வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.
ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!
'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். மீனா..ம்ஹூம்..என்ன்மா இருந்த பொண்ணு...sintex Tank மாதிரி ஆயிட்டுது.
அந்தக் காலத்தில் குமுதத்தில் வந்த "கோஸ்ட்" ( கிருஷ்ணகுமார் - ரா.கி.ரங்கராஜன்..??) மற்றும் குங்குமம்/சாவியில் வந்த "துளசிதளம்" - எண்டமூரி வீரேந்திரநாத கதைகளும் எவ்வளவோ தேவலை. ராஜேந்திரகுமார் கூட " இயங்கினான்.இயங்கிக்கொண்டே இருந்தான்" என்று A சமாசாரங்கள் தூவி கொஞ்சம் பேய்க்கதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு சின்ன வயதில் எல்லாம் பேய்ப்படங்கள் பார்க்கும்போது பீதியில் பேதியே ஆகிவிடும். "நூறாவது நாள்" படத்தைக்கூட என் அண்ணனின் மடியில் படுத்துக் கொண்டேதான் பார்த்தேன்.
இத்த்னை அபத்தங்கள் இருந்தாலும் மேற்சொன்ன படத்தைக்கூட இரவில் பார்க்க ஆரம்பித்து, பாதியிலேயே அணைத்து விட்டு காலையில்தான் பார்த்தேன்.
அது சரி...பெயரென்ன "ஷாக்". மீனாவுக்கு ஷாக்..?? மீனாவால் பிரசாந்துக்கு ஷாக்..?? திரும்பி வந்த மஞ்சுவால் வாட்ச்மேனுக்கு ஷாக்..?? சரத்பாபுவுக்கு..?? தியாகராஜனுக்கு..?? அப்பாஸுக்கு..?? அப்பாஸ் அப்பாவுக்கு..??
எனக்கென்னவோ, இத்தனை குண்டா ஆயிட்டுதே மீனா..?? என்று "கர்ணன் பட நாயகி" மீனாவின் தாய்க்குலம், ராஜ்மல்லிகாவுக்குத்தான் ஷாக் ஆக இருந்திருக்கும்.
சீக்கிரம் மஹிளா காங்கிரஸ் பதவி இடம் மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
sintex tank.. :)) :)) :))
ReplyDelete