நெறி
=====
ஸ்நேகம் கொண்டவளையே
மணமும் சேய்து நிறைவாய்
வாழும் நண்பனை கண்டு
எரிச்சல் மூண்ட போதும்
இத்தனை காலமும் கண் மூடி
ரசித்த பாட்டுக்கள் திடீரென
அபத்தமாய் போனதும்
பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில் நிற்க
அடமாய் உட்கார்ந்திருந்த போதும்
எத்தனை குவளை விஸ்கியிலும்
ஏறவே ஏறாத போதையிலும்
கடையாள் விநோதமாய் பார்க்க
நீ தடுத்திருந்த பளீர் பச்சையில்
உடுத்த எடுத்தபோதும்
சாலை கடக்க சிரித்து நடக்கும் ஜோடியொன்று
தினவு தீரவே அலைவதாய் நினைத்தபோதும்
தேடித்தேடி பட்டினத்தாரில் நட்டதையும்
தொட்டதையும் படித்தபோதும்
சட்டென்று எழுத கவிதைகளே கிடைக்காது
போனபோதும்தான்
தெரிந்தது...
உன்னை இழந்ததில் உண்மையில்
நான் இழந்தது எதுவென்று....
பி.கு:
திண்ணையில் வெளிவந்த இன்னோர் தன்னிரக்கக் கவிதை. காதல் தோல்வியைப் பற்றி எழுத
இந்த சுந்தரும் தேவை இல்லை.
ஆயினும் என் செய்ய..??
சொறிந்து கொள்ள சுகமான காயம் ...காரணங்களா முக்கியம்.?
No comments:
Post a Comment