Thursday, November 04, 2004

யாசர் அராஃபத்

யாசர் அராஃபத் அவர்களின் உடல்நிலை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ஏன் ஒரு மனிதரின் உடல்நிலை குறித்து இப்படிப்பட்ட புனைவுகள் கிளம்ப வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

முதலாவது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர் இறந்தே போனால் கூட அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தன் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடலாம். அராஃபத் இறந்து விட்டதனாலேயோ, நோய்வாய்ப்பட்டு விட்டதாலேயோ,அந்த இயக்கம் விழுந்து விடும் என்று நினைப்பது,தனிமனித கவர்ச்சிகளால் கட்சி ஆரம்பித்து வளர்க்கும் நம் தமிழக ரோஸ்பவுடர் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் கட்சி சிதறி விடும் என்று நினைப்பதற்கு ஒப்பாகும். அவர்கள்தான் இப்படி என்றால், இஸ்ரேல் அதற்கும் ஒரு படி மேல். Arafat is clinically dead என்று அவர்கள் தொலைக்காட்சியிலேயே அறிவித்து விட்டார்களாம். இந்த செய்தியில் அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு.

காலை NPR சானலில், வெற்றி பெற்ற அமெரிக்க முதலாளி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். எலெக்ஷன் வெற்றி மயக்கம் தீரவில்லை. "அராஃபத் மரணத்தை பற்றி உங்கள் ரியாக்ஷன் என்ன ..? எனற கேள்விக்கு
I appreciate it. My first reaction is God rest his soul. my second reaction is We will try to get a separate state for palaestine என்று மிழற்றிக் கொண்டிருந்தார். மிக நிம்மதியாக இருக்கிறார் என நினைக்கிறேன். நன்றாக தூங்கியதாக சொன்னார். இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி பெற்ற எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளைப் போல சொதப்பாமல், உள்ளூரில் வேலைபார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, வாலை சுருட்டிக்கொண்டிருப்பார் என்பது நம்பிக்கை மட்டுமல்ல... வேண்டுதலும் கூட...

எழுத ஒன்றுமே தோன்றுவதில்லை. வெறுமே படித்துக்கொண்டிருந்தால் போதும் என்று தோன்றுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் சுரேஷின் மரத்தடி மடல் வேறு, என் சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தி விட்டது. கடலோடி பரணிதரனின் பனாமா கால்வாய் பற்றி படித்தவுடன், சூயஸ் கால்வாயைப் பற்றியும் படித்தேன். முகுந்த்தின் லினக்ஸ் பதிவு நன்றாக இருந்தது. மரத்தடி நம்பியின் "உங்களை ஏன் சுருக்கிக் கொள்கிறீர்கள்" என்று வலைப்பதிவாளர்களை நோக்கி வீசப்பட்ட கேள்விக்கும், அருள்செல்வனின் கார்ட்டூனுக்கும், வாசன் பிள்ளையின் புஷ் வாழ்த்துப் பாவுக்கும், இணையத்தில் இலக்கியமே இல்லை என்று எழுத்தாளர் பாராவின் புதிய கண்டுபிடிப்புக்கும் ( அவர் குறிப்பிட்ட இணைய எழுத்தாளர்களிலேயே அருமையான கட்டுரை இலக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் :-) ) பதில் சொல்ல வேண்டுமென்று கூட தோன்றியது.

ம்...போங்கப்பா...எலெக்ஷன் சோகம் இன்னமும் போகவில்லை....

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...