Friday, November 12, 2004

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பணம் கொடுக்காமல் யாரோ பொருளை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதை சொல்லும் விதமாக பீப்.பீப் என்றது. ( சிங்கப்பூரில் உள்ள ஸ்டோர்களில் இது கொஞ்சம் சத்தமாகவே கத்தும். தொடர்ந்து கேட்டால் " ஓடறான். ஓடறான்." என்று கத்துவதுபோல் இருக்கும்)
உடனே கவுண்டர் அம்மணி, ஓடினாள். ஒரு மெக்ஸிகன் இளைஞன், இரண்டு தோள்களிலும் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு சர்வசாதாரனமாக நடந்து போனான். கவுண்டர் அம்மணி ஓடிவருவதிப் பார்ததும், சர்வசாதாரணமாக ஓவர் கோட்டை நெகிழ்த்தி, முழங்கைக்கும் சற்றே நீளமான கத்தியை எடுத்துக் காட்ட, கவுண்டர் அம்மணி, பேச்சடைத்து நின்று விட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மூச்சு நின்று விட்டது. அத்த்னை பெரிய பளபளப்பான வாளை சமீபகாலங்களில் நான் எங்கும் பார்த்ததில்லை. நல்லவேளை துப்பாக்கி வைத்துக்கொண்டு தாறுமாறாக சுட்டுவிட்டு ஓடியிருந்தால் என்ன ஆகி இருக்கும். "கடைக்குப் போனால் பர்ஸில் பனம் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று நெனைச்சுகிட்டு இருந்தேன். வாள் எடுத்துகிட்டு போனா போறும்போலிருக்கே " என்று திரும்ப காரில் வரும்போது மனைவியிடம் கமெண்ட் அடித்தாலும், கொஞ்சம் உதறலாகவே இருந்தது.

போலிஸுக்கு ஃபோன் பண்ணிவிட்டு, கவுண்டர் அம்மணி மறுபடியும் இரண்டு டாலருக்காக தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்தது தனிக்கதை.

1 comment:

  1. 10டாலர் பொருளை கடைக்காரரே ஆப்பர் விலைக்கு 8டாலராக விற்றாலும்கூட அதனை 5டாலருக்குக் கேட்கும் பழக்கம் எனக்கும் உள்ளது. ஆனால் கத்தி எல்லாம் எடுத்துட்டு போனதில்லை மூக்கரே!

    ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...