Gay marriage க்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என அமெரிக்கா அமளிதுமளிப் பட்டுக்கொண்டிருக்கிறது. எலெக்ஷன் நேரமாதலால் இப்போதைய அதிபருக்கும், அதிபர் பதவிக்கு போட்டு போடுபவர்களும் இவ் விஷயத்தில் தன்னுடைய கருத்தினை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்
ஈதிப்படி இருக்க, ஒருபால் புணர்ச்சியாளர்களையும், அவ்விதமான உணர்ச்சிகளயும் தவறல்ல என்று தமிழ் இனையக்குழுக்களில் பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பம்மல் சம்பந்த முதலியார் குழுவில் உள்ள 'லேடி ரங்கா ' என்பவரைப் பற்றி எழுதி ' ஒருபால் புணர்ச்சி மேற்கத்திய ஒழுக்கச்சிதைவின் அடையாளம் ' என்று சொல்பவர்க்கு இதெல்லாம் தெரியாது போலும் ' என்று சமீபத்தில் முருகன் எழுதினார்.
இயற்கைக்கு முரணான இவ்விதமான ஆட்களை , அனுதாபத்தோடு பார்க்கச்சொல்லும் நம்மவர்கள் விபசாரம் பற்றியும், 'காய்கறிக்காரி குனிந்தபோது தராசுத் தட்டு தெரிந்தது ' என்று சொன்ன அ.மார்க்ஸ் பற்றியும் வக்ரம் என்று கூறுகிறார்கள். விபசாரம் தவறு என்று சொல்கிற அரசுதான் மும்பையிலும், கல்கத்தாவிலும் அதனை அனுமதித்து இருக்கிறது.
ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு முரணாக அவளிடம் உறவு கொள்வதுதான் தவறே தவிர, 'வரைவின் மகளிர்' என்று இலக்கியமே அடையாளப்படுத்தி வைத்திருக்கிற விபசாரிகளை, அவர்கள் தொழிலை அங்கீகரிப்பதுதான்
சமூகத்துக்கு நல்லது. இல்லாவிடில் கள்ளக்காதல் செய்திகளும், இளம் சிறுமியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்படும் செய்திகளும், ஓரினப் புணர்ச்சியாளர்களையும் பற்றி கொட்டை எழுத்தில் போடும் நாளிதழ்கள், வேறு செய்தியே போட முடியாது. (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழக்கூடிய முறையான) செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை நம் குறைபாடு என்ற எண்ணத்தோடு அணுகுவதுதான் பிரச்சினை.
சமீபத்தில் காதலர் தின விகடன் இதழில் சுஜாதா விஞ்ஞான ரீதியாக காதலை விளக்கியிருந்ததும் நெளிய வைக்கும் விஷயம்தான். காதல் என்பது 'உறுப்புகளில் ரத்தம் பாய்கிற சமாச்சாரம் என்பதும், பாதையை வழுவழுப்பாக வைக்க ஹார்மோன் செய்யும் அதிசயம் ' என்றெல்லாம் நம் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு தெரிய வேண்டியதில்லை. Love is nature's way of ensuring pregnancy என்பது மீசை முளைக்கிற பருவத்தில் இருக்கிறவர்களுக்கு தெரிந்தால் விளைவுகள் விபரீதமாகும். அவர்களைப் பொறுத்தவரை காதல் தெய்வீகமானது என்று நினைத்தால்தான் அவர்கள் வயதிற்கும் , படிப்பிற்கும் நல்லது. ஏதாவது ஒரு புள்ளியில் அவர்கள் மனம் லயித்தால்தான், வேறு விதமான வடிகால்கள் அந்த வயதில் அவர்கள் தேடிக் கொள்ள மாட்டார்கள். பிற்காலத்தில் பக்குவமும், முதிர்ச்சியும் வந்தவுடன் இந்த விஷயங்கள் தெரிந்தால், பாதகமில்லை. எனவே எத்தனை கடிதங்கள் எழுதினாலும் பரவாயில்லை, காதல் கவிதைகள் எழுதிப் பெருமூச்சு விட்டாலும் பரவாயில்லை,
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளை இயல்பாக இருக்க விடுங்கள்.
அவர்களிடம் ' ... மாயாமல் மாயும் மனிதருக்கே ' என்று உங்கள் அ.ஜீ வித்தனத்தை காட்டாதீர்கள்.
No comments:
Post a Comment