மூக்கினால் மூக்குக்கு ஆபத்து
=============================
பிரசித்தி பெற்ற அந்தக் கடைசி பதிவை எழுதியதும்
என் மூக்கு மக்கர் செய்ய ஆரம்பித்ததும் தற்செயல்தான்.
சங்கப்புலவர்களுக்கும், தற்கால தமிழ்க்கவிஞர்களுக்கும்
உவப்பான , பூக்கள் பூத்து, வண்டினங்கள் ரீங்காரம் இடும்
வசந்தம், என் மூக்குக்கு மட்டும் எதிரி.
அச்சு..அச்சு என்று வார இறுதியெல்லாம் தும்மி தும்மி
கண்கள் சிவந்து, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய ,
கைக்குட்டையோடு அலைந்ததில் , தமிழ்த்தாய்க்கு
இரண்டு நாளாய் சோறு (:-) ) போட முடியவில்லை. தமிழிலக்கிய
பெருமக்கள் எல்லால் விசித்து விசித்து அழுது கொண்டிருப்பதால்
இன்று எழுதுகிறேன்.
பெயரிலி தன் தற்போதைய முகமூடியை கடாசியது இப்போதுதான்
தெரிந்தது. என் பங்குக்கு நானும் வேடம் கலைந்த மார்ச்-11 தேதியில்
ஒரு பின்னூட்டம் அளித்து விட்டு வந்தேன். இந்த சூட்டோடு ரமணி சார்
ஒரு வெப்சைட்/மடலாடும் குழு ஆரம்பிக்கலாம். பத்தோடு பதினொன்றாக
இல்லாமல் , விமரிசனக் கண்ணோட்டத்தோடு, தீவிரமாக, நடுநிலையாக
எழுதக்கூடிய எல்லோரும் அதில் எழுதுவார்கள்.ஆனால் கவிஞர் சார் இவ்வளவு
இளமையான ஆள் என்பது தெரியாமல் போயிற்று. எழுத்தில் தெரியும் முதிர்ச்சி
முகத்தில் மிஸ்ஸிங். அசப்பில் பாரதிராஜா பட ஹீரோ போலிருக்கிறார்.
அதே தேதியில், 'ஆப்பு வைக்கப் படும்' என்றொரு புது வலைப்பூ உதயம்.
புதுசாய் முகமூடும் ஆட்கள் ஒன்றை ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்
வெறும் முகம் மூடினால் மட்டும் போதாது. சரியான சரக்கு இல்லாவிட்டால்,
யாரும் ரசிக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment