Friday, November 19, 2004

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்க வேண்டி இருந்திருக்கும்.

1 comment:

  1. இன்னும் இன்னும் நடக்கப்போகும் கூத்தைப்பாருங்கள். பகுத்தறிப்பகலவன்கள் தீமிதிப்பதைவிட அத்வைத சூடாமணிகள் இராகுகாலம் பார்ப்பதும், சட்டதிட்டம் போசுவதும், பாவபுண்ணிய கணக்கை தமக்குச்சார்பாக போடுவதுமாக ஏக தடபுடலாக, பார்க்க நன்றாக இருக்கும். எனக்கு இந்த விசயத்தில் இப்போதும் நம்பிக்கையில்லை. எந்த நேரத்திலும் நடக்கும் சமரசம் இதை நீர்த்துப்போக செய்யலாம். அல்லது நிருபிக்கப்பட்டாலும், தண்டனை பெறாமல் போகவும் பெரிய வாய்ப்புகள் உள்ளது. கீழ்வெண்மணியில் 43பேரைக் கொண்றவர், மேல் சாதி, பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தை முன்வைத்தே விடுதலை செய்யப்பட்டார் என்பது இங்கு நினைவு கூறவேண்டியது.

    எனக்கு இதில் முக்கியமானது ஒண்ருதான். அது 'சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம்' என்று சில வாய்கள் இப்போதாவது அரைமனதோடு புலம்புகின்றனவே அதுதான். அது எவ்வளவு பெரிய வார்த்தை தெரியுமா? இந்த ஜெயேந்திரரே எல்லோரும் சமம் என்பதை மறுத்ததை ஒரு பேட்டியில் படித்ததாக நினவு. ஏதோ கலிகாலத்தில் இப்படிப்பட்ட நீசத்தனமான கருத்துக்களை சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறது. இப்போதும் இது வடக்கில் அவ்வளவு சாத்தியமில்லை (வெறும் வார்த்தையாக சொல்வதுகூட).

    அப்புறம் நம்மவர் விசயம், நடிகர் விஜயகாந்த் இதப்பற்றி ஜெயிடமே ஒருபேட்டியில்/சந்திப்பில் கேட்டு அதற்கு ஜெ மழுப்பியிருப்பார். அது குமுதத்திலோ ஆ.வியிலோ வந்தது.

    ReplyDelete

ஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... !!!

ஆர் கே நகர் தேர்தல்  திமுகவுக்கு   முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல்.  இல்லாவிட்டால்,...