Friday, March 25, 2005

நன்றி ரோசாவசந்த்

நண்பர் ரோசா வசந்துக்கு என் கருத்துக்களை முந்தைய பதிவில் எழுதுவதற்கு உன் நான் என்னையெ ஒரு முறை கேட்டுக் கொண்டேன் - இதை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று. ஏனெனில் கோபத்தில் நானும் அவ்வப்போது நிதானம் இழப்பவன்தான். ஆனால் வெளிப்பார்வைக்கு இனிப்பும், நாகரீகமும் உள்ள கனவான்களாக இருந்து கொண்டு உள்ளே புரையோடிப் போயிருக்கும் எண்ணங்களுக்கு சொந்தக்காரனல்ல. ரோசாவையும் கிட்டத்தட்ட அப்படியோரு மனிதராக நினைப்பதால், "நாம் நமக்கு சொல்லிக் கொள்வதையே கொஞ்சம் உரத்து சொல்லலாம்" என்ற எண்ணத்துடனேயே தயக்கத்தை விலக்கிவிட்டு எழுதினேன்.

எழுதியதை அவர் சரியாகவே புரிந்து கொண்டு பதிலிறுத்தார். இதற்கு மேலும் அந்த பதிவை பதிப்பித்த நிலையிலேயே வைத்திருந்து அது இங்கே ஒரு அறிவுரைத் தூணாக நிற்பதை விரும்பவில்லை. அதுவே அவர் புரிந்துணர்விற்கும், நாகரீகத்துக்கும் நான் கொடுக்கும் மரியாதை. மேலும் மேலும் நண்பர்கள் அந்தப் பதிவிற்கு பின்னூட்டமிட்டு, அந்த திரியை அணையாமல் இருக்க வைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில், அது என் பெட்டகத்தில் Draft ஆக வைக்கப்படுகிறது.

நண்பர் ரோசா தன் கேள்விகளையும், விமரிசனங்களையும் ஆக்கபூர்வமாக இப்போது போலவே தொடரவேண்டும் என மறுபடியும் வேண்டுகிறேன்.

வணக்கம்.

1 comment:

  1. அய்யய்யோ! நன்றி இதெல்லாம் ரொம்ப என்னவோ செய்கிறது. ஏற்கனவே என் பதிவில், சண்டைபோட்டு, இப்போது நர்பு காட்டும் நண்பருக்கு சொன்னதுதான். எல்லோரை போலவும், நானும் ஏதோ தோன்றுவதை செய்கிறேன். அது சரி என்றோ, முழுமையாய் சரி என்று உண்மையிலேயே எதுவும் இருப்பதாகவோ தோன்றவில்லை. உங்களின் இந்த இடையீடு எனக்கு ஒரு பரிசீலனையையும், பக்குவத்தையும் தரும் என்று நினைக்கிறேன். நன்றி!

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...