என்ன பிடிக்கவில்லை
என்று கேட்கிறாய்
என்ன சொல்வதென்றும்
எத்தனை சொல்வதென்றும்
யோசித்து மாய்கிறேன்
சத்தம் வர மெல்வதையும்
பல்கறையுடன் சிரிப்பதையும்
சங்கீதம் அணைத்துவிட்டு
அசட்டு நாடகத்தை
ரசிப்பதையும்
நீர் தளும்பகீழ் சிந்திய
நம் செல்வத்தின்
கண்நீர் சிந்த வெளுப்பதையும்
சேற்றிலே கை வைத்து
சாந்துக்கு குழைப்பதுப்போல்
சோற்றிலே உழப்புவதையும்
நின்றுகொண்டே நீரொழித்து
கழிப்பறை கோலமிடுதலையும்
அக்குளைச் சொறிந்துகொண்டே
அடுக்களைக்குள் வருவதையும்
அயலார் முன்னிலையில்
அநாகரீகமாய் நடப்பதையும்
ஏகத்துக்கு மதுவருந்தி
இரவெலாம் உளறுவதையும்
ஊர்மேய்ந்து நீ வர
அதுவே உள்ளிருக்கும்
எனக்கும் விருப்போவெனும்
குற்றக் குமைச்சலில்
எனை சீண்டுவதையும்
கேட்கவே பிறந்தோன் போல
கூசும் கேள்வியாய் கேட்டு
வாய் வீசுவதையும்
மெல்லிய உணர்வெதுவும்
இல்லவே இல்லாமல்
ஆண்மை என்பதை
முரடு என்று மொழி பெயர்க்கும்
என் அசட்டு ஆம்பிளையே...
கேள்வியாய் கேட்டுவிட்ட
ஓவென்று உன் கதறலில்
இருக்கச் சம்மதித்தவளை
முன்னிலும் வேகமாய்
வெறியோடு பின்னிரவில்
புணருமுன்னை கண்டெனக்கு
ஆயாசமாய் இருக்கிறது.
நானென்ன வெறும் துவாரமா..?
எனில் நீ எதற்கு ஆறடியில்
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
//நானென்ன வெறும் துவாரமா..?
ReplyDeleteஎனில் நீ எதற்கு ஆறடியில்//
நியாயமான கேள்விதான்
நன்றி பிரகாஷ்.
ReplyDeleteமிஸ்டர் ரம். என்னய்யா பேரு இது. கூப்படற்துக்கே கொஞ்சம் கூச்சமா இருக்கு. பாராட்டுக்கு நன்றி.