Monday, September 20, 2004

IKEA

வீடு வாங்கினதின் பக்க விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அபார்ட்மெண்டுகளில் தங்கி இருந்தவரை ஒரு பிரச்சினையும் இல்லை. மாதா மாதம் சமர்த்தாக வாடகை கொடுத்து விட்டு மல்லாந்து
கிடக்கலாம். வேறு உபத்திரவம் இல்லை. ஆனால் சொந்த வீட்டு பொறுப்புகள் அசர அடிக்கிறது. கொல்லை வாசலுக்கு புல் வெட்டுவது முதல், சுவற்றில் ஆணியடித்து ஏதாகிலும் மாட்டுவது வரை, எல்லாமே தமாஷ்தான். ஆணியும் எங்கு பார்த்தாலும் அடித்து விட முடியாது. மேக்கப் போட்ட கோடம்பாக்கத்து தாரகைகள் போல வெளியிலிருந்து பார்க்க அழகா இருந்தாலும், தப்பான இடத்தில் ஆணி அடித்தால், ப்ளாஸடர் ஆஃப் பாரிஸ் பொத்துக் கொண்டு விடும். ஆமாம் ...அட்டை வீடுதான். கலிஃபோர்னியா மாநிலத்தில் நிலநடுக்க சாத்தியங்கள் அதிகம் உள்ளதால் மரத்திலும், அட்டையிலும், தம்தூண்டு காங்க்ரீட்டிலும் தான் வீடுகள்...!!!

36970_XXXXXXXX_S6

இந்த வீட்டுக்கு, அதுவும் இத்தனாம் பெரிய வீட்டுக்கு சாமான்கள் வாங்கிப் போடா விட்டால், "தனியே" இருக்க பயமாக இருக்கிறது. பேசினால் வீடு முழுக்க எக்கோ அடிக்கிறது. மாசா மாசம் வீட்டுக் கடன் கட்டுவதற்கே பாதி சம்பளம் கயண்டு விடுவதால், ஃபர்னிச்சர் என்பது இப்போதைக்கு லக்ஸூரி என்று முடிவு செய்துவிட்டு, தேவையானது வாங்கிக் கொண்டது போக மிச்சத்துக்கு மோட்டுவளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். $100 shops என செல்ல்மாக அழைக்கப்படும் Lowes, Home depot, Bed Bath and Beyond, costco, sam's club போன்றவை பக்கம் போகவே நடுக்கமாயிருக்கிறது. கட்ந்த மூன்று மாதங்களாக அத்தனை கடையிலும் செம வேட்டை. பலனாய் நான் கண்டது க்ரெடி கார்ட் நடுவே ஒரு ஓட்டை.

சொல்ல வந்தது அதுவல்ல...

IKEA என்கிற ஸ்டோர் நன்றாக இருக்கிறது என்றார் நண்பரொருவர். ஸ்காண்டிநேவியன் செயின் அது. அந்த ஸ்டோர் சாக்ரமண்டோ வரவில்லை என்பதால், 90 மைல் காரோட்டிச் சென்று, கான்கார்ட் முருகனை தரிசித்த பிறகு அங்கே சென்று வந்தேன்.

அட..அட...அடா. அருமையான கடை அது. எத்தனை வகை. எத்தனை வண்ணம். எத்தனை மாடல். எத்தனை கற்பனாசக்தி. எத்தனை மலிவு. கண்டிப்பாக ஒரு நாள் முழுக்க அலைந்தாலும் வெல்லப் பாக்கெட்டுக்குள் விழுந்த சிற்றெறும்பு போல மலைத்துப் போய் நிற்பது திண்ணம். குட்டி குட்டியாக சாமான் வாங்கிப் போட்டுக் கொண்டு, "ஆஹா..அழகழகான பொருட்களை அசத்தல் விலையில் வாங்கியாகி விட்டது" என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்து பில்லைப் பார்த்தால் கொஞ்சம் மயக்கம் வந்தது.

அதுதான் IKEA வின் வெற்றி.

நண்பர்களும் முயன்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...