Friday, February 25, 2005
துள்ளித்திரிந்த காலம்
ஆடி மாதக் காவேரியில் குளித்த மாதிரி இருந்தது ஒரு வருடம் முன்பு.
நமக்கே நமக்கான இடம். அதிலே மற்றவர் கருத்தை தெரிந்து கொள்ள வசதி. நியாயமோ அநியாயமோ, தணிக்கை செய்யப்படாத கருத்துகள் என்று மிக சுதந்திரமாக இருந்தது. நிறைய எழுதினேன்.
என்னைப் பற்றி...என் நண்பர்களைப் பற்றி ... படைப்புகளைப் பற்றி ... கருத்து வேற்றுமைகள் பற்றி.
இப்போது கொஞ்சம் நிதானம் வந்திருக்கிறது( தா..??) . மனதில் எழும் உணர்வுகளை எல்லாம் எழுதுவது மட்டும் முக்கியமல்ல, அதை கூடியவரை நாசுக்காக தெரிவிக்க வேண்டும் என்கிற நிதானம். பளீரென்று முகத்தில் அறைந்தாற்போல எழுதுவது முன்னர் பிடித்த அளவுக்கு இப்போது பிடிக்கவில்லை. நமக்கு அது விடுதலை உணர்வை தந்தாலும், எதிராளிக்கு, சம்பந்தப்பட்டவருக்கு அது எப்படி இருக்கும் என்று சில தருணங்களில் புரிந்தது. சுற்றி சுழற்றி எழுதுவது தந்திரம்..அதில் உண்மையில்லை என நினைத்திருந்தேன். அது இப்போது கொஞ்சம் தணிந்து இருக்கிறது.
உலகத்தில் உண்மை என்றும், பொய் என்றும் நல்லதென்றும் கெட்டதென்றும் ஒன்றும் இல்லை. காலம் தான் எல்லாம். காலமே கடவுள்.
ஒரு வருட காலத்தை இன்றோடு கடந்திருக்கும் என் வலைப்பூ எனக்கு மறுபடியும் நினைவூட்டி இருக்கும் உண்மை இது.
நண்பர்களுக்கு நன்றிகள்... வணக்கங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
:-D
ReplyDeleteவாழ்த்துகள்! எழுதிக்கிட்டே இருங்க.
ReplyDeleteஅடடே ஒரு வருஷம் முடிஞ்சிருச்சா!
ReplyDeleteஇப்பதான் ஆரம்பிச்சதுமாதிரி இருக்கு.
வாழ்த்துகள் மூக்கரே. அடிக்கடி எழுதுங்க.