Friday, December 29, 2006

சைக்கோ அனாலிலிஸ்


சமீபகாலங்களில் படித்த மிகச்சிறந்த கட்டுரை.

நன்றி : ஞாநி


மீடியா டிலைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்!

தமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.

இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!

வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்!

வைகோவை மூலவராக் கிப் பார்க்கத் திட்டமிட்ட வர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயி லில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித் தேன்.

வி.பி.சிங், 1987&ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990&ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பி&யால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.

வி.பி.சிங், தி.மு.க&வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க&வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவரு டைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.

பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.

வி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பி னார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.க&விலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். Ôதனக்கு யார் நிஜமான தலைவன்Õ என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.

வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.க&விலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பல மாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.க&விலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.

உண்மையில், வைகோவை தி.மு.க&விலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.

வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.க&விலிருந்து வெளியேறி ம.தி.முக&வை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர் கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட் டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரை கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!

ஆனால், தற்போது தி.மு.க&வை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.

தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு, அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்று டன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.

அதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளு மன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.க&வுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.
தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.க&வுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக் கும் மாற்று யார்?
இதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸ§க்கும் இல்லை, பி.ஜே.பி&க்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜய காந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! ‘எமோஷனல் பாலிட் டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!

*------*--------*-------------*------------------*

நண்பர்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

13 comments:

  1. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி பத்மா. எத்தனை காலம் கழித்து வந்தாலும் ஞாபகம் வைத்து இருக்கிறீர்களே..அதுவே பெரிய விஷயம். :-)

    ReplyDelete
  3. விக்ஸ் தடவினீங்களா மூக்கர்? மூக்கடைப்பு ரொம்பநாள் கழிச்சு இப்பதான் விட்டிருக்கு போல ;-) - புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. சன்னாசி,

    விக்ஸ் தடவி சரியாகிற மூக்கடைப்பா இது..?? உங்களுக்கு தெரியாததா..?? இன்னமும் அடைப்பு முழுசா குணமாகலை. ஆகுமான்னும் தெரியலை...

    ReplyDelete
  5. Welcome back, Sundar :)

    Very very good article !

    Wish you and family a wonderful NEW YEAR !

    ReplyDelete
  6. மூக்கர் ஐயா, இது ஆனாலும் கொஞ்சம் ஓவருங்க. இந்த பக்கமே ஆளை காணோம். இதுல நாங்க ஞாபகம் வெச்சிக்குட்டு இருந்ததுக்கு நன்னி வேற சொல்லுறீங்க :-) ஆனா யாரோ எழுதினத காப்பி, பேஸ்ட் செஞ்சதுல எல்லாம் பதிவுக்கூட சேர்ந்தது இல்லைங்க :-)))))))))) ஹாப்பி நீ இயருங்க!!!!

    ReplyDelete
  7. பாலா...நன்றி.

    மாமி, உங்க குசும்புக்கு குறைவே இல்லை. இதை நான் பதிவுன்னு சொன்னேனா..?? ;-)

    ReplyDelete
  8. //நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி//

    ReplyDelete
  9. நன்றி செல்வா.

    தொடர்ந்து எழுதுவேனா என்று கூட தெரியாது. ஏதோ பகிர்ந்து கொள்ளணும் போல தோன்றியது அதனால் இந்த cut & paste

    ReplyDelete
  10. Dear Mr. Mookar, Neenga ivlav periya ala? Romba perumaya irukku. Idu romba superana pathivu. But engeyo padicha mathiri iruku. By the by nanum Mayiladuthuraithan. By Kummar Tholkappaim

    ReplyDelete
  11. Sorry, Gnani katturaiya...nan unarchivasappattuten....any how very good...Kummar Tholkappiam

    ReplyDelete
  12. அபி அப்பா,

    இது விகடன்லேர்ந்து "சுட்ட" பதிவு. என்னோடது இல்ல. கட்டுரையைப் படிச்சுட்டு தவறான முடுவுக்கு வர வேண்டாம். இது நான் எழுதியது இல்லை..ஹி...ஹி..

    ReplyDelete
  13. மூக்கு தம்பி, உங்க சிதம்பரம் கோவில் பதிவு படிச்சேன்... என் கருத்து 200% உங்களோடு ஒத்து போகிறது...ஒரு வேலை நம்ம ஒரே மயிலாடுதுறைங்ர காரணமோ?

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...