Wednesday, June 29, 2005

என்னதான் சொல்கிறார்..??

உம்மணாமூஞ்சிக்காரர்களுக்கு சொல்கிறாரென்றால் சரி எனலாம். ஏனென்றால் அவர்களுக்கு அது சிகிச்சை மாதிரி.

பேசுங்கள் என்று ஒரு பகுதி எழுதி இருக்கிறார் மதன் இந்த வார குமுதத்தில்.
மதன் மீது எனக்கு அபிமானம் உண்டென்றாலும், சமீப காலங்களில் அவருடைய
அட்வைஸ் எல்லாம் ஒரு "ரேஞ்சு"க்குத்தன் இருக்கிறது.

இந்தப் பிள்ளை எப்போ பேசும்னு நினைக்கனும்..?? ஏண்டா பேசுதுன்னு யாரும் நினைக்கக்கூடாது என்பார் என் தாயார். ஓட்டைப் பானையில் நண்டை விட்டா மாதிரி நான் சிறுவயதில் அவ்வளவு பேசுவேன். கிட்டத்தட்ட 1998 வரை அப்படித்தான் - இல்லை, அவசரப்படாதீர்கள். கல்யாணம் 1999ல் தான் ஆனது.

நிறைய கேக்கணும். காது, மூடாத அவயம். ஞானவாசல் என்று பாலகுமாரன் எங்கோ எழுதினார். அதையும் தவிர, வாயை திறந்து வாங்கிக் கட்டிக்கொண்ட பல சம்பவங்கள் நடந்தன. ரகசியமே தங்காதனால், எல்லோரும் ரிப்போர்ட்டர் என்று ( விகடன் ரிப்போர்ட்டர் பயிற்சியை இணைத்து) ரவுசு விட்டார்கள். அதில் ரிப்போர்ட்டராக முடியாமல் தோற்றுப் போன தலைகளும் அடக்கம் என்பது தனிக் கதை.

எப்போது பேச்சைக் குறைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. சின்ன வயதில் திட்டிய அதே அம்மா இப்போதும் திட்டுகிறார் - நான் மிக அழுத்தக்காரனாகி விட்டேனென்று. என் வாழ்க்கையில் நான் உருப்பட ஆரம்பித்ததே, பேச்சைக் குறைத்த பின்தான் சுற்றுப்புறத்தில் உள்ள, நம்மை விட நல்ல ஆத்மாக்கள், அறிவுஜீவிகள் எல்லாம் அமைதியாக இருப்பதை பார்க்க ஆரம்பித்த பிறகு பேசுவது குறைந்தது என நினைக்கிறேன். கிட்டத்தட்ட எழுதுவதற்கும் இது நடக்க ஆரம்பித்து இருக்கிறது இப்போது.

அதைவிடவும், பேசிக்கொண்டே இருப்பதில், நம் இரைச்சல் நமக்கே தாங்காதது போல, மனசு ஆழ்ந்து யோசிப்பதே இல்லை. பேச்சு குறைய குறைய யோசனை அதிகமாகிறது. மற்றவர்கள பேசுவதை கேட்க முடிகிறது. அதிகமாக தேவை இல்லாமல் பேசுபவன் முன்னே உட்கார்ந்து பாருங்கள். கொஞ்ச நேரத்தில் ( நாம் பேசாது இருப்பதால்) தான் உளறுவது தெளிவாகத் தெரிந்து அவன் நிறுத்தி விடுவான். மேலுன் பேசாமல் இருப்பதால் EQ பெரிய அளவில் முன்னெறுகிறது என்று தகவல்களும் உண்டு.

தமிழ்நாட்டில் பாதி வேலை பாழாவதே பேச்சில்தான். திண்ணயிலும் , புழக்கடையிலும் கும்மகோணம் வெற்றிலையும், சீவலும், சுண்ணாம்பும், ஜாதிக்காயும் வைத்து வாயில் அதக்கிக் கொண்டு பேசிப் பேசியே எத்தனை தஞ்சாவூர் குடும்பங்கள் வீணாகப் போயிற்று தெரியுமா..??

பேசச் சொல்கிறாராம்..ம்..ஹும்..

மதன் சன் டீவிக்கு வரப் போகிறார் என்று சந்தோஷத்தில் இருந்தேன். இன்னொரு அரட்டை அரங்கம் தான் இவருக்கும் ஐடியா போலருக்கு.

என்னவோ போங்க...

9 comments:

 1. Madan's article wasn't tough to understand?

  He talks abt improving one's conversational skills (‘உரையாடல் கலை’ as opposed to yakking).

  Maybe that your 'ரேஞ்சு' has changed (or should I say 'improved')... you seem to understand things that are difficult for others to understand :).

  .:dYNo:.

  ReplyDelete
 2. உரையாடல் கலையைப் பற்றி மட்டும் சொன்னதாக தெரியவில்லை எனக்கு..
  ஆமாமாம்..தமிழ் இணையத்துக்கு வந்ததில் இருந்து 'ரேஞ்சு' கொஞ்சம் மாறி விட்டதாய்தான் உணர்கிறேன்.:-)
  உங்களை எல்லாம் படிக்கிறேனே.

  ReplyDelete
 3. >>>> பேசும் கலையில் தேர்ச்சி பெற்றால் உரையாடலும் ஜோராக வரும். ‘உல்டா’வாகவும் சொல்லலாம்!

  >>>>மறுபடியும் பள்ளிக்கூடங்களில் ‘உரையாடல் கலை’ யைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

  Above from the article.

  >>>உங்களை எல்லாம் படிக்கிறேனே

  If you had read mine, I wouldn't have said 'improved'...would I? ;)

  .:dYNo:.

  ReplyDelete
 4. well..Madan wrote something. sundar and .:D received it in different "levels". அவரவர் பூத்த மாதிரி.

  //முன்பெல்லாம் மரத்தடியில், வீட்டுத் திண்ணைகளில், ஆற்றங்கரையில் மனிதர்கள் அமர்ந்து ஊர் உலக விஷயங்களைப் பற்றி பேசினார்கள். கிராமங்களில் மடுமே இந்த வழக்கம் இன்னும் இருக்கிறது //

  என்னை யோசிக்க வைத்தது முக்கியமாக இந்த வரிகள்தான். இதன் கடுமையான பக்க விளைவுகளை கண்ணெதிரே கண்டாவன் என்கிற முறையில்..

  ஆம்..உங்களைப் போன்றவர்களை படித்ததனாலேயே அறிவு "விரிந்தது".
  விருப்பு வெறுப்பிலாமல் எழுதுவதற்குத்தானே விவரம் மழுப்பி எழுதுகிறீகள்.

  ஒரு வகையில் நீதி தேவதையே முகமூடிதானே..;-)

  ReplyDelete
 5. //என் வாழ்க்கையில் நான் உருப்பட ஆரம்பித்ததே, பேச்சைக் குறைத்த பின்தான் சுற்றுப்புறத்தில் உள்ள, நம்மை விட நல்ல ஆத்மாக்கள், அறிவுஜீவிகள் எல்லாம் அமைதியாக இருப்பதை பார்க்க ஆரம்பித்த பிறகு பேசுவது குறைந்தது என நினைக்கிறேன்.//

  அருமையான கருத்துக்கள். இதே விஷயத்தைக் குறிக்க 'நிறைகுடம் ததும்பாது'ன்னும் சொல்லுவாங்களே.

  ReplyDelete
 6. >>>>விவரம் மழுப்பி எழுதுகிறீகள்

  ³Â¡ ã츧Ã! ¿£í¸ ´Õò¾÷ §À¡Ð§Á... þÉ¢ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ ¿¡ý ÁØôÀ¢ ±ØО¡¸ À¨ÈÂÊÕÅ¡í¸ ;)

  Å¢íŠ,

  ¸¡Ä¢ ̼õ ܼ ¾ÐõÀ¡Ð! :)

  .:¨¼§É¡:.

  ReplyDelete
 7. Sorry for thr TSC comment.

  >>>>விவரம் மழுப்பி எழுதுகிறீகள்

  ஐயா மூக்கரே! நீங்க ஒருத்தர் போதுமே... இனி எல்லா இடங்களிலும் நான் மழுப்பி எழுதுவதாக பறையடிச்சிருவாங்க ;)

  விங்ஸ்,

  காலி குடம் கூட ததும்பாது! :)

  .:டைனோ:.

  ReplyDelete
 8. CEO of largest steel producer of US says his motto is "God gave us two ears and one mouth for a reason. We are supposed to listen twice as much as we talk."
  http://www.newsobserver.com/business/nc/top100/story/2475105p-8879196c.html

  ஆனால் பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருந்தால், கும்மியடித்து குழிதோண்டி புதைத்து பாலும் ஊற்றிவிடும் இந்த உலகம்....

  ReplyDelete
 9. அண்ணாச்சி நம்ம பேசறதை இன்னும் நிறுத்தலை ஆனா பேச வேண்டிய நேரத்துல பேச மாட்டேங்குறேன் எதுனா ஒரு வழி சொல்லுங்களேன் மாறுவதற்கு

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...