தலைப்பை படித்ததும் தப்பிதமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தீர்த்தத்தை நிறுத்துவதாக தற்போதைக்கு உத்தேசம் ஏதும் இல்லை. இந்த குவார்ட்டர் JFM, AMJ, JOS, OND என்று விற்பனைப் பிரிவிலும் , மார்க்கெட்டிங்கிலும் அழைக்கப்படும் பெயர். பேராண்மை ..ச்சீ..மேலாண்மை தொழிலிக்கும் நம்ம எம்பீஏ ஆசாமிகளுக்கு பழக்கப்பட்ட இன்னொரு குவார்ட்டர்.
ஆயுதபூஜையிலும், சரஸ்வதி பூஜையிலும் ஆரம்பிக்கும் நம்ம விழாக்காலங்கள் போலவே அமெரிக்காவிலும் எல்லா பண்டிகைகளும் இந்த கடைசி மூன்று மாதங்களில்தான் அதிகம் வருகின்றன. மேற்கு கடற்கரை பகுதிகளில் கூட, குளிரெடுத்து எல்லாரும் "மூடி"க்கொண்டு போகிறார்கள் எனில் கிழக்கு கரையோர மக்களை கேட்கவே வேண்டாம். பனி, அது சார்ந்த அசெளகரியங்கள் என்று இயல்பு வாழ்க்கையே பாதிக்கபட்டு விடும். எங்கு பார்த்தாலும் Sale..Sale..sale. ஏகப்பட்ட நீள்வார இறுதிகள். இதற்கு நடுவே ஒட்டு மொத்த தேசமே ( சில மாநிலங்களைத் தவிர) கடிகார முட்களை பிடித்துழுத்து பின்னே தள்ளிக்கொள்ளும் Day light saving அட்ஜஸ்ட்மெண்ட். சல்லிசான விலையில் ப்ளேன் டிக்கெட் கிடைத்து விட , காஸ்ட்கோவிலும், வால்மார்ட்டிலும், பேக்டரி அவுட்லெட்டிலும் சாமான்களை வாங்கித் திணித்துக் கொண்டு, இந்திய விஜயம் செய்யும் நம்மஉடன்பிறப்புகள். வேலை கிடைப்பது குறைந்து விடும். யாரை தொடர்பு கொண்டாலும் ஆள் இருக்க மாட்டார்கள். கதை சொல்லும் தொலைபேசியிடம் தான் பதில் சொல்ல வேண்டும். குளிர் பொறுக்காமல், தினமும் "வெளி" ஹீட்டரும், மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை "உள்" ஹீட்டரும் போட வேண்டும். எந்தச் செடியும் பூக்காது. புல்தரை சரியாக வளராமல், சோபை இழந்து இருக்கும். விளையாட்டு மைதானங்கள் ஈயடிக்கும். எல்லோரும் தங்கு தங்கென்று ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருப்பார்கள்.கொல்லைப்புறம் உட்கார்ந்து காற்று வாங்கினால், மறு நாளே டாக்டர்கள் fees வாங்குவார்கள். எல்லோரும் flu shot போட்டுக் கொள்வார்கள்.
இத்தனை கலாட்டாக்களுடன் சேர்ந்து இந்த வருடம் புஷ்-கெர்ரியின் ஊசலாட்டத் தேர்தல் வேறு. வரலாறு காணாத குழப்படிகளுடன் வரப் போகும் முடிவுகளினால், எல்லோரும் நீதித்துறையின் உதவி வேண்டி போகவேண்டி இருக்கும் என்று இப்போதே மணிக்கணக்கில் விவாதங்கள் நடத்துகிறார்கள். கெர்ரியின் பேச்சை ரேடியோவில் கேட்டபோது, நம்ம புரட்சி தலைவர் ஸ்டைலில் கூட்டத்திடம் கேள்வி கேட்டு பதில் வாங்கும் Interactive உத்தியை எல்லாம் பயன்படுத்தி "தம்" கட்டிப் பார்க்கிறார்.
ம்ஹூம்...சுவாரசியமா ஏதாவது சொல்லுங்கப்பா...!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
நல்லவேளை. எங்க குளிர்காலம் முடிஞ்சுபோச்சு!
ReplyDeleteஇப்ப 'ஸ்ப்ரிங்( என்னாத்தை ஸ்ப்ரிங்கு? இன்னும் குளிர் இருக்கு) 16 டிகிரி ஒரு சூடா?
இப்பவே கிறீஸ்மஸ் சேல் தொடங்கியாச்சு!
>>>>கடிகார முட்களை பிடித்துழுத்து முன்னே தள்ளிக்கொள்ளும்
ReplyDeleteகடிகார முட்களை முன் தள்ளாது... பின் இழுக்கும்.
Fall back... Spring forward!
-dyno
முட்களை => முட்கள்
ReplyDelete-dyno
ஆச்சு...
ReplyDeleteமாத்தியாச்சு...
(ஹை...டைனோபாய் யாருன்னு தெரிஞ்சு போச் :-) )
நான் என்னமோ, " எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா " லட்சுமிபதி-ஜனகராஜ் கணக்கா, 'ஊட்ல', ஊருக்கு அனுப்பிட்டு, ஜாலியா பக்கார்டியும் கையுமா குந்திகினு சில்பான்ஸி பண்ணிகினு இருக்க சொல்லோ, திடுதிப்புன்னு, 'ஊட்ல' சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து, கையும் களவுமா புடிச்சு, லெ·ப்ட் ரைட் சென்டர்னு புடிச்சு ரிவிட் எடுக்க, இத்தோட சரி, இனிமே கையால தொடறதில்லைன்னு சபதம் போட்ட கையோட, கடேசி குவார்ட்டர் இதானு புலம்பல்ஸ் போஸ்ட் போட்டிருக்கீர்னு பாத்தா...
ReplyDelete