வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.
வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.
எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.
இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.
வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.
இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.
சுஜாதாவின் நேம் ட்ராப்பிங்ஸை கிண்டலடித்து அவரது ஸ்டைலில் "பெனாத்திருயிப்பது" மேலுள்ளது. இதே போல இங்கே அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருடன் பேசும்போதும், இப்படி ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழும். மீனா, சுஹாஸினி, கமல், ரஜினி, மணி(ரத்னம்) எல்லாம் மானாவரியாக வந்து விழும்போது எதை நம்புவது அல்லது கூடாது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ராயர் காலங்களில் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தவர் வலைப்பதியத் துவங்கியதும் அவ்வளவு பேசுவது இல்லை. ஆயினும் போன முறை பேசியபோது "டிசம்பர் தர்பார் " என்று ஒரு விகடன் பிரசுரத்திற்காக புத்தகம் எழுதுவதாக சொன்னார். சரி...என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை பற்றி சயின்ஸ் தாத்தா இந்த வார விகடன் க.பெ வில் எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீத சீசன் பின்னணியில் விகடன் பிரசுரமாக வந்திருக்கிறதாம். அதே புத்தகத்தைப் பற்றி காமேஸ்வரி அய்யர் எனப்படும் அனுராதா ரமணனும் "சீசன் சிப்ஸ்" பகுதியில் அம்சமாக எழுதி இருக்கிறார்.
வாலிப சுந்தரத்துக்கும், மாமா சிவசுவுக்கும் வாழ்த்துக்கள்.
*******
அதே கற்றதும் பெற்றதுமில் கணவன் மனைவி பிரச்சினையைப் பற்றி குறும்பாக எழுதி இருந்தார். படிக்க சுவாரசியமாய் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன் விளக்குத் தூண் விளக்குத்தூணாக கால் தூக்கிக் கொண்டிருந்த ஆசாமிகள் எல்லாம் ஓவர் நைட்டில் சாமியார்களாகி வெறுத்து விடுகிறார்கள். " We are friends since we are able to tolerate each other " என்பதை "we remain married since we are able to tolerate " என்று மாற்றி வாசிக்கும் அளவுக்குத்தான் ஏகப்பட்ட திருமணங்கள். மேற்கின் தாக்கத்தில், அந்த சகிப்புத்தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு விவாகரத்துகள் பெருகுவதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
என்றாலும், இன்னோரு புறம் ஸோ வாட்..?? என்றும் தோன்றுகிறது. திருமணம் என்ற அமைப்பு மற்ற எல்லா ஏற்பாடுகளை விட ஓட்டைகள் குறைவாக உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் பொருத்தமில்லா மனநிலைகளால் அதை abuse பண்ணி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. Forkம் பாயாசமும் என்று உருப்படியாக வந்த கட்டுரையை சமீபத்தில் வாசித்தபோது எழுந்த எண்ணங்களின் தொடர்ச்சி, தாத்தாவின் கட்டுரையைப் படித்ததும் சர சர வென பற்றிக் கொண்டு விட்டது. கல்யாணம் என்ற அமைப்பு உடைந்தால்தான் அதில் உள்ள செளகரியங்கள் தெரியும் என்றால், அதை உடைத்துப் பார்ப்பதும் கூட தவறில்லை.
ஆண் ஒரு காலத்தில் நிழல் தருகிறவனாக இருந்தான். இப்போது சகபயணியோடு இளைப்பாறுகிறவனாகவும் இருக்கிறான். மரங்களுக்கா பஞ்சம்..??
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
மீனா என்று ஆரம்ச்சதும் கண்டுப்பிடிச்சிட மாட்டோமா என்ன :-)
ReplyDeleteமாமி, நாம ரெண்டு பேரும் சேந்து எல்லே ராமை வார்றோம்னு யாராவது நெனைச்சுக்கப் போறாங்க...பாவம்..!!
ReplyDeleteஅடஎங்கப்பா...இந்த ஃபார்மிலே உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு மூக்கரே... என்ன ஏதாச்சும் புதுவருச தீர்மானமோ?
ReplyDeleteமூக்கு தம்பி,
ReplyDeleteஇந்த வயசுல ராம் சாரை இப்டி கலாய்கறீங்களே...மீனான்னா அவர்தானா??ofcourse எனக்கு கூட அப்டி பட்டுச்சி..:-)
சயன்ஸ் தாத்தாவா? சரியாப் போச்சு. இந்த வருட இயல்பியல் நொபல் பரிசு பற்றி Anisotropy க்கும் Inhomogeneity க்கும் வேறுபாடில்லாமல் குழப்பி அவர் அண்ட லெவலில் கலக்கியதில் இன்னும் வயறு எனக்கு கடமுடான்னு உருட்டுது. தாத்தா ஆழ்வார்களைப்பற்றி எழுதினா எதாவது படிக்கலாம். நிம்மதியா இருக்க விடுங்க சாமி.
ReplyDeleteஅருள்
மூக்கரே,நான் உங்க பதிவு பார்க்கும்போது எழுத்தாளரின் படம் இல்லை, மேலும் இந்த வார க.பெயில் தலைவர் சங்கீதம், கச்சேரி ஆரம்பிச்சதும் நமக்கு புரியாத சப்ஜெட் என்று ஜூட் விட்டுவிட்டேன். ஆக, ஆள் யார் என்பதை நானே கண்டுப்
ReplyDeleteபிடித்தேனாக்கும் :-)
அருள்,
ReplyDeleteஎன்னைப் போல பாமரர்களுக்கெல்லாம் அவர் சயன்ஸ் தாத்தாதான். ;-)
அருள், விகடனெல்லாம், படிக்கிறீங்களா? வர வர எந்த புத்துல எந்த பாம்புன்னே தெரிய மாட்டேங்குது :-)
ReplyDeleteசுந்தர்,
ReplyDeleteநாம் எல்லோரும் பாமரர்தான். ஆனால் ரெண்டுவரி தமிழில் எழுதியதில் ஒரு அடிப்படை தப்பு விட்டால் என்ன செய்யறது - அதுவும் அறிவியலை எழுதும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டாமா. என்னமோ போங்க மனசு கேக்கலை.
பிரகாஷ்,
தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்த பாசம்தான். ஆவி, குமுதம் எல்லாம் ஒழுங்கா வாங்கி படிச்சுடறது.
அருள்.
நம்ம பதிவைக் கண்டுகிட்டதுக்கு தாங்க்ஸ் மூக்கரே.
ReplyDelete