அலுவலக சம்பந்தமான பயிற்சி வகுப்பு இந்த வாரம் முழுவதும் எனக்கு காலையில் வகுப்பில் உட்கார்ந்திருந்தபோது, மரியாதைக்குரிய ஒரு நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
"என்னய்யா...உம் பேரை இப்படி புடிச்சி இழுத்து விட்டுட்டு இருக்காங்க. நீங்க வகுப்புல உட்கார்ந்திருக்கீங்க" என்றார் நக்கலாக.
" ஆமாம் சார். காலையிலேயே படிச்சேன். இதுக்கெல்லாம் என்னத்த பதில் சொல்றதுன்னு விட்டுட்டேன். நானெல்லாம் தமிழ்த்தாய்க்கு சாப்பாடு போடணும்னோ, வியாபாரம் பண்ணனும்னோ இணணயத்துக்கு வரலை சார். விகடன் குமுதம் படிச்சு போரடிச்சு போயி, சரி நாமளும் எழுதலாம். நம்மளை மாதிரி எழுதறவங்களையும் படிக்கலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். இப்ப பாத்தா, நெலமை ரொம்ப கட்டுக்கடங்காம போயிட்டா மாதிரி இருக்கு. எழுதறதை தவிர, அதையும் தாண்டி ரொம்ப பேரு வாழ்க்கையில முக்கால்வாசி நேரத்தை இதுலயே செலவிடறாங்க போலிருக்கு. போன் பண்ணி, சாட் பண்ணி, முகமூடிப் பேருலயே நாலஞ்சு வலைப்பூ ஆரமிச்சு வச்சுகிட்டு, அவன் இவனோட சொந்தக்காரன். இவன் அவனோட மச்சான், மாமன்னு வேண்டாத வேலையை பேசிக்கிட்டு அலையறானுங்க. கடைசில அவனுகளுக்குளேயே அடிச்சிகிட்டப்புறம் இந்த மாதிரி கருமம் புடிச்ச சமாசாரமெல்லாம் வெளியே வருது. நம்மளை பொறுத்தவரைக்கும் எது செஞ்சாலும் சொந்தப் பேருலதான் செய்யறதால ( நண்பர் சுரேஷ் கண்ண் கூட ஒருகாலத்தில என்னைத் திட்டிக் கொட்டினார். ஆச்சரியப்பட்டார். இப்ப இதெல்லாம் பாத்த பின்னாடி சொந்த பேருல பேசற அது என்ன "மை".. அந்த மையோட மகிமை அவருக்கு புரிஞ்சிருக்கும்.) இந்த கருமத்துலயெல்லாம் இறங்கிகிட்டு ஸ்டேட்மெண்டு விடணுங்கறே அவசியமில்லே.நீங்களும் இதெல்லாம் கண்டுக்காதீங்க. ஜாலியா ஏதாவது எழுதுங்க சார். நடிகை படம் வேணுன்னா சொல்லுங்க, நான் தர்றேன்னேன்.
ஆனாலும் பாருங்க. சாயங்காலம் வந்ததுக்கு அப்புறம் மிச்ச சொச்ச சிங்காரத்தையும் படிச்சு முடிச்சேன். "நரகலை" ( :-) ) மிதிச்ச மாதிரி இருந்துச்சு. மத்ததை விடுங்க, நாங்க போன்ல பேசிக்கிட்டதையாவது ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. ஏன்னா, நாள் கழிச்சு சொன்னா "முதிர்ச்சி" ங்கிற பக்குவத்தையும், நம்மைப் பத்தி யாராவது கண்டமாதிரி பேசினா நமக்கு விளம்பரம் குடுக்கறாங்கன்னும் நினச்சுக்கிற "பக்குவம்" இன்னமும் வரலை பாருங்க.
அதான் சொல்லி வச்சேன். வர்ட்டா...:-)
Monday, June 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
:-) இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதா இல்லை! :-)
ReplyDeleteகரெக்ட் செல்வா.
ReplyDeleteசொல்றது மட்டும் இல்ல. கொஞ்ச நாளைக்கு கலப்பையே தொடக்கூடாதுங்கற அளவுக்கு வேதனையா இருக்கு.எங்க நிறுத்தறதுன்னு தெரியாம, எது எதுக்கு எங்க லிங்க பண்றதுன்னு வரைமுறை இல்லாம, இங்க அவனவனுக்கு பித்தம் தலைக்கேறிப் போச்சு. :-(
// முகமூடிப் பேருலயே நாலஞ்சு வலைப்பூ ஆரமிச்சு வச்சுகிட்டு, // ஏனுங்க, இனிமே மூஞ்சி இல்லாதவங்கள குறிக்க அநாமதேயர்கள்னு சொல்லுங்க... இப்படி முகமூடி ன்னு என்ற பேர சொன்னா யாராச்சும் தப்பா எடுத்துப்பங்கல்லோ... (அட அநாமதேயன்னு யாராவது வலைப்பூ தொடங்கற வரையாச்சும் அநாமதேயன்னு சொல்லுங்கப்பு)
ReplyDelete