Thursday, October 28, 2004

உதிர்ந்த முத்து

எத்தனை உண்மையென்று தெரியாது.

பா.ம.க. தரப்பில் இருந்து ரஜினி படத்துக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்கப்பட மாட்டாது. அதேசமயம், அவரும் தன்னை அரசியல்ரீதியாக முன்னிறுத்தி பேசுவதோ, அறிக்கை விடுவதோ, படத்தில் வசனங்கள் வைப்பதோ கூடாது. சினிமாக்காரர்கள் சினிமாக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எங்கள் டாக்டரின் கொள்கைக்கு அவர் மதிப்பளித்தால், எங்களால் அவர் படத்துக்கு எந்த தொல்லையும் இருக்காது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் பா.ம.க. தரப்பில்.

- நன்றி ஜூனியர் விகடன்

சேப்பு கலரு ஜிங்குச்சா...!!!

ரஜினிகாந்த் " சந்திரமுகி" படத்துக்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் மூலமாக ரவுடி டாக்டரிடம் சமரசம் பேசினார் என்று ஒரு செய்தியை ஜூ.வி கசிய விட்டிருக்கிறது. ரஜினிக்கு எதிரான செய்திகளை குழலெடுத்து ஊதுவதில் ஜூ.வி யின் ஆர்வம் சமீபகாலமாகவே அதிகரித்து வந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 1996 தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தபிறகு ஜெயலலிதா பாஸ்கர் என்பவரை மீடியா அட்வைஸராக நியமித்துக்கொண்டு பத்திரிக்கை உலக பிரமுகர்களுடன் தனக்கிருக்கும் பிரச்சினைகளை சரி செய்யத் தலைப்பட்டார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில்தான் விகடன் ஆசிரியர் பாலனும், மதனும் ஜெயலலிதாவை சென்று சந்தித்து வந்தார்கள்.

இப்போது இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இது உண்மையெனில், ரஜினி நிஜமாகவே பரிதாபத்துக்கு உரியவர். ஜெவுக்கு எதிராக படங்களில் அதிரடி மிரட்டல் விடுத்து, பொது மேடையில் ஜெவுக்கு எதிரான குரலை எழுப்பி, அரசியலில் அவருக்கு எதிரான கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்து சவுண்டு விட்டவர், "பாபா" ஊத்திக்கொண்டதும் நிலைமாறி, ஜக்குபாயையும் ட்ராப் செய்து விட்டு, இப்போது அடுத்த படம் ஓட, டாக்டர் காலில் விழுந்திருக்கிறார்.

இதற்கு அவர் பேசாமல் இமயமலைப் பக்கம் போயிருக்கலாம்.

இந்தப் படம் ஓடி, கல்லா நிறைந்தால் மறுபடியும் அவர் அரசியல் கருத்துக்களை உதிர்க்கக் கூடும். அப்படி நடந்தால், புழுவை கொட்டிக் கொட்டி குளவியாக்கியது போல, தமிழ்நாட்டு அரசியல்வியாதிகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு அரசியல்வியாதியை உருவாக்கி விட்டதாகத்தான் அர்த்தம்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்திலேயே அவர் மகள் ஐஸ்வர்யா, தன் முன்னாள நண்பர் சிலம்பரசனுக்கு அல்வா கொடுத்துவிட்டு சுள்ளானை கைப்பிடிக்க போவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அப்பா ராஜேந்தர் காதல் தோல்வியையே தமிழகம் இன்னமும் மறக்கமுடியாதபடி படம் படமாக எடுத்துத் தள்ளினார் அவர். "அவள இதயத்தை தாடி என்றேன் ! அவள் தர மறுத்துவிட்டாள்..! நான் "தாடி"யானேன் " என்று சிம்புவும் தாடி வளர்க்காமல் சமுத்தாக மன்மதனானால் சரிதான்.

அப்பா எண்பதடி பாஞ்சா பொண்ணு எண்ணூறு அடி பாயுதுங்கோவ்...


6 comments:

  1. //கிட்டத்தட்ட இதே காலகட்டத்திலேயே அவர் மகள் ஐஸ்வர்யா, தன் முன்னாள நண்பர் சிலம்பரசனுக்கு அல்வா கொடுத்துவிட்டு சுள்ளானை கைப்பிடிக்க போவதாக செய்திகள் வந்திருக்கின்றன. //

    மூக்கரே, இதெல்லாம் வரம்பு மீறலாப்படுது. ரஜினியோட பொண்ணுங்கறதுக்காக, அந்தப் பொண்ணோட தேர்வை நீங்க கொச்சைப் படுத்துற மாதிரி எனக்குத் தோணுது. ஊரில் எத்தனையோ பேர் யாரையோ கட்டிக்கறாங்க. ரஜினியோட விமர்சனத்தை நிறுத்திக்கறது நாகரிகம்.

    ReplyDelete
  2. ரஜினிக்கு மேல்மருவத்துர் சென்றதற்க்கு இப்படி ஒரு காரணம் கண்டுபிடிக்க விகடனால் மட்டுமே முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே துணிவுடன் எதிர்த்தவர். ராமதாஸுக்கு பயப்பட்டிருந்தால் வன்முறையின் ராஜா என் கூறியிருக்கமாட்டர். ரஜினிக்கு நேருக்கு நேர் எதிர்த்து தான் தான் பழக்கம். இப்படி குறுக்கு வழியில் செல்ல மாட்டார். பங்காரு அடிகளரின் வேலை இதுதானா

    ReplyDelete
  3. காசி சார்,

    இதுல என்ன வரம்பு மீறல்னு தெரீலை. " அல்வா குடுக்கிறது" என்பதை ஆளை மாற்றி விட்டார் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். "அமைதிப்படை" சத்யராஜ் சொன்ன அர்த்தத்தில் அல்ல.தவறாக தொனித்திருக்குமானால் வருந்துகிறேன்.

    மற்றபடி, ரஜினியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருத எனக்கு காரணங்கள் இல்லை.

    ReplyDelete
  4. //காசி சார், // Grrrrr..

    // "அமைதிப்படை" சத்யராஜ் சொன்ன அர்த்தத்தில் அல்ல.தவறாக தொனித்திருக்குமானால் வருந்துகிறேன்.//
    நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஆளை மாத்துவது கூட அவர் இஷ்டம்தானே, நமக்கென்ன வந்ததுன்னு சொன்னேன்.

    //மற்றபடி, ரஜினியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருத எனக்கு காரணங்கள் இல்லை.// இதை நான் எங்கே சொன்னேன்? ரஜினியை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக நான் என்றுமே நினைக்கவில்லை, சொல்லவில்லை. (அட. நானே அவரை அப்பப்ப வாரிட்டுத்தான் இருக்கேன் சாமி, இதனாலேயே ராம்கிக்கு என்மேலே கோபம் இருக்கலாம்:-))
    'ஆஸ்ரம்' போன்ற பொதுப் பிரச்னனகளைப் பற்றிப் பேசும்போது அவர் வீட்டுக்காரம்மாகூட விமர்சனத்தில் இருந்து தப்பமுடியாது. இந்தப்பெண் கல்யாணம் பண்ணிக்கொள்வது எந்தப் பொதுப் பிரச்னனயில் வருகிறது?

    ReplyDelete
  5. திரு.காசி

    அது சரி..இப்ப சுளுவா பிரியுது.

    இனி தவிர்க்க முயல்கிறேன். இது என்ன பொதுப்பிரச்சினையான்னு கேள்வி கேட்டா தமிழ்நாட்டுல் பாதி பத்திரிக்கைக்காரங்க எதுவுமே எழுத முடியாதுங்கோவ்...:-).

    ReplyDelete
  6. ஐயா காசி அவர்களே, எனக்கு (எங்களுக்கு!) யார் மீதும் கோவமில்லை. நாங்கள் எப்போதும் விமர்சனங்களை வரவேற்கிறோம். (சந்தடி சாக்கில் வாரிவிடுவதில் மூக்கன்தான் எக்ஸ்பர்ட் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்தே ஆகணும் போலிருக்கிறதே!)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...