Tuesday, July 12, 2005

என் ரண்டு சல்லி....

போலி பெயர்களில் பின்னூட்டங்கள், ஆபாச பின்னூட்டங்கள், பல முக சேஷ்டைகள் என்று தமிழ்மணம் அதகளப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்/ வேண்டாம் - இதை கண்டுகொள்ளவேண்டாம் என்று இன்னொரு பக்கம் வாதப்பிரதிவாதங்கள்,
கண்டுகொள்ளவேண்டும் என்றால் யார்..?? தமிழ்மணமா, ப்ளாக்கரா யாருக்கு பொறுப்பு என்று அதிலும் பேதங்கள்.

பத்து ஆசாமிகள். பதினோரு மூக்குகள் என்று சொலவடை உண்டு. அதுதான் நடந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அதற்கு காரணம் சிந்திக்கதெரிந்த நம் எல்லாருக்குமே நம் சிந்தனைதான் கரெக்ட் என்கிற நினைப்பு இருப்பதுதான். அதிலும் தவறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னுடைய யோசனை என்னவென்றால் நடவடிக்கை எடுப்பது, சந்தேக வளையத்துள் இருப்பவரை பகிஷ்கரிப்பது, இந்த வலி எல்லோருக்கும் வர வைக்க மனிதனாகவும், வாலியாகவும், கஜேந்திரபாலனாகவும் அவதாரம் எடுத்து குடைச்சல் கொடுப்பதை தவிர இன்னொரு வழி, சண்டைக்காரனை அழைத்துப் பேசுவதுதான்.

பின்லேடனுக்கே ஒரு நியாயம் இருக்கும் இக்காலத்தில், ஒரு சாதாரண, முன்கோபியான, சந்தர்ப்பவசத்தினால் தீவிரவாதியாகிப்போன நம்மாளை, " அட ..வா ..தம்பி..நடவடிக்கை ஒன்றும் இல்லை. என்னாச்சு உனக்கு. எது உன்னை இதை செய்யத்தூண்டியது. உனக்கு இப்போ என்ன வேண்டும். எது நடந்தால் அமைதி அடைவாய்" என்று கேட்கலாம். காரணங்கள் தெரிந்து பேச்சு வார்த்தை நடந்தால் ஒரு வேளை மனமாற்றம் நிகழலாம். பேச்சு வார்த்தை நடந்தால்தான் எதாவது தவறாக புரிந்து கொண்டு, யாராவது போட்டுக் கொடுத்து இதெல்லாம் நடந்ததா என்பதும் தெரிய வரும். சுனாமிக்கு உருவாக்கபட்ட வலைமேடை செயலியை இதற்கு உபயோகப்படுத்தலாம். சந்தேக வளயத்துள் உள்ளவரும் சாட்சி இருக்கிறதா..?? நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் கேட்காமல் ஒத்துழைத்து பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு ஆக்ஷன் எடுத்தால் அது வேறு பெயரில் வேறு இடங்களில் தொடரும். ஒரு ஆசாமிக்கு பதிலாக ஒரு கூட்டம் சேரும். எனவே கேட்பதற்கு கோழைத்த்னமான அணுகுமுறை போல தோன்றினாலும், எனக்குத் தெரிந்து பிரச்சினை குறைவான அணுகுமுறை இது.

இது நடக்கவில்லை என்றால் மாலன் சொல்கிறபடி யாஹூ சேவையை உபயோகித்து, தான் விரும்பிய( மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஆனாலும் சரி) நண்பர்கள் மட்டும் வலைப்பதிவில் பின்னூடம் இடுமாறு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். தமிழ்மணம் யாஹூ பதிவுகளையும் கண்டு கொள்வதால் இதில் சிக்கல் இருப்பதாக தோன்றவில்லை. யாஹூவுக்கு வர விருப்பம் இல்லாதவர்கள் விரும்பினால் தொடர்ந்து ப்ளாக்கரிலேயே உழைத்து பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்.

ஏதாவது நடக்கக்கூடியதா சொல்லி இருக்கெனா..??

4 comments:

 1. இதனை நான் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 2. /இந்த வலி எல்லோருக்கும் வர வைக்க மனிதனாகவும், வாலியாகவும், கஜேந்திரபாலனாகவும் அவதாரம் எடுத்து குடைச்சல் கொடுப்பதை தவிர இன்னொரு வழி, சண்டைக்காரனை அழைத்துப் பேசுவதுதான்./

  மிக நல்ல யோசனை.

  /இதற்கு ஆக்ஷன் எடுத்தால் அது வேறு பெயரில் வேறு இடங்களில் தொடரும். ஒரு ஆசாமிக்கு பதிலாக ஒரு கூட்டம் சேரும்./

  உண்மை. ஏற்கனவே அது நடந்து கொண்டுள்ளது என்பது என் யூகம்.

  /எனவே கேட்பதற்கு கோழைத்த்னமான அணுகுமுறை போல தோன்றினாலும், எனக்குத் தெரிந்து பிரச்சினை குறைவான அணுகுமுறை இது./

  இது கோழைத்தனமானதல்ல, தைரியமான் அணுகுமுறை. தீர்வு காண்பது சண்டையில் சம்பந்தப்பட்டவர்கள் கையில் தான் உள்ளது.

  ReplyDelete
 3. மாலன் மற்றும் கருத்து சொன்ன மற்ற நண்பர்களுக்கு நன்றி. "மத்தளராயன்" கூட பேச்சுவர்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ;-)

  பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அன்பர்களில் முதல் பூவை எடுக்கப்போவது யார்..??

  ReplyDelete
 4. " "மத்தளராயன்" கூட பேச்சுவர்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ;-)"

  நீங்களும் அழகாக அடையாளம் கண்டுகொண்டீர்கள். ஆனால் அந்த மனம் பிறழ்ந்தவன் இதனால் எல்லாம் அடங்குவான் என நினைக்கிறீர்கள்?

  லேட்டஸ்டாக ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கும் டார்ச்சர் கொடுத்தான் அவன். அதற்கு முன் கே.வி.ஆர். அவர்கள் பதிவுகளுக்குப் போய் அவர் வீட்டுப் பெண்களை பெயர் சொல்லி வம்பு வளர்த்தான். அவனுக்கு கஜேந்திர பாலனும் வாலியும்தான் சரி.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...