Monday, February 28, 2005

ஆஸ்கார் 2005

எந்தப் படங்கள் பார்க்கப்படவேண்டியவை என்ற தகவலுக்காகவும், யாரார் எப்படி எப்படி வருகிறார்கள் என்று பொது அறிவை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் ஆஸ்கார் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பதுண்டு. நேற்றும் பார்த்தேன்.



E Channel ல் பார்க்க ஆரம்பித்தபோது விருந்தினர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேட்டி எடுத்த ஸ்டார் அம்மணி ஒவ்வொருவராக கூப்பிட்டு கலாய்த்துக் கொண்டிருந்தார். அம்மாவும், பொண்ணுமாக வரும் பேட்டியாளர்களைப் போல இல்லாமல் இவருடைய கேள்விகள் கொஞ்சம் சவ சவ என்று இருந்தன.

ஜெனிஃபர் லோபஸ், கேமரூண் டியஸ், டென்ஸல் வாஷிங்டன், டாம் ஹேங்கஸ், டாம் க்ரூஸ், நிகோல் கிட்மேன் போன்ற பெருந்தலைகள் மிஸ்ஸிங். க்ரிஸ் ராக் தன்னுடைய முன்னுரையில் புஷ்ஷை புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாமினேட் செய்யப்பட்டிருக்கும் படங்களை பார்த்தீர்களா என்று பொதுமக்கள் சிலரிடம் அவர் எடுத்த பேட்டி நடுவே ஒளிபரப்பப்பட்டது. நல்ல படங்களுக்கு ஹாலிவுடிலும் இருக்கும் "மதிப்பு" தெரிய வந்தது.

சில வருடங்கள் பரிசு வழங்கப்பட்டபோது, ஒரே படமே ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிக்குவிக்க மற்றவர்கள் விசனப்பட்டனர். அது போல அல்லாது, இந்த வருடம் நாமினேட் செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவில் பரிசு வென்றன. ஏவியேட்டர் படத்துக்காக மார்ட்டீக்கு பரிசுகிடைக்கும் என எதிர்பார்த்தேன். பாவம்..ஐந்தாவது முறை தவறவிடுகிறாராம். பரிசு கிடைத்த படங்களை குறித்து வைத்து ஒவ்வொன்றாக பார்க்க முயற்சிக்க வேண்டும்.

Oscar Acceptence speech எல்லாவற்றையும் இங்கே தொகுத்து வைத்து, எது நன்றாக இருக்கிறது என்று ஓட்டுப்போட சொன்னார்கள். தொண்டை தழு தழுக்க பேசிய டாம் ஹாங்க்ஸ் பேச்சும், என்ன பேசுவதென்றே தெரியாமல் திக்கித் திணறி பார்வையாளர்களை சிரிக்க வைத்த கருங்குயில் ஹாலிபெர்ரியின் பேச்சும் மிகப் பிரசித்தம். இந்த வருடம் ஹில்லாரி ஸ்வாங்க் நிதானமாக பேசினர். மார்கன் ஃப்ரீமேன் கம்பீரமாக பேசி மனதை அள்ளினார். ஜேமி ஃபாக்ஸைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ரமணிதரன் சொன்ன படம் ( Motorcycle diaries) ஒன்றின் பாடலை அந்தானியோ பண்டாரஸ் பாடினார். அந்த பாடலுக்கு ( original score) பரிசு கிடைத்தது. க்யூபாவின் புரட்சிக்கு வித்திடுமுன் சேகுவராவும், அவர் நண்பரும் தென்னமெரிக்க நாடுகள் முழுதும் மோட்டார் பைக்கிலேயே போய்வந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்ட கதை என்று எழுதி இருந்தார். அதையும், ஹோட்டல் ருவாண்டாவையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

மேலும் தகவல்களுக்கு.

2 comments:

  1. /ரமணிதரன் சொன்ன படம் ( Motorcycle diaries) ஒன்றின் பாடலை அந்தானியோ பண்டாரஸ் பாடினார்./சொன்னது நானில்லை; தமிழ்ப்பாம்பு
    http://dystocia.blogspot.com/2005/02/blog-post_12.html

    ReplyDelete
  2. தவறுக்கு வருந்துகிறேன்.

    திருகின மண்டையில ஏதோ ஒண்ணு சொன்னதுன்னு தெரியும். ஆனா எது என்று சரியாக விளங்காமல் எழுதி விட்டேன் :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...