Wednesday, December 01, 2004

பெங்களூரும், டெல்லியும்

நல்ல விஷயமே கண்ணுல படாதா என்று கேட்காதீர்கள். பெங்களூரி பிஷப் காட்டன் பள்ளியில் ராக்கெட் விட்ட சேதியை படிச்சதும் நெஞ்சு கொள்ளாத பூரிப்பு வந்தது. டெல்லி கொடூரத்தைப் பத்தி படிச்சதும், காணாப் போச்சு.

சவுத் டெல்லி ஸ்கூல்ல +1 படிக்கிற ரெண்டு பிள்ளைகள் ஸ்கூலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கூடப் படிச்ச, பழகின, காதலிச்ச பொண்ணோட தான் தப்பு பண்ணியதை வீடியோ எடுத்து வித்திருக்கிறான் ஒரு அயோக்கிய நாய். 100 ரூவா விலை. 'சாமி ' படம் விக்கிற வீடியோ கடையில எல்லாம் இப்ப இதான் ஹாட் ஐட்டமாம். வெளிநாட்டுல பொம்பிளை பிள்ளைகளை வளத்தா, சீரழிஞ்சு போய்டுவாங்கன்னு, வயசுப்பிள்ளைகளை இந்தியா கூப்பிட்டுட்டு போயிடணும்னு அமெரிக்காலேர்ந்து கிளம்பற எத்த்னையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். இந்தியா நாம் விட்டுட்டு வந்த மாதிரியே இருக்குன்னு நினைச்சுகிடாதீங்க...!! எதை எதை காப்பி அடிக்கக்கூடாதோ, அதை எல்லாம் நம்ம பிள்ளைங்க கத்துக்கிடுது.

இந்த மாதிரி தப்பு பண்ணிணதுக்கு, அந்த பையன் மூச்சா கூட போக முடியாதபடி லுல்லாவை வெட்டி அரபி ஸ்டைல் தண்டணை கொடுக்கணும்.

2 comments:

  1. அன்புள்ள சுந்தர்,

    சரியாச் சொன்னீங்க! இந்தியா கெட்டுக் கிடக்கறதைப் போனமுறை போயிருந்தப்ப பார்த்துட்டு மனசு நொந்து போச்சு. என் பொண்ணு அதைப் பார்த்துட்டு, என்னை 'தாளிச்சு விட்டுட்டா!'
    என்னமோ இந்தியாலே இப்படியெல்லாம் இருக்காதுன்னியே! இப்ப என்னா சொல்றேன்னு.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. ஹரி ராசா,

    தப்புன்னு நீங்க எதை நினைக்கறீங்க..?? செக்ஸ் வச்சிகிட்டதையா..??

    நாஞ் சொல்றது அதுக்கும் மேல...பதினொன்னாவது படிக்கிற வயசுல, கூடப் பழகுன பொண்ணை அசிங்கமா வீடியோ எடுத்து வித்திருக்கு அந்த நாய். அதைப் பாக்கலியா நீங்க..?? times of india link கொடுத்திருந்தேனே...?!!! என்னமோ போங்க...

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...