குமுதம் வெப் டீவி ( web Tv) எனக்கு டாலர் தேசம் புகழ் பா.ராகவன் பேட்டி மூலம் அறிமுகமாகியது ( உபயம் : கில்லி) . பிறகுதான் கொஞ்சம் ரெகுலராக பார்க்க ஆரம்பித்தேன். விகடன்.காம் தன் ராட்சஸ கரங்களால் நாளொரு பத்திரிக்கையும், பொழுதொரு வசதியுமாக இணைய ரேஸில் முந்திக் கொண்டுவிட விகடனின் ஆதிகால போட்டியான குமுதம் இப்போதுதான் தட்டுத் தடுமாறி காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு சேவைக்கட்டணம் ஏதும் இல்லை என்றாலும், கூடிய விரைவிலேயே ஆக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ரபி பெர்னார்ட் பேட்டிகள், சினிமா சமாச்சாரங்கள் என்று வெப் டீவியில் குமுதம் குழும இதழ்களை விட சுவாரஸ்யம் அதிகம்.
விஷயத்துக்கு வருகிறேன். "வெயில்" படத்தைப் பற்றி இனி நான் புதுசாக சொல்ல ஏதுமில்லை. சமீப காலங்களில் மண் மணத்தோடு, வந்திருக்கக்கூடிய உருப்படியான படம். ஷங்கர் என்ற டைரக்டரைப் பற்றி பவித்ரன்/ எஸ்.ஏ.சி அஸிஸ்டெண்ட் என்ற வகையிலேயே எனக்கு அறிமுகம் இருக்கிறதே ஒழிய பெரிய கலாபூர்வமான மனிதர் என்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. செல்லுலாய்டில் ரிப்போர்ட்டிங் செய்யும் ஜர்னலிஸ்ட் என்று வேண்டுமானல் ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் சினிமாவில் தான் பண்ணிய பணத்தை, தன் அஸிஸ்டெண்டுகளின் "நல்ல படமெடுக்க வேண்டும்" என்ற ஆசைக்காக, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது உண்மையிலேயே பாராட்டத் தோன்றுகிறது. மிச்ச சொச்சத்தை வெயில் இயக்குநர் வசந்தபாலன் பேட்டியில் பாருங்கள். குமுதம்.காம் பயனராக இருந்தால் இந்த சுட்டியில் பாருங்கள். http://www.kumudam.com/streaming.php?id=6
வ.பாலன் ரொம்ப சின்சியராக தெரிகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
சுந்தர், சென்ற வாரம், அனேகமாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், வசந்தபாலனின் நேர்முகம் பார்த்தேன். ரொம்ப நேர்மையாக இருந்தது. self pity கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும், ரொம்ப அடிபட்டு வெற்றி பெற்றவர் இப்படித்தான் பேசுவார் என்றும் தோன்றியது :-)
ReplyDeleteபிரகாஷ்,
ReplyDeleteஅந்த நேர்மையும், அவர் பேச்சில் தெரிந்த கன்விக்ஷனும் தான் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். என்ன ஒரு வைராக்கியம். ஆனா அந்த செல்ஃப் பிட்டி, "ஆல்பம்" தோத்துப் போனதனால் வந்தது. இனிமே சரியாப் போய்டும்.
கில்லி - "லிங்க்"குக்கு நன்னி.
கில்லி-365 ரொம்ப சுவாரசியமா இருக்கு
அந்த ரீடர்ஸ் சாய்ஸ் லிங்க் எல்லாத்தையும் ரீவிசிட் பண்ணிகிட்டு இருக்கேன். "கில்லி-கோஷ்டி" லிங்க் தமிழ்ல் குடுங்க ராசா. புண்ணியமா போவும்.