Tuesday, April 03, 2007

ஏக்கம்


வெருண்டோட மான்களில்லை
காயமாற நக்கி சலிப்பதில்லை
கடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்
தனியே எதிர்கொள்ளும் சாபமில்லை
வயிற்றுக்கு பதிலாய்
வேட்டையாடும் வேலையில்லை
அசைபோட்டு படுத்திருக்க
ராணிதரும் உணவில்லை
செல்லக்கடி கடித்து முயங்க
குட்டியில்லை குடும்பமில்லை
வண்ண விளக்கு நடுவே நான்
கர்ஜித்து வாய்பிளக்க
கண்கொட்டா மனிதரில்லை
சாட்டையின் சொடுக்கிற்கும்
இசையின் வேகத்துக்கும்
கரவொலி காதுகிழிக்க
சுற்றிச் சுழன்று வருகின்றேன்.
ஆழத்தில் கானகம்.

2 comments:

  1. பழிப்பது போல் புகழ்வதும், புகழ்வது போல் பழிப்பதும் புலவர்களுக்கு சொல்லித் தெரிவதில்லையே! அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. Thanks for your comments

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...