Monday, December 28, 2009

வீட்டுமிருகம்


இடுபெயரின் கடைப்பகுதி
சாதி சொல்லி சதி செய்யா
தூரதேசம்
வளமை பொதுவானதால்
வேற்றுமைகள் மறந்தே போன
அயலகம்
பிறப்பில் உயர்வு தாழ்வை
திருமணங்களில் மட்டும் காத்து
மற்றபோழ்தில் ஒதுக்கியே
கிறங்கிப்போன கிளரொளி இளமை.
பணியிட ஸ்நேகம் அழைக்க
விருந்தாட வேண்டி சென்றோம்
சூழ்நிலை குதூகலம் கூட்ட
பாடல்கள் இளக்கிய மாலை
இனிமை இனிமை எனவும்
சூலுற்ற நண்பன் மனையாள்
ஓடியாடி சமைக்க விழைய
ஊர்க்கதை கூடத்திலிறைந்தது
உண்ணத் துவங்கையில்
சற்றே பார்வை எட்டி
சமையலுள் புத்தனை அண்ட
மனசுக்குள் சொல்லொணா
உணர்வொன்று பற்றியெழ.....
வாய் கசந்து உமிழ்நீர் சுரந்து
வயிறு குமட்டி
என் அக வித்தியாசங்களை
எனக்குள் வெளிச்சமாக்க
வளர்ப்பு நாய் கடித்தாற்போல
பதறிப்பொன மனதுக்குள்
கள்ளம் உறைவ துலங்கியதே
முகரவும் ருசிக்கவுமான
என் மிருகத்தன எச்சங்களாலே
நாசுக்கும் நாகரீகமும்
கல்வியும் கடவுளும்
மாசில்லா மனிதம் வேண்டுமென
பேசிப்பேசி உரைப்பினும்
உள்ளுக்குள் கசடென்பது
இன்னமும் மிச்சமாச்சே
என வெம்மி விசும்பி
சோர்ந்து போக
இன்னமும் வேகமாய்
வெல்லவேண்டுமந்த விலங்கையென
இந்நாளில் வன்மம் கொண்டேன்
முன்னிலும் வேகத்தே.

5 comments:

  1. கவிதை மிக அருமைங்க.

    ReplyDelete
  2. நன்றி கருணா.

    ReplyDelete
  3. சொல்ல மறந்தது. கதையாக எழுதி இருக்க வேண்டிய விஷயம். என் சோம்பலினால் கவிதை ரூபம் எடுத்திருக்கிறது

    ReplyDelete
  4. அருமை. மீண்டும் கதை வடிவிலும் தரலாம். வாசிக்க தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  5. சோதனை செய்ய் இந்த மறுமொழி

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...