மகாபலி
======
நிகழ்கால உவப்புகளும்
எதிர்கால கனவுகளும்
நெஞ்செலாம் நிறைந்துவழிய
நுரைக்க நுரைக்க காதலிக்க
எனக்கும் ஆசைதான்....
வாலிப உச்சத்தில்
காணாத உயரங்களும்
போகாத தூரங்களும்
எட்டிவிட,
வார இறுதி விடுமுறைகள்
எனக்கும் வேண்டும்தான்...
வேலைநாட்களில் கணிப்பொறியும்
ஓய்வுவேளையில் ஒயின் குப்பியும்
காரோடு வீடுமாய்
பூந்தொட்ட நடுவில்
புதுசாய் கட்டின பெண்ணோடு
சொகுசாய் குடியிருக்க
எனக்கும் விருப்பம்தான்...
மனிதனாய் வாழ விடவில்லை
இம் மண்ணுலகம்
மாவீரனாய் சாகிறேன்
சாதாரணனாய் வாழ இயலவில்லை
ரணப்பட்ட நிணமாகி
சரித்திரனாய் சாகிறேன்
மனிதம் செத்து மரணம்
தழுவும் என்னை
உலகம் அழைப்பதோ
மனிதவெடிகுண்டு
என்று....!!!
பி .கு:
நித்த்மும் நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்'தீன' தற்கொலைப்படை மரணங்களின் பாதிப்பு
No comments:
Post a Comment