Wednesday, November 03, 2004

கேடுகாலம்

விளக்கெண்ணையை தேய்த்துக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பார்கள். அதுதான் கெர்ரிக்கும் நடந்திருக்கிறது. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கித் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் சமயத்திலே, இந்த லட்சணத்தில் ஓட்டளித்த மக்களைப் பற்றியே சந்தேகமும் வெறுப்பும் வருகிறது.நேற்றுகூட அலுவலகத்தில் என் குழுவில் உள்ள அமெரிக்க தாத்தா ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். புஷ்ஷினுடைய யோக்கியதை என்ன..?? எந்தக் காரணத்திற்காக அவர் மீது அமெரிக்கா நம்பிக்கை இழந்திருக்கிறது என்று ஒரு அரை மணி நேரம் விளக்கமாக பேசினார். பொதுவாக வயதானவர்கள் குடியரசுக்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்று அமெரிக்காவில் சொல்வார்கள். அந்த வயதான சமூகமே புஷ்ஷை விமரிசிக்கிறது என்று சந்தோஷப்பட்ட வேளையில்தான் பிகேஎஸ்ஸின் drudgereport.com எக்ஸிட் போல் கெர்ரிக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. சந்தோஷம் அதிகமாக, வீட்டுக்கு போய் டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

ப்ளோரிடா முதல் அடி. அது விழுந்தவுடன் விஸ்கான்சின், நியூஹாம்ஷையர் போன்ற மாநில நிலவரங்களும் திருப்தியாக இல்லாத நிலையில் ஓஹையோவை எதிர்பார்க்க ஆரம்பித்த நான் கொஞ்சம் ( சோகத்தில்) சரக்கு விட்டுக்கொண்டு தூங்கியபோது மணி 11:30. காலை எதிர்பார்த்தது போலவே ஓஹையோ, நியூ மெக்ஸிகோ, "ஐயோ" வா மாகாண முடிவுகளை வெளியிடாமல் தொங்கலில் விட்டு, கெர்ரி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுமுன்னர் அவரும், புஷ்ஷ¤க்கு தொலைபேசி இருக்கிறார். பாவம்....!!

இன்னம் நாலு வருஷங்களுக்கு எத்தனை அபத்தங்களையும், இன்னம் எத்தனை உலகநாடுகளுக்கு "காரியமும்" பண்ணி வைக்க்ப் போகிறார் இவர் என்று தெரியவில்லை. இராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் செத்துப்போன அப்பாவிகளின் ஆவிகள் சாராயம் குடிக்கப் போனதால், ஜனநாயகத்திற்கு இங்கே சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று ஏதோ ஒரு படத்தில் வீரப்பா சொல்வது நியாபகம் வந்து தொலைக்கிறது.


2 comments:

  1. காட்டமா திட்டியிருக்கீங்க :) என்ன பண்றது, வயதான அமெரிக்கர்கள் சிலருக்குதான் பழசை மறக்கும் முதிர்ச்சி இருக்கு போலிருக்கு. cowboyகள் நிறைய பேருக்கு சதாம் எப்படியாவது ஒழிந்தால் சரின்னு தோணுதோ என்னவோ! கெர்ரி ஓரின திருமண விஷயத்துல liberal stand எடுத்ததுக்கு பதிலா outsourcing விஷயத்துல conservative stand எடுத்திருந்தா இன்னும் கொஞ்சம் பழசுகள கவர் பண்ணியிருக்கலாம்.

    ReplyDelete
  2. நேற்று அமெரிக்க தேர்தல் முடிவைப் பார்த்தவுடன், உங்களைப் போல் எனக்கும் பயங்கரக் கடுப்பு!
    எவ்வாறு புஷ் போன்ற முட்டாள்தனமான, நேர்மையில்லாத ராட்சசப் (அவர் ஆரம்பித்து வைத்த ஈராக்
    போரில் எத்தனை அப்பாவி மக்கள், முக்கியமாக குழந்தைகள் கொல்லப்பட்டனர்) பிறவியை அமெரிக்க
    மக்கள் ஜெயிக்க வைத்தார்கள்? நான் நினைக்கிறேன், 'அமெரிக்கர்களுக்கு பொதுவாக உலகம் எக்கேடு
    கெட்டாலும் பரவாயில்லை, தங்கள் பாதுகாப்பு ஒன்றே பிரதானம், அதை செயல்படுத்தக் கூடியவர் ஒரு
    'Moron' ஆக, தன் சுயநலத்துக்காக (அதாவது, ஈராக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சுவது!) எந்த
    ஒரு மோசமான நடவடிக்கை (உலக நாடுகளின் அறிவுரைக்கு மாறாக!) எடுப்பவராக இருந்தாலும்
    அமெரிக்கர்களுக்குக் கவலையில்லை' என்ற பெரும்பான்மை உலக மக்களின் எண்ணத்தை நிரூபிக்கும்
    வகையில் ஜார்ஜ் Worst புஷ்ஷின் தேர்தல் வெற்றி அமைந்திருக்கிறது!
    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...