Wednesday, September 08, 2004

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ

திருப்பாவையில் மேற்கண்ட வரிகள் வருகிறதென்று நினைக்கிறேன். தேன்சிட்டுக்கு பிறகு "காணாமல் போனவர்கள்" லிஸ்டில் எழுதலாமென்று நான் யோசித்து வைத்திருந்த பெயர் எல்லே ராம் அலையஸ் ஏஞ்சல் ராமச்சந்திரன். தனிப்பட்ட காரணங்களாலும், வேலைகளாலும் இவ்வளவு நாட்கள் எழுதாமலிருந்தவர், ம.ஆ.வி.கொண்டாட்டத்துக்காக, தலை நீட்டினார். நீட்டிய தலையில் பூத்தூவி, மாலை போட்டு, (கழுத்தில் துண்டை இறுக்கி) வலைப்பூவுக்கு கூட்டி வந்தவர்கள் பெயரை நான் மறுபடி சொன்னால், மறுபடியும் யாராவது ஆட்டுவித்தால் யாரொருவர் பாடுவார்கள்.

இணைய சுதந்திரம் மூச்சு முட்டுகிறது

எல்லே ராம் என்ன எழுதுவார்...எப்படி எழுதுவார் என்று நான் சொல்லத் தேவையே இல்லை. வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன் என்று அவர் சொன்னவுடன் திரண்டு வந்து வரவேற்றவர்களில் பலபேர் சொல்வார்கள். எதை எழுதினலும், அதை அலுப்புத் தட்டாமல், படிக்கும் விதத்தில், சுவாரஸ்யமாக மீ(னா)னோ, தேனோ, மானோ கலந்து, விருந்து படைப்பதில் வல்லவர். சேதுவை வைத்து இவர் விளையாடி இருக்கும் சித்து விளையாட்டைப் பார்த்து இன்று காலையிலிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

கூடிய சீக்கிரம் மானமிழந்த மூக்கன் என்று இவர் ஒரு பதிவு போட்டாலும் ஆச்சரியப்படமாட்டேன். ஏற்கனவே "அறிமுகம்" தந்த அனுபவம்தான் இருக்கிறதே :-)


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...