Sunday, May 01, 2016

கவனம் தி.மு.க !!!

தேர்தலையொட்டி  எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறையின் விவரணைகளும், பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் பேச்சுகளும் ஜெயலலிதாவின் பதட்டமும் ஒன்றை நாசுக்காக சுட்டுகின்றன.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு ஆதரவாக வரப்போவதையே அவை சொல்லுகின்றன.

பெரிய கட்சிகளுக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்ப்ட்ட ம.ந.கூ தலைவர்களின் உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளால் பிசுபிசுத்து விட்டது. பா.ஜ.க தனித்து விடப்பட்டது. பா.ம.க அடுத்த தேர்தலில் பேரம் பேசும் வலிமையை பெறுவதற்கே தேர்தலை சந்திக்கிறது. சீமான் அடுத்த வை.கோ. இந்த சூழலில் ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தியை முழுக்க முழுக்க அறுவடை செய்யும் கட்சியாக தி.மு.க எஞ்சுகிறது. வெற்றி பெற்றால் அக் கட்சி செய்ய வேண்டுவன என்று  ஒரு பொதுஜனத்தின் பார்வையில் பார்த்தோமானால் :

 1. கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது. கட்சித்தலைவர் / ஆலோசகர்  பதவியில் இருந்து கொண்டு ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும்.  அது அடுத்தகட்ட தலைவர்கள் தலையெடுக்க வழி வகை செய்யும். முதல்வரை  மாற்றும் வல்லமை கட்சித் தலைமைக்கு இருக்க வேண்டும்
 2. கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்க்கப்படவேண்டும் . கலைஞருக்கு அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும், நாஞ்சில் மனோகரனும், சாதிக் பாட்சாவும்,  விரபாண்டி ஆறுமுகமும் தோள் கொடுத்து நின்றது போல கட்சியின் வாழ்விலும் தாழ்விலும் ஸ்டாலினுடன் உடன் நிற்க ஒரு குழு வேண்டும்.
 3. அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் அல்லது ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பேற்க வேண்டும். இணைந்து பணிபுரிவதே யாவர்க்கும் பயன் தருவதாக அமையும்.
 4. கனிமொழி  டெல்லி அரசியலில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். தயாநிதி மாறன் டெல்லி அரசியலில் மறுபடியும் வந்தாலும் அவர் குடுமி கனிமொழியின் கையில் இருக்க வேண்டும்
 5. கட்சியும் ஆட்சியும் ஒன்றையொன்று சாராமல் தனியே இருக்க வேண்டும். கட்சி பிரமுகர்களின் வியாபாரங்கள்  ஆட்சியை பாதிக்கக் கூடாது.
 6. மத்திய அரசுடன் இணக்கமான முறையில் பணியாற்றி தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்
 7. ஆட்சிக்கு எதிரான சீமான், பா.ம.க, ம.ந.கூ போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசிலித்து அவைகளில் நியாயம் இருந்தால் அவை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களை கட்டுக்குள் வைக்க அதுவே சிறந்த வழி.
 8. சினிமாத்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்காமல் எங்கெங்கு கண்டிப்பு வேண்டுமோ அதை செயல் படுத்த வேண்டும்.
 9. பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியாவிடினும் அதை படிப்படியாக கொண்டுவர வேண்டும். கட்சியினரின் சாராய ஆலைகள் கைவிடப்படவேண்டும்.
 10. ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தண்டனை வாங்கித்தரப்பட வேண்டும் கலைஞர்  பூரண ஓய்வு பெற வேண்டும். இத்தனை வயதில் அவர் இப்படி உழைப்பது கட்சிக்கு அவப்பெயர்.
 

2 comments:

 1. 1. மிகச்சரி. ஆனால் கருணாநிதி தான் அடுத்த முதல்வர் அறிவித்துவிட்டபடியால், கருணாநிதி 6 மாதங்களுக்கு மட்டும் முதல்வராக இருந்துவிட்டு, பிறகு ஸ்டாலினிடம் முதல் அமைச்சர் பதவியை ஒப்படைத்து விடவேண்டும்.

  2. மிகச்சரி.

  3. சரியல்ல. அழகிரி சுத்தமாக ஓரங்கட்டப் படவேண்டும். அரசியலுக்கு அவர் உகந்தவர் அல்ல. அவருக்கும் ஸ்டாலினுக்கும் ஒத்துவராது.

  4. மிகச்சரி. ஆனால் தயாநிதி மாறனின் குடுமி ஸ்டாலினின் கையில் இருக்கவேண்டும்.

  5. மிகச்சரி. ஆனால் காவல் துறையும், மாவட்டத் தலைவர்களும் சுதந்திரமாக செயல்படவேண்டும். அவர்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் இவர்களுக்கு அடிபணியாது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல் புரிய, முதல் அமைச்சர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.

  6. மிகச்சரி.

  7. சரியே. ஆனால் அவர்களுக்கு அடிபணியக்கூடாது.

  8. மிகச்சரியே.

  9. பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்தவேண்டும். (அக்டோபர் 1 / 2 ந்தேதி முதல் முற்றிலும் மது ஒழிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு ஆகவேண்டும். அதற்குள், எல்லா மது ஆலைகளும், டாஸ்மாக் மூடப்பட்டு, அந்த தொழிலாளர்களுக்கு மாற்று பணிகள் வழங்கப்படவேண்டும்.)

  10. மிக மிக சரி. ஆனால் தி.மு.க, பழி வாங்கும் கட்சியாக மாறக் கூடாது.

  மேலும் சில:

  1. 3 மாதங்களுக்கு ஒருமுறை, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 501 வாக்குறுதிகளின் அவ்வப்போதைய நிலவரங்களை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

  2. சட்டசபை உறுப்பினர்களின் 3 மாதத்திற்கான முகாம்களின் விவரங்களும், தீர்க்கப்பட்ட குறைகளைப் பற்றியும், விரிவாக மீடியாக்கள் மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ள வகைசெய்ய வேண்டும்.

  3. சட்டசபை நடக்கும் தருணங்களைத் தவிர, மற்ற நாட்களில், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் இருந்து மக்கள் சேவையை கவனிக்க வேண்டும். முதல் அமைச்சர் இதை கண்காணிக்க வேண்டும்.

  4. தொகுதிகளில் புதிதாக திறக்கப்படும் அரசு கட்டிடங்கள், பாலங்கள், மற்றும் அரசு சேவைகள் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்களால் / அமைச்சர்களால் மட்டுமே திறக்கப்படவேண்டும். முதல் அமைச்சர் எல்லாவற்றிலும் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது பொது மக்கள் இடத்தில் எம்.எல்.ஏக்கள் / அமைச்சர்கள் பற்றிய நல்லெண்ணம் உருவாக ஏதுவாக இருக்கும். (Sub-delegation of Powers).

  ReplyDelete
 2. நன்றி திரு ராம்.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...