மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.
இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தது எது எனவும் கேட்டால், அந்தத் தகவலும் உதவும்.
இப்படிப்பட்ட தகவல்களை சேர்த்து வைத்தாலே போதும். படிக்கத் தோதான வலைப்பூக்களை தேர்ந்தெடுப்பதும், எப்படி மதிப்பிடுவது என்பதும், வாத்தியார் தேர்ந்தெடுக்க சொல்வதும் தேவை இல்லை. ஏனெனில், நாம் எழுதும் பல கட்டுரைகளை நாமே கால ஓட்டத்தில் மறந்து விட வாய்ப்பிருக்கிறது. கண்ணுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வைக்காவிட்டால் இணையத்தில் கோஷ்டி அரசியல் நடக்கிறது. முகமூடி கலாசாரம் தாங்கவில்லை. தனிமனித தாக்குதலும், ஜாதி சண்டைகளும் தான் நடக்கிறது என்று மேலோட்டமாக அறிக்கை விடுபவர்கள் சொல்வதுதான் உண்மை என்று எல்லோரும் நினைக்கும் அபாயம் இருக்கிறது.
மரத்தடி மடலாடற்குவில் கிடைக்கும் விஷயங்களை மரத்தடி.காம் சேகரித்து வைத்து இருப்பது போல, வலைப்பூக்களில் இருந்து தேர்நதெடுக்கப்பட்ட கட்டுரையின் சுட்டிகளை தமிழ்மணம்.காம் தளத்தில் வைக்கலாம்.
இந்த முயற்சிக்காக என் உழைப்பும் பங்களிப்பும் யார் கேட்டாலும், எந்த விதத்திலும் செய்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
No comments:
Post a Comment