Wednesday, February 25, 2004

கையறு நேரம்

உப்பு வெடிக்கவில்லை
சேதி வந்தபோதோ
உள்ளே வெடித்தது.

செயற்கைக்கோள் தாமதத்தில்
போனமுறை பேசிய குரல்
இன்னமும் காதுகளில்

வழியனுப்ப நிற்கையில்
நிறையப் பார்த்த கண்கள்
இன்னமும் ஆழத்தில்

"நாங்களெல்லாம் காசுள்ள
அனாதைகளப்பா..."
என்ற வார்த்தையின் வீர்யம்
இன்னமும் தழும்பாய்

.......

டிக்கெட்டுக்கு ஆள் தேடவும்
ஏர்போர்ட்டுக்கு ட்ராப் கேட்கவும்
துணிமணியை அடுக்கிச்செருகவும்
டயாப்பர் மடக்கி வைக்கவும்
பாஸ்போர்ட்டு சரி பார்க்கவும்
பணத்துக்கு தோது பண்ணவும்
பில்களுக்கு காசோலை
வைக்கவும்
ஆபீசுக்கு லீவு சொல்லவும்
தேவைப்பட்ட நேரத்தில்
"எப்பிறப்பில் காண்பேனோ" என்று
அழுதிருக்கலாம்தான்

கொள்ளி போட போகாவிட்டால்
டாலர் வைத்தா கொளுத்தமுடியும்

எனை ஈந்தாளை..


பி.கு :

நண்பன் தாயார் இறந்தபோது , கூட இருந்து அவன் பயணத்துக்கு உதவிகள் செய்தபோது தோன்றியது

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...