Wednesday, March 30, 2005

தயாராகும் அமெரிக்கா

"Any job which can be reduced to a set of rules is at risk"

BPO வில் இருந்து KPO - Knowledge process outsourcing நோக்கி
போய்க்கொண்டிருக்கிறது என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, வெளிநாட்டுக்குப் போகும் வேலைகளை பற்றி இனிமேல் கவலைப்பட்டு ஆவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது.



ஹைடெக் வேலைகள் இப்படியே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தால் அமெரிக்காவில் இனி Service Industry மட்டும்தான் பிழைக்கும் என்கிற பயமுறுத்தல்களுக்கு நடுவே இனி வரும் காலத்தில் பிழைக்க வேண்டுமானால், அமெரிக்கர்கள் எங்கே கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறார் டேனியல் பிங்க்.

இது என்னுடைய சகோதரர்களுக்கு எட்டட்டும் என்று இங்கே தந்திருக்கிறேன்.
அமெரிக்கர்களுக்கு நம்முடைய மேலாண்மை நிபுணர்களைப் பற்றியும், இடம் பாத்து தட்டுபவர்களைப் பற்றியும் சரியாகத் தெரியாதோ என்ற எண்ணம் இந்தக் கட்டுரையை படிக்கும்போது வந்து கொண்டே இருந்தது. என்னதான் ப்ரொக்ராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்தாலும், பர்ஸனல் டச் இல்லாவிட்டால் எந்த வேலையிலும் சோபிக்க முடியாது. வலது மூளையைப் பயன்படுத்தும் Conceptual Age க்கு ரெடியாக சொல்லும் ஆசிரியர் கட்டுரையை இப்படி முடிக்கிறார்.

Do something Foreigners cant do cheaper, something computers cant do Faster.

கொடுமையடா சாமி..என்று முதல வாசிப்புக்கு தோன்றினாலும், அவர்களுடைய நியாயமான பரிதவிப்பு புரிகிறது. அடுத்த தாவலுக்கு தயாராகும் அவர்கள் லாவகம் புரிகிறது. கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

பி.கு: Firefox உலாவியின் கண்டறிஞரைப் பற்றியும், உலாவி பற்றியும், Bill gates ..watch your Back என்ற ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கிறது. அதுவும் சுவாரசியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...