Skip to main content

Posts

Showing posts from 2004

வதந்தீ

நேற்றிரவு "மறுபடியும் சுனாமி அபாயம்" என்று இனையப் பத்திரிக்கைகளில் பார்த்தவுடன் பதட்டத்துடன் பெற்றோரை தொடர்பு கொண்டேன். கடற்கரையோரத்தில் இருந்து மாயூரம் இருபத்தேழு கி.மி என்றாலும், இறக்கை கட்டிக் கொண்டு கிளம்பும் வதந்திகள் மக்களை மிகுந்த பீதிக்குள்ளாக்கி வருகின்றன.

முதல் தடவை அசட்டையாக இருந்ததால், இந்த முறை ஏதாவது சிறிய அபாயம் என்றால் கூட மக்களை முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினத்து அரசுகள் முனைவது புரிகிறது. ஆனால் காலம் கடந்த எச்சரிக்கை என்ன செய்யும்..?? புனே நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சீஸ்மாலஜிஸ்ட் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே அந்தமான் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வந்ததாக இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. கடலலை தாக்கிய அன்று காலை, அதைப்பற்றி அந்தமானிலிருந்து சிலர் அனுப்பிய தகவல் முன்னாள் மத்திய அமைச்சருக்கு சென்றிருக்கிறது.இம் மாதிரியான எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த நமது மனம் இப்போது இழப்புகளை பற்றி நினைத்து துயருற்றுக் கொண்டிருக்கிரது.

அதுவும் எல்லோரும் அல்ல.

இங்கே பணியிடத்தில் என் தோழி, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், திங்கள் காலை வேறு ஏதோ பேசி…

உதவுங்கள்

ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் என்றாலும், இங்கே பிரசுரிப்பதற்கு இன்னொரு காரணம், இன்னும் கொஞ்சம் பேருக்காவது செய்திகள் தெரியாதா என்பதுதான்.

தமிழகத்தில் உள்ள வலைப்பதிவர் ராம்கி, நாகை மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று உதவுவதற்காக, இந்த உதவியை கேட்டிருந்தார்.

நண்பர் பி.கே.சிவகுமார் தன் உறவினர்கள் மூலமாக, கரூரில் இருந்து பெட்ஷீட்டுகளை தருவித்துத் தருவதற்காக, விருப்பப்படும் அன்பர்களிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு, பொறுப்பெடுத்து செய்வதாக காரியத்தில் இறங்கி இருக்கிறார். முப்பது பெட்ஷீட்டுகள் கொடுப்பதனால் கூட மூவாயிரம் ரூபாய் ஆகும். அமெரிக்க நண்பர்கள், நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள் இங்கே தொடர்பு கொள்ளுங்கள்.

நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்..???

நண்பர்கள் ராம்கிக்கும், சிவகுமாருக்கும் நன்றி.

நொந்த"மான்"

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட ட்சுனாமி அலை வரும் வழியில் கிடைத்ததை எல்லாம் கபளீகரம் செய்து விட்டே தமிழ்நாட்டு கிழக்குக் கரையை தொட்டிருக்கிறது. கடல் தண்ணீர் கொஞ்ச தூரம் உள்ளே வந்து துக்கி அடித்ததற்கே கிட்டத்தட்ட 15 ஆயிரம் உயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால் கடல் தண்ணீர் தமிழக கரையை அடையும் முன் அந்தமான் நிகோபார் தீவுகளிலும், இலங்கையிலும் கோரத் தாண்டவம் ஆடிவிட்டே வந்திருக்கிறது.

சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாயிருக்கிறது.

என் இளைய சகோதரியின் கணவர் நாகையில் CSI பள்ளியில் பணிபுரிகிறார். அந்தப் பள்ளி கடற்கரையிலிருந்து மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்கள். சகோதரியின் மகன் மாயவர்த்தில் உள்ள பள்ளியில் +2 படிக்க விரும்பியதால், கடந்த ஒரு வருடமாக சகோதரி மாயூரத்தில்தான் இருக்கிறார். மாமா மட்டும் தினசரி இங்கிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்த களேபரம் எல்லாம் நடந்திருக்கும்போது, சகோதரி நாகையில் இருந்திருந்தால் ...., அப்பா...யோசிக்கவே முடியவில்லைஅதிகபட்ச பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மற்றோர் இடத்தில், கார் நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள கேம்பல் பே - இந்திரா பாயிண்ட் என…

நடுங்கும் உள்ளம்

கடல் கொந்தளிப்பு என்பதெல்லாம் நமக்கு வெறும் செய்தி. மிஞ்சிப்போனால்
இரண்டு நாள் தூக்கம் கெடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அது வாழ்நாள் முழுக்க ஆறாத காயம். செத்துப்போனவர்களை கூட்டம் கூட்டமாக புதைக்கிறார்களாம். மொத்தமாய் எரிக்க பணிக்கிறார்களாம். கஷ்டம்தான். வேறொன்றும் செய்ய இயலாது அவர்களுக்கு. ஆனால் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் சோகத்தை விட்டு வெளியே வரும் வரைக்கும், மறுபடி கடலுக்கு போய் தொழில் நடத்த தைரியம் வரும் வரைக்கும், கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வசித்துக் கொண்டு மிச்ச சொச்ச நாட்களை ஓட்ட, அவர்களுக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் உதவ வேண்டும். இன்று இந்த செய்தியை படித்து விட்டு எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. கண்ணில் கண்ணீர் மல்கியது. இந்தியனாக இருப்பது என்னவென்று இன்று விளங்கியது.

தமிழ் வலைப்பதிவர் சமூகத்திலிருந்து அனைவரும் பத்ரியை தொடர்பு கொள்ளுங்கள். நம் அனைவர் மூலமும் நிதி திரட்டி கருணாலயா மூலம் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு சோறாவது இடுவோம். வங்கிக் கணக்கு எண் அவருக்கு கிடைத்தாலும், க்ரெடிட் கார்டு மூலமோ, பே பால் மூலமோ கொடுக்க முடிந்தால் இன்னமும் வசதி…

நீர்க்குமிழி வாழ்க்கை

நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு செய்தி கேட்டு, இத்த்னை நேரம் மாயவரத்துக்கு தொலை பேச முயன்ரதில், சர்று நேரம் முன்புதான் பேச முடிந்தது. பெற்றோர் குரலில் பயத்தின் சுவடு. மாயவரத்திலிருந்து 27 கி.மி தூரத்தில் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார். அங்கிருந்து ஆக்கூர், சன்கரன்பந்தல் வரை தண்ணீர் வந்ததாக கூறினார்கள். ஆனால், கடல் தண்ணீர் இல்லையாம். பூமி வெடிப்பில் இருந்து பீய்ச்சி அடித்ததாக வதந்திகளாம். யாருக்கும் ஏது விவரம் என சரியாய் தெரியவில்லை. ஆனால் பீதியைத் தவிர்க்கும் பொருட்டு, செய்திகள் மழுப்பப்படுவதாக தெரிவித்தார்கள். நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் என் உறவினர் - கடற்கரையிலிருந்து 4 கி.மி - பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை ட்ராக்டர்களிலும், லாரிகளிலும் ஏற்றிவந்து, பள்ளிகளிலும், கோவில்களிலும் தங்க வைக்கிறார்களாம்.

செய்தியை முதலில் தினகரன்.காமில் சிவப்பு வண்ணத்தில் பார்த்தபோது வீரியம் தெரியவில்லை. பிறகு தட்ஸ்டமில்.காம் கொஞ்சம் விரிவாகத் தந்தது.
முழு விவரம் பத்ரி ப்ளாக்கிலும் ராயர் காப்பி க்ளப் முருகன் மடலில் இருந்தும்தான் படித்தேன்.

என்னென்ன…

Person of the Year 2004

டைம் மாகஸீன் அமெரிக்க அதிபர் புஷ்ஷை இந்த வருடம் தேர்ந்தெடுத்து இருக்கிறது. படிக்க சுவாரசியமான கட்டுரை. கட்டுரையின் தொனியைப் பாருங்கள்.

ராஜு முருகன் - ஒரு சாம்பிள்

மதுரையில் கீர்த்தனாவை விட்டு பிரிந்தபோது, இனி இந்த மதுரைக்கே வரக்கூடாது, அப்படியே வந்தாலும் திருப்பரங்குன்றம் மலைக்கு வரவேக்கூடாது என்று ஆவேசமாக நினைத்தபடிதான் சென்னைக்கு வண்டியேறினேன். திரும்பரங்குன்றம் மலையுச்சியிலிருந்து பார்த்தால் கீழே ரயில்பாதை தெரியும். ரயில் போகும்போது மிகப்பெரிய மரவட்டை பூச்சி ஊர்வதைப்போல இருக்கும். பல நாட்கள் மாலை ஐந்தரை மணி ரயில் செல்லும்போது நாங்கள் மலையுச்சியில் உட்கார்ந்திருப்போம். ஒருமுறை கீர்த்தனா என் தோளில் இறுக்கமாக சாய்ந்துகொண்டு சினிமாத்தனமாக, ‘‘நம்ம காதலுக்கு இந்த ரயில்தான் பெரீய சாட்சி..’’ என்றாள். அது காணக் கிடைக்காத சித்திரம். அவ்வார்த்தைகள் எப்போதும் ஜீவித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஆவேசமில்லை. மனம் கொஞ்சம் கனிந்திருக்கிறது. அப்போதுதான் துளிர்விட்ட பசலிக்கீரை இலையென ஒரு பக்கமாய் பச்சைவிட்டிருக்கிறது. ஒருமுறை மதுரை போய்வரலாம் போலிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று ஐந்தரை மணி ரயில் பார்த்து ‘‘எப்படியிருக்கிறாய் கீர்த்தனா’’ என்று கேட்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கீர்த்தனா அளவிற்கு மலை, ரயில் எல்லாம்தான் முக்கியமென்று படுகிறது. உட…

ஆஹா...என்ன பூரிப்பு..??

தமாஷா இருக்கிறது. ஆயுசு முழுக்க தமிழ் தமிழ்னு பேசியும் எழுதியும் வந்த தாத்தா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி தமிழகத்தைத் கலக்கி, அதன் விளைவாக ஆட்சியையே பிடித்தவர், இப்போது தமிழகத்தில் இந்தியை புகுத்துபவராய் முதல்வரால் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார். ஜெவுக்கு சுக்கிர தசை தான்.

பதிலுக்கு "அமைச்சர் பாலுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்பதோடு நிறுத்தி இருக்கலாம். இதற்கு பதிலாக அவர் தந்திருக்கும் ஓரங்க நாடக பிரலாபம் சலிப்பூட்டூகிறது. ச்..சை !! பெரிசுக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா..??

மேலும், தினகரன் போன்ற திமுக சார்பு பத்திரிக்கைகளில், இந்த செய்தி வரும்போது, உபயோகப்படுத்தும் ஜெ வின் புகைப்படம், இந்த சினிமா ஸ்டில் புகைப்படம் !!! இவர்களுக்கு வேறு புகைப்படமே கிடைக்கவில்லையா..?? என்ன சொல்ல வருகிறார்கள்..?? ஆயுசுக்கும் நடிகரென்றும், மலையாளியென்றும் எம்ஜியாரை சொல்லி, அவரை இழிவுபடுத்துகிறோம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதுபோல், கடைசி வரை ஜெயலலிதா ஒரு நடிகை என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆளாளுக்கு தேர்தல் ஞாபகம் வந்துட்டுதுடோய்...!!

பி.க…

தூக்கம் தொலைத்த நேற்றிரவு...

நல்ல படம் ஒண்ணு பாத்தேன். அதனால தூக்கம் போச்சு.படத்தின் ஆரம்பத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், போகப் போக மெல்லிய சோகமாக மாறி, பின் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்து கடைசியில் படம் முடியும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீராக மாறி நின்றது. படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் மகனாம். யாராவது "தத்தி" மாதிரி நடித்தால், யாருப்பா அது..ப்ரொட்யூஸர் மகனா ..?? என்றுதான் கேட்போம். ஆனால் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் கிருஷ்ணா, பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி, கதிராகவே வாழ்ந்திருக்கிறார். நடிப்பிலும், டயலாக மாடுலேஷனிலும் அங்கங்கே தனுஷின் சாயல் தெரிவதை தவிர்த்திருக்கலாம். ரஷ் பார்த்த செல்வராகவனாவது திருத்தி இருந்திருக்கலாம். போகட்டும்...

சந்தேகமில்லாமல் யுவன் ஷங்கர் ராஜா தூள் கிளப்பி இருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் அப்பா ராஜாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று சொல்வார்கள். வரும் தலைமுறைக்கு யுவன் சரியான ஆளாக இருப்பார் என்று தோன்றுகிறது. படத்தில் பல இடங்களில் பின்னணி இசை என்ற ஒன்றே இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு, சூழலில் கலந்து படத்தின் பலத்தில் இசை ஒரு பாத்திரமாகவே ஆகி விட்டிருக்கிறது. பாடல் ஆரம்…

அன்பழகன் 83 வது பிறந்தநாள்

நெ.2 :

தலைவரே....எம் பிறந்தநாளுக்கு 83 கிராம்ல செயின் போட்டிருக்கிங்களே..ஆனாலும் உங்க அன்பு கொஞ்சம் ஓவர்தான் . குனிஞ்ச தலையை நிமித்தவே முடியாத கனம்......!!!

நெ.1 :

அட..ஆமாய்யா...அதுக்குத்தான் போட்டேன். என் வாழ்நாள் முழுக்க கட்சி, கட்டுப்பாடுன்னு கப்ஸா விட்டு, உன்னை தலதூக்க விடாம பண்ணியாச்சு. என் புள்ளைக்கும் இதே மாதிரி வணங்கியே இருக்கணும்ல..அதான்..

நெ.2:

சரி..சரி..வேட்டியை கொஞ்சம் இறக்கி விடுங்க. அப்புகிட்ட வாக்குமூலம் வாங்கறாங்க. கொஞ்ச நாள்ல எப்படியும் டவுசர் போட வேண்டி இருக்கும் அப்ப போஸ் கொடுத்துக்கலாம்....என்ன நான் சொல்றது..??

Dedicated to Ramki and Rameshkumar

Around the world in 80 Days

வயதாகி விட்டது. முகத்தில் வயோதிகத்தின் ரேகைகள் தெரிகின்றன. சற்றே பருமனாகக் கூட ஆகி விட்டார். ஆனால் அதே மின்னல் வேகம். அதே டைமிங். தான் ஆங்கிலம் தெரியாத ஆசியன் என்பதையே ஒரு ப்ளஸ் பாயிண்ட் ஆக, காமெடி பண்ண அதை உபயோகப்படுத்திக் கொண்டு ஹாலிவுடிலும் ஜாக்கி சான் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்."Around the world in 80 days" என இன்று ஒரு படம் பார்த்தேன். சரியான ம்சாலா, ஆக்ஷன் காமெடி. தன் கிராமத்திலிருந்து கவர்ந்து செல்லப்பட்ட புத்தர் சிலை, ஒரு இங்கிலாந்து பேங்கில் இருக்க, அதை களவாடி, அதை பத்திரமாக சீனா கொண்டுவந்து சேர்க்க ஃபீலியஸ் ஃபாக் என்கிற ஒரு விஞ்ஞானியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் ஜாக்கி. உலகை 80 நாளில் சுற்றி வருகிறேன் என்று அந்த பிரபுவை வீராப்பாக சபதம் போட வைத்து, பாரிஸில் கவர்ச்சிக்கு ஒரு கதாநாயகியை பிடித்துப் போட்டுக் கொண்டு, துருக்கியில் எங்கள் "கவர்னர்" மன்னன் அரண்மணையில் குழப்பி விட்டு, பிறகு ஆக்ரா வந்து, சீனாவுக்கு போய் புத்தரை சேர்ப்பித்து விட , பிரபுவுக்கு விஷயம் தெரிந்து போகிறது. தனியே கிளம்பி, சான் பிரான்சிஸ்கோவில் பராசக்தி சிவாஜி ஸ்டைலில் பணத்தை பறிகொடுத்து,…

காலம் தாண்டும் நடப்புகள்

ச்..ச்ச்...என்ன கண்றாவிப்பா இது...பாக்கவே கஷ்டமா இருக்கே..

இவர் பேரு சுப்ரமணியன். முன்னாடி ஜெயேந்திரர் ஜெயேந்திரர்னு இவரை கூப்பிடுவாங்க. ஆனா, இவருக்கு முந்தையவரை கூப்பிட்ட மாதிரி காஞ்சிப்பெரியவர்னோ, சங்கராச்சாரியார்னோ கூப்பிடறது ரொம்ப அபூர்வம்.

சரி..சரி..விஷயத்துக்கு வா..இவர் என்ன பண்ணினார்னு சிலுவை..ஸாரி..சூலம் சுமக்க வைக்கிறாங்க. கீழ்ஜாதி மக்களை கோயிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டாரா..??

இல்லையே...அவங்களுக்கு தனி கோயில் கட்டிக்கலாம்னு அறிவுரை சொன்னாரு.

அவங்க மடம் நடத்தற நிறுவனங்கள்ள எல்லாரையும் சமமா நடத்தினார்னு சொல்லி, மேல்ஜாதி சக்திகள் மாட்டி விட்டுடுச்சா..??

அப்படி ஒண்ணும் தெரியலையே..

பெண்களுக்கு மதிப்பு தரணும். அவங்கதான் குடும்பத்தோட வேர்ங்கிறதால, அவங்களை சமமா நடத்தணும்னு சொல்லி, அதனால ஆணாதிக்க கும்பல் இப்படி பண்ணிடுச்சா..??

அதுவும் இல்லை. பெண்கள் வேலைக்கு போறதயும், சுயசார்போட இருக்கறதையும் அவர் ஆதரிச்ச மாதிரி தெரியலை - தனக்கு வேண்டபட்ட பொண்குழந்தைகளுக்கு விவாகரத்து பஞ்சாயத்து பண்ணி வச்சதை தவிர. அது கூட வதந்திதான்.கூடவே எழுத்தாளர் அம்மா ஒண்ணும் கன்னா பின்னான்னு பேசுது. அதை இவங்க பைத்…

நாத்திகம் பயில்

மறுபடியும் மரத்தடி மகாத்மியம். எந்த நேரத்தில் தேவை இன்னொரு பெரியார் என்ற இழை தொடங்கியதோ, அது இன்னமும் செயின் ரியாக்ஷன் மாதிரி வெவ்வேறு அவதாரங்கள் எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. புது தகவல்கள், சுட்டிகள், பேட்டிகள் என்று மக்கள் கைக்கு கிடைத்தை எல்லாம் போட்டுக் தாக்குகிறார்கள்.

இணையத்தில் எழுதுபவர்கள் முழுநேர எழுத்தாளர்களோ, அல்லது அதி தீவிர சிந்தனையாளர்களோ இல்லை - அட்லீஸ்ட் நான் இல்லை. எல்லோரும் எழுதப் பழகுவதோடு, எழுதும் விஷயத்தை எழுதுவதற்காகவாவது சிந்திப்பவர்கள் மற்றும் சிந்திக்கப் பழகுபவர்களே. எந்த இஸங்களையும் கட்டிக்கொண்டும், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அதில் தீவிர ஆராய்ச்சியும் செய்கிறவர்கள் அல்ல. சொல்லப்போனால், எந்த இஸத்துக்கும் அடியார்களாக இருப்பதை விடவும், எல்லாவற்றில் உள்ள நல்லது கெட்டதை ஆராயும் திறந்த மனம் இருப்பவர்களாக இருத்தல் நன்று. அப்படி இருக்கையில் இம் மாதிரி விவாதங்கள் நடக்கும்போது, மடலாடற்குழுவில் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் விவாதத்தின் போக்கை குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இப்படி நடந்தால் வெறும் சாம்பார் திரியாகவும், புதுக்கவிதை…

எப்படி ..எப்படி..உயர்ந்தது எப்படி..??

ஏற்கனவே என் கூட பணிபுரியும் ஆசாமிகள் எப்படி ஜாலி டைப் ஆக இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறேன். ( ஆமாம்..நீ மட்டும் என்ன ..?? என்று நீங்கள் கேட்பது புரிகிறது). அதில் இந்த சமயம் பண்டிகைத் தினங்கள் வேறு என்பதால், அலுவலகத்தில் ஈயடிக்கிறது. எல்லாரும் மூன்று மணிக்கே மூட்டையை கட்டி விடுகிறார்கள்.

என்னுடைய நண்பரும் நானும் இதை ஆச்சரியமாகவே பேசிக் கொண்டிருப்போம். கம்பியில்லாத் தந்தியிலிருந்து, தையல் மிஷின், கம்ப்யூட்டர், லைட் பல்பு டெலிஃஃபோன் வரை இத்தனை அறிவியல் உன்னதங்களை கண்டுபிடித்த நாட்டில், இத்தனை காலம் நாங்கள் தங்கி இருந்ததில், சீரியஸான அமெரிக்கர்கள், புத்திசாலிகள் என்று நாங்கள் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அருமையாக வாயடிப்பார்கள். அட்டகாசமாக ட்ரெஸ் பண்ணுவார்கள். வெளெரென்று உயரமும் அகலமுமாக ஆறடிக்கும் மேல் இருப்பார்கள். ஆனால் வேலை என்று வந்து விட்டால், " இது என்னுதில்லை என்கிற NIMBY - Not In My Back yard attitude தான் எல்லார்க்கும் இருக்கிறது. ஆஃபிஸில் பாதி நேரம் ஸ்போர்ட்ஸ் பற்றி, தான் கடைசியாய் போய் வந்த வெகேஷன் பற்றி, தன் செல்ல…

டா கிங் மறைவு

தலைக்கு தொப்பி போட்டு, முகத்துக்கு இன்னமும் கொஞ்சம் ரோஸ் பவுடர் தடவி இருந்தால், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் கலந்து செய்தது போல இருப்பார் ஃபெர்னாண்டோ போ . பிலிப்பினோ சூப்பர் ஸ்டார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களின் போது வழக்கமாக நடத்தப்படும் ஒரு பார்ட்டியில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து காலமானார். அவருக்கு வயது 65.

இத்தனை வயதிலும், படங்களில் நடித்துக் கொண்டு நம்மூரின் ஹீரோக்கள் போல ஏழைப்பங்காளன் வேடங்களில் நடித்து நடித்தே லட்சக்கணக்காண ரசிகர்களை பெற்றிருந்தவர். சமீபத்திய தேர்தலில் இப்போதைய அதிபர் எஸ்டராடாவை கிட்டத்தட்ட தோற்கடித்திருக்க வேண்டியவர், மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார். " Breakfast, Lunch, Dinner" என்ற கவர்ச்சியான கோஷத்தோடு தேர்தலை அணுகியவர், சரியான செயல் திட்டங்களை அறிவிக்காததால், படித்த வாக்காளர்களாலும், பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்டு மண்ணைக் கவ்வினார். இப்போதைய அதிபர் அர்ரோயாவுக்கு முந்தைய அதிபர் எஸ்டராடாவும் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்றாலும், அதிபராவதற்கு முன் மேயராகவும் செனட்டர் ஆகவும் ஏகப்பட்ட கால…

கொலையும் செய்வார் மதி கெட்ட பதி...

அமெரிக்க மீடியாக்களுக்கு அவ்வப்போது ஏதாவது பரபரப்பு செய்தி கிடைத்துவிடும். அதை ஊதிப் பெரிதாக்கி, நோண்டி நுங்கெடுத்து, பாடி பறக்கச்செய்து, எல்லாரும் அதைப் பற்றி பேச செய்து விடுவார்கள். எலெக்ஷன் பரபரப்பிலும், இராக் படையெடுப்பிலும் முக்கியத்துவம் இழந்து இருந்த செய்திகளில் முக்கியமானது லாசி பீட்டர்சன் கொலை வழக்கு.
அவரைக் கொன்றதாக அவர் கணவர் ஸ்காட் பீட்டர்ஸன் மீது குற்றச்சாட்டு நிரூபணமாகி, அவருக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. இடையில், ஜூரிகளில் ஒருவரை "வாங்க" முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்து, ஏகப்பட்ட பரபரப்புக்குப் பின் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தண்டணை நிறைவேறுகிறது. கிட்டத்தட்ட இதுவரை கலிஃபோர்னியா மாகாணத்திலேயே அறுநூற்றைம்பது பேருக்குத்தான் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது. கடைசியாய் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டது 2002 ஆம் வருடம்.

ஆரம்பத்தில் தன்னுடைய லாயர்களுடன் சோக முகத்தோடு ஷேவ் செய்யாமல் பரிதாபமாக வந்த ஸ்காட், பிறகு ஜம் என்று ட்ரிம் ஆக வர ஆரம்பித்தார். Scott is Hot என்றெல்லாம் டாப்ளாய்டுகளில் செய்தி வந்தது. இந்த வழக்கில் இருந்து …

இங்க ஒரு போஸ் ....

போஸ் குடுத்த புள்ளாண்டான், சோஃபாவுல கொஞ்சம் சரியா உக்காரக் கூடாதா..??

என்னமோ போங்க..!!

இசைக்குயில் பறந்தது....

சங்கீத மேதை டாக்டர் எம்.எஸ் மறைந்தார்கள்என்ற செய்தி கேட்டு தமிழ்நாட்டில் எத்தனை உள்ளங்கள் துடிதுடிக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எண்ணிலடங்கா பட்டங்களும், ஏகப்பட்ட ரசிகர்களையும் பெற்றிருந்த அவர், தனக்கு இசை மூலமாக வந்த எல்லா செல்வத்தையும் அறக்கட்டளைக்கும் அனாதை இல்லங்களுக்குமே கடைசி வரை அளித்து வந்தவர். மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என அழைக்கப்பட்ட அவர், கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர் திரு. சதாசிவம் அவர்களை மணந்து, அவருடைய மனமொத்த சகியாக இருந்து, ஐ.நா சபை வரை சென்று பாடும் பெரிய பேறு பெற்றிருந்தார்.

ஒரு சாயலில் இந்தக் கால ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் எம்.எஸ் அவர்களை ஸ்ரீ ரங்கபுர விஹாரா என்ற பாடல் மூலம் முதன் முறையாக அறிந்து கொண்டேன். என் தகப்பனார் இவருடைய சங்கீதத்தின் பரம் விசிறி. எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், போன்றவர்களின் பாடல்களும் அவருக்கு பிடிக்கும் என்றாலும், எம்.எஸ் கச்சேரி கேட்கும்போது தன்னை மறந்து விடுவார். கச்சேரிகளின் போது, ஏகப்பட்ட அங்க சேஷ்டைகள், அலட்டல்கள், முகபாவ மாற்றங்கள் எல்லாம் செய்யும் இசைக்கலைஞர்கள் மத்தியில் எம்.எஸ் அம்மாவின் கச்சேரியை ஒளிப்பேழையில்…

அலாரம் அடிக்கும் நகரம்

நகரம்


தனியே இருத்தி
தென்னோலை அடைத்து
உலக்கை உருட்டி
ஊருக்கும் உறவுக்கும்
சொல்லி
சல்லடைத் தட்டு வழியே
மஞ்சள் நீரூற்றி
பூச்சூடி
பட்டுடுத்தி
புட்டு சுற்றி
நலங்கு வைத்து
திருஷ்டி கழித்து
"படம்" காட்டும்
தமிழ் சினிமா
மலைப்பாய்த் தான்
இருக்கிறது
பள்ளி நேர அவசரத்தில்
விழுந்தடித்து ஓடி
ஒன்பது மணிநேர
கசக்கலிலும்
நெரிசலிலும்
மூச்சுத்திணறி வியர்வை வழிய
மாநகர போக்குவரத்துக் கழக
23-C பேருந்தில்
பூத்த
என் செல்லத்துக்கு....


அலாரம்

அதிகாலைக் குளிர்
எழுந்து அணைத்து
விட்டுத்
தூங்கினேன்.
அரை மணி கழித்து
பையன்...

வாங்க..மக்கா...வாங்க !!!

பிச்சைப்பாத்திரத்தைப்
பார்த்து
வாந்தி எடுத்த மாதிரி
இருக்கிறது என்று
சாத்தான்குளத்திலிருந்து வேதம்
ஓதுகிறார்கள்
ஒலிக்கும் கணங்களை
உணராத பேதைகள்

என்ன நவீன கவிதை மாதிரி இருக்கா..?? ஹி..ஹி

திசைகள் நம்பி, ஸ்வஸ்திக் ஆட்ஸ்காரர், லொள்ளு பாய் மற்றும் கொல்கத்தா டீச்சரம்மாவுக்கு வரவேற்பு.

இரண்டு நாட்கள்....

கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு. Calpers ல் சேர்ந்து இரண்டு மாதங்களான பிறகு, புதிதாக சேர்ந்தவர்களுக்கான பயிற்சி வகுப்பு போவதென்பது - அதுவும் இங்கேயே மூன்று வருடங்களாக கன்சல்டந்த் ஆக பணி புரிந்த எனக்கு வித்தியாசமான அனுபவம்.

மற்ற பிரிவிலிருந்தும், மற்ற கிளைகளிலிருந்தும் வந்திருந்த புது மனிதர்களோடு பழகுவது வித்தியாசமாக இருந்தது. வந்திருந்தவர்களை குழு குழுவாக பிரித்து இருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஆறு பேர். எங்கள் குழுவில் ஒருவர் இந்தியர். ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர். ஒருவர் பிலிப்பினோ-ஸ்பானிஷ். ஒருவர் வியட்னமிஸ். ஒருவர் சீனர். ஒருவர் ஐரிஷ் அமெரிக்கர். கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் இதுமாதிரி கலவைதான் . ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் கூடி உட்கார்ந்து பேசும்போது, இத்தனை கலவையான சமூகத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிலும் நம்மாட்களை தவிர பெரும்பாலான இனத்தவர்கள், எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக பழகக் கூடியவர்கள். ரொம்ப ஜோவியனான ஆசாமிகள்.

பயிற்சியில் ஒரு நள் Trade Room என அழைக்கப்படும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். calpers ன் சொத்து மதிப்பு 160 பிலியன் டால…

அட....

சிம்புவின் பேட்டி இந்த வார விகடனில் சூப்பர். தனுஷ் கல்யானத்தை பற்றியும், தன் பழைய நட்பைப் பற்றியும் மிக அருமையாக பேசி இருக்கிறார்.
தன்னுடைய நட்பை, காதலை வெறும் புலம்பலாகவும், துவேஷமாகவும், கவிதைகளாகவும், தாடியாகவும், சுயபச்சாதாபமாகவும் பயிர் செய்யும் மக்களிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு இருக்கிறது இவர் அணுகுமுறை

இந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - ரோஸா வஸந்த் மனது வைத்தால் ....(ஹி..ஹி)

இன்னைக்கி லீவ்

காலைலேர்ந்து ஆஃபிஸ்ல ஒரே பிஸி. ட்ரெய்னிங் ஒண்ணு போக வேண்டி இருந்தது. நடுவுல நண்பர் அருணுக்கு மட்டும் அவர் பொட்டிக்குள்ள பதில் போட்டேன்.

சாயங்காலம் தான் வந்து சில விஷயங்களை படிச்சேன். வாய் விட்டுச் சிரிச்சேன். தகவலுக்கு என்று நேற்று சில விஷயங்களை இங்கே நான் எழுதி இருந்தாலும், வழக்கம்போல அவ்விடம் "தாவல்" தான் நடந்திருக்கு.

இருக்கட்டும்...

இதுவரை, தினம் தினம், அவருடைய "தாவல்களை" வைத்து என் வலைப்பதிவில் "பிழைப்பு" நடத்தியது போதும். இனிமேலாவது சொந்தமா ஏதாச்சும் எழுதறதுக்கு முயற்சி பண்ணுவம்.

அவருடைய காலட்சேப சங்கீதம் கனஜோரா நடக்கட்டும். உடுப்புகளை கிழிச்சிகிட்டு புலம்பற லெவல் வரைக்கும் போகாம இருந்தா சரிதான்.

பாவம்..!!!

மற(றை)க்கப்படும் மறுமொழிகள்

கற்றதும் பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா கீழ்கண்டவாறு ஆரம்பித்துவிட்டு ....

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் அவாள் சங்கீதமாகி விட்டது!

தொடர்ச்சியாக பத்து யோசனைகளில் இவற்றையும் சொல்லி இருந்தார்.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.
9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது.

சங்கீதத்தின் அவசியத்தையும், மனிதனை செம்மைப்படுத்தும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதனை எல்லார்க்கும் பரவலாக்க, தமிழிசையை ஊக்குவிப்பது என்று தொனி எழ அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

போன வருடம் சங்கீத சீசனில் பா.ம.க ஏற்பாடு செய்த தமிழிசை விழாவில் தயிர் சாதப் பொட்டங்களுக்காக நடந்த அடிதடி பற்றி டாக்டர்.வாஞ்சி 01-01-2004 அன்…

பண்டிகை தினங்கள்

கடேசி குவார்ட்டர் என்று ஏற்கனவே இங்கே எழுதி இருந்தேன். இது கிட்டத்தட்ட அதனுடைய தொடர்ச்சிதான்.

கிறிஸ்துமஸ் வர இன்னமும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. குளிர் அதிகம். பண்டிகை கூட்டமும் அதிகம். இரவில் எங்கள் குடியிருப்புப் பகுதியே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. எல்லா கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது வருவதைப் போலவே, இப்போதும் ஒரு படம் வந்திருக்கிறது என்றாலும், இதைப் போல இன்னொரு படம் வர முடியாது என் டீம்மேட் ஜீன் தாத்தா சொல்கிறார். இன்னமும் நான் இரண்டையும் பார்க்கவில்லை.

போன கிறிஸ்மஸ் நாங்கள் அபார்ட்மெண்டில் இருந்தோம். வாங்கிவந்த கலர் பல்புகளை வாசலில் உள்ள பந்தல் மாதிரி உள்ள roof ல் தொங்கவிட்டு விளக்கெரிந்தபோது ஜூனியர் மூஞ்சில் சூரியகோடி பிரகாசம். எங்களுக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை என்றாலும், கிறிஸ்மஸ் மரம் வைத்து, புகை போக்கி வழியாக தாத்தா இறங்கி வந்து கிஃப்ட் கொடுப்பார் என்றெல்லாம் கதை விட்டு, கிறிஸ்மஸ் காலையில் எழுப்பி, பரிசு கொடுத்தோம். மறுபடியும் அண்ணாச்சி மூஞ்சு முழுக்க 1000 வால்ட் பல்பு போட்டார்.

இந்த வருடம் இன்னமும் கிறிஸ்மஸ் மரம் வைக்கவில்லை. போனமுறை லோக்கல் சித…

NaaCh - A Movie by RGV

" Ye Gandha hai. Lekin ye Dhandhaa hai" என்று ராம் கோபால் வர்மா ஒரு டைரக்டர் கதாபாத்திரம் மூலமாக பேசி இருக்கிறார். உண்மையில் தனக்குள் இருக்கும் பல துண்டுகள் தொடர்ந்து நடத்தும் வாக்குவாதங்களையே இதில் படமாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது.(படத்தில் டைரக்டர் மற்றும் அந்தரா மாலி)

ராம்கோபால் வர்மாவின் ட்ரீட்மெண்ட் இப்போது கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கிறது. ரங்கீலா படத்தைப் போல இதற்கும் சினிமாத் துறை தான் களம். ஆனால் அதில் உள்ள ட்ராமா இதில் கிடையாது. பாத்திரங்கள் அழுத்தமானவர்கள். (ஒரே ஒரு இடத்தை தவிர) அதிகம் பேசாமல், வெறுப்பானாலும், கோபமானாலும், காத்லானாலும், திமிரானாலும் அடர்த்தியான செறிவான மெளனத்தில் ( தாங்க்ஸ் ஆசிப்பு :-) ) காட்டி விடுகிறார்கள்.

சிறுகதையை நாவலாக்கினால் என்ன கொடுமை நடக்குமோ, அதை விட கொடுமை இந்தப் படத்துக்கு நடந்திருக்கிறது. சங்கரமடத்தின் புனிதம் போல மகா வீக்கான, நோஞ்சலான ஸ்டோரி லைன். நடிகர்களின் நடிப்பில் சின்ன சுவாமிஜியின் அழுத்தம். அங்கிருக்கும் பணத்தைப் போல க்தாநாயகியின் கவர்ச்சி. விஷயம் வெளியே வந்த வேகத்தைப் போல மகா ஸ்லோவான திரைக்கதை.

அபிஷேக் பச்சன் அருமையாக…

இடைவெளி

முகமே தெரியவில்லை
முதல் முதலாய் பார்த்தபோது
முகடுகள் தெரிந்து விட்டால்
முகமெங்கே தெரிகிறது.

வெறித்துப் பார்த்தலில்
விவேகம் இல்லை என
பலவீனமாய் மூளை நினைவுறுத்த
மனசு மட்டும் இடைவெளியில்
தெரிந்த
தரிசனத்துக்கு சண்டித்தனம் செய்யும்

பேனாவுக்கு கை நீட்டியும்
பேச்சுக்கு புன் சிரித்ததிலும்
வணக்கத்துக்கு தந்த தலையசைப்பிலும்
பேர் சொன்ன அறிமுகத்திலும்
குறைந்தது
இடைவெளி மாத்திரமில்லை
கொஞ்சம் வெம்மையும் கூட

பழகவும் பேசவும்
பகிரவும் மலரவும்
இறகாச்சு மனசெனக்கு.
பேசாத விஷயம் அங்கே
ஏதும் மீதம் இல்லை
இப்போதெல்லாம்.
மணிக்கணக்கில்
பேசிப் பிரிகையில்
எங்காவது தெரிந்திருக்கலாம்.
ஏதும் விலகி இருக்கலாம்.

யாரதைப் பார்த்தார்கள்.

மனசும் மூளையும்
சேர்ந்திணையும் மாயாஜாலம்
தோழமை தந்த வரம்.

மாதர் சங்கம் - 1982

கண்ணாடி என்கிற பிரயோகத்தையே சந்தேகப்படுத்தும் விதமாக எப்போதும் மணல்கயிறு கிஷ்மு மாதிரி மூக்கிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் சோடாபுட்டி. மெலிந்த தேகம். எப்போதும் கலைந்து கிடக்கும், அம்மா தேய்த்துவிட்ட yendeluxe தேங்காய் எண்ணையோடு கோரை முடித தலை. நெற்றியில் பளிச்சென்று தெரிய வேண்டுமென்பதற்காக பாண்ட்ஸ் பவுடரில் (விபூதிக்) கீற்று. வாய்க்குள் சதா ஏதாவது ஒரு பாட்டு. தெருவில் நடந்து கொண்டே கதைப் புத்தக வாசிப்பு. சட்டைப் பையில் "சிவந்த மண்" வாங்கித் தின்ன, பெருஞ் சண்டைக்குப் பிறகு அம்மா கொடுத்திருக்கும் அஞ்சு காசு. மேற்சொன்னவைகளோடு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பொடியன் சடாரென்று ஒரு நாள் பிரபலமானான்.

மாயவரம் மாதர் சங்கம் சார்பாக நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்ற தலைப்பில் 1982 ஆம் வருடம் பேச்சுப் போட்டி. அப்போது அவன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலோடு அப்பா எழுதி கொடுத்த தமிழ், சரளமாக நாவில் விளையாட, அந்தப் பேச்சுப் போட்டியில் அவனுக்கு முதல் பரிசு. பாரதி புண்ணியத்தில் கழுத்தில் விழுந்த …

பெங்களூரும், டெல்லியும்

நல்ல விஷயமே கண்ணுல படாதா என்று கேட்காதீர்கள். பெங்களூரி பிஷப் காட்டன் பள்ளியில் ராக்கெட் விட்ட சேதியை படிச்சதும் நெஞ்சு கொள்ளாத பூரிப்பு வந்தது. டெல்லி கொடூரத்தைப் பத்தி படிச்சதும், காணாப் போச்சு.

சவுத் டெல்லி ஸ்கூல்ல +1 படிக்கிற ரெண்டு பிள்ளைகள் ஸ்கூலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கூடப் படிச்ச, பழகின, காதலிச்ச பொண்ணோட தான் தப்பு பண்ணியதை வீடியோ எடுத்து வித்திருக்கிறான் ஒரு அயோக்கிய நாய். 100 ரூவா விலை. 'சாமி ' படம் விக்கிற வீடியோ கடையில எல்லாம் இப்ப இதான் ஹாட் ஐட்டமாம். வெளிநாட்டுல பொம்பிளை பிள்ளைகளை வளத்தா, சீரழிஞ்சு போய்டுவாங்கன்னு, வயசுப்பிள்ளைகளை இந்தியா கூப்பிட்டுட்டு போயிடணும்னு அமெரிக்காலேர்ந்து கிளம்பற எத்த்னையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். இந்தியா நாம் விட்டுட்டு வந்த மாதிரியே இருக்குன்னு நினைச்சுகிடாதீங்க...!! எதை எதை காப்பி அடிக்கக்கூடாதோ, அதை எல்லாம் நம்ம பிள்ளைங்க கத்துக்கிடுது.

இந்த மாதிரி தப்பு பண்ணிணதுக்கு, அந்த பையன் மூச்சா கூட போக முடியாதபடி லுல்லாவை வெட்டி அரபி ஸ்டைல் தண்டணை கொடுக்கணும்.

ஆதவன் தீட்சண்யா

இவர் பெயரை நேசமுடன் வெங்கடேஷோ அல்லது பா.ராகவனோ எழுதிப் படித்திருக்கிறேன். இவருடைய சில கவிதைகளை தட்ஸ்டமில்.காமில் இன்று படிக்க நேர்ந்தது. அருமையாக எழுதப்பட்ட கவிதைகள். உங்கள் வாசிப்புக்கு

ராயர் காப்பி க்ளப் மூலமாக ஏற்கனவே அறிமுகமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் நா.முத்துநிலவன் கவிதையும் அற்புதம்.

நாத்திகம் பரப்ப நாமே ஒரு கருவியாவோம் என்று ஜகத்குரு(?!!!) சற்றேனும் நினைத்திருப்பாரா..??

இருள்நீக்கி சுப்ரமணிய சேவை

கருணாநிதி செய்யாததை ஜெ செய்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டேன். பெரியார் செய்ய முடியாததை இருள்நீக்கி சுப்ரமணியன் (எ) ஜெயேந்திரர் செய்து விடுவார் போலிருக்கிறது. இன்று காலை உஷாவைப் பற்றியும், அனுராதா ரமணணைப் பற்றியும், ஸ்வர்ணமால்யாவைப் பற்றியும், இன்னமும் சந்தேக லிஸ்டில் இருக்கும் பல அழகிகளைப் பற்றியும் என் மராட்டிய நண்பரிடம் பிரஸ்தாபித்த போது, " அட...விஸ்வாமித்ரரே மேனகையிடம் மயங்கலையா..?? இதற்கெல்லாம் புராணத்திலேயே முன்னுதாரணங்கள் இருக்கிறதே" என்றார் குசும்பாக சிரித்தவாறே.

"வென்றால் அண்ணா வழி. தோற்றால் பெரியார் வழி" என்பார் கருணாநிதி அடிக்கடி. சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கத்தாமல், பிராமணர்களின் ஓட்டுகளுக்காக சங்கரமடத்துக்கு பரிதாபப்படுவது போல நடித்து ஓட்டுப் பொறுக்கி வேலை பார்க்காமல், இதைப் போல ஜெ எடுத்திருக்கும் உருப்படியான நடவடிக்கைகளையும் குறை சொல்லாமல் கட்சி நடவடிக்கைகளையும், தேர்தல் ஜாலங்களையும் உருப்படியான ஆட்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, ரிடையராவது நல்லது.

இல்லாவிட்டால் மக்கள் 2005 தேர்தலில் அனுப்பத்தான் போகிறார்கள்.


வெகுநாள் கழித்து.....

அப்படி ஒன்றும் பெரிய ஊர்சுற்றல் இல்லை கடந்த நான்கு நாட்களில். ஆயினும் குடாப்பகுதி வரை செல்ல வேண்டி வந்தது. சென்னையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் B1 விசாவில் வேலைவிஷயமாக வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, வசமாக Blade போட்டுவிட்டு, வந்ததற்கு Mysteryspot மற்றும் Santacruz Beach பக்கமாக ஒதுங்கிவிட்டு, வரும் வழியில் இரவில் CA-17 மலைப்பாதை வழியாக அவரை பயமுறுத்திக்கொண்டேகாரை ஒட்டிவந்து, தமிழ் வழக்கப்படி நண்பனின் வீட்டில் மாயவரத்தானால் "பாடல்" பெற்று வரும் சன் டீவி பார்க்க நேர்ந்தது. ( ஹப்பா...ஹப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய வாக்கியம்...)சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து…

உடன்பிறப்பே...மகிழ்ச்சி...

அமெரிக்காவில் நியூயார்க் மாநகரிலே வருடா வருடம் நன்றியறிவித்தல் தினத்தன்று ஒரு பேரணி நடக்கும். அண்ணாவும், நானும், பெரியாரும் நடாத்திய பேரணி போலல்லாமல், குழந்தைகள் மனத்தை கொள்ளை கொள்ளும் விதமாக நையாண்டி முக நாயகர்களும், நளின உடை நாரீமணிகளும் , அலங்கார ஊர்திகளும், வண்ண வண்ண பலூன்களும் அணிவகுத்து வரும். இரண்டே முக்கால் மைல் நீளமாய் வந்த அந்த பேரணியிலே, இன்று "ஷககலக்க பேபி,...ஷக்கலக்க பேபி " என்று தமிழன் இசையமைத்த பாட்டுக்கு மங்கையரும், காளையரும் இந்திய முறையில் நடனமாடி, உடல் குலுக்கி, ஆடிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழன் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடாமல், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பாடியது நயவஞ்சக நெஞ்சம் கொண்ட வடவரின் சதி என்றாலும், தமிழன் வரும் காலங்களில் அதையும் முறியடிப்பான் என்று கூறி , உன்னை நான் வாழ்த்துகிறேன் இந்த நாளில்.

- மு.க

( சொன்ன ஆள்தான் நம்ம ரீலு. நியூஸ் நெஜம்தானுங்க...வசுந்தரா தாஸ் வந்திருக்காங்க என்று எல்லே வில்லோன் சொன்னதுக்கும், இதுக்கும் ஏதும் லிங்க் உண்டுங்களா..?? ஹி..ஹி..)
என்ன தேடறீங்க..??

Thanksgiving Dinner ல் கட்டாயம் இடம்பெறும் ஐட்டங்கள் வரிசையில் வான்கோழிக்கும், பூசணி கேக்கிற்கும், சோளரொட்டிக்கும் பெரிய இடம் உண்டு. பொங்கல் அன்று பானையைப் போல், தீபாவளியன்று பட்டாசைப் போல், காரடையான் நோன்புக்கு கயிறு போல் ( அடை போல்..??!!) , இங்கே இன்று வான்கோழி.

இப்போ படம் புரிகிறதா... ?? டின்னர் டேபிளுக்கு போக பயந்து, வேறு டேபிள் லாம்ப் ஆக கோழி.

ஸார் கீழே தேடிக் கொண்டிருக்கிறார்.

Thanksgiving Holidays

அடுத்த நான்கு நாட்களுக்கு அமெரிக்காவில் விடுமுறை. இன்னொரு நீள்வாரயிறுதி. இன்னொரு Sale மேளா. இன்னொரு பரபரப்பு நெடுஞ்சாலைத் தினங்கள். வான்கோழியோடு விருந்துகள்.

இந்த விடுமுறையின் அர்த்தம் தெரிய வேணுமாயின்,

இங்கே க்ளிக் குங்கள்.

Happy Thanksgiving Holidays...!!!

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிம…

எல்லே ராம் - யார்..??

தட்ஸ்டமில்.காம் என்கிற தமிழ் வலைப்பக்கத்தில் நைட் எஃபக்ட்டில் ஏஞ்சல் ராமச்சந்திரன் என்று(ம்) அழைக்கப்படும் எல்லே ராமின் பேட்டிக்(?)கட்டுரை.
அன்றும், இன்றும் - அவரே -

ச்சே..காலம்தான் எத்தனை குரூரமானது - ஆள் இப்படி மாறிட்டாரே...

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வே…

லேட்டா அடிச்ச ஷாக்

வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.

ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!

'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட…

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

அட..அட..அட...

கலர் என்னமா மாறீட்டுது...

( முதல்வரோட பச்சை கலர், திருமதி ரஜினி புடைவையில்....அதைச் சொன்னேன்)

எப்படி கட்டுப்படியாகிறது...???

காரைக்குடி காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். சுப்ரமணியபுரம் சுகுமார் பில்டிங் அருகே உள்ள ஒரு ஷாப் கடையில் ( ஹி... ஹி..நடு செண்டர், க்யூ வரிசை மாதிரி) ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். 15 ரூபாய். வீட்டுக்கு கொண்டு வந்து இங்க் போட்டுவிட்டு, சட்டைபையில் செருகிக் கொண்டு காலேஜ் போனேன். போய் இறங்கியவுடன் பார்த்தால், பாக்கெட் எல்லாம் இங்க். என்னடா இது என்று டென்ஷனாகிப்போய், சாயங்காலம் மறுபடியும் அதே கடைக்குப் போய், " என்னங்க இது..?? நேத்துதான் உங்க கடையில பேனா வாங்கிப்போனேன். இப்படி ஒழுகுதே. இப்படி ஏமாத்தலாமா நீங்க..? " என்று நியாயம் கேட்க, அந்த வீணாப்போன கடைக்காரன் ஒரு முன்னாள் ரெளடியாம். கடையை விட்டு வெளியே வந்து ஓங்கி ஒரு அறை விட்டான். " என்னடா சொல்ற...?? ஏமாத்திட்டேன்னா..?? ஆமாம்..இப்ப என்னங்கிற..என்ன வேணா பண்ணிக்கோ.." என்றான் பாதகன். நேராக போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, பிரச்சினையாக்கிய பின், ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, புது பேனா கொடுத்தான். பின்னாளில் என் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியபோது கூட " என்னா மச்சி ..இப்படி விட்டுட்ட..ஒரு வா…

மரத்தடி தந்த யோசனை

மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.

இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைக…

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நி…

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பண…