சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.
101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்
‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.
இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.
ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.
இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்.
நன்றி : விகடன்
சரி,மிக்க சரியாக படுகிறது.
ReplyDeleteஅவர் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
மிகச் சரியானவர்களை
ReplyDeleteமோப்பம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்!..
நல்ல விளக்கம்.
ReplyDeleteஆனா, ராமாயணத்திலயே எக்கச்சக்க லாஜிக் ஓட்டை இருக்குன்னு தெரியுது.
1. வில்லால் (அம்பால்) அழிக்கக் கூடிய "weak" ஆன பாலத்தில (அணையில்) எப்படி வானர சேனை பயணம் செய்தது?
2. விமானம் இருந்த ராமர் காலத்தில் கப்பல் இருக்கவில்லையா? படகுகள் கூடவா இருக்கவில்லை?
இதே பதிவை "ராமர் பாலம்.. அட இப்படி கூட ஒரு கருத்து" என்ற தலைப்புடன் மீள்பதிவு செய்தால் இன்னும் நிறைய பின்னூட்டங்கள் வருமோ?
Sorry (for English)...
ReplyDeletepu.pattiyan, Good questions.
Regarding more comments, I agree and I am not for that, Though I have done that :-)
Nowadays blogging is more of a reading thing than writing. ;-)
ஆஹா என்னை முந்திக்கிட்டிங்க ஜூ.வி ல இருந்து நானும் போட வேண்டும் என இருந்தேன் , ஏன் எனில் கடந்தவாரமே இதேக்கதையை நான் சேது சமுத்திரம் பற்றிய ஏதோ ஒருப்பதிவில் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் (அதான் எல்லாம் பதிவா போட்டுத்தள்ளிட்டாங்களே), அப்படியா எதில் சொல்லி இருக்கு இப்படி னு கேட்டாங்க எனக்கு சரியாக தெரியவில்லை அப்போது.
ReplyDeleteஎனவே தாத்தாச்சாரியாருக்கு முன்னர் வலைப்பதிவில் இந்த உண்மையை சொன்னது வவ்வால் தான் என்பதை எல்லாருக்கும் சொல்லிக்கிறேன் நல்லாப்பார்த்துக்கோங்க! :-))
G.Ragavan wrote to my blog like this... which I've accpeted.
ReplyDeleteWe cant expect more than this from politicians who will exploit anything for the sake of power. It is true that Karunanidhi should have used better words, but it is absolute rubbish to claim the natural formation as a bridge made by Ram and Co.
As per the story, Hanuman writes the name of Ram in every stone that was used. We can scan the entire bridge to find the autograph of Hanuman. If Hanuman is god, the autograph sould have stayed. If the autograph didnt stay, we can understand the unwillingness of God to keep the brige.
It is not politicians who have to decide. It is engineers who have to decide.
///எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’///
ReplyDeleteஅதானே!இதுவெல்ல்லாம் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க்கும் அரசியல் அவதாரங்களுக்கு - தெரிந்தாலும் - எங்கே ஒப்புக்கொள்ளப்போகிரார்கள்?
திரேதாயுகத்தில் ராமன் அவதரித்தான். துவாபரயுகத்தில் கண்ணனாய் மகாவிஷணு அவதாரம் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அவதார புருஷர்களால், தீயவர்கள் அழிக்கப்பட்டு , பேரழிவு ஏற்பட்டு உலகம் முழுவது அழியும். மீண்டும்
ReplyDeleteஅடுத்த யுகத்தில் உயிர்களை, இறைவன் படைப்பான் என்பது ஐதீகம். ஆனால், தீயவர்கள் ஏன் படைக்க வேண்டும், அவர்களை அழிக்க பகவான் ஏன் மீண்டும் மீண்டும் தோன்ற வேண்டும் என்றெல்லாம் கேட்காதீர்கள். புராணங்கள், தெய்வங்கள், கடவுளர்கள், புனித நூல்கள் அனைத்தும் மனிதனின் கற்பனை மற்றும் மனிதனை நல்வழிப்படுத்த!
ஆக, திரேதயுகத்தில் ராமன் அவதரித்தான், பாலம் கட்டி இலங்கைக்கு சென்றது உண்மை என்றாலும், யுகத்தின் முடிவில்
உலகம் அழிந்துப் போகும்போது, அவதார புருஷன் என்றாலும் மனிதன் உருவில் வந்து ராமன் கட்டிய பாலமும் அழிந்து அல்லவா போய் இருக்கும்? அதுவும் பல கோடி வருடங்களுக்கு முன்பு!
என்னமோங்க, கடவுளை முன்னிருத்தி மக்களின் உணர்வுகளை தூண்டுவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் ஒருபுறம் என்றால், நம்பிக்கைகளை நக்கல் அடித்து எரிகிற கொள்ளியில் எண்ணை வார்ப்பவர்கள் மற்றொருபுறம். இத்தகைய ஆட்கள் இருக்கும்வரை, இந்தியா முன்னேற விடுவார்களா என்ன :-(
ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான்.
ReplyDelete---------------------------
ஒரு மாஹா பெரியவர் நான் பெரியவன் இல்லை நான் அனைவரை விடவும் சிறுவன் என்று கூறினால் அவரின் தன்னதாக்கத்தை காட்டுகிறது . நான் பெரியவர் என்னை வழிபடுங்கள் என்று கூறினால் ஆணவத்தை காட்டுகிறது
‘
மேலிருக்கும் வரிகள்
ஸ்ரீ ராமரின் தன்னடக்க குணத்தை காட்டுகிறது . மற்றபடி அவர் என்ன போற்றாதீர்கள் என்றெல்லாம் சொல்லவில்லை . ராமா ராமா என்று சொல்லினாலே ஆஞ்சநேயர் கூத்தாடுவார் . இதற்கு மேலா உங்களுக்கு ராமர் சாதாரண மனிதர்தான் திருமாலின் ஒரு அவதாரம் என்று தெரியவில்லை .
ஓகே !!!!!!!!
நன்றி
ஊனில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;
ReplyDeleteஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ர தூய்மை நீ;
வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;
யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே!