது ஆண் பிள்ளைகளையும் விட்டு விட்டு, கனவர் இறந்த கொஞ்ச நாளில், மனசுக்குப் பிடித்த ஆணோடு ஒரு அம்மாள் போய் விட்டார். என் தோழியின் அம்மா அவர். அப்போது கேட்டபோது ச்..ச்சீ என இருந்தாலும், பழிச் சொல்லுக்கு பயப்படாமல், தியாகி ஆகி பொய் வாழ்க்கை வாழாமல், திடமாக தடம் மாறிப் போனாரே என்று இப்போது தோன்றுகிறது. பலர் நடக்க நடக்கத் தானே தடங்கள் உருவாகின்றன.

உண்மையான காதல் இணைவதில் முடியவேண்டாம்.காதல் ஜீவிதமாக இருக்கட்டும் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் காதல் ஜீவிதமாக
இருக்க மனுசப்பய மனசு அல்லவா செத்துப் போகிறது. யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஆச்சரியம். விருப்ப வாழ்வின் மீதான ஆணின் விழைவை உடல் சார்ந்தது என்று (ஆண்களே) வகைப்படுத்துவதும், பெண்ணின் விழைவை உள்ளம் சார்ந்தது என வகைப்படுத்துவதும் நம் எல்லோருக்கு நம் அம்மாக்கள் மீதான அன்பு கலந்த மரியாதையையே ஸ்திரம் செய்கிறது. ஒரு ஆண் தன் இச்சைகளினை கெளரவப்படுத்தாமல், சமூகத்தின் சட்டங்களுக்கும், குடும்பத்தின் இறுக்கத்துக்கும் பயந்து பலகாலம் புழுக்கத்தில் வாழ்ந்து, அவ்வப்போது அதற்கு மரியாதைக் குறைவான வடிகால்கள் தேடி, தன்னிரக்கத்தில் அதற்காகவும் துயருற்று வாழ்ந்து விடமுடியும். ஆனால் ஒரு பெண் நினைத்து விட்டால், அவள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எந்த பெயர் வாங்கவும் அஞ்சுவதில்லை என்பது தான் எனக்கு இப்போதைய நடப்பாக தோன்றுகின்றது.

பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்கள்.

பிற விமரிசனங்கள் : ஒன்று இரண்டு

Friday, April 06, 2007

Pursuit of Happyness


Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், "This is just a Mov...vie. Why you are crying Dad..? என்றான்.

மூன்றாம் உலக நாடுகளில்/ ஏழை நாடுகளில் ஏழையாக இருப்பது பெரிதல்ல. அமெரிக்க போன்ற நாடுகளில் ஏழையாக இருப்பது, தங்க வீடில்லாமல், காரில்லாமல், பூப்போல ஒரு பிள்ளையை சுமந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இரவுகளில் அலைவது மிகக் கடினம்.

க்ரிஸ் கார்ட்னர் Bone density scanner என்று சொல்லப்படுகின்ற ஒரு வினோத வஸ்துவை தூக்கிக் கொண்டு அலையும் விற்பனை பிரதிநிதி. அந்த மெஷின் எங்கும் விற்பதில்லை. தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி. அரசுக்கு வரி பாக்கி. அவன் இயலாமையை சொல்லிச் சொல்லி இம்சிக்கும் மனைவி கடைசியில் பிள்ளையை அவனிடம் விட்டு விட்டு நியூயார்க் போய் விடுகிறாள். போனபின் நிலைமை இன்னமும் மோசம். வீட்டை விட்டு மோட்டலுக்கு வருகிறான். காரை விற்கிறான். மோட்டலுக்கும் காசு தர முடியாமல் ரோட்டுக்கு வருகிறான். ஐந்து வயசு பிள்ளையுடன் இரவு தங்க இடமில்லாமல் BART ஸ்டேஷன் கழிப்பறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டு தங்குகிறான்.

அவனுக்கும் ஒரு நாள் விடிகிறது. விடியல் சேதி கேட்டவுடன் கண்கள் குளமாகின்றன. ஓடிவந்து தன் ரத்தத்தை கட்டிக்கொண்டு விசும்புகிறான்.மனசு கனத்துப் போகிறது. அதற்குப் பிறகு அவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக இருந்த க்ரிஸ் நிஜ நாயகராம். இது அவருடைய உண்மைக் கதையாம். நமக்கெல்லாம் வில் ஸ்மித் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார்

தவறவிடக்கூடாத அறிமுகம்...

Wednesday, April 04, 2007

வியர்டு




ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா நம்மளை எல்லாம் கூப்பிடறாங்களேன்னு.

படிக்கிறவங்களுக்கு அதை விட... :-) :-) :-)


தேடிச்சோறு நிதந்தின்று ...... ..... வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற பாரதியில் தெரிவது நம் எல்லாரிலும் துணுக்காய் தெரிகிறதோ என்றொரு எண்ணம். எல்லாருக்கும், மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.

கடவுள் படைப்பு ரகசியமே நாம் எல்லோரும் வியர்டாக, ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் பேசிக்கொண்டே இருக்கும் பையனுக்கு பேசா மடந்தையைப் பிடிக்கிறது. வெண்ணைக்கட்டி அழகிகளுக்கு பனைவெல்லத் தூண்களைப் பிடிக்கிறது. நெட்டைக் கொக்குகளுக்கு சுண்டுவிரல் சுந்தரிகளையும், பயந்தாங்கொள்ளி கோழைகளுக்கு நெஞ்சுர நாயகிகளையும் பிடிக்கிறது. இத்தனை வியர்ட் கலவைகளுக்கு பிறக்கின்ற வியர்டுகள் வியர்டாகத்தானே இருக்க வேண்டும்.
அதனால்தான் சாரு நிவேதிதா லூசு மாதிரி எழுதுகிறார். கலைஞர் ஜேகேவைக் கூப்பிட்டு முரசொலி விருது கொடுக்கிறார். அவரும் அதை வாங்கிக் கொண்டு தமிழ் சிஃபியில் உப்புத்தாள் குரலில் முழ நீளத்துக்கு சுகதேவுக்கு வழாவழா கொழ கொழா விளக்கம் கொடுக்கிறார்.

அதனால்தான் உலகம் சுவாரசியமாக இருக்கிறது.

சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை விளையாட்டாகவும், விளையாட்டாக எடுத்துக் கொள்கிற விஷயங்களை சீரியஸாகவும், தினமும் ஆபிஸுக்கு வேறு வேறு பாதைகளில் போகின்ற விருப்பம் இருந்தாலும் செக்கு மாடு மாதிரி தெரிந்த ரூட்டிலேயே செல்வதையும், பெண்களுடன் ரொம்ப மரியாதையாக, கண்ணியமாக பழகுகிறவன் என்கிற மாதிரி நடந்து கொண்டு உள்ளுக்குள் அல்பத்தனமாய் நினைப்பதையும், டீ.ராஜேந்தர் சிட்டிபாபுவுடன் சரிக்கு சரி சவடால் விடுவதை திட்டிக் கொண்டே அந்த மாதிரி பஜாரித்தனம் செய்ய முடியாத தன் கோழைத்தனத்துக்காக ரகசியமாக குமைவதையும், சாப்பிடுவதில் அதீத ரசனை இருந்தாலும், " உணவை ரசித்து உண்பது பாவம். இந்த வெண்டைக்காய்க்காகவே மோர்க்குழம்பை நக்கி நக்கி சாப்பிடலாம் என்பது, அவ மாருக்காகவே அவளை லவ் பன்ணலாம் என்று சொல்வது போல குரூரமானது" என்று யாரோ ( பாலகுமாரன்???!!! ) சொன்னதற்காக கஷ்டப்பட்டு உணவு பற்றிய ரஸனை குறைந்து விட்டதாக காட்டிக் கொள்கிற அயோக்கியத்தனத்தையும், மாய்ந்து மாய்ந்து லவ்வி விட்டு அல்வாவியதும் அதற்காக கட்டுக் கட்டாக தன்னிரக்கக் கவிதைகளும் எழுதிவிட்டு தான் உண்மையாகத்தான் நேசித்தோமா என்கிற அறிவுஜீவித்தனமான ஆத்ம விசாரத்தையும், இணையத்தில் எப்போது நல்ல "கலர்ப்படங்கள்" பார்த்தாலும் லஜ்ஜையில்லாமல் My pictures ல் சேகரித்துக் கொள்கிற சபலத்தையும், தனக்கு எதிரியாயிருக்கிறவர்களின் திறமைகளை ரசிப்பதையும், ரொம்ப நெருக்கமானவர்களின் அருகாமையை அலட்சியமாக நினைப்பதையும் வியர்டு என்றெல்லாம் நான் நினைக்கவில்லை :-)

கட்டுப்பெட்டி சமத்துக் கடைக்குட்டியாக, மடிநாயாக வளர்க்கப்பட்டு, கல்லூரி சுதந்திரம் கிடைத்ததும் முதல் ஒன்றரை வருடம் அத்துமீறிப்போய் ஆட்டம் போட்டு விட்டு பயந்து போய் மறுபடியம் டே ஸ்காலராகி, சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்ததால் காதல் கத்தரிக்காய் என்று அலையாமல், கிடைத்ததும் அதிலும் நுனிப்புல் (சிறுவீட்டு மேய்ச்சல்!!!!! ) மேய்ந்து விட்டு, பிறகு சொந்த சாதியில் பந்தப்பட்டு பந்தாடப்பட்டு, எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு யாருக்காகவோ வாழ்வதாக பீலா விட்டுக் கொண்டு இருக்கும்
சர்...ர்ர்ர்ர்ரியான சராசரி.

நான் அதற்குமேல் எவ்வளவு பெரிய வியர்டு என்பது என்னுடன் புழங்குகிற புண்ணியாத்மாக்களுக்கு தெரியும்.

என் பெருமையை நானே எப்படி சொல்லிக் கொள்வதாம்.. !!!!!!!!!

நன்னி மதி.

இதுவரை கூப்பிடப்பட்டார்களா என்றெல்லாம் தெரியாது. நான் அழைக்க விரும்புபவர்கள் கீழே

சுந்தரவடிவேல்
தங்கமணி
டிசே தமிழன்
மீனாக்ஸ்
எம் கே குமார்

Tuesday, April 03, 2007

ஏக்கம்


வெருண்டோட மான்களில்லை
காயமாற நக்கி சலிப்பதில்லை
கடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்
தனியே எதிர்கொள்ளும் சாபமில்லை
வயிற்றுக்கு பதிலாய்
வேட்டையாடும் வேலையில்லை
அசைபோட்டு படுத்திருக்க
ராணிதரும் உணவில்லை
செல்லக்கடி கடித்து முயங்க
குட்டியில்லை குடும்பமில்லை
வண்ண விளக்கு நடுவே நான்
கர்ஜித்து வாய்பிளக்க
கண்கொட்டா மனிதரில்லை
சாட்டையின் சொடுக்கிற்கும்
இசையின் வேகத்துக்கும்
கரவொலி காதுகிழிக்க
சுற்றிச் சுழன்று வருகின்றேன்.
ஆழத்தில் கானகம்.

Sunday, March 18, 2007

கார்த்தி வீரன்


பருத்தி வீரன் பார்த்தேன்.
தெக்கத்திச் சீமையின் மண்ணையும், அதன் மணத்தையும், ரத்தத்தையும், வெறியையும், அழும்பையும், நக்கலையும், சாதி வெறியையும் இத்தனை அசலாக சொன்ன படங்கள் மிக குறைவு. மனித நடமாட்டம் இல்லாத அடர் காட்டுக்குள் ஓடிவரும் காட்டாறு மிரட்டலாக தெரிந்தாலும், அதன் தூய்மையும், ஆளாளுக்கு வித்தியாசம் காட்டாமல் எல்லாவற்றையும் புரட்டித் தள்ளி ஓடும் அதன் வெறியும், இதன் நாயகனில்தெரிகிறது.பாரதிராஜாவுக்கும், கமலுக்கும் அடுத்து இதை அசலாக பதிவு செய்த அமீருக்கு ஒரு "ஓ".
வாழ்ந்து காட்டி இருக்கிற எல்லா பாத்திரங்களை விடவும் முத்தழகு அசத்தி விட்டாள். இந்த மாதிரி யாரையும் நம்மால் நேசிக்க முடியவில்லையே என்று பொறாமைப்படவைக்கிற கதாபாத்திரம். இப்படிப்பட்ட நேசத்தைப் பார்க்கும்போதுதான் "தரையில் அழுத்தமாக கால்பாவிக் கொண்டு" இன்னொருவரை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததன் அபத்தம் புரிகிறது. தன்னை மட்டுமே முழுக்க முழுக்க நேசிப்பவர்களால, எல்லா உணர்வுகளுக்கும் கணக்கு கட்டம் போடு சட்டம் கட்டுபவர்களால் வேறொருவரை தன்னை இழந்து நேசிக்க முடியாது. அந்த ரேஞ்சுக்கு நேசிக்க முடிந்தால் ஒருநாள் கூட வாழ்ந்தால் போதும். துரதிர்ஷ்டவசமாக அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. பூச்சுக்கள் அற்று வாழ கற்பிதங்கள் விடுவதில்லை. நம் மனசும் முளையுமே கற்பிதங்களின் மொத்தக் கொத்தினைத்தான் அறிவு என்று நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையான காதல் முத்தழகினைனுடையது போலத்தான் இருக்க வேண்டும். அவள் ஆதங்கம், அலுப்பு, ஆற்றாமை, காத்திருப்பு, காதலுக்காக அரிவாள் தூக்கி அம்மாவை வெட்டப் போகும் வெறி, தனக்காக வீட்டு வாசலில் ரவுசு பண்ணும் காதலனைப் பார்க்கின்ற பெருமையான சிரிப்பு, அவன் "அப்படி இப்படி" இருப்பதைக் கூட அலட்சியப்படுத்தி, கல்யாணத்துக்கு பின் இப்படி பண்ணா வெட்டிப் போடுவன் என்கிற மிரட்டல், ஆண் பிள்ளைத்தனம் கலந்த அந்த தெக்கத்திக் குரல் எல்லாம அச்த்து அச்த்து என்று அசத்துகிறது. இது முத்தழகுவின் படம். முத்தழகையும் வீரனையும் படம் பார்த்த பின்னும் பல மணி நேரம் உள்ளுக்குள் ஊற்றி வைக்கிற அமீரின் அருமையான காதல் படம். விருமாண்டியை விட அசலான பிரதி. கார்த்திக்கின் முதல் படம், அவருடைய இயல்பான நடிப்பு என்பதால், அவருக்கு அதிக வெளிசசம் கிடைத்திருக்கிறது. படத்தின் வர்த்தக கட்டாயங்களால் அமீரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாய் செய்திகள் வந்து கொண்டிருப்பது மட்டும் கஷ்டமாக இருக்கிறது
படம் பார்த்த சூட்டோடு மாலை சன் டீவியின் அன்புடன் நிகழ்ச்சியில் கார்த்தியின் நேர்முகம். பையன் சரியான "பதினாறடி". நல்ல வளர்ப்பின் அடையாளமாக படிப்பும், அத்ன் பயனாய கிடைத்திருக்கின்ற பக்குவமுமாக அசத்தல் பையன். ஒளிவு மறைவில்லாத யதார்த்தமான பேச்சு. நடிகனின் மகனாக வளராமல், வீட்டுக்கு வந்து மேக்கப்பை கழுவவதால் மட்டுமே, அப்பா நடிகர் என்கிற நிஜம் புரிந்த குழந்தைப் பருவம், எது செய்வதாலும் படித்துவிட்டு செய்யுங்கள் என்கிற அப்பாவின் "கல்வியோடு இருக்கின்ற செல்வம் மட்டுமே நல்லது" நம்பிக்கை, சினிமாவில் இருக்கின்ற ஆர்வம் காரணமாக மனசு பூரா சினிமா சினிமா என்று அலமலப்போடு காலடி எடுத்து வைத்திருக்கும் பையன்.
வளர்த்தால் சிவகுமார் மாதிரி பிள்ளை வளக்கணும்யா....!!!!!!!!!

Monday, March 12, 2007

இலவசம் ஏன் - நாகநாதன் விளக்கம்


‘‘இலவசம்... இந்த ஒற்றைச் சொல்தான் தமிழக அரசின் தாரக மந்திரமாக இருக்கிறது. இது அரசின் நிதி நிலையைப் பாதிக்காதா? இலவசங் களை நடைமுறை சாத்தியமாக்க நிதி ஆதாரம் இருக்கிறதா?’’

‘‘இலவசம் என்கிற சொல்லைப் பலர் பலவிதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். நலிந்த பிரிவு மக்களின் நலன்களுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அளிக்கும் திட்டங்களை இலவசம் என்று கூறிவிட முடியாது. மக்கள் நல அரசு என்ற அணுகுமுறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பான் ஆகிய நாடுகளில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் விவசாயத் துறைக்கு மானியமாகவும், உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. கல்வி, பொதுச் சுகாதாரம் ஆகியன இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் அளிக்கப்படுகின்றன. அவற்றை எல்லாம் அந்த நாடுகளில் இலவசம் என்று யாரும் கூறுவதில்லை.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி அளிப்பது என்பது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். பொருளியல் அறிஞர் அமெர்த்தியா சென் அவர்களுடன் இணைந்து பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி வரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜியன் டிரேஸ், ‘வறுமையில் வாழும் ஏழைகளுக்கு நடுவண் அரசின் உணவுத்தானிய கிடங்குகளில் உள்ள தானியங்களை இலவசமாகவே எடுத்து அளிக்க வேண்டும்’ என்று அண்மையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 20 லட்சம் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு அளிக்கப்படும் நிலம் இலவசம் என்பதைவிட, லிந்தபிரிவினருக்குப் பொருளா தார அதிகாரத்தை அளிக்கும் முற்போக்குத் திட்டம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் ஆண்டாண்டு காலமாக ஏற்றத்தாழ்வுகள் தொடரும் சமுதாயத்தில் 30 விழுக்காட்டு ஏழைப் பிரிவினர் மட்டும் தொலைக்காட்சி இல்லாமல் இருக்கின்றனர். இது எந்தவகையில் சமூக நீதியாகும்? ஏழை குடும்பங்களில் படிக்கும் மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அப்பாலும் கல்வி, பொது அறிவு தொடர்பான ஏராளமான தகவல்களைத் தொலைக்காட்சியின் மூலம் பெறுவதைத் தடுப்பது எப்படி மக்கள் ஜன நாயகமாகும்? ஆகவே தான் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதில் முதல்வர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

அடுத்து நீங்கள் கேட்டதைப்போல், நிதியாதாரத்தைப் பெருக்குவது அரசின் தலையாய பணியாகும். முதல்வர் கலைஞர் கடந்த காலங்களில் 12 ஆண்டுகள் திறமைமிக்க நிதியமைச்சராக இருந்தவர். தமிழகத்தின் நிதித்துறையும் சிறந்த நிர்வாகத் திறனுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வரி வருவாயைப் பெருக்குவதிலும், பொதுச் செலவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் போதுமான நிதியாதாரம் உள்ளது என்பதே உண்மை.’’

‘‘இலவச கலர் டி.வி. வழங்குவதால் சமூக ஏற்றத்தாழ்வு குறையும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்... தனிநபர் வருமானத்தை உயர்த்துதல், பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கான அரசு திட்டம் என்ன?’’

‘‘புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்ட பிறகு தமிழகத்தின் தொழில் துறையும், பணித்துறையும் அதிக வளர்ச்சியடைந்துள்ளன. தமிழ் நாட்டின் தலாவாரி வருமானம் 1993&94 ஆண்டில் ரூ.8955 ஆக இருந்தது. 2004&05 ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி ரூ.25965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை, முதல்வர் கலைஞர் அவர்களுடைய தொடர் முயற்சியினால்தான் தமிழகம் பெற்றுள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கான துறைவாரியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மொத்த வருமானமும், தலாவாரி வருமானமும் பெருகி வருவதையே புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.’’

’’ஒரு மக்கள் நல அரசின் திட்டங்களை செம்மையாக செயல்படுத்த அரசின் கருவூலம் வற்றாமல் இருக்க வேண்டும். அந்தவகையில், தமிழக அரசுக்கு எந்தெந்த வகையில் வருவாய் வருகிறது?’’

‘‘மாநில அரசுக்கு இருவகைகளில் நிதி கிடைக்கிறது. மாநிலமே வரி மூலம் திரட்டும் வருவாய். நடுவண் அரசிலிருந்து நிதிக்குழுவின் மூலம் பெறப்படும் வருவாய். கடந்த 1&வது, 12&வது நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ கத்துக்குக் கிடைக்க வேண்டிய உரிய நிதியின் அளவு குறைந்தாலும், மாநில அரசு வரிகள் மூலம் திரட்டும் வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. மதிப்புக் கூட்டு வரி (வாட்) இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவதால் தற்காலிக வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பினை நடுவண் அரசு சரிக்கட்டுவதற்கு ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. பொருளாதாரத்தில் பணித்துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஆளுநர் உரையில் சேவை வரியை விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு உரிய நிதியை வருகின்ற நிதியாண்டுகளில் பெற முடியும். ஆகவே, அரசு கருவூலத்தில் நிதி குறைந்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.’’

‘‘கூட்டணிக் கட்சியான பா.ம.க. சமீபத்தில் வரைவு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?”

‘‘சில நேரங்களில் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை, நல்ல கருத்துக்களை உன்னிப்பாகக் கவனித்து, உடனடியாக அக்கருத்துக்களின் அடிப்படையில் பல முடிவுகளை நம் முதல்வர் எடுத்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்ததே. எனவே தோழமைக் கட்சிகள் அளிக்கும் நல்ல கருத்துக் களை, திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது.’’

‘‘நிதி அமைச்சர் அன்பழகன் நடத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், ‘ஆன்&லைன் வர்த்த கத்தை அரசு ஊக்குவிக்கக் கூடாது’ என்று வியாபாரிகள் வலியுறுத்தியிருக் கிறார்களே... உண்மையில் ஆன்&லைன் வர்த்தகம் எந்த அளவுக்குப் பொதுமக்களை பாதிக்கிறது?’’

‘‘இன்று எல்லாத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. அதேசமயம் கணினியை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. யூக வாணிபம் எப்பொழுதுமே அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்ற பேராசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த யூக வாணிபத்தை கட்டுப்படுத்தவும், அடிப்படை நுகர்வுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த யூக வாணிபத்தில் அதிக லாபம் சம்பாதிக்க விரும்பி இணையதள வழி வர்த்தகத்தில் பலர் ஈடுபட்டுள்ளதால், அது இன்றைக்கு விலைவாசியை உயர்த்தியுள்ளது. மக்களுக்கு தேவையான பொருட்களைப் பதுக்கி, செயற்கையான முறையில் விலையை ஏற்றும் சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் இந்தப் போக்கை கட்டுப்படுத்த முடியும்.’’

‘‘வரும் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும்?’’

‘‘ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் தமிழ் நாடும், மக்களும் நலம்பெறும் பல்வேறு திட்டங்கள் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும்...’’
‘‘பல ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப் பட வில்லை... ஆகவே, இந்த நிதி நிலை அறிக்கையில்..?’’

‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது உண்மை. அரசு சார்பில் நடத்தப்படும் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை முன்னிலைப்படுத்தியே இயங்க முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து இழப்பிலும் நடத்த முடியாது. கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், விலை இறக்கம் போன்றவை கட்டணம் தொடர்பாக பல சிக்கல்களை நிர்வாகத்துக்கு உருவாக்குகின்றன. பயணிகளின் வசதி களை மேம்படுத்தினால் அதிக கட்டணம் கொடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் நகரின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு உட்காரும் வசதியோடு இயங்கிவரும் பேருந்துகளில் சாதாரணப் பேருந்து கட்டணங்களைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெரிசலை தவிர்ப்பதற்கு இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையை பல வழித்தடங்களிலும் விரிவுபடுத் தலாம்.
மேலும் நெரிசல் நேரத்தில் அதிக கட்டணமும், நெரிசல் இல்லாத நேரத்தில் சாதாரண கட்டணமும் பெற்று போக்குவரத்து ஊர்திகளை ஒழுங்குப்படுத்தி லாபத்தோடு இயங்க வைக்கலாம்.’’

‘‘தற்போது விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதோடு, ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டாலே விலைவாசி உயர்ந்துவிடும்’ என எப்போதும் ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. ஏன் இப்படி?’’

‘‘விலைவாசி உயர்வுக்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டில் இருந்தும் மக்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பணத்தின் சுழற்சியைக் கட்டுப்படுத்துவதற்காக, உடனடியாக பத்தாயிரம் கோடி ரூபாயை பணச் சுற்றோட்டத்திலிருந்து மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) நடவடிக்கைகளின் மூலம் எடுத்துள்ளது. இதுபோன்ற பல நடவடிக்கைகளால் விலைவாசி குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகுதான் விலைவாசி உயர்ந்தது என்று குறிப்பிடுவது உண்மையல்ல.’’
நன்றி : ஆ.வி
**********************************************************************************
தமிழக அரசின் கவர்ச்சித் திட்டங்கள் அரசு கஜானாவை காலியாக்கி மக்கள் பணத்தை அள்ளிவழங்கி, மஞ்சள் துண்டு தாத்தா போகும் காலத்துக்கு புண்ணியம்
தேடிக்கொள்கிற வழியோ என்று நான் கூட நினைத்தேன். நாகநாதனின் வாதங்கள் அரசின் இலவசத்திட்டங்களுக்கு கொஞ்சமேனும் நியாயம் சேர்ப்பதாக உள்ளது.

Wednesday, February 28, 2007

காமெடி டைம்

சன் டீவி சிட்டிபாபு கூட இதைப் போல முயற்சிக்கலாம். கொஞ்ச நாளில் கட்டாயம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சி ஒன்றின் ஜாக்கி ஒருவருக்கு நேயர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அழைத்த பெண் நேயர், தன் கணவனின் சமீபகால நடவடிக்கையைப் பற்றி புகார் செய்கிறார். தன் கணவர் சமீபகாலமாகவே வெகு அமெரிக்கராக நடந்து கொள்வதாகவும், தங்களிடையே கொஞ்ச நாட்களாகவே இணக்கமான உறவு இல்லாததாகவும் சொல்கிறார். தன் கணவர் எங்கேயாவது "கன்னம்" வைக்கிறாரா என்று சந்தேகமாக இருப்பதாகவும், அந்த ரேடியோ ஜாக்கி அதை துப்பறிந்து சொல்லவுமாக வேண்டுகொள் வைக்கிறார். சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும் இந்தியர்கள்.

மிகுதியை இங்கே கேளுங்கள்.

உண்மையாகவே நடந்ததோ, செட்டப்போ, விஷயம் அது அல்ல.. இதில் மறைந்து கிடைக்கின்றன ஏராளமான விஷயங்கள்.

இப்போது சொல்லுங்கள். இது போல இந்தியாவில் நடக்குமா..?? நம்ம மக்கள் அவ்வளவு இலகுவாக ஏமாறக்கூடியவர்களா..??

Thursday, February 15, 2007

இறக்கும் இதயம்

நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்க
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்

சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது

ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான் .........

Saturday, February 10, 2007

Eternal Sunshine of the Spotless Mind


ரொம்ப நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த படம்
ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.

அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்க்க ஆரம்பித்து, டைட்டில் ஓடுவதற்குள்ளேயே தூங்கிப் போய் விட்டேன். திருப்பித் தரவேண்டிய நாள் வரவும், அவசர அவசரமாக முதல் நாள் இரவு பார்த்தேன்.

ஒரு சாதாரண கதைக்கு, கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தூவி, அதை மிக வித்தியாசமான முறையில் பரிமாறி இருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி Pause பண்ணிவிட்டு, இது நான் நினைப்பதுதானா என்று வீட்டு அம்மணியிடம் ருசுப்படுத்தி விட்டு பார்க்க வேண்டி இருந்தது மொத்தப் படமும்.

பீச் பார்ட்டியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஹீரோ. காதலாகி சேர்ந்து கொஞ்ச நாள் ஊர் சுற்றுகிறார்கள். பிறகு சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போகிற அந்தப் பெண் சும்மா இருக்காமல், டாக்டரிடம் போய் தன் மூளையில் ஹீரோவை பற்றிய ஞாபகமே இல்லாமல் போகும்படியான சிகிச்சை செய்து கொள்கிறாள். அடுத்த நாள காலை, தன்னைப் பார்க்க வரும் ஹீரோவை அவள் "நீ யார்..? " என்று கேட்க ஸாருக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாள் பின்னாலேயே மடிநாய் மாதிரி சுற்றிக் கொண்டிருந்துவிட்டு கழிவிரக்கம் தாங்காமல் தானும் அந்த சிகிச்சை மேற்கொள்ள அதே டாக்டரிடம் செல்ல,
சிகிச்சை நடபெறும்போதே அவள் மேல் உள்ள காதலால் அடிமனது அந்த சிகிச்சைக்கு எதிராக ஆகிவிட, சிகிச்சையை ஏகப்பட்ட கஷ்டத்தோடு முடிக்கிறார்கள் டாக்டர் குழுவினர்.

இதற்கிடையே டாக்டர் கிளினிக்கில் வேலை பார்க்கும் ஒருவன், இவர்களுக்கு இடையேயான நேயத்தை புரிந்து கொண்டு, ஹீரோ கொண்டுவந்திருக்கிற அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கடிதங்கள்/ பரிசுப் பொருட்கள் துணையுடன் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கிறான். டாக்டரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை உபயோகித்து விட்டு அவளையும் அதே சிகிச்சையின் மூலம் "அலம்பி" விடுகிற டைப்தான். விஷயம் தெரிகிற அந்தப் பெண் தாம் இத்தனை நாள் டாகடரின் செயல்களுக்கு உடைந்தையாக இருந்த பாவத்தைக் கழுவ, சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன் எல்லா நோயாளிகளிடமும் பேசி பதிவு செய்யப்பட்ட பழைய வாழ்வு பற்றிய ஒளி நாடாக்களை எல்லோருக்கும் சப்ஜாடாக அனுப்பி விடுகிறது

சிகிச்சை முடிந்து வந்த ஹீரோ ஹீரோயின், விட்ட குறை தொட்ட குறையாக மனசுள் ஊறிப்போயிருக்கும் உறவின் மிச்சங்களால் மறுபடி ட்ரெயினில் அகஸ்மாத்தாக சந்தித்து, மறுபடி காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள உறவு நிலையில் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அந்த டாக்டர் பெண் அனுப்பி வைக்கும் ஒலி நாடா வருகிறது.

மிகுதி வெள்ளித்திரையில்.........


மேற்சொன்ன கதையச் சொலவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தினங்கள், புரிந்து கொள்ள மெனக்கெடும் முயற்சிகளுக்காகவது படத்தை சிலாகிக்க வேண்டி இருக்கிறது. பக்கம் பக்கமாக சிக்கல் கதை எழுதி, சுக்கல் சுக்கலாக கிழித்து விட்டு அதை யாரிடமோ வரிசைப் படுத்தி படிக்கச் சொல்லியது போல் இருக்கிறது படம். பன்னெண்டாவது படிக்கும் போது என் கணக்கு வத்தியார் பி.எம்.சங்கரன் வகுப்பில் கணக்கு ஃபார்முலா கேட்பார்.
மறந்து போய் சொல்லா விட்டால், அவரே நினைவு படுத்தி விட்டு, இனிமே மறப்பியா தம்பி..?? என்பார். நாம் " மறக்க மாட்டேன் சார்" என்று பரிதாபமாக தலையாட்டினால், சிரித்துக் கொண்டே "இல்ல தம்பி ..மறந்துரு. பரிட்சை எழுதி முடிச்சிட்டு மறந்துரு. மறதி இல்லாட்டி உலகத்துல ரொம்ப கஷ்டம்
தம்பி" என்பார். சத்தியமான உண்மை.


இந்தப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் எஸ்.ஜே சூர்யாவின் "அ..ஆ " என்று சொன்ன நண்பரை தேடு தேடு என்று தேடிக் கொண்டிருக்கிறேன் - உதைக்க

Wednesday, January 10, 2007

நிஜ ரோஜா ரதிதேவி

கலைஞர் டீ.ஆர்.பாலு மூலமாக பேசுகிறாராம்...

வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.

சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.



ஆச்சு. பதினெட்டு நாள். சிவகாசி கரிசல்குளம் கணேசன் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் அண்ணனுக்கு மனு கொடுக்க (?!!!)ராமேஸ்வரம் போகிறார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. செல்போனில் பேசும் தீவிரவாதிகளுக்கு பேசவும், அந்த தகவலை கணேசனின் உயரதிகாரிகளுக்கு தரவும் நேரம் சரியாக இருக்கிறது. பிணைத்தொகை மூணு கோடி. என் சகோதரியின் கணவர் சந்திரஹாசன் கணேசனின் உயரதிகாரிகளுல் ஒருவர். கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் யூனிட்டே அல்லோலகலோலப் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.



எல்லா எழவும் போகட்டும். என்ன சித்தாந்தத்துக்காவது அந்த தீவிரவாதிகள் போராடிக் கொள்ளட்டும். அதுக்கு ஒரு அப்பாவி சிவில் இஞ்சினியர்தான் தான் கிடைத்தானா..?? பணம் வேணுன்னா பாங்க்கை கொள்ளையடி. ஏதாவது பெரிய அரசாங்க பதவியில் இருக்கிற அரசியல்வாதியைக் கடத்து. அவனுக்கு இருக்கிற பவர் கொஞ்சம் மீடியா வெளிச்சமாவது கொண்டுதரும். ஒரு கருமமும் இல்லாம ஒரு செமி ராணுவ ஆசாமியை பிடிச்சு வச்சுகிட்டு, கோடி கோடியா கேட்டா எங்க போறது. அரச இயந்திரத்தோட ஒரு கடைகோடி பல்சக்கரம் மாட்டிக்கிச்சுன்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணப் போறாங்க. ரோஜா மாதிரி ஒரு படம் நல்லா ஓடிச்சுன்னா நாமல்லாம் நல்லா கை தட்டிப் பாக்கலாம். வேற ஏதாச்சும் முடியுமோ..??

விடை தெரியாத கேள்விகள்...

Tuesday, January 09, 2007

டிசம்பர் தர்பார்

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.

வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.
எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.
இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.

வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.
இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.


சுஜாதாவின் நேம் ட்ராப்பிங்ஸை கிண்டலடித்து அவரது ஸ்டைலில் "பெனாத்திருயிப்பது" மேலுள்ளது. இதே போல இங்கே அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருடன் பேசும்போதும், இப்படி ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழும். மீனா, சுஹாஸினி, கமல், ரஜினி, மணி(ரத்னம்) எல்லாம் மானாவரியாக வந்து விழும்போது எதை நம்புவது அல்லது கூடாது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ராயர் காலங்களில் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தவர் வலைப்பதியத் துவங்கியதும் அவ்வளவு பேசுவது இல்லை. ஆயினும் போன முறை பேசியபோது "டிசம்பர் தர்பார் " என்று ஒரு விகடன் பிரசுரத்திற்காக புத்தகம் எழுதுவதாக சொன்னார். சரி...என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை பற்றி சயின்ஸ் தாத்தா இந்த வார விகடன் க.பெ வில் எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீத சீசன் பின்னணியில் விகடன் பிரசுரமாக வந்திருக்கிறதாம். அதே புத்தகத்தைப் பற்றி காமேஸ்வரி அய்யர் எனப்படும் அனுராதா ரமணனும் "சீசன் சிப்ஸ்" பகுதியில் அம்சமாக எழுதி இருக்கிறார்.



வாலிப சுந்தரத்துக்கும், மாமா சிவசுவுக்கும் வாழ்த்துக்கள்.

*******

அதே கற்றதும் பெற்றதுமில் கணவன் மனைவி பிரச்சினையைப் பற்றி குறும்பாக எழுதி இருந்தார். படிக்க சுவாரசியமாய் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன் விளக்குத் தூண் விளக்குத்தூணாக கால் தூக்கிக் கொண்டிருந்த ஆசாமிகள் எல்லாம் ஓவர் நைட்டில் சாமியார்களாகி வெறுத்து விடுகிறார்கள். " We are friends since we are able to tolerate each other " என்பதை "we remain married since we are able to tolerate " என்று மாற்றி வாசிக்கும் அளவுக்குத்தான் ஏகப்பட்ட திருமணங்கள். மேற்கின் தாக்கத்தில், அந்த சகிப்புத்தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு விவாகரத்துகள் பெருகுவதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

என்றாலும், இன்னோரு புறம் ஸோ வாட்..?? என்றும் தோன்றுகிறது. திருமணம் என்ற அமைப்பு மற்ற எல்லா ஏற்பாடுகளை விட ஓட்டைகள் குறைவாக உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் பொருத்தமில்லா மனநிலைகளால் அதை abuse பண்ணி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. Forkம் பாயாசமும் என்று உருப்படியாக வந்த கட்டுரையை சமீபத்தில் வாசித்தபோது எழுந்த எண்ணங்களின் தொடர்ச்சி, தாத்தாவின் கட்டுரையைப் படித்ததும் சர சர வென பற்றிக் கொண்டு விட்டது. கல்யாணம் என்ற அமைப்பு உடைந்தால்தான் அதில் உள்ள செளகரியங்கள் தெரியும் என்றால், அதை உடைத்துப் பார்ப்பதும் கூட தவறில்லை.

ஆண் ஒரு காலத்தில் நிழல் தருகிறவனாக இருந்தான். இப்போது சகபயணியோடு இளைப்பாறுகிறவனாகவும் இருக்கிறான். மரங்களுக்கா பஞ்சம்..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...