மிடில் க்ளாஸ்
===============
மூன்று சக்கர சைக்கிளுக்கும்
பாலியஸ்டர் சட்டைக்கும்
பைநிறைய தீபாவளி வெடிக்கும்
முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும்
கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும்
அட்மிஷனுக்கு பணம் கேட்ட
விருப்பமான கல்லூரிக்கும்
சம வயசு நண்பர்களுடன்
ஆடித்திரிய சுற்றுலாவுக்கும்,
மனசுக்கு பிடித்தவளை மணப்பதற்கும்
மறுப்பாய் அம்மா சொன்ன பதில்
"நாம மிடில் க்ளாஸ் டா.."
அலுப்படைந்த மனசுக்கு
உருவேற்றி வெறியேற்றி
கணிணி கற்று
மானேஜனுக்கு ஊற்றிக் கொடுத்து
கண்டவனை காக்காய் பிடித்து
தூதரக வாயிலில் பகீரதம் பண்ணி
அயல் தேசம் வந்திறங்கி
லட்சங்களில் கார் வாங்கி
டாலரில் சம்பாதிக்கும் நான்
இன்று வாழ்வதும்
அமெரிக்காவில் அதே வாழ்வுதான்...
வசதி உசந்தது என்னவோ வாஸ்தவம்..
ஐம்பது ரூபாய் கடன் வாங்கினவன்
ஐந்நூறு டாலர் கடன் வாங்குகிறேன்...
பி.கு :
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் , நோ பீஸ் ஆ·ப் மைண்ட்........!! திண்ணையில் வெளிவந்த கவிதை
No comments:
Post a Comment