Monday, January 10, 2005

ம.குமரன் தா/பெ மகாலக்ஷ்மி

படத்தின் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் சலிப்பாக இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை நம்பி, ரிஸ்க் எடுத்தேன். நம்பிக்கை வீண்போகவில்லை.

செல்வராகவன்/தனுஷ்/கஸ்தூரிராஜா ஃபேமிலி போல இதுவும் ஒரு ஃபேமிலி படம்தான். ஆனா கொஞ்சம் ரீஜண்டான ஃபேமிலி போல. எடிட்டர் மோகன்/ராஜா/ரவி படம். இப்படி ரெண்டு புள்ளைகளை பெத்தா கோடம்பாக்கத்துல நல்லா பொழைச்சிக்கலாம்போல. இவர்கள் முதல் படம் "ஜெயம்" கொஞ்சம் தான் பார்த்தேன். ஆனா போரடிச்சுதுன்னு எழுந்து போய் ப்ரவுஸ ஆரம்பிச்சுட்டேன். இந்தப் படம் பரவால்லை. கதைன்னு ஒண்ணும் பெரிசா இல்லாட்டியும், எல்லா சரக்கையும் சரிவிகிதமா கலந்து, குடும்பத்தோடு பாக்கிற மாதிரி தர முயற்சி பண்ணி இருக்காங்க.

ஹீரோ ரவி செமையா உடம்பு ஏத்திட்டார். ஆள் நல்லா, ஓங்கு தாங்கா, ஜம்முனு இருந்தாலும், மூஞ்சு ரொம்ப சாஃப்ட். அதை ஈடுகட்டற மாதிரி காட்சிகளிலும், வசனங்களிலேயும், முரட்டுத்தனத்தை ஏத்தி, கதாநாயகனை ரஃப் அண்டு டஃப்பாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். முயற்சி வெற்றி என்றாலும், சில இடத்தில் யதார்த்தத்தை மீறிய முரட்டுத்தனம் தெரிகிறது. இவர் போதாதென்று அப்பா பிரகாசராஜர் வேறு. களம் கிக்பாக்ஸிங் என்பதால் இருவரும் எப்போதுக் "கிக்கி" கிட்டே இருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கடைசி கட்ட காட்சிகள் மற்றும் தங்கை கல்யாணம் எல்லாம் தாய்மார்களின் புடவைத்தலைப்பை ஈரமாகுவதற்காக எடுக்கப்பட்டவை என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.ஹீரோயின் அஸின், பிசின் மாதிரி மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார். கேரளத்துப் பெண்குட்டி. கொஞ்சம் இஷா கோபிகர் சாயல், நிறைய இளமை + துள்ளல், அப்..பார வளைவுகள் என்று அள்ளிக்கொண்டு போகிறார். கட்டாயமாக ஒரு ரவுண்டு வருவார். வடக்கத்திய இறக்குமதிகள் போல, " வெக்கமா..?? கிலோ என்ன விலை ..? என்று கேட்காமல், நாணிக்கோணுவது போல நடிக்க முயற்சி பண்ணியது அட்டகாசமாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

நதியா ஆன்டி அசத்தலோ அசத்தல். ரொம்பவே இளமையான அம்மா. ரொம்பவே தன்னம்பிக்கையும், மகனுக்கு கொஞ்சமும் சளைக்காத கோபக்காரியாகவும், சீனியர் கிக்கருக்காக வாழ்க்கையை விட்டுக் கொடுப்பதிலும் சரி போடு போட்டிருக்கிறார். இத்தனை இளமையான அம்மா, பொசுக்கென்று ஹார்ட் பிராப்ளத்தில் செத்துப்போவது இது தமிழ்ப்படம்; இது தமிழ்ப்படம் என்று நியாகப்படுத்துகிறது.

விவேக் சீசன் இன்னமும் முடியவில்லை போல. காமெடிக்கு குறைச்சல் இல்லை. ஆபாசமும் கொஞ்சம் தூக்கல்தான். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சேர்ந்து கொண்டு சிலையை "மாற்றி" வைக்கும் காட்சியும் அதை மலேசிய வி.ஐ.பி சிலாகிக்கும் காட்சியும். அதைப் பார்க்கும்போது Sodomy க்காக, சர்ச்சையில் சிக்கிய மலேசிய பிரமுகர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இத்தனை நல்ல படத்துக்கு ஒரு நல்ல இசையமைப்பாளர் கிடைக்காது போனது துரதிர்ஷ்டமே. தகப்பனின் வழியில் ஸ்ரீகாந்த் டன்டனக்கடி டன்டனக்கடி என்று தட்டித் தள்ளி இருக்கிறார். படத்தின் மியூசிக் சிடியில் எறும்பு மொய்க்கிறதாம். :-) டைரக்டர் ராஜா ஃப்ரெஷ்ஷாக கொடுத்திருக்கிறார். எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள் படத்தில்.

முக்கியமாய் பிசின்...ஹி..ஹி..


No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...