யாராரோ செய்ய முடியாத பேருதவியை ஜெயா வைகோவுக்கு செய்து
விட்டார்.வைகோவாலேயே கூட தன் இமேஜை இந்த அளவு தூக்கி நிறுத்தி
இருக்க முடியாது.
பொடா சட்டத்தில் சிறை பிடிக்கப் பட்டு வெளி வந்த தினத்தில் இருந்து
வருக்கு கிடைத்திருக்கும் மீடியா கவரேஜ் எந்தக் காலத்திலும் அவருக்கு
கிடைத்ததில்லை.
சிறை மீண்டு வெளிவந்த நாளில் , சிறை வாசலிலேயே ' ஆம் . நான்
இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறேன் ' என்ற சொல்ல நிஜமாகவே தைரியம்
வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலைக்காகவே விடுதலைப் புலிகளையும் ,
இலங்கைத்தமிழர்களையும் வெறுத்த தமிழக மக்கள் பலர் , இவருடைய உறுதியும்
, தொடர்ந்த ஆதரவும், அவர்களுடைய நிலைப்பாட்டை பரிசீலிக்க
வைத்திருக்கிறது. சபாஷ்...
நம் கவலை எல்லாம் ஒன்றுதான்.
கதறி அழும், காலில் விழும் தொண்டனை பளாரென்று அறையும், இன்னபிற
உணர்ச்சி வசப்பட்ட செயல்களை வைகோ குறைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய
தலைவர் கருணாநிதியிடம் இருந்து நிதானத்தையும், திட்டமிடலையும் ,
ராஜதந்திரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
திமுக என்ற இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு மிக சீக்கிரமே இவரிடம்
வரும் சூழ்நிலையில், இம் மாதிரி உணர்ச்சிக் குவியலாய் இருப்பது அவருக்கு
நல்லதல்ல.
No comments:
Post a Comment