Skip to main content

கடவுள் பிறந்தார்

உழைக்க அஞ்சா அவனுக்கு
எனைப் போலவே முன்கோபம்...
ஓடி ஓடி பொருளீட்டியோனை
மூடிமூடி இறுக்கிக்கொண்ட 
கருமி என்றனர்
எனை தூற்றுதல் போலவே....
பெண்டிர்க்கு பிரியனாய்
இருந்தவனை ஸ்தீரி லோலன்
என்றனர் நான் வெட்கி நிற்க...
சமய சந்தர்ப்பமறியாது
உரத்த குரலில் வாய்வீசுவான்
என்றனர் என்னை
கேலி செய்தல் போலவே....
சுற்றிச் சுற்றி வந்தாலும்
சுயநலமே கருத்தானவன்
என்று இடித்துரைப்பர்
எனை வைதல் போல்...
நன்றி மறவாதவன்
நாவன்மை கொண்டோன்
நாருசிக்கு அடிமையானவன்
சமையலில் வித்தகன்
தமிழ்க்காதல் கொண்டோன்
இறை பக்தியுள்ளோன்
என நான் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் அவன் குணங்கள்..
என்னைப் போல பாடும் தொண்டையும்
என்னை போல சிற்றின்ப பிரியனும்
என்னைப் போல் வாயுக் கோளாறும்
என்னைப் போல பேழை வயிறுமான 
என்னை படைத்தவனை...
அமரனான  எந்தையை அன்றியும் ...
அணுக்கமாய் உணர
எனக்கு இனி இறையுண்டோ
இப் பிறப்பில்...
நடுகல் நட்டு முன்னோரை
வணங்கும் தமிழ்வாழ்வு
இந்த நூற்றாண்டிலும்
தொடர்கதையாய்........

Comments

Post a Comment

Popular posts from this blog

இகமெங்கும் இறைவிகள்

கமலஹாசனைப் போல கார்த்திக்குக்கும் துணிச்சல் அதிகம். இல்லாவிட்டல் ரசிகர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து இப்படி ஒரு படத்தை முயன்றிருப்பாரா?  அந்த நம்பிக்கைக்கு வாழ்த்துகள். ஆனால் படம் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. ஹிட் அடித்தால் இளைய தலைமுறையும், தாய்மார்களும் கை தூக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் கொஞ்சம் கனமான படம்தான். He sprinkles brilliance casually all over, but the audience should be sharp enough to catch them.



கார்த்திக் இதுவரை சொல்லாத அளவுக்கு இந்தப் பிரச்சினையை(பெண்களின் வாழ்க்கை)  உரத்துப் பேசாமல் அணுகி இருக்கிறார்.  உரத்து சொல்லாததால் பார்வையில் இருந்து விடுபட்டுப் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தலைமுறை ரசித்துப் பார்ப்பதற்கு காட்சிகளும் வசனங்களும் அத்தனை அத்தனை உண்டு. படத்தில் வில்லன் என்று ஆள் இல்லாமல் சந்தர்ப்பங்களில் எல்லாரும் வில்லன் ஆவது அழகு. வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. He should choose a vocal/ contradicting editor next time. Editor provides a different perspective and he should…

காற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்

”காற்று வெளியிடை” ன்னா என்ன? என்கிற ஒற்றை வசனத்தை வைத்துக்கொண்டு மணி படங்களில் வந்த பல காட்சிகளை கோத்து ஒரு யூடியூபில் ஒரு வீடியோ சமீபத்தில் ரிலீசானது. “மச்சி.. அதுவே பெட்டர். படம் செம மொக்கை” என்றவர்களை மீறிக்கொண்டு போய்ப் பார்த்த படம்... ஆனால் படம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை.  ஒருமுறை பார்க்கலாம்




படத்துக்கு தேங்காய் உடைக்கும்போதே ”ஹிந்தி”யாவெங்கும் ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம் என்று ஏதோஒரு புண்ணியவதி ஓதியிருப்பார் போல. படத்துக்கு backdrop, லொகேஷன்கள்,  பாடல் எடுத்த விதம்,  கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் (வட இந்தியப் பெண்கள் தன் குடும்பத்து ஆண்களை பார்க்க வரும்போது தலையில்  லைட்டாக முக்காடு இட்டுக் கொள்வார்கள்), பாத்திரங்களின் உடல்மொழி எல்லாவற்றிலுமே சப்பாத்தி/ ராஜ்மா வாசனை. என்னதான் அழுத்தம் திருத்தமாக “சக்ரபாணி பிள்ளை” என்று அழுத்தி அழுத்தி சொன்னாலும் கார்த்தியின் அப்பா படத்தில் “லாலா கடை” சேட்டு மாதிரிதான் இருக்கிறார் . அதிலும் நாயகியின் குடுமபத்துடன் உணவகத்தில் கார்த்தி முரண்படும் அந்த சீன்.. என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்தலாம்…

கபாலி - எண்ணங்கள்

ரஜினி மாஸ். ரசிகர்கள் துள்ளிக் குதித்து அனுபவிக்க ஏகப்பட்ட காட்சிகள். அங்கங்கே தெறிக்கும் அவர் ஸ்பீடு அசத்தல். ரஜினி செம ஸ்மார்ட். கம்பீரமான அழகு. பின்பாதியில் மனைவியை சந்தித்ததும்  தாடி எடுத்து விட்டு ஒரு அழகு வருகிறதே .....அது !!! காமிரா சூப்பர் வசனம் அங்கங்கே பளிச். தேவையற்ற இடங்களில் சில கருத்துகளை ரஞ்சித் திணித்திருக்கிறார். அது துருத்திக் கொண்டு பல் இளிக்கிறது. படத்தில் “காற்று பிரிந்தால்” கூட மகிழ்ச்சி என்கிறார்கள். அலுத்து விடுகிறது ”மாய நதி” பாடல் அருமையான இடத்தில் வைத்து இருக்கிறார்கள். பொதுவாகவே இசைக் கோர்ப்பில் மெனக்கெடல் தெரிகிறது. படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு இன்னார் இன்னாருக்கு என்ன செய்தார் என்று நினைவில் வைத்துக் கொள்வதே போதும் போதும் என்றாகி விடுகிறது Casting detailsகாக மெனக்கெடும்போது முக்கியமான பாத்திரங்களுக்கு மட்டும் அதிகம் உழைப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை குறைக்கும்கிஷோர் எப்பேர்ப்பட்ட நடிகன் !!!  கிலோ கிலோவாக நகையை சுமக்க செய்து வீண் பன்ணி விட்டார்கள். சீன வில்லனை டம்மி செய்து இவருக்கு கொஞ்சம் சேர்த்திருக்கலாம். …