Monday, July 17, 2006

ப்ரைவேட் ப்ராப்பர்டி

சிதம்பரம் அக் 25, 20xx -

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற ஏழுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் கைதி செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கொவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் - கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்த்னைகளை
முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற
விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும்.

சின்னப் புள்ளத்தனமாக எங்களிடம் வந்து கேட்ட மாதிரி மசூதியிலோ, சர்ச்சிலோ, சரவணா ஸ்டோர்ஸிலோ, குமரன் சில்க்ஸிலோ போய் கேட்க வேண்டியதுதானே?? பெரிய இது மாதிரி எங்களிடம் கேட்க வருகிறீர்கள். இது பக்தி இல்லை. வெறும் வீம்பு. உண்மையான பக்தி இருந்தால் இதெல்லாம் செய்யச் சொல்லாது. வேஷ்டியை துடைக்கு மேல் ஏத்திக் கொண்டு, வருகிற சுற்றுலா பயணிகளிடம் டாலர் கணக்கில் வசூலிக்கச் சொல்லும். பராந்தக சோழன் பொன்னம்பலம் வேய்ந்த கோவிலை வைத்து தலைமுறை தலைமுறையாக பிழைக்கச் சொல்லும். ஏன்னா நாங்க சொன்னதுதான் சாமி. நாங்க பண்ற இத்தனை வேலைகளுக்கும் இவ்ளோ நாள் சாமி எங்களை ஏதும் செய்யாததைப் பாத்தா, எனக்கே பெரியாரை நம்பணும் போல இருக்குது.
என்றார் அசினாச்சு.

24 comments:

 1. தமிழ் தெரிஞ்ச சாதாரண மனுசன் கோயிலுக்குள்ள திருவாசகத்தை ஓதுனா வாய் அவிஞ்சுபோயிடும்னு 'குருவிக்கறி குருமா டைஜஸ்ட்' புத்தகத்துல ஒரு கட்டுரை வந்திருக்காமே, அதனடிப்படையில சமூகநல நோக்கில் ஒரு தடை போட்டா கூசாம இப்படி அபவாதம் பேசறீரே மூக்கர் - இது நாயமா? இனி வர்ற காலத்துல கோயில் கொடிமரத்து முன்னால தெண்டன் போட்டா கொடிமரம் விழுந்து நசுக்கிரும், உள்ளே இருட்டா இருக்கறதனால ரொம்பப் பக்கத்துல போனா கல்லு தடுக்கி வுளுந்து பல்லு சுக்கு நூறாயிரும்ங்கிற மாதிரி 'கோயிலுக்குப்போற கோயிஞ்சாமிகள் சிவலோகத்துக்கு டிக்கெட் எடுக்காமலிருக்க 108 தற்பாதுகாப்பு வழிமுறைகள்'னு ஒரு பாம்புலெட்டோ ஆம்லெட்டோ அடிச்சோ பொரிச்சோ கோயிலுக்கு வர்ற ஒவ்வொரு கோயிஞ்சாமி கையிலயும் வாயிலயும் திணிச்சுட்டாப் போச்சு, என்ன சொல்றீங்க?

  ReplyDelete
 2. என்ன சுந்தர் நலம் தானே..
  கண்ணெல்லாம் சரியாத் தெரிய ஆரம்பிச்சிருச்சா? அப்படியே நம்ம ஊர் சம்பந்தமான ஏதாவது செய்திகள் இருந்தால் ஒரு பதிவு போடுங்களேன்..

  போட்டோ போட்டால் அதை விட நலம்.

  அப்படியே.. அந்த ஆளு.. அசினாச்சுவைப் பாத்தீங்கன்னா.. நான் கேட்டதாகச் சொல்லுங்கள். அந்தாளு பெரிய வீம்பு புடிச்சாஆளா இருக்காருங்க. !!!

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு

  ReplyDelete
 3. பாம்பு,

  ஏதேது ஏகப்பட்ட ஐடியா கைவசம் இருக்கு போலருக்கே.. ..இத்தனையும் பப்ளிக்கா எழுதினா கண்டிஷன் போடறவாளுக்கு கஷ்டமே வராது ஒய்..:-)
  --------

  சீமாச்சு, நலமே. கண்ணேல்லாம் நல்லா தெரிய ஆரமிச்ச உடனே "கண்டதும்" கண்ணுல பட்டுத் தொலையுதுங்க. என்ன பண்ண..??
  அதுசரி..காதை குடுங்க சொல்றேன். அசினாச்சும் மாயவரம்தானாம்..!!!!?? ரெட்டைத் தெருன்னு வேற சொல்றார்.
  அந்த அதி மேதாவியத் தெரியுமா உங்களுக்கு..?? ;-) ;-)

  ReplyDelete
 4. எங்கே போனாலும் அங்கங்கே ஒரு நியமம், நீதின்னு இருப்பதால், எங்கேயும் போகாம இங்கேயே இருக்கேன்:-)))

  அட..போங்கப்பா....

  ReplyDelete
 5. துளசியக்கா, அதுதான் பெஷ்ட்டு..

  கோவிலுக்கு போனா ஆசாமிகள் தொந்தரவு தாங்கலை. கண்ணை மூடிக்கிட்டு பேசாம ஊட்டுல உக்காந்துடலாம், இந்தக் கொடுமைக்கு.

  **
  லாலபக்தாஸு, ரொம்ப சிக்கனமான ஆளோ..;-) ;-)

  ReplyDelete
 6. நல்லது நடக்கட்டும்!

  ReplyDelete
 7. அட! வாசல்ல நின்னு யாராரை உள்ள விடலாம்னும் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறதைச் சேர்க்கலையே.

  உள்ள போவதற்கு குறைந்த பட்சம் இத்தனை ரூபா கொடுக்கணுங்கிறது சின்ன எழுத்தில் அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்ல போட்டிருக்கும். அதைக்கட்டாயம் படிக்கச் சொல்லுங்க.

  இன்னிக்கும் கோயில்னா அது சிதம்பரம்னு சொல்லிட்டிருக்கிற என்னோட அம்மம்மாகிட்ட அது தனியார் சொத்துன்னு சொல்லி வைக்கணும்..

  அப்புறம் இன்னொண்ணு:

  திருவாசகம் எல்லாம் சிதம்பரத்து நடராஜரை வைச்சு பாடப்பட்டதுன்னு சத்தம் போட்டு சொல்லிராதீங்க. அதுவும் பிரைவேட் பிராப்பட்டி ஆகலாம். எங்கயுமே சத்தம் போட்டு என்ன, பாடவே முடியாத நிலையும் வரலாம். காலம் கலிகாலம் ஐயா! ;)

  ReplyDelete
 8. சுந்தர், ஆசிர்வாதமா..?? :-)

  மதி, ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல.

  அட..கோவில் ப்ரைவேட் ப்ராப்பர்டியாவே கூட இருந்துட்டுப் போவட்டும். திருவாசகம் சொல்லக் கூடவா தடை..?? தென்னாடுடைய சிவனை கிட்டத்தட்ட கிளிக்கூண்டு கிளி மாதிரி ஆக்கிட்டாய்ங்களே..?? அவாளுக்கு சாதகமான ஆட்களுக்கு மட்டும்தான் அருளா..?? எண்டே குருவாயூரப்பா ன்னு கதறலாம்னா, அங்க கதை இதுக்கு மேல இருக்குது..!!

  ம்..ம்ம்..ஒண்ணூம் சொல்றதுக்கில்லை..:-(

  ReplyDelete
 9. மாயவரத்துக் காரங்கள்லாம் ஒரு மார்க்கமாத் தான் இருக்காங்க!

  ReplyDelete
 10. நீண்டநாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க போல. சுகமா?

  சொல்றவங்க சொன்னாத்தான் கேட்பாங்க. இருங்க நெருப்பு பறக்கிற மாதிரி நான் ஒரு பதிவு போடுறேன்.

  அப்புறம் சீமாச்சு சொல்றதையெல்லாம் கேட்காதீங்க. வடிவேலு கணக்கா ஜோக்கெல்லாம் சின்னபுள்ளதனமா அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

  பிரைவேட் ப்ராப்பர்ட்டியாம்.

  இப்டியே போனா விபூதிக்கும் காப்புரிமை வாங்கிருவானுங்க!

  ReplyDelete
 11. mookarae,

  //மதி, ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல. //

  no. just pissed off at the audacity & the gullibleness.

  ReplyDelete
 12. ///நாங்க பண்ற இத்தனை வேலைகளுக்கும் இவ்ளோ நாள் சாமி எங்களை ஏதும் செய்யாததைப் பாத்தா, எனக்கே பெரியாரை நம்பணும் போல இருக்குது.
  என்றார் அசினாச்சு///

  இது நல்லாருக்கு:)) நல்ல பதிவு.

  ReplyDelete
 13. இந்துக்கள் அனைவரும் சிதம்பரம் கோயிலைப் புறக்கணிப்பதே சிறந்தது. தமிழகத்திலேயே தமிழுக்கு இடமில்லாத இடத்தில் தமிழர்கள் ஏன் செல்ல வேண்டும்? தீட்சிதர்களே யாரும் வராத கோயிலைக் கட்டிக் கொண்டு புனிதம் காக்கட்டும்.

  உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியனை தில்லையை மட்டும் எல்லையாகக் கொண்டவன் இல்லை. ஆகையால் நமக்கு இழப்பொன்றுமில்லை.

  ReplyDelete
 14. Shame on Karunanidhi.
  Demolish that private property building. We dont need any place or property or building that practices discrimination.

  ReplyDelete
 15. என்ன மூக்கரே, நலமா?

  எதை எதையோ அனுமதிக்கிறிங்க, ஒரு மனுசன் பாடப் போறேன்னு சொல்லி வந்தான்னா அவனையும் அனுமதிச்சா என்னன்னு கேக்குறேன். நம்ம தோஸ்துங்க "அவன எவன்யா பாடச் சொன்னான். வேலியிலே போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுகிட்டு குத்துது, கொடயுதுன்னு ஏஞ்சொல்லணும்"ன்னு கேக்குறாக. என்னமோ, நல்லா இருந்தா சரி தான்.

  ReplyDelete
 16. சுந்தர், ஃபுல் பார்மில் இருக்கிறீர்கள் போல :)

  சன்னாசி,
  //'கோயிலுக்குப்போற கோயிஞ்சாமிகள் சிவலோகத்துக்கு டிக்கெட் எடுக்காமலிருக்க 108 தற்பாதுகாப்பு வழிமுறைகள்'னு ஒரு பாம்புலெட்டோ ஆம்லெட்டோ அடிச்சோ பொரிச்சோ கோயிலுக்கு வர்ற ஒவ்வொரு கோயிஞ்சாமி கையிலயும் வாயிலயும் திணிச்சுட்டாப் போச்சு,//

  ஒரு வாக்கியத்துக்கு எத்தனை முறைதான் சிரிப்பது.. :))

  nambi,
  இதுக்கும் கருணாநிதி தலையைத்தான் உருட்ட வேண்டுமா..

  ReplyDelete
 17. //
  அனைவரும் சிதம்பரம் கோயிலைப் புறக்கணிப்பதே சிறந்தது. தமிழகத்திலேயே தமிழுக்கு இடமில்லாத இடத்தில் தமிழர்கள் ஏன் செல்ல வேண்டும்? தீட்சிதர்களே யாரும் வராத கோயிலைக் கட்டிக் கொண்டு புனிதம் காக்கட்டும்.
  //

  இராகவன், இதில்தான் சிக்கலே.
  தீர்வைப் பொறுத்தவரை இது அமைதியான
  ஆனால், கடுமையான தீர்ப்பாக இருக்கும்
  என்பதில் அய்யமில்லை.

  ஆனால், தில்லைக்கு வரும் வருமான வழிகளைப் பார்த்தால் இது நடைமுறைக்கு
  வருவதில் இருக்கும் சிக்கல் புரியும்.

  தில்லைக்கு வரும் வருமானத்தில்,
  90 விழுக்காடு 280 தீட்சித குடும்பத்தின்
  பிழைப்பிற்குப் போகிறது. மீதி 10% கோயில்
  மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது (படுகிறதாம்). தில்லையின் வருமானம்
  எவ்வளவு என்று தெரியவில்லை.(திருச்சி
  சமயபுரம் அம்மன் கோயிலின் கடந்த வருட
  வருமானம் 13 கோடி உரூவாய்.).

  கோயிலில் உண்டியல், நிலங்கள் மற்றும்
  பிற நேரடி ிவருமானங்களே இத்தகைய
  பொதுக்கணக்கில் சேர்க்கப் படும்.

  இதுவன்றி, எல்லாத் தீட்சிதர்களுக்கும்,
  (பாரம்பரியமாகவும்) பல பக்த கோடிகளின்
  தனிப்பட்ட தொடர்பு உண்டு. (10s of loyal customers). இவர்கள் சாதாரண
  அரசு அதிகாரிகள் முதல் பெரிய நீதிபதிகள், அரசியல் கட்சி ஆள்கள்
  வரை உண்டு. இவர்களிடம் இருந்து
  வரும் வரும்படிக்கு ஏற்றவாறு இப்பக்த
  கோடிகள் தில்லைக்கு வந்து தங்கி, தரிசனம் செய்து செல்வது வரையான உபசரிப்புகள் பார்த்துக் கொள்ளப்படும்.
  உண்மையில், நேரடி வருமானத்தை விட
  இவ்வழியில் வரும் வருமானம் அதிகம்.

  சாதாரண பக்தர்களிடம் இருந்து
  உண்டியலில் விழும் காசு இவர்களுக்கு
  ஒரு பொருட்டே அல்ல.

  ஆகையால், பொதுமக்கள், சிவனடியார்கள்
  போன்றோர் புறக்கணித்தாலும், அதனால்
  இவர்கள் பாதிக்கப் படமாட்டார்கள்.

  ஆகையால், இந்த 280 குடும்பங்களைச்
  சேர்ந்தோரையும் அரசு மிகத் தாரள
  செலவு செய்து (say CTC is 10/15 lacs p.a) தத்து எடுத்துக் கொண்டு விட்டு,
  கோயிலைத் தன் வசம் எடுத்துக் கொண்டால், கோயிலுக்கும், அரசுக்கும்
  நல்ல வருமானம் கிடைக்கும். (அரசு அதிகாரிகள் தின்பதும் போக).

  ReplyDelete
 18. திருவாசகத்தைச் சிற்றம்பலத்தில் பாடத் தடையா? பேசாமல் அந்தத் திருக்கோயிலுக்குப் போகாமல் இருந்தாலும் தகும். யார் யாருக்குத் தடை போடுவது?

  சிவநெறியாளருக்குக் கோயில் என்றாலே தில்லை தான். (விண்ணெறியாளருக்குக் கோயில் என்றாலே திருவரங்கம் தான்.) அந்தக் கோயிலுக்குள் ஒருவர் திருவாசகம் பாடக் கூடாது என்றால், அப்புறம் தில்லை ஆடவல்லான் தீட்சிதர்களோடு மட்டும் இருந்து கொள்ளட்டுமே? என்ன குறைந்துவிடும்? ஐந்து அவைகளில் ஒன்று குறைந்தது என்று வைத்துக் கொண்டு போகிறோம். மற்ற நாலு அவைகளிலும் நடம் பார்த்து மகிழ்ந்து கொள்ளுகிறோம்.

  நாம் ஆடவல்லானைத் தொழுவது சிக்கலே இல்லை; ஆனால், தில்லைக் கோயிலை அடியார்கள் தவிர்த்தால் தீட்சிதர்கள் கதை தொடர்ந்து ஓடுமோ?

  யார் யாருக்குச் சட்டத்தை எடுத்துக் காட்டிச் சொல்லுவது? சோழன் கொடுத்த செப்பேடுகளை ஒழுங்காகத் தீட்சிதர்கள் படிக்கட்டும். அந்தச் செப்பேடுகளைத் தூக்கி எறிய இன்றையத் தமிழக அரசு ஒரு ஆணை கொண்டு வந்தால் போதும். ஏன் செய்யாமல் இருக்கிறோம்? முன்னவனை மதிப்பதால்; அந்தச் செப்பேடுகளை இன்றும் இந்தக் காலச் சட்டம் ஏற்பது ஒரு நாகரிகம் கருதியே!

  தீட்சிதர்களின் பொருளாதாரச் சீரழிவைக் கண்டு ஒருபக்கம் வருந்தியிருந்தாலும், இது போன்ற திமிர்த்தனம் நம்மைச் சினத்திற்கு உள்ளாக்குகிறது.

  ஒரு நந்தன் இறையானது பற்றாதா இவர்களின் முட்டாள் தனத்திற்கு? இன்னுமா முட்டாள்த் தனம் தொடர வேண்டும்? "அடச்சே போங்கடா, நீங்களும் உங்க நடராசாவும். எங்க நடராசா உங்களுக்கு பாடம் கற்பிச்சிட்டுத்தான் இருக்கார். உங்களுக்குத் தான் என்ன நடக்குதுன்னு புரியலை."

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 19. http://karthikraamas.net/pathivu/?p=156

  ReplyDelete
 20. கருத்திட்ட ராகவன், செல்வா,ஜோ, கார்த்திக், திரு.இளங்கோவன்/மற்றும் இராம.கி அவர்களுக்கு நன்றி.

  மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சட்டம், சட்டம் என்று விட்டத்துக்கு பாய்பவர்கள், எல்லா இடங்களிலும் சட்டத்தின் படிதான் நடக்கிறார்களா..?? சங்கர மடத்துள் சட்டம் தன் கடமையை செய்யத்தான் நுழைந்தது. அதற்கு ஏன் இத்த்னை கூச்சல் வந்தது..? ;-).சிதம்பரத்தையும் அரசு கிண்டினால், இன்னும் எத்தனை சுந்தரேச/ரகுகளோ..?? அதற்கு எல்லாம் "அம்மா" வர வேண்டும்.

  ReplyDelete
 21. ஒரு விளக்கம் :

  இந்தப் பதிவு நிகழ்கால நடப்பையும், எதிர்கால பயங்கலந்த சந்தேகங்களையும் கலந்து எழுதப்பட்டது. தேதியில் 20xx என்றிருப்பதைப் பார்த்தால் புரியும்.

  சிலர் புரிந்து கொண்டதைப் போல கீழே நான் எழுதிய வரிகள் சிதம்பரத்தில் நடந்தவை அல்ல. "நடந்தாலும் நடக்கலாம்" என்று நக்கலடிக்க எழுதப்பட்டது.


  //இவர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.//

  ReplyDelete
 22. தில்லை நடராசருக்கு தமிழ் புரியாது என்பதை உலகுக்கு உணர்த்தும் தீட்சிதர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .
  இனியாவது தமிழில் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தாம் வேண்டி கொள்வதை மொழி பிரச்சனையால்
  தில்லை நடராசருக்கு புரிய இயலாது என்பதைப புரிந்து கொள்ளட்டும்.
  மேலும் இயக்குநர் ஷங்கர் படபிடிப்பெடுத்த புண்ணிய தலத்தை அசிங்க படுத்த நடந்த முயற்சிகளை முறியடித்த
  தீட்சிதர்களுக்கு நன்றி

  ReplyDelete
 23. நல்லா கலாய்க்கிறாங்கப்பா...

  ReplyDelete

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...